Showing posts with label SriLanka. Show all posts
Showing posts with label SriLanka. Show all posts

Monday 31 December 2018

இரு மொழி பேசும் ஒரே இன மக்களின் புதுவருட தினக் கொண்டாட்டம் – த சோதிலிங்கம்.

Apr 14 : இரு மொழி பேசும் ஒரே இன மக்களின் புதுவருட தினக் கொண்டாட்டம் – த சோதிலிங்கம்.

tamil sinhala

தமிழ் அரசியல் மற்றும் தலைவர்கள் தமிழ் சிங்கள புதுவருட தினச் செய்தியில் இலங்கையில் தமிழ் சிங்கள் மக்களின் இன உறவுகளின் அவசியத்துக்கும் அதன் வரலாற்று உண்மைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
பொதுவாக தலைவர்கள் எனப்படுவோர் வரலாறு என்பதை மிக குறுகிய கால நேரத்தில் தமது குறுகிய நோக்கிற்கு அறிந்தவற்றையே பேசி தமது வாழ்வை தமது குறுகிய அரசியலில் முடித்துக் கொள்கின்றார்கள். இவைகள் தமிழ் சிங்கள மக்களிற்கு இடையேயான தேசியவாத இனவாதமாக உருவெடுத்து மக்களை இம்சைப்படுத்துகின்றது. எமது இந்திய பிராந்தியத்தின் இந்திய கலாச்சார வரலாறு என்பது பாரிய நீண்ட வரலாறு கொண்டது. ஆனால் தமிழ் தலைவர்களில் பலர் கடந்தகாலங்களில் ஜரோப்பியர் வருகை காலங்களின் போது ஜரோப்பிய வியாபார அரசியல்வாதிகளால் ஊட்டப்பட்ட அரசியலை மையப்படுத்தி எமது இந்திய இலங்கை பிரதேச இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை மறந்து தமது தலைமைத்துவத்தை தமிழ் சிங்கள மக்களுக்கு வளங்கியுள்ளனர்.
எமது இலங்கை தமிழ் சிங்கள மக்களின் வரலாறு 2000 வருடங்கள் பின்னோக்கி பார்த்து எமது மக்களின் அடிப்படைகளில் உள்ள ஒற்றுமைகளை முன்கொண்டு வர வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளதும் எமது இலங்கை மக்களுக்கான ஒன்றிணைந்த தமிழ் சிங்கள மக்களுக்கான பொதுவான இலங்கையர் என்ற அடையாளத்தையும் அதனுள்ளே தமிழர்கள் என்ற அடையாளத்தையும் உருவாக்க வேண்டும்.
வரலாற்றில் எவ்வளவு உண்மைகள் இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளில் உள்ள உண்மையின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் யதார்த்த பூர்வமான மாற்றங்களையும் இணைத்து செயற்படுவது முக்கியமானது. இவை இரு மொழிகள் பேசும் ஒரே இன இலங்கை மக்கள் என்ற அடையாளத்தை தோற்றுவிக்க மூலகாரணமாகவும் இருக்கக்கூடும் என பலர் நம்ப ஆரம்பித்துள்ளனர்.
எதிர்காலத்தில் எத்தனை மாற்றங்களை இயற்கையும் மனித வாழ்வுசூழலும் ஏற்படுத்தப் போகின்றனவோ என்ற கற்பனையில் மிதப்பதைவிட இன்றே இலங்கையில் உள்ள மக்களிடையேயான இன உறவுகளை பேணும் பணிகள் மிகவும் முக்கியமாகின்றது. இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலங்களிலிருந்து மிக நீண்டகாலமாக இலங்கைத்தீவில் ஒரே இனமக்களே வாழ்ந்து வந்துள்ளதும் இவர்களின் வாழ்க்கையும் தென் இந்திய பிராந்திய தொடர்புகளும் இலங்கையில் காலத்துக்குக்காலம் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. இந்த மாற்றங்கள் சில சந்தர்ப்பங்களில் முரண்பாடுகளையும் சில சந்தர்ப்பங்களில் உடன்பாடுகளையும் ஏற்படுத்தியிருக்கும். இப்படியான முரண்பாடுகளும் உடன்பாடுகளும் இலங்கைத்தீவில் இன்றுள்ள சமூகத்தில் அடிப்டையிலும் சிலமாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது என்பது உண்மையாகும்.
அண்மைக்கால மரபணுச் சோதனைகளும், வரலாற்று ஆவணங்களின் நிரூபணச் சான்றுகளும் இலங்கையில் வாழும் இரு மொழிபேசும் குடும்பத்தினரும் ஒரே இனத்து இரத்த உறவினர் என்பதையும் நிரூபித்து அதிலும் இலங்கையில் உள்ள எல்லா மக்களும் தென் இந்திய மக்களின் மிக நெருங்கிய உறவினர்கள் என்றும் இவர்கள் மிக நெருக்கமான திராவிட இனத்தவர்கள் என்றும் மரபணுக்கள் உண்மையை எடுத்தியம்பியுள்ளது. இவை தமிழ் சிங்கள மக்களிடையேயான வரலாற்று தொடர்புகளின் நெருக்கத்தை நினைவூட்டி இலங்கையில் உள்ள இனங்கள் தம்மை ஒரு இனமாக ஒரு புதிய இலங்கைக்குள் இலங்கையர் என்ற இனமாக மிளிர முடியும் என்பதை பறை சாற்றுகின்றது. இந்த வரலாற்று உண்மையும் எமது வாழ்வின் புதுவருட தினக் கொண்டாட்டமும் இன்று வெளித்தெரியும் இனங்களுக்கிடையிலான இடைவெளிகள் மிகக்குறுகியவைகளே என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொருவருடம் தென்இந்திய, திராவிட, தமிழ், சிங்கள மக்களும் ஒரே காரணங்களுக்காக புதுவருட தினத்தை கொண்டாடுகின்றனர்.
இந்துக்களின் காலங்களின் பின்னர் இந்தியாவிலிருந்த மூடநம்பிக்கைகளை களைந்து மாற்றங்களை இந்திய தத்துவங்களுக்கு கொண்டுவந்து புத்துயிர் கொடுத்தவர் புத்தர். இதனால் இந்திய தத்துவம் உலக தரத்திற்கு புத்தரும் உலகின் முதல் தத்துவஞானியாகவும் போற்றப்பட்டார். வட இந்திய பிரதேசங்களுக்கு அப்பால் புத்தரின் போதனைகளால் தென் இந்தியாவும், தென் இந்தியாவிலிருந்து இலங்கையும் மக்கள் கிறிஸ்துவுக்கு முன் 700 வருடங்களிலிருந்து 7ம் நூற்றாண்டுகள் வரையில் பெளத்தத்தை தழுவியிருந்ததிற்கான வரலாற்றுச் சான்றுகள் தாராளமாக உள்ளன. கிட்டத்தட்ட 1500 வருடங்கள் இலங்கையில் தமிழர்கள் பெளத்தமதத்தையே தழுவியிருந்துள்ளனர்.
இலங்கையில் தொன்மையான காலம் தொட்டு வாழ்ந்தவர்கள் இந்துக்கள் சைவர்களாகவும் இவர்கள் பின்னர் பெளத்தர்களாகவும் மீண்டும் சைவர்களாகவும் மாறிமாறி மதம்மாற்றம் நடைபெற்று வந்துள்ளதும் இப்படியாக மாறி மாறி மதமாற்றங்கள் ஏற்ப்பட்டுக் கொண்டிருந்த காலங்களில் தமிழர்களால் பெளத்த சமயத்திற்கு பாரிய பங்களிப்புக்கள் செய்ப்பட்டிருந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். இப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலத்திலிலேயே சிங்கள மொழியின் வருகையும் ஏற்பட்டு சிங்கள மொழி பேசும் மக்கள் என்ற இனம் செழுமைபெற்று வளர்ந்து கொண்டது.
