Search This Blog

Friday, 25 January 2019

கடிதம் 25 - தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் உரிமம் யாருக்கெல்லாம்.

கடிதம் 25 - தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் உரிமம் யாருக்கெல்லாம்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 25, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=================
தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் யாருக்கு சொந்தம்.
=============

தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரை காலம் தொடக்கம் இயங்கிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் உரிமையுள்ள பெயராகும்.
இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சி இயங்குவதாயின் அக்கட்சிக்காக தம்உயிரை அர்ப்பணித்த தங்கத்துரை தொடக்கம் பின்னால் வந்த இயக்க தோழர்கள் வரையில் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களாலேயே என்பதை ரெலோ தோழர்களுக்கு செல்வம் புரிய வைக்க வேண்டியது கடமையாகும்.
ஏனெனில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் என தலைவர் செல்வத்தால் அடையாளப்படுத்தப்பட்டு இயங்குவதாக கூறும் பலருக்கு இதன் தாற்பரியம் புரியவில்லை என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த வைபர் குறுப் செய்தி வெளிப்படுத்தியது. (இந்த வைபர் குறுப் தலைவர் செல்வத்தின் ஆட்களாலேயே நடாத்தப்படுகிறது வேறுயாரும் என குற்றம் சாட்ட வேண்டாம்.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்காக இரவு பகலாக தமது பணங்கள் சொத்துக்களை கொடுத்து இயங்கிய பல தோழர்கள் இறுதியில் தம் உயிரையும் கொடுத்தனர், மேலும் சிலர் அரசியலிலிருந்து விலகி வாழ்கின்றனர், இவர்களின் அர்ப்பணிப்பினாலும் இன்று இந்த பெயரை தாங்கள் வைத்து கட்சியை நடாத்துகின்றீர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
இதைவிட இரவு பகலாக உழைத்த பல தோழர்கள் நீங்கள் ரெலோ கட்சியை எப்படி நடாத்துகின்றீர்கள் என்பதை அவதானித்துக் கொண்டு வாழ்கின்றார்கள் அவர்களில் பலர் இன்று ரெலோ வின் இயங்கு முறை பற்றி பல முரணான கருத்துக்களுடன் இருக்கிறார்கள்.
ரெலோ நாட்டில் இயங்கிய காலத்தில் ரெலோவுக்காக உழைத்த பல பல பொது மக்கள் இன்றும் ரெலோ பற்றிய அவதானத்துடன் ரெலோ தம்முடன் ஒரு வார்த்தை பேச வில்லை என்ற கோபத்துடன் வாழ்கின்றார்கள்,
இவர்களைவிட இலங்கை சிறைச்சாலைகளில் இருந்த தோழர்களில் அளவில் அதிகமானோர் ரெலோ உறுப்பினராகவே 1988வரையில் இருந்து சிறையனுபவித்தனர்.
இதைவிட புலிகளால் ரெலோ தாக்கப்பட்டபோது பாதுகாத்த பல பல மக்கள் குறிப்பாக பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றையும் விட ரெலோவுக்காக தம்மை அர்ப்பணித்து தமது அங்கங்களை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர்.
புலிகளை எதிர்த்து இலங்கையில் ரெலோ இயக்கத்தை மீள கொண்டு வந்து இறக்கி புலிகளுடன் போராடி ரெலோ பெயரை காப்பாற்றியவர்கள் என பலதரப்பட்ட தமிழர்கள் தோழர்களின் இயக்கத்தாாலேயே பெயர் காப்பாற்றப்பட்டது என்பதை இன்று ரெலோ என்று இயங்குபவர்கள் நினைப்பதில்லை, ரெலோ தலைவர் செல்வம் உட்பட என்பது வேதனைக்குரியதாகும்.
சில முக்கிய உறுப்பினர்கள் ஏன் தாம் ரெலோவிலிருந்து தூர நிற்கிறோம் என்பது வேதனையான கதைகள் australia விலிருந்து லண்டன் வரை உள்ளன.
மேற்குறிப்பிட்ட இத்தனை தரப்பினர்க்கும் ரெலோ உரிமையுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
இந்த மக்கள், உறுப்பினர்களைப் பற்றி எந்த அக்கறையுமற்று விடுதலைப் போராட்ட அமைப்பு, தலைமை இருக்க முடியுமா?
இந்த பெருமக்களுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குமான உறவு ,தொடர்பு என்பது என்ன? ஏன் இவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைந்திருந்தனர் அதற்கான சமூகத்தேவை என்ன?
விடுதலை இயக்கம் இது பற்றி என்ன கருத்துடன் இயங்குகின்றது ?
இவர்கள் உங்களுக்கு வாக்குகளை போட்டு உங்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் அனுப்பினால் சரியா? அதுவா மக்கள் இயக்கத்தின் இயங்கு முறை ?
தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரை அவ்வியக்கத்தை கட்டியெழுப்பியவர்கள் பாவிக்க உரிமை இல்லை என்றால் உங்கள் தேர்தல் கட்சிக்கு வேறு பெயரை வைக்க வேண்டுமே தவிர இயக்கத்தை கட்டியவர்களை தடுக்க வேண்டாம் என கேட்டு பதிவை முன்வைக்கிறேன்.
இன்றய பல ரெலோ உறுப்பினர்கள் இந்த விடயங்களில் எந்த வித சிந்தனையும் அற்று நேற்று தாம் பதிவு செய்த கட்சி போல் தம்மில் சிலர் ஒன்று கூடினால் அது கட்சியின் விடயம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கு குறிப்பிட்ட விடயத்தில் அக்கறை எடுத்து ரெலோ உறுப்பினர்களை குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களை அறிவூட்டல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதய ரெலோ கட்சியின் இயங்கு முறையானது மக்களுடன் தொடர்புபட்டதாக இல்லை என்பது வெளிப்படை !!!
எம்முடன் வாழ்ந்த இந்த தோழர்களுக்கான எனது/எமது குரல் தொடர்ந்து இருக்கும்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

No comments:

Post a Comment