Search This Blog

Monday, 28 January 2019

கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.

கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 2, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
======================
புலம் பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறூப்புக்கள்.
===================
கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 2, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=====================================
புலம் பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறூப்புக்கள்.
===================================
தமிழீழ விடுதலை இயக்கத்துடன் தொடர்புடன் இருந்த உறுப்பினர்கள், போராளிகள், இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், இந்திய பயிற்சி பெற்றவர்கள் பிரச்சாரப்பிரிவில் ஈடுபட்டவர்கள் என சராசரியாக 400 பேர்களும் ரெலோவின் ஆதரவாளர்கள் என மேலும் 200-500 பேர்கள் வரையிலும் புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழ்கின்றார்கள் இவர்களில் அநேகமானவர்கள் ரெலோ பற்றிய மனநிலையுடனேயே வாழ்கின்றார்கள், அநேகமானோர் ரெலோவுக்காக உதவி செய்யும் மனநிலையிலும் இருக்கிறார்கள், கணிசமான தொகையினர் தொழில்துறையில் மேம்பட்டவர்களாவார்கள்.
ஆனால்
ரெலோவிலிருந்து யாரும் இவர்களை அணுகுவதில்லை, பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் பெறுமதியை உணர்வதில்லை அல்லது உணரத்தெரியாது, இது போன்றே இலங்கையிலும் ரெலோ தோழர்களையும் ஆதரவாளர்களையும் ரெலோ திரும்பியும் பார்ப்பதில்லை.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ இயங்குபவர்கள் ரெலோ ஆதரவாளர்களுடன் இயங்காமைக்கான காரணங்கள் சில உண்டு.
1) புலம்பெயர் ரெலோ அமைப்பு உறுப்பினர்களில் பலர் ஐரோப்பாவில் இருக்கின்ற போதிலும் இலங்கையில் ரெலோ எப்படி 1988-90 களில் இயங்கியதோ அதே எண்ணங்களுடனேயே இயங்கின்றார்கள்.
2) புலம்பெயர் நாடுகளில் ரெலோ ஆதரவுத் தமிழர்களை அடையாளம் காணத் தவறிவிட்டனர் இப்போது எப்படி என்று முழிக்கின்றனர்.
3) புலம் பெயர்நாடுகளில் ரெலோ என கெத்துடன் நாட்டாண்மை காட்டித்திரிபவர்களில் பலர் தமது இயக்க காலத்தில் செய்த பயங்கரவாத செயல்கள் வெளிவந்து விடுமோ என்ற பய உணர்வு காரணமாக புலம்பெயர் தமிழர்களிடம் போவதில்லை.
4) கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ரெலோவில் இன்று வரையில் முன்னால் ரெலோ தவிர வேறுயாரையும் இணைக்க முடியவில்லை.
5) முன்னணியில் இருப்பவர்களுக்கு அமைப்பு அமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும், அமைப்புக்கும் அதன் உறுப்பினர்க்குமான உறவு நிலை பற்றிய புரிதல் இல்லாதவர்கள் - இன்றும் அன்றய இயக்க இராணுவ இயக்க இயங்கு நிலை போன்றே சிந்திக்கின்றார்கள்.
6)சிலர் சமூகத்தில் மற்ற மனிதர்களுடன் பேச, பழக வேண்டும் என்ற சமூக அறிவு வளர முன்பே இயக்கங்களுடன் இணைந்தவர்கள் சமூக இயக்கம் பற்றிய அறிவில் தாழ்ந்து இருக்கிறார்கள், இதற்க்கு நல்ல உதாரணம் லண்டன் பொறுப்பாளர் இவர் இதர ரெலோ உறுப்பினர்களுடன் பேசும் முறை பற்றி ரெலோ தோழர்களே நல தடவைகள் கருத்து பரிமாறியுள்ளனர்.
7)குறிப்பாக லண்டனில் இயங்கும் ரெலோ உறுப்பினர்களில் சிலரும் பொறுப்பாளரும் தமது லண்டன் கெத்தை தமக்கு காட்டுவதாக இலங்கை ரெலோ, கனடா ரெலோ, சூவிசு ரெலோ, இலங்கையில் ரெலோ மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
8)லண்டன் ரெலோ பொறுப்பாளரே புலம் பெயர் ரெலோ ஐக்கியத்தை குலைத்தவன் என்றும் இது தோழர்களுடன் பேச பறையத் தெரியாமலே இவனது மொக்குத்தனத்தால் இந்த நிலை புலம்பெயர் ரெலோவுக்கு வந்தது என பலர் கூறியுள்ளனர்.
9)பலர் பேச்சுக்களை பதிவு செய்து பரிமாறியுள்ளார்கள்.
10)யுகே ரெலோவில் எனது அனுபவம் தனியான கடிதமாக வெளிவரும்.
11)ஒவ்வொரு நாடுகளிலும் இரண்டு, மூன்று குறுப்புக்கள், குறுப்புக்குள்ளே இருந்து கொண்டு குறுப்போட்டு பேசுவது.
12)அமைப்பை எப்படி உருவாக்குவது பராமரிப்பது, இயக்குவது பற்றிய அறிவற்றவர்கள், கடந்த பல வருடங்களாக தமது இயக்க முறைகளின் தவறுகளை புரியாதவர்கள்.
அதேபோல மற்றய நாடுகளில் உள்ளவர்கள் ரெலோ அமைப்புக்குள்ளேயே சாதாரண நடைமுறைப் பிரச்சனையை பகை முரண்பாடாக்குபவர்களாக இருக்கிறார்கள்.
13)முரண்பாட்டை தீர்க தெரியாது ஊதி பெருப்பிக்கும், தமது சுய இன்பத்துக்காக முரண்பாடுகளை வளர்க்கும் அமைப்பாகவே இயங்குவதை நான் அவதானிக்கிறேன்.
14)படம்பிடித்து முகநூலில் போட்டால் சரி இயக்கம் இயங்குகின்றது என்ற திருப்தியடைபவர்கள்.
15)இலங்கையில் ஊருக்கு சேவை செய்த பலபல ஊர்ச்சங்கங்கள் செய்த உதவியில் ஒரு சிறுபகுதி கூட ரெலோ புலம் பெயர் உறுப்பினர்களால் செய்ய முடிய வில்லை.
16)எதுவும் செய்யாத கூட்டங்கள் தனிமனித விருப்புக்கு முதலிடம் கொடுப்பது முன்னேறும் பக்குவமல்ல.
18)பொதுஇயக்க முறைக்கும் தனிப்பட்ட நடத்தைக்கும் வேறுபாடு புரியாதவர்கள்.
ரெலோ புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு ரீ-வடை குறுப் மட்டும் தான் எதையும் சாதித்துவிடப் போவதில்லை, யாரும் விசேடமாக இயங்கினால் மட்டும்.
(சுவிசில் இயங்கும் சேகர் தலைமையில் இயங்கும்
" நமக்காக நாம் " (Telo Sarvathesam என்ற ரெலோ ரெலோ அமைப்பு இந்த மேற்குறித்த விமர்சனங்களுக்குள் அடங்காது)
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

No comments:

Post a Comment