இந்தக்காலத்திலேயே தமிழ் பெளத்தர்களால் பெளத்தம் உன்னத நிலையில் இருந்தது. இக்காலத்திலேயே பெளத்தம் தனது வரலாற்றில் மிக உயர்ந்த மிக உன்னத மகாகாவியமான மணிமேகலையை தமிழ்மொழி பெளத்தத்திற்கு வழங்கியிருந்தது. இன்று சிங்கள மொழிபெயர்ப்பில் சிங்கள பெளத்த மக்களின் காவியமாக பேணப்படுபவையாகும். இதேகாலத்தில் தமிழர்களால் தமிழ் பெளத்தர்களால் படைக்கப்பட்ட பெளத்த காவியங்களான உதயணன் கதை குண்டலகேசி நீலகேசி வீர சோழியம் ஆகிய காப்பியங்கள் தமிழர் நாகரீகங்களின் உச்ச நிலையையும் தமிழர்களின் பெளத்த ஈடுபாட்டிற்கும் இன்னுமொரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இவற்றிக்கும்மேலாக தமிழ் பெளத்த ஞானிகளான புத்த கோசர் – விசுத்திமார்கம் என்ற நூலை பாளி மொழியில் இயற்றினார். இவற்றைவிட புத்த தத்தர், மதுரத்த விலாசினி, வினய வினிச்சயம், உத்தர வினிச்சயம், ரூபாரூப விபாகம் ஆகிய பெளத்த நூல்களையும் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் ஜினாலங்காரம், தந்ததாது, போதிவம்சம், ஆகிய நூல்களையும் பின்னர் அபிதம்மாவதாரம் என்ற இன்று பெளத்தர்களால் பொக்கிசங்களாக பாதுகாக்கப்படும் காவியத்தையும் படைத்துள்ளார்.
ஆரிய தருமபாலர் – கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் பெளத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்து பெளத்தப் பள்ளிகள் வைத்திருந்த பழைய தமிழ் உரைகளையும் இலங்கையிலிருந்த பாளி உரை நூல்களையும் ஆராய்ந்து திரிபிடகத்திற்கு பதினான்கு உரைகளை எழுதி வழங்கியவர். அநிருத்த தேரர் – பாண்டிய நாட்டில் மதுரையிலிருந்த சோம விகாரையின் தலைவராக இருந்தவர் அநிருத்த தேரர் இலங்கைப் பெளத்த சங்கத்தினராலும், பர்மா பெளத்த சங்கத்தினராலும் படித்துப் பேணப்பட்ட பிரபல பெளத்த காவியம். பரமத்த வினிச்சயம், காமபரிச்சேதம் போன்ற பல நூல்களை எழுதியவர்களாகும்.
காசியப்ப தேரர் போன்ற தமிழ் தேரர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பல பெளத்த காவியங்களையும் நூல்களையம் பெளத்த வழிகாட்டிகளையம் தமிழிலும் பாளியை படித்து பாளியிலும் சிங்கள மக்களுக்கு தந்திருந்தனர் காஸ்யப தேரர் என்ற தமிழ பெளத்த தேரரால் எழுதப்பட்ட விமதிவிச்சேதனி, விமதிவிநோதின், மோகவிச்சேதனி, அநாகத வம்சம் ஆகிய பெளத்த தர்ம உரை நூல்கள் இலங்கையின் பெளத்த சங்கத்தினரால் பேணப்படும் இலக்கியங்களாகும்.
பெளத்தம் தழைத்தோங்கிய காலத்தின் இறுதியில் பெளத்தத்ததுக்கும் சமணர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாதத்தினால் சைவர்கள் மீண்டும் தளைத்து சைவத்தை தென் இந்தியாவிலும் இலங்கையின் வட கிழக்கிலும் இதர இலங்கையின் பிரதேசங்களிலும் பரப்பினர். இக்காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட குழப்பங்களும் இதன் பின்னர் அரச பரம்பரையிரால் ஏற்பட்ட மாற்றங்களும் இரு பிரிவினராக ஒருபுறம் சைவர்கள் என்றும் மறுபுறும் பெளத்தர்கள் என்றும் வளர்ச்சிகள் ஆரம்பித்து இன்றுள்ள சமுதாயமாக உருவெடுத்தது. இக்காலத்தின் பின்னரும் இலங்கையில் ஆட்சியமைத்த இந்து அரசர்களாலும் பெளத்த அரசர்களாலும் இரு தரப்பு சமயத்தவர்களுடனும் உறவுகளும் ஒத்தாசைகளும் இருந்துள்ளன. இவற்றிற்கான சான்றுகளாக இன்றும் இலங்கையின் பல இந்துக்கோவில்கள் அதன் பூஜை முறைகளும் உள்ளன. இதைவிட இன்றும் பெளத்த மதகுருமார்களும் பெளத்தமக்களும் இந்து தெய்வக் கோட்பாடுகளை மதவழிபாடுகளை அனுசரிப்பது சாதாரண விடயமாக உள்ளது.
இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் மக்களின் மதரீதியான இணக்கப்பாடுகளும் மொழிரீதியான இணக்கப்பாடுகளையும் கொண்டவர்கள் கண்டியின் கடைசி மன்னான கண்ணுச்சாமி என்ற இயற் பெயர் கொண்ட சிறிவிக்கிரமராஜசிங்கன் என்ற தமிழனை கொண்ட சிங்கள மக்களின் ஒரே அடிப்படையிலிருந்து உருவானவர்களே என்பதை புரிந்து கொள்ள தவறவிடக்கூடாது.
இந்த உண்மையின் அடித்தளமாக இருப்பதில் தமிழ் சிங்கள புதுவருட தினக்கொண்டாமும் ஒன்றாகும். புதுவருட தினக் கொண்டாட்டம் தென் இந்திய மக்களுடனும் தொடர்புடையது என்பதும் இலங்கையில் உள்ள பல பெளத்த விகாரைகளுடனும் இந்து கோவில்களின் தொடர்புடன் உள்ளதும் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. புதுவருட தினம் தமிழர் சிங்கள மக்களுக்காக பொதுவான தினமாகவும் இந்த பொது தினம் இந்த இரு இனத்தின் பொது பொதுவான இனத்தில் இருந்து உருவானவர்கள் என்பதின் அடையாளமாக இன்று வரையில் உள்ளதும் இந்த புதுவருட தினத்தையும் எமது இந்து பெளத்த (தமிழ்-சிங்கள) மக்களின் பொது விசேட தினமான பெளர்ணமி தினத்தையும் ஒவ்வொரு மாதமும் இன இணக்க இரு இனத்தின் பொது அடையாளமான இலங்கை மக்கள் (சிறீலங்கா) மக்களின் பொதுவான அடையாளதினமாகவும் கட்டியெழுப்ப இருதரப்பினரும் இணைந்து செயற்படல் வேண்டும்.
இந்த செய்திகள் நாம் தமிழர்கள் இலங்கையில் பெளத்த தத்துவத்தின் பின்னணியில் இருந்துள்ளதையும் பெளத்தத்திற்காக தமிழ் மொழியின் பங்களிப்புக்கள் பற்றி தமிழ் மக்களுக்கும் புரியவைக்க வேண்டும். இதன் மூலம் தமிழர்கள் பெளத்தத்தின் மீதுள்ள கருத்தில் மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும். இதே போன்று சிங்கள மக்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் தமிழர் மீதுள்ள உறவையும் பற்றுதலையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
இதற்கு நல்ல உதாரணமாக உள்ளவற்றில் மிகவும் முக்கியமானது தமிழ் மதுரை கூலவாணியின் சாத்தனார் எழுதிய மணிமேகலைக்கு நிகரான இன்னொரு தமிழ் பெளத்த காவியம் உலகின் வேறெந்த மொழியிலும் இன்றுவரை உருவாக்கப்படவில்லை. இந்த மணிமேகலை இன்று சிங்களமொழியில் மொழி பெயர்ப்பு செய்து மிகமுக்கிய சிங்கள பெளத்த காவியமாக சிங்கள மக்களால் போற்றப் படுபவையாகும் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டும் தமிழர் நாகரீகத்தின் உச்சநிலையை இந்த உலகத்திற்க்கு எடுத்து இயம்பும் காவியங்கள் என்பதை எமது தலைவர்கள் தமது புதுவருட தினங்களில் தமிழ் சிங்கள மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
இதன் மூலமே இலங்கையில் உள்ள மக்கள் தமக்கிடையிலான இன உறவுகள் மிகவும் பழமை வாய்ந்தவைகள் என்பதையும் எம்மிடையே உள்ள இன முரண்பாடுகள் அர்த்தமற்றவைகள என்று புரிய ஆரம்பிப்பார்கள் இதன்மூலமே மக்களின் சுய அறிவையும் அதற்கான தேடலையும் அவர்களில் இளம் பருவத்தினர் வயது வரும் காலத்திலாவது புரிய ஆரம்பிப்பார்கள் என பலரும் நம்புகிறார்கள். இவை ஒரு சிறிய முயற்சிகள் என கருதலாம் ஆனால் தமிழ் சிங்கள மக்கள் தத்தமது இன உணர்வுகள் உந்தப்பட்டே இயங்குகிறார்கள் அவர்களது இன உணர்வுக்குள் உட்கிடப்பாக உள்ள இந்த வரலாற்று ஆதாரங்களை புரிய வைத்து இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் ஒரே இன ஒரே குல அடிப்படையை புரிய வைக்க முடியும் என பலரும் நம்புகின்றனர்.
பெளத்த கோவில்களிலும் காளியும் நவக்கிரக, கணேச பூசையும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ள போதும் இலங்கை பெளத்தர்கள் இந்துக் கடவுள்களை மதிப்பளித்து வருவதும் எமது இனங்களிடையேயான அடிப்படையில் உள்ள உறவினையே எடுத்துக் காட்டுகிறது.
சூடாமணி விகாரம் போன்று இந்து பெளத்த தமிழ் சிங்கள இன உறவுகளின் ஆதாரம் வான் உயர்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டு இலங்கையர் இனத்தை உருவாக்க பாடுபடல் அவசியமாகின்றது என்பது புலம்பெயர் நாட்டிலுள்ள பல முற்போக்கு சக்திகளின் விருப்பமாகவும் தற்போதுள்ளது.
இலங்கை தமிழர்களின் 1958 அனுபவம், 1983 அனுபவம், இந்திய இராணுவ அனுபவம், முள்ளிவாய்க்கால் அனுபவம் போன்றவைகள் இன்று மக்களை புதிதாய் சிந்திக்க வைக்கும் இக்காலங்களில் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பின் உள்ளார்த்தம் எமக்கு முன்னால் வந்து நிற்கிறது இது எம்மை மீண்டும் 2000 வருடங்களுக்கு முன் நாம் யார் என்ற அடிப்படைக் கேள்வியை ஆராய கட்டாயப்படுத்துகிறது. இனவெறிகளை தூண்டி நாட்டை பிளவுபடுத்தி யாராலும் எதையும் வெல்லமுடியாது என்ற உண்மையை இன்று இந்த புதுவருடப்பிறப்பு உணர்த்தி நிற்கிறது. இனங்களின் ஒற்றுமைக்கான அடிப்படைக் காரணிகளை கண்டறிந்து வரலாற்றில் முன்நோக்கிய பாதையினை வகுக்கும்படி மீண்டும் வரலாறு எமக்கு புதிய பாடத்தினை புகுத்தியுள்ளது.
புதுவருட பிறப்பு தினக் கொண்டாட்டமானது இலங்கையின் வடக்கு, கிழக்கு, மத்தி, தெற்கு, ஊவா, என்ற பேத வேறுபாடின்றி ஒரு பொது இனத்தின் அடையாளமாக இனம்காட்டி நிற்கிறது. சித்திரா வருடம், வைகாசி விசாகம், நவராத்திரி எனவும் சமயங்களின் பொதுவான அடையாளங்களையம் இணைந்து இனங்களின் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி, தலைவர்களும் முற்போக்குவாதிகளும் மக்களை இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் நாம் தமிழர்கள் என்ற பொதுவான சிந்தனைப்போக்கை வளர்க்க வேண்டும். இதுவே இலங்கைக்கான நிரந்தர சமாதான வரைவாகும்.
தமிழ் சிங்கள தலைவர்கள் யார் எந்தப்பக்கம் என்ற வேறுபாடற்ற பொது இலங்கைக்கான சிந்தனைப்போக்கை வளர்க்க முன்வர வேண்டும்.
T Sothilingam, sothi@btinternet.com, 0784 632 2369
மேலதிக வாசிப்புக்களுக்கு:
1. பெளத்தமும் தமிழும் – கலாநிதி எஸ் தியாகராஜா
2. இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். – தமிழ் பெளத்தர்கள் ஒரு பார்வை. : நோர்வே நக்கீரா
3. FRANKLIN C. SOUTHWORTH. Linguistic archaeology of South Asia, London: Routledge Curzon, 2005, pp. xiv+369. ISBN0-415-33323-7 (hbk), £95.00
4. Genetic Relationships between Indians and Their Neighboring Populations by Arun K Roychoudhury, Masatoshi Nei, Centre for Demographic and Population Genetics, University of Texas Health Science centre, Houston,Tex.,USA – Original Papers, copy rights,1985 S KargerAG.Basel.
22 Comments so fact
FACT on April 14, 2011 6:37 pm
  1. //அண்மைக்கால மரபணுச் சோதனைகளும், வரலாற்று ஆவணங்களின் நிரூபணச் சான்றுகளும் இலங்கையில் வாழும் இரு மொழிபேசும் குடும்பத்தினரும் ஒரே இனத்து இரத்த உறவினர் என்பதையும் நிரூபித்து அதிலும் இலங்கையில் உள்ள எல்லா மக்களும் தென் இந்திய மக்களின் மிக நெருங்கிய உறவினர்கள் என்றும் இவர்கள் மிக நெருக்கமான திராவிட இனத்தவர்கள் என்றும் மரபணுக்கள் உண்மையை எடுத்தியம்பியுள்ளது. இவை தமிழ் சிங்கள மக்களிடையேயான வரலாற்று தொடர்புகளின் நெருக்கத்தை நினைவூட்டி இலங்கையில் உள்ள இனங்கள் தம்மை ஒரு இனமாக ஒரு புதிய இலங்கைக்குள் இலங்கையர் என்ற இனமாக மிளிர முடியும் என்பதை பறை சாற்றுகின்றது. இந்த வரலாற்று உண்மையும் எமது வாழ்வின் புதுவருட தினக் கொண்டாட்டமும் இன்று வெளித்தெரியும் இனங்களுக்கிடையிலான இடைவெளிகள் மிகக்குறுகியவைகளே என்பதை எடுத்துக் காட்டுகின்றது.//
    A very good statment indeed.
    Also, please note…. “Multiple studies have found no significant genetic difference between the Sinhalese and the three other major ethnic groups in Sri Lanka (Sri Lankan Tamil, Indian Tamil and Sri Lankan Moor)”!!!
    (Sources: Gray et al (2003). “Language-tree divergence times support the Anatolian theory of Indo-European origin”. Nature 426 (6965): 435–9; Kivisild et al., (February 2003). “The genetic heritage of the earliest settlers persists both in Indian tribal and caste populations”. American Journal of Human Genetics 72 (2): 313–32. AND,
    Sengupta et al. (2006). “Polarity and Temporality of High-Resolution Y-Chromosome Distributions in India Identify Both Indigenous and Exogenous Expansions and Reveal Minor Genetic Influence of Central Asian Pastoralists”. The American Journal of Human Genetics 78 (2): 202–21.)
    Thus, the question is…
    When are we going to learn to live as a harmonized and productive society which is free from all divisions and sub-divisions???
  2. BC on April 14, 2011 9:05 pm
    அருமையான கட்டுரை.
    “ஒன்றிணைந்த தமிழ் சிங்கள மக்களுக்கான பொதுவான இலங்கையர் என்ற அடையாளம், இரு மொழிகள் பேசும் ஒரே இன இலங்கை மக்கள்.”
    உயர்ந்த சிறந்த சிந்தனை.
  3. thenupiriyan on April 15, 2011 6:30 am
    உண்மையில் இது இந்து பெளத்த புத்தாண்டு. சிங்கள மொழி பேசும் கிறீஸ்தவர்களும் தமிழ் மொழி பேசும் கிறீஸ்தவர்களும் இதனைக் கொண்டாடுவதில்லை. இது இனரீதியான புத்தாண்டு அல்ல. மதரீதியான புத்தாண்டு
  4. Nackeera on April 15, 2011 8:11 am
    இக்கட்டுரையுடன் சார்ந்து மேலும் சில தகவல்களை தருவது சாலச்சிறந்தது என்று எண்ணுகிறேன். தேசத்தில் தமிழ்பெளத்தர்கள் பற்றி முன்பும் எழுதப்பட்டது தொடர்ந்தும் எழுதப்படுகிறது. சோதிலிங்கம் எழுதியது போல் வெள்ளைக்காரனுக்குப் பின்தான் இலங்கையில் அரசில் இருந்து என்ற கணக்கில் தான் அரசியல் நடக்கிறது. பிரித்தாளும் தந்திரத்தில் கைதேர்ந்த வெள்ளையர்களால் நாம் பிரிக்கப்பட்டு அதன்விளைவுகளை நாம் அனுபவிக்கிறோம் என்பதை யாரும் மறத்தலாகாது. முக்கியமாக பெளத்தமத்தை தெற்காசியா எங்கும் பரப்பியவர்கள் தமிழர்களே. இதை யப்பான் வரை கொண்டு சென்றவர்களும் இவர்களே. இதைத் திராவிடப்பெளத்தம் எனப்பிற்காலத்தில் அழைத்தார்கள்.
    இக்கட்டுரையில் மணிமேகலையைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்து. இதைப்பற்றி சிறிது விரிவாகப் பார்ப்பது ஏற்புடையது. தமிழுக்கு அணிகலனாக விளங்குவது ஐம்பெரும் காப்பியங்கள். இவற்றில் இரண்டு பெளத்தகாப்பியங்கள். இரண்டு சமணகாப்பியம் ஒன்று இந்துகாப்பியம். இந்த 3மத ஆதிக்கத்தில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது சான்றாகிறது. இந்த மதங்களின் ஆழுகைக்குள் தமிழ் செழித்திருந்தது அதனால்தான் தமிழில் மூலமே இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் கதாநாயகனான கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளே மணிமேகலை. இவள் ஒரு புத்தபிச்சுனியாவாள். இந்தச் சிலப்பதிகாரத்தை எழுதிய இளஙகோவடிகள் இன்று மலையாளமாக இருக்கும் பகுதியான சேரநாட்டில் இருந்தே எழுதினார். ஏன் அவர் மலையாளத்தில் எழுதவில்லை? ஆம் அப்போ மலையாளம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அல்லது மலையாளம் வளர்ந்திருக்கவில்லை என்பது உறுதியாகும்.
    இன்றைய தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் செய்வேண்டிய முதற்பணி இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் ஓரே இரத்த உறவுகள் என்பதை நிரூபிப்பதனூடு இனப்பிளவை தவிர்த்து இலங்கையில் ஒரு ஒற்றுமையை உருவாக்க முயலவேண்டும். இதற்கு அரசியல்பணி மிக மிக முக்கியாமானது: வேற்றுமையில் ஒற்றுமையாக வாழுவேண்டிய மனிதன் ஒற்றுமையில் வேற்றுமை காண்கிறான் இலங்கையில். தயவு செய்து என்னினமே கேள். எமக்கும் சிங்களவர்களுக்கும் இடையே உள்ள ஓற்றுமை அதிகமே தவிர ஏறக்குறைய வேற்றுமை இல்லை என்றே கூறலாம். அட்டவணைப்படுத்துகிறேன்:
    1) நாம் முதன் முதலில் இந்துவாக பின் பெளத்தராகி மீண்டும் இந்துவானவர்கள்.
    2) எமக்குப் பின் பெளத்தர்களாகியவர்கள். சித்தார்த்தன் எனும் புத்தனும் ஒரு இந்துவே
    3) சிங்களமொழியில் 5000 மேற்பட்ட தமிழ் சொற்கள் உண்டு; சிங்களமொழிக்கு மொழிக்கடன் கொடுத்தவர்கள்.
    4) நிறத்தில் கூட ஒற்றுமை கொண்டவர்கள்
    5) சிங்களவர்கள் வாழும் பலபகுதிகளுக்கு தமிழில் அர்த்தம் உண்டு: அதற்காக அதைக்கேட்டு புதிய தமிழீழம் கோரவேண்டாம். அன்று தமிழர்களாக இருந்தவர்கள் பலர் சிங்களராக மாற்றம் பெற்றனர்.
    6) புத்தவிகாரைகளும் அகழ்வுகளும் காணப்படும் இடமெல்லாம் சிங்களவர்கள்தான் வாழ்ந்தார்கள் என்று அர்த்தமாகாது. அங்கே வாழ்ந்தவர்கள் தமிழ்பெளத்தர்கள். தமிழுக்கு பெளத்தமும் சிங்கள மொழியும் கடன்பட்டுள்ளது.
    7)இந்துமத்தின் பாப்பாணியத்தை எதிர்த்து உருவானதே பெளத்தம். இந்து தத்துவத்தை நிர்வாணத்துடன் நிர்வாணமாக நிறுத்திக் கொள்கிறது.
    8)மொழி ஒன்றுதான் மாறுபட்டு நிற்கிறது என்று கருதினாலும் அங்கே சிங்களத்தினுள் பேதியளவு தமிழ் இருக்கிறது.
    9) நிற: மத: கலை: கலாச்சார: மொழி: பேதமைகளைக் கொண்டு வெள்ளையர்களுடன் வாழ்வது மட்டுமல்ல என்னை போன்றவர்கள் குடும்பமே நடத்துகிறார்கள். ஏன் எம்மால் சிங்களருடனும் அவர்களால் எம்முடனும் இணைந்து வாழமுடியவில்லை என்பதைச் சிந்தியுங்கள். அரசியல் இலாபங்களுக்காக வளர்த்து விட்ட இனத்துவேசம் இன்றும் நாகரீகம் வளர்ந்த காலத்திலும் தொடர்கிறது என்பது வேதனைக்குரியது.
    சோதிலிங்கம் எழுதிய கட்டுரை தேவையானதும் தேடுதலுக்குரியதுமே. தொடர்ந்து இப்படியான கட்டுரைகள் வெளிவரவேண்டும் என்பது எனது ஆதங்கள்
    அன்புடன்
    நோர்வே நக்கீரா
  5. thurai on April 15, 2011 10:18 am
    //தமிழ் சிங்கள தலைவர்கள் யார் எந்தப்பக்கம் என்ற வேறுபாடற்ற பொது இலங்கைக்கான சிந்தனைப்போக்கை வளர்க்க முன்வர வேண்டும்.//
    இதுவே இன்றைய தேவை. புலம்பெயர் வாழ் இளம்தலை முறையினர் அறிய வேண்டிய உண்மைகள் இவை.-துரை
  6. Sri Lankan on April 15, 2011 1:23 pm
    ///புத்தவிகாரைகளும் அகழ்வுகளும் காணப்படும் இடமெல்லாம் சிங்களவர்கள்தான் வாழ்ந்தார்கள் என்று அர்த்தமாகாது. அங்கே வாழ்ந்தவர்கள் தமிழ்பெளத்தர்கள். /// Nackeera
    புத்த விகாரைகள், அகழ்வுகள் காணப்படும் இடமெல்லாம் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமென்றால், சிங்கள பௌத்தர்கள் அந்த இடங்களை புனருத்தாரணம் செய்ய முற்படும்போது, இந்துக்கள் அதாவது முன்னாள் தமிழ் பௌத்தர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
    நமது இந்து மக்கள் (முன்னாள் பௌத்தர்கள்) அந்தளவு துவேஷம் உள்ளவர்களா?
  7. அம்பலம் on April 15, 2011 1:36 pm
    அருமையான கட்டுரை. தமிழ்வளர்த்த பெளத்தம் வெள்ளையின வெறிபிடித்தவர்களால் சிதைக்கப்டடு இனவெறியாக்கப்பட்டு மீளவும் உணர்ந்து தெளிவடைந்துள்ள நிலையில் மேலும் இன ஒற்றுமையை வளர்ப்பதற்கு புலம்பெயர் தமிழர்களோ தமிழ் அரசியல்வாதிகளோ தடையாக என்றும் இருந்துவிடக்கூடாது. இனஒற்றுமை இனஐக்கியம் என்பன தான் ஒரு தேசத்தின் பலம் பலவீனம் என்பனவற்றை எடுத்துக்காட்டுவது என்பதை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது. இளையசமுதாயம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் இனமத ஐக்கியங்கள் இன்றிலிருந்தே கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா!
  8. thenupiriyan on April 15, 2011 3:07 pm
    /சிங்கள பௌத்தர்கள் அந்த இடங்களை புனருத்தாரணம் செய்ய முற்படும்போது இந்துக்கள் அதாவது முன்னாள் தமிழ் பௌத்தர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?//
    தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்த இடங்கள் புனருத்தாரணம் என்ற பெயரில் சிங்களப் பிரதேசங்களாக மாற்றப்படுவதுதான் காரணம்.
    கந்தரோடை – கதுருகோட்டையாக மாறியுள்ளது. கீரிமலை -தம்பலபடுனுவ என மாறியுள்ளது.
  9. mohamed Nisthar on April 15, 2011 5:52 pm
    அன்பான அனைவருக்கும்,
    இனிவரும் காலங்களின் அரசியல் ரீதியான ஐக்கிய வாழ்வுக்கும், ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்குமான அடிப்படை விடயத்தை இந்த கட்டுரை தொட்டுச்செல்கிறது. …………….
    பெக்ட் என்பவர் இங்கு குறிப்பிட்டது போல் ஒவொரு இனமும் மற்றைய இனங்களின் இருப்பை அங்கிகரித்து, நக்கீரா சொன்னது போல் வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனத்தைரியம் இருந்தால் புத்தாண்டுகளில் மாத்திரமல்ல என்றும் இலங்கை மக்கள் அமைதியாக தங்கள் வாழ்நாளைக் கடத்தலாம் அல்லவா?
    தெனுப்பிரியன் சொன்னது போல் இது இந்து-பெளத்த புது வருடமல்ல. தமிழ்- சிங்கள் புது வருடம், ஆனால் தமிழ், சிங்கள் கிறிஸ்தவர்கள் இதை அனேகமாக கொண்டாடுவதில்லை. …………….
    எப்படியோ எல்லாரும் இன்புற்றிருந்தால் எல்லாம் நன்று.
  10. இராஜதுரை on April 15, 2011 6:46 pm
    இந்திய உபகண்டத்தின் கலாச்சாரப் பெட்டகமாய் இலங்கை இருந்தது என்பதற்கான சான்று “SERENDIPITY” என்னும் ஆங்கில வார்த்தையின் ஊற்றில் உள்ளது.
    செரண்டிப் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் சமாதானமும் இணக்கமும் சூழலுடன் இயைந்ததுமான ஒப்பற்ற நாகரிகத்தினைப் போல் வேறெந்த நாகரிகமும் இருந்ததில்லை! இதனால்தான் அதி உன்னதமானதும் வேறுபாடுகளற்றதும் முன்னேற்றப்பாதையில் செல்வதுமான மகிழ்ச்சிகரமான சமூக/தனிமனித நிலையை “a state of ultimate serendipity” என்று விளிப்பார்கள்!
    Serendipity என்பது நமது பாரம்பரியம். இனிமேலும் ஆளையாள் வெட்டிக் கொண்டும் குதறிக்கொண்டும் வாழும் கலாச்சாரம் தேவைதானா? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! இணக்கமான சமாதான வழியில் செல்கின்ற இலங்கையின் மலர்ச்சிக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக!
    வேறுபாட்டையும் பிளவுகளையும் தூண்டிவிட்டுக் குளிர்காயும் ஈனத்தனமான அரசியல் நமக்குத் தேவையில்லை!
    மனிதம் வளர்ப்போம்… மாண்புடன் வாழ்வோம்!
  11. பல்லி on April 15, 2011 10:05 pm
    மனிதம் வளர்ப்போம்… மாண்புடன் வாழ்வோம்!
  12. information on April 15, 2011 10:12 pm
    ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக 03.09.2010 வழங்கிய சாட்சியத்திலிருந்து.
    எம்மையும் எமது கொள்கைகளையும் நேசித்த எமது மக்களையும் அவர்கள் சுமத்திய அபாண்டமான பழிகளில் இருந்து வரலாறு இன்று விடுதலை செய்து வருகின்றது.
    இது போலவே நாம் முன்னெடுத்துவரும் எமது நடைமுறைச் சாத்தியமான வழி முறையினாலும், எமது அர்ப்பண உணர்வுகளாலும் எமது மக்களையும் எதிர்கால வரலாறு விடுதலை செய்யும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.
    சமாதானத்தையும், சமவுரிமை சுதந்திரத்தையும் விரும்பும் எமது மக்களோடு அனைத்து அரசியல், ஜனநாயக சக்திகளும் இணைந்து ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று நான் அனைவரையும் அழைக்கின்றேன்! அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது! பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது!!
    புகழ்பூத்த இந்த வாசகத்தை இலங்கை தீவில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என்று அனைவருக்கும் பொதுவான ஓரு போதனையாக நான் முன்வைக்கின்றேன்! ஆரம்பகால ஆட்சியாளர்களாலும் சில சுயலாப தமிழ் தலைமைகளாலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இனமத முரண்பாடு என்ற சூழ்ச்சிகளுக்குள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சிக்குண்டு கிடந்த பழைய வரலாறுகளை நாம் மறப்போம்.
    இந்த நாட்டின் ஓரு பகுதி மக்களான தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் என்பது சிங்கள சகோதர மக்களுக்கு விரோதமான விடயம் அல்ல என்ற உண்மை சகல தரப்பாலும் உணரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
    கடந்த காலங்களில் புலிகளின் தலைமையால் அப்பாவி சிங்கள சகோதர மக்களும், இஸ்லாமிய சகோதர மக்களும் கொன்றொழிக்கப்பட்ட அனைத்து கொடிய வன்முறைகளுக்கும் நாம் மனத்துயரங்களோடு பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்கின்றோம்.
    அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களை பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப்போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக மட்டும் தமிழ் மக்களைப் பாருங்கள். இந்த நாட்டின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் உங்களது உறுதியான கரங்களை நீட்டி, அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் சிறந்து செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும் இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
    இந்த உரை உங்களுக்கு ஆச்சரியத்தை தந்திருக்கலாம். உங்களது ஆச்சரியத்திற்குக் காரணம் இந்த குரலின் அசாதாரணத் தன்மையே. கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது ஓரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகிறது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாயப் பூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதே போலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயைபுணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவே இல்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமற் செய்வதன் மூலமாகவே நாம் ஓன்றுப்பட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்ப்படுத்தலாம். அந்த மனநிலையில் நின்றுகொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருக்கின்றேன்.
    நாங்கள் முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து எமது இனக்குழும அடையாளத்தையும் இணைத்து போற்றிக் கொள்வோம். தமிழரைப் பெறுத்தவரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதையே எமது இலட்சியமாகக் கருதுகின்றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டு விட இலங்கைத் தமிழர்களான நாம் ஓப்புக்கொள்ளவே மாட்டோம். இது உறுதி.
    தமிழில் ஓர் அற்புதமான கவிதை வரிகள் உண்டு. ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஓற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே.
    இதுவே சகலருக்கும் உரியதான பொது விதியாக இருக்கட்டும் என்று கூறி வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் என்று கூறி எனது சாட்சியத்தை இத்துடன் முடிகின்றேன்.
  13. நந்தா on April 16, 2011 12:19 am
    தேனுப்பிரியன்
    கிறிஸ்த்தவர்கள் வரமுதல் இலங்கையர்கள் அனைவருக்கும் புத்தாண்டு தினம் ஒரே தினம்தான். வெள்ளையர்களின் கண்டு பிடிப்புத்தான் இந்த சிங்கள-தமிழ் புது வருஷம். இப்பொளுது உங்களின் கண்டு பிடிப்பு இந்து-பவுத்த புது வருஷம்.
    ஆனால் இலங்கையிலுள்ள இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் உள்ள இந்த புது வருஷம் மற்றைய இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் புது வருஷம் அல்ல.
    ஆயினும் இலங்கையிலுள்ள 85 சதவீத மக்களுக்கு இது புது வருஷம்!
    விமர்சகர்களின் எழுத்துக்களில் இழையோடும் “ஒற்றுமை” பற்றிய சிந்தனைகளை மனமுவந்து வரவேற்கிறேன்!
    சிங்களத்தில் “யாபனய” என்பதை யாழ்ப்பாணம் என்று சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டுமா?
  14. Nackeera on April 16, 2011 12:15 pm
    சிறீலங்கன் //புத்த விகாரைகள், அகழ்வுகள் காணப்படும் இடமெல்லாம் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமென்றால், சிங்கள பௌத்தர்கள் அந்த இடங்களை புனருத்தாரணம் செய்ய முற்படும்போது, இந்துக்கள் அதாவது முன்னாள் தமிழ் பௌத்தர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? நமது இந்து மக்கள் (முன்னாள் பௌத்தர்கள்) அந்தளவு துவேஷம் உள்ளவர்களா?/
    இதைத்தான் அறியாமை என்பது. அதுமட்டுல்ல அரசியல்வாதிகளால் பெளத்தமும் புத்தவிகாரையும் உள்ள இடமெல்லாம் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று சரித்திரம் திரிக்கப்பட்டு வாக்கு வங்கிகள் நிரப்பும் வேட்டை நடத்தப்பட்டதே காரணம். சரியாகச் சரித்திரத்தை பின்நோக்கிப் பார்ப்போமானால் பெளத்தம் தமிழர்களின் சொத்து. அதை மறுதலிப்பதனூடாகத்தான் தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் பிரிவினையை வளர்த்து வாக்கு வங்கிகளை நிரப்பி பாராளுமன்ற ஆசனங்களில் குந்தி ஆட்சி ஓச்சினார்கள்.
  15. தோஸ்து on April 16, 2011 6:34 pm
    // இது இனரீதியான புத்தாண்டு அல்ல. மதரீதியான புத்தாண்டு//
    மிகத்துல்லியமான உண்மைக் கருத்து தேனுப்ரியன். நன்றிகள். சிலவரியென்றாலும் மிகப்பலமான வரிகள்.
    சித்திரை வருடப்பிறப்பு இலங்கை வாழ் இந்துக்களிற்கும் பெளத்தர்களிற்கும் வாரத மாமணியாய் இப்பதான் வந்ததாக ஒரு விம்பம் காட்டப்படுகிறது. இந்து வருடத்தை தமிழ்வருடமென புனைவது தமிழரிடமிருந்து இன்னொரு மத ரீதியான இனத்தை உருவாக்க உதவக்கூடும். முஸ்லீம்களை மத ரீதியான இனமாக தமிழரிடமிருந்து பிரித்து ருசி கண்ட சிங்களமல்லவா!
    மதத்தின் பெயரால் நாடுகள் ஒற்றுமை படுவதென்றால். பெளத்தத்தின் பெயரில் கிழக்கு தூரகிழக்கு ஆசிய நாடுகள் ஒருநாடகவும். இஸ்லாத்தின் பெயரில் பாகிஸ்தான் தொடங்கி மேற்கு ஆபிரிக்க நாடுகள் ஒருநாடகவும். கிறிஸ்தவத்தின் பெயரில் ஐரோப்பாநாடுகள் ஒருநாடகவும். அமெரிக்கா கண்டம் அவுஸ்திரேலியா கண்டம் ஒவ்வொன்றும் ஒருநாடகவும் இருந்திருத்தல் வேண்டும். அப்படியில்லையே!
    சரி மொழியின் மற்றும் மதத்தின் பெயரில் ஒரு நாடு எனில். அரபி மொழி நாடுகள் ஒருநாடகவும். ஸ்பானிய மொழி அடிப்படையில் தென்னமெரிக்க நாடுகள் ஒருநாடகவும். ஜேர்மன் மொழி அடிப்படையில் ஜேர்மனி ஓஸ்ரியா சுவிஸ் ஒருநாடகவும் வடகொரியா தென்கொரிய ஒருநாடகவும் இருந்திருத்தல் வேண்டும். அப்படியில்லையே!
    ஒத்த மொழி கலாச்சாரம் முக்கியமாக ஒன்றிப்போகும் ஆழ்மனவிருப்பு இவையே ஒரு நாட்டை உருவாக்கிறது.
    சிங்களவருக்கும் தமிழருக்குமான ஒன்றிப்போகும் ஆழ்மனவிருப்பு எல்லாளன் துட்டகைமுனு காலத்திலேயே இருக்கவில்லை. பத்தோடு பதினொன்றாயிருக்கும் சித்திரைபுத்தாண்டு ஒற்றுமையை கொண்டுவருமென்பது தனிப்பட்ட சிலரின் நப்பாசையாய்தானிருக்கும். நிலைக்கண்ணாடியால் சுத்திவர சுவரிடப்பட்ட அறையில் நின்று கொண்டு இருப்பவர்களிற்குத்தான் தன்னை பல நுhறு விம்பங்களாய் பார்த்த மாயையில் தன் கருத்தை பலர் கொண்டுள்ளதான பிரமை வருகிறது.
    மகாவம்சத்தால் மூளைச்சலவைக்குள்ளாகி ஆரிய மமதையிலிருக்கும் படு பிற்போக்கு சிங்கள பெளத்தத்திற்கும். மதவெறியற்ற முற்போக்கு தமிழினத்திற்கும் எந்தவகையிலும் ஒத்து வாராது. ஐனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். மனிதவுரிமையை மதிப்பவர்கள் ஈழத்தமிழர்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி அதன் படி தீர்வை தேடுவதுதான் இலங்கை வாழ் மக்களின் வாழ்கையில் நிம்மதியையும் நிறைவான வாழ்வும்தரும்.
  16. நந்தா on April 16, 2011 8:48 pm
    கிறிஸ்தவ ஆட்சியிலும் அதன் பின்னரும் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களுக்கு இந்து-பவுத்த ஒற்றுமைக் காலங்கள் பற்றி புரிந்து கொள்ள முடியாது.
    பவுத்தர்கள் இன்றும் இந்துக் கடவுளர்களை உதாசீனப்படுத்தத் தயாரில்லை. ஆனால் இந்து தமிழர்கள் புத்தரை எப்பொழுதோ கைவிட்டு விட்டனர். தமிழ் துவேஷ அரசியல் புத்தரையும் சிங்களவனாக்கியுள்ளது பரிதாபகரமான விஷயம்.
    புத்தாண்டு என்பது உலகமெங்கிலும் மத ரீதியானதுதான். இனரீதியாக புது வருஷம் எங்கும் கிடையாது.
    மகாவம்சம் பற்றிக் கதைசொல்லும் தமிழர்கள் அந்தநூல் ஒரு பல்லவ அரச குடும்பத்து அங்கத்தவரான பிக்கு மகானாமாவினால் எழுதப்பட்டது என்பது இன்னமும் தெரியாமல் அந்தநூலை தங்கள் வகுப்புவாத விஷத்தின் மூலம் “சிங்களமாகியிருக்கிறார்கள்”. இவர்களுக்கு தங்களின் சொந்த வரலாறுகளை ஆராயநேரம் இல்லமல் போய் விட்டது பரிதாபகரமான விஷயம்.
    தற்போது கொழுத்தி வைத்திருக்கும் வகுப்புவாத நெருப்பில் குளிர் காய்பவர்கள் வரலாற்றை படிக்க முடியாது.
  17. Sothilingam T on April 16, 2011 9:46 pm
    கருத்தாளர்களுக்கு நன்றி
    இந்த கட்டுரை வரலாற்றின் 3000 வருட காலப்பகுதியில் நின்றே எமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சரியானது அன்றையகாலத்தில் இருந்த மக்களின் நிலைமைகள் அதிலும் இனங்கள் எப்படி இருந்துள்ளது சமயங்களே இருந்துள்ளது (மதங்கள் இருந்ததில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலைகளை மீள ஆய்வு செய்யும் மனப்போக்கு இன்று இந்திய பிராந்தியத்தில் உருவாகியுள்ளது அதன் பாதிப்பே இந்த கட்டுரையாகும். இந்த கட்டுரையில் இலங்கையில் இன்றுள்ள தமிழ் சிங்கள் மக்களின் இன உறவுகளும் அதன் விகாரங்களுக்குமான அடிப்படைகளை ஆராயும் நோக்குடன் பலர் இன்று இந்தியா இலங்கை புலம்பெயர் நாடுகளில் இயங்குகிறார்கள். அவர்களையும் மேலும் அவர்களது திட்டங்களுக்கான கருத்துக்களையும் இந்த கட்டுரை வழங்குகின்றது
    இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் அடிப்படைகளை பற்றி ஆராயும் போதும் அதன்பின்னரான காலங்களில் ஏற்பட்ட என்ன மாற்றங்கள் அல்லது யாரது வருகை எப்படியான மாற்றங்களை இலங்கையில் என்னமாதிரியான மாற்றங்களை ஏற்ப்படுத்தியதுஎன்றெல்லாம் இருதரப்பு மக்களையும் சிந்திக்க வைக்கும் பணிகளுக்கு உரமூட்டவே இது உதவும்.
    இலங்கையில் பிரிவினைவாதம் சந்தர்ப்பவாதிகளால் ஏற்படுத்தப்பட்டு தவறான தலைமைகளால் தமது சுய லாபத்திற்காக பாவிக்கப்பட்டு இன்று இலங்கை இந்த சீரழிவினை சந்தித்துள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இதைவிட மேலும் ஒரு பிரிவினைவாதம் இலங்கையில் ஏற்படாமல் அல்லது இன்னுமொரு பிரிவினர் இலங்கையில் பிரிவினைக்கான தூண்டல்களை உருவாக்காமலும் பாதுகாத்துக் கொள்ளவே இப்படியான கருத்தோட்டங்கள் உதவும் என பலரும் நம்புகிறார்கள்.
    இந்த கட்டுரை இன்றுள்ள இலங்கை நிலைமைகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமலே உள்ளது இங்கு கவனிப்பது முக்கியமானது. அத்துடன் சிலர் இந்த கட்டுரையை இனவாதமாக அல்லது சமயவாதமாக பார்ப்பதில் சில சிக்கல்கள் எழுகின்றது. காரணம் அன்று இந்த இனங்கள் சமயங்கள் இருந்திருக்கவில்லை இலங்கை சமூகம் இது பற்றி அன்று அக்கறைப்படவில்லை ஆகவே இந்த கட்டுரைக்குள் சமய வாதங்களை தவிர்ப்பதே சிறந்தது.
    இவை எல்லாவற்றிக்கும் மேலாக இலங்கையில் அன்று இருந்தவர்கள் அத்தனைபேரும் திராவிட குடும்பத்தவர்கள் என்பது திட்டவட்டமான மரபணு சோதனை முடிவு இலங்கையின் மக்கள் தென் இந்தியாவின் வழித்தோன்றல்கள் என்றும் இதன் சில மிககுறைந்த சதவிகித பிரிவினர் வட இந்திய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் முடிந்த முடிவு.
    தமிழர்கள் இலங்கை பெளத்தத்தின் அடிப்படை என்றும் இதனை சுனில் ஆரியரத்தனா தனது இந்தி பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றும்போது கூறியுள்ளார் (இவை பற்றி மேலும் கட்டுரைகள் எழுதப்படும்) முக்கியமாக இந்திய இலங்கையில் இந்த 3000 வருடங்கள் முந்திய வரலாறும் இதன் உண்மைகளும் என்ற கருத்தை ஒரு பெளத்த துறவி Rev Dr Sumana Siri, D.Th.(Oxford), என்னிடம் கருத்தை பகிர்ந்திருந்தார்.
    இன்னொரு சந்தர்ப்பத்தில் லண்டனில் உள்ள பெளத்தவிகாரை ஒன்றில் உள்ள பிக்குகளை சந்தித்த போது அவர்கள் நான் மேலே குறிப்பிட்ட தமிழ் பெளத்த துறவிகளைகளின் பெயர்களை குறிப்பிட்டபோது தமது பெளத்த விகாரைகளில் உள்ள பல குறிப்புக்கள் இது பற்றி நிறையவே தமக்கு அறிவூட்டி இருப்பதாயும் அதில் அதிநிருத்ததேரோ என்ற தமிழ் பெளத்தரின் பங்களிப்புக்கள் பற்றியும் அதனால் இலங்கையில் ஏற்ப்பட்ட மாற்றங்கள் பற்றியும் எனக்கு எடுத்துரைத்தார். அதன்போது அவர் இன்று இலங்கையில் உள்ள பெளத்தத்தில் தமிழர்களின் பங்களிப்பு நிறையவே உண்டு என்பதை ஏற்றுக்கொண்டார்.
    நான் ஏற்கனவே வேறு கட்டுரையில் எழுதியிருந்த காஞ்சிபுரம் நயினார் போன்றவர்களே தமிழ் பெளத்தர்களே யப்பான் சீனாவுக்கு பெளத்தத்தை எடுத்துப்போனார்கள் என்பதையும் ரூவான்வெலிசாயாவில் இருந்த தமிழ் பெளத்த துறவியிடம் சரணடைந்த சிங்களவரின் பாசை புரியாத தமிழ் பெளத்ததுறவிகள் இருந்துள்ளதையும் இங்கே நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
    (போராட்ட காலங்களிடையே நடைபெற்ற தமிழ் சிங்கள கலப்புக்கள் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம்)
    இந்த கட்டுரை எமது வரலாற்றை மீட்டுக்கொண்டு ஒரு சரியான மீண்டும் புரண்டு விடாத புதிய பாதையினை வகுக்கவே தேடல் செய்கிறதே தவிர இந்த கட்டுரை இனவாதம்புரிய மதவாதம் புரிய இடம்கொடுக்க விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    இப்படியான கருத்துக்கள் பரம்பல் செய்யப்பட்டு தென் இந்திய, இலங்கையில் தமிழ் – சிங்கள் இன உறவுகளை மேம்படுத்தவே முயல்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
    இலங்கையில் முரண்பாடுகளை தவிர்க்கும் புதிய பயிற்சிகள் வழிமுறைகள் பற்றியும் (ஆய்வினையும்) தேடுகின்றோம்.
  18. Sothilingam T on April 17, 2011 5:35 pm
    Sinhala and Tamil Ancestors were on this Island for 14,000 Years
    By R. Wijewardene
    The volume of information on the internet is genu-inely astounding. Of course not all, or even a small fraction of it, is true but a great deal of it is certainly interesting.
    The entry in Wikipedia under ‘Sinhala people’ – makes particularly interesting reading. It says, in reasonably technical jargon, that DNA studies conducted by Stanford University in 2003 indicate that the Sinhala people are not descended from north Indian settlers but rather that they can trace their origins to the indigenous people who populated this island circa 12000 BC.
    What this fairly obscure DNA study does therefore is cast doubt on the creation myth central to the identity of the nation’s principle ethnic group; the legend that the Sinhalese people are the descendents of a group of marauding North Indians who arrived on the island on precisely the date of the Buddha’s death.
    Myth
    While the Vijaya story is understood in terms of a myth nevertheless the assumption that the ancestors of the Sinhalese arrived on this island relatively recently – 543 BC and that the Sinhalese were nevertheless the ‘first’ of the major ethnic groups to arrive on the island underlies claims of ‘ownership’ the are central to the broader ethnic conflict.
    However what these genetic studies indicate is that where DNA is concerned the people of Sri Lanka, never really arrived from anywhere. This applies to both Tamils as well as Sinhalese as the study found that in genetic terms the difference between the communities was either marginal or non existent.
    The majority of DNA – in Tamils and Sinhalese alike appears tobe indigenous which is to say that the bulk of the island’s people are descended from natives of this island rather than settlers. What this means is that the Sinhalese do not trace their ancestry to Orissa or North West India as often claimed but instead to Balangoda man – the ancient Paleolithic people who populated this island thousands of years ago – the yakshas and nagas of legend.
    While the study is not definitive – the suggestion that the people of this island while identified as Sinhala, Indo Aryans and Tamil Dravidians for linguistic reasons, where ancestry is concerned descended from predominately indigenous stock, is not a new one.
    Evidence
    Local historians such as K.M. de Silva, as well as British and European archaeologists and anthropologists working half a century ago began to suggest that evidence of migration from India in and after 500BC was limited and began to find evidence to support the theory that the bulk of the population was of essentially indigenous origin.
    The Indo-Aryan language – ‘Sinhala’ which is often cited as evidence for the north Indian origins of the Sinhalese, is according the genetic study a result of ‘cultural diffusion’ not settlement.
    The Indo Aryan languages Sanskrit and Pali were introduced by monks and possibly a small number of invaders and adopted by the indigenous people as they had no written language of their own.
    Rather than being settled by people from India the reality is that a small number of North Indians brought the people a written language and sacred texts the influence of which caused the indigenous population to modulate their speech – and begin speaking an Indo Aryan language.
    Suspect
    The old legend that Vijaya displaced the island’s indigenous people chasing them into the jungles to become veddahs therefore is rather suspect. It seems rather that the descendents of the island’s indigenous pre Vijayan people include most of us on the island today. And the veddahs possibly represent a small group of indigenous people who did not become as thoroughly assimilated into the civilisations brought to the island from India.
    Anthropologists have long suggested that veddahs are not a distinct aboriginal race but rather represent an earlier stratum of Sinhala culture, as their language and rituals are closely related to those of the Sinhalese. The DNA of the islands original yaksha inhabitants lives on – not just in the veddahs but in all of us.
    Again what is crucial is that the entire population was found to be of largely indigenous descent and the study included DNA samples from 90 Sri Lankan Tamils.
    Which means that Tamil the community is either extensively intermixed with the indigenous community or that many indigenous people simply adopted a Tamil identity at times when the island was ruled by Tamil kings.
    The Tamil and Sinhala identities are both therefore the result of cultural diffusions rather than distinct racial origins.
    Origins
    Ultimately this genetic evidence casts doubts on established ideas regarding the origins of the nation’s major ethnic groups. However by concluding that the Sinhalese and Tamil people are effectively identical, and indigenous the study also provides a basis for unity. What distinguishes the people of this island is not genetics but only languages and religions introduced relatively recently from abroad.
    While this is fascinating theory it is despite the genetic component of the research being definitive and does not by any means settle the historical issue regarding the origins of this island’s presentinhabitants. What the study does do however is make it clear that there is a need to reopen the debate regarding the origins of civilisation on this island.
    While in other parts of the world history has been subject to revision, re-examination and debate, in Sri Lanka history or the study of history has since the mid 20th century been largely stagnant with established versions – the Vijayan legends etc. etched in stone.
    The debate, discussion and exploration of this country’s history has largely vanished from the public eye and today history is confined to outdated text books and dusty unvisited museums. This is ultimately a great shame as history is vital not simply as the study of a static past but in terms of establishing identity in the present.
    The ethnic conflict however has politicized and restricted its study with various established biases serving both warring parties and the ultimate loser has been as ever the people of this country who have been deprived of a fuller understanding of this country’s fascinating past.
    Debate
    While theories regarding the origins of the Sinhala and Tamil people on the island invariably lead to heated debate the ultimate objective of historical investigation should not be to propose any one view as definitively right but rather through the analysis of many considered points of view to come to a clearer version of our history. And of course to discover if we really are genetically at least still the nagas and yakshas of 14000 years ago.
    Posted by transCurrents on February 14, 2009 -http://transcurrents.com/tc/2009/02/sinhala_and_tamil_ancestors_we.html
  19. Ajith on April 17, 2011 8:27 pm
    நிற: மத: கலை: கலாச்சார: மொழி: பேதமைகளைக் கொண்டு வெள்ளையர்களுடன் வாழ்வது மட்டுமல்ல என்னை போன்றவர்கள் குடும்பமே நடத்துகிறார்கள். ஏன் எம்மால் சிங்களருடனும் அவர்களால் எம்முடனும் இணைந்து வாழமுடியவில்லை என்பதைச் சிந்தியுங்கள். அரசியல் இலாபங்களுக்காக வளர்த்து விட்ட இனத்துவேசம் இன்றும் நாகரீகம் வளர்ந்த காலத்திலும் தொடர்கிறது என்பது வேதனைக்குரியது.- நக்கீரா
    நண்பன் நக்கீரன் அவர்களே உங்கள் கேள்வி நியாயமானது. இந்த கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியாமல் இருப்பதும் வேதனைக்குரியது. தமிழர்கள் எத்தனையோ பேர் சிங்களவர்களுடன் குடும்பம் நடத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க நியாயம் இல்லை. நீங்கள் வெள்ளையர்களுடன் குடும்பம் நடத்துவதனால் இங்கு இனத்துவேசம் இல்லை என்று அர்த்தம் ஆகாது. உத்தரனமகாக பாரக் ஒபாமா ஜனாதிபதியாக உள்ள அமெரிக்காவிலும் இனத்துவேசம் உண்டு. ஆனால் அங்கு பொருளாதார பிரச்சினைகள் குறைவு. அங்கு அரசை நிர்வகிக்கும் சட்ட ஒழுங்குகள் , நீதி துறைகள் அரசியல் கலப்பற்றவியக்கவும், பகிரங்கதன்மையும் கொண்டவையாகவும் உள்ளன. ஆனால் இலங்கை திருநாடில் அப்படியல்ல. அரசியல் கலப்படம் எங்கும் நிரம்பி உள்ளது. இனத்துவேசத்தை அரசியல் வாதிகள் மேல் முழுக்க போடுவது நியாயமற்றது. இலங்கை நாடில் இனத்துவேசத்தை வளர்பவர்களில் அரசியல்வாதிகளோடு மதவாதிகள், கல்விமான்கள், இலகியவதிகள், எழுத்தாளர்கள் இப்படி பலரும் பங்கு கொள்கிறார்கள். உதாரணமாக பக்கம் சரா உண்மையை இயம்பும் பத்திரிகைகள், எழுத்தாளர்களை இன்று காண்பது மிக அரிது. குற்றவாளிகளை காப்பாற்றவும், குற்றமரவர்களை தண்டிக்கவும் தான் இலங்கையில் சட்டங்கள் துணை போகின்றன.
    இன, மத, மொழி வேறுபாடு அற்ற, சகல உயிரினங்களையும் மதித்து, சமதர்ம, நீதியான, ஊழல் அற்ற ஒரு நிர்வாக முறை வரவேண்டும் என்பது எல்லோரதும் ஆசை. இந்த ஆசைகளோடு தான் நாம் பல நூறு ஆண்டுகளை கழித்துவிட்டோம். இப்படியே எத்தனையோ சிங்கள தமிழ் புது வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் மனிதர்கள் மாறவில்லை மனங்கள் மாறவில்லை அழிவுகள் நிற்கவில்லை.
  20. thurai on April 18, 2011 5:19 am
    //ஆனால் மனிதர்கள் மாறவில்லை மனங்கள் மாறவில்லை அழிவுகள் நிற்கவில்லை.//அஜீத்
    அருமையான கருத்து இது சிங்களவர்களிற்கு மட்டும்தனா தமிழர்கள் இதில் அடங்கவில்லையா? -துரை
  21. Rohan on April 18, 2011 5:28 am
    திராவிட பெளத்தமா தேரவாத பெளத்தம்?
  22. Ajith on April 18, 2011 6:51 pm
    அருமையான கருத்து இது சிங்களவர்களிற்கு மட்டும்தனா தமிழர்கள் இதில் அடங்கவில்லையா? -துரை
    ஆம் இது எல்லோருக்கும் பொருந்தும். ஆனால் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்பவர்கள் நடுநிலையாகவும் நீதியை வழங்குபவர்களாகவும் வழிகாட்டுபவர்களாகவும் இருக்கவேண்டும். முதலில் தலை சரியாக இருக்க வேண்டும்.