Search This Blog

Friday, 16 May 2014

இன்றுள்ள நல்லூர் கோவில் 1750களில் கட்டப்பட்டதாகும் ஆனால் ஆரம்பத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட நல்லூர் கோயில் இருந்த இடத்தில் இன்று கிறிஸ்தவ சேர்ச் உள்ளது.

1.     T Sothilingam on November 17, 2010 11:10 pm

இன்றுள்ள நல்லூர் கோவில் 1750களில் கட்டப்பட்டதாகும் ஆனால் ஆரம்பத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட நல்லூர் கோயில் இருந்த இடத்தில் இன்று கிறிஸ்தவ சேர்ச் உள்ளது. 

இன்றுள்ள நல்லூர் கோவில் 1750களில் கட்டப்பட்டதாகும் ஆனால் ஆரம்பத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட நல்லூர் கோயில் இருந்த இடத்தில் இன்று கிறிஸ்தவ சேர்ச் உள்ளது. இந்த சேர்ச்சின் வாசலில் உள்ள வசனம் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாகும். இன்றுவரையிலும் இந்த சேர்ச் சம்பந்தமாக யாரும் பேச ஆரம்பிக்கவில்லை என்றே கூறலாம் இனிமேல் இது பற்றிய சர்ச்சைகள் பல எழும் சாத்தியக்கூறுகள் உண்டு.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பகாலத்தில் இருந்த முதலியார்களில் மூவர் முக்கிய முதலியார்கள். ஒன்று சந்திரமுதலி இவர்கள் இணுவிலை அண்டிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள் இவர்களுக்கு இன்றும் உரிமையுள்ள கோவில்கள் இணுவில் பகுதிகளில் குறிப்பாக மேற்கில் உண்டு. இவர்களது பரம்பரையினரே பரராசசேகரன் செகராசசேகரன் பரம்பரையினராகும்.
இரண்டாவது சூரியமுதலியார் இவர் யாழ் வலிகாம் கோவில்பற்று பகுதிகளில் பெரும் உடைமைகள் கோவில்களையும் கொண்டிருந்தவர்கள் மூன்றாவது முதலியார் பெயர் மாப்பாண முதலியார். இந்த மாப்பாண முதலியார் பரம்பரையினரே சங்கிலியன் பரம்பரையினராகும்.

இந்த மாப்பாண முதலிகள் பரம்பரையினர்க்கே நல்லூரின் பெரும்பகுதி நிலங்கள் உடமையாக இருந்துள்ளது. சங்கிலியன் அவனது சகாக்களும் ஜரோப்பியர்களுடன் சண்டைபிடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே போத்துக்கீசர் ஒல்லாந்தர்கள் நல்லூர்கோயிலை இடித்து (இன்று உள்ள சேர்ச்) சேர்ச்சை கட்டினர் பின்னர் சங்கிலியனை கொன்றொழித்தனராகும்.
இன்று நல்லூர் இருக்கும் இடத்தில் போத்துக்கீசர் ஒல்லாந்தர்கள் வருகைக்கு முன் பலகாலங்களாகவே இந்த இடத்தில் சந்தை கூடுவதும் இந்த சந்தைக்கு மாப்பாண முதலிகள் கட்டணம் அறவிடுவதும் இந்த சந்தையை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தனர் இந்த சந்தைக்கு அரபிலிருந்தும் மொரோக்காவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் இந்தியா கேரளாவிலிருந்தும் நாகபட்டினத்திலிருந்தும் பல வியாபாரிகள் வந்து போவது வழக்கம். இந்த வியாபாரிகள் மாதகல் துறைமுகம் வழியாகவும் பருத்தித்துறை வழியாகவும் காரைநகர் கோவளம் மற்றும் துறைமுகம் வழியாகவும் பலதரப்பட்ட வியாபாரிகள் வந்துபோவது வழக்கம். இவர்களில் பலர் தோல், கறுவா, வாசனைத் திரவியங்கள், எருது மாடுகள் போன்றவற்றை எடுத்து வந்தும் யாழ்ப்பாணத்திலிருந்த பருத்தியையும் வெற்றிலையும் எடுத்துச்சென்றும் வணிகம் செய்திருந்தனர். இங்கே இந்த வியாபாரிகள் வந்து போன காலங்களிலேயே தான் நல்லூர்கோயிலும் இடித்து அங்கே சேர்ச் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
(இதே காலகட்டத்தில் காரைநகரில் உள்ள அம்மன் கோவில் இடிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு கோவிலை இடித்தவர்களுக்கு அம்மன் நோய் வந்ததால் கோவில் இடிப்பது தடைப்பட்டது இந்த அம்மன் கோவில் சிலைகளை காரைநகர் பட்டங்கட்டிகள் அல்லது முக்கியர் என்ற சாதியினர்தாம் தூக்கிச்சென்று பாதுகாத்தனர். இதன்காரணமாக இன்றும் இந்த வெள்ளாளர் கோவிலில் இந்த வேறு சாதியினருக்கு கெளரவம் கொடுக்கும் முகமாகவும் அவர்களிடையே உருவான திருமண உறவு காரணமாகவும் இன்றும் இந்த கோயிலில் இரு சாதியினரும் திருவிழாக்கள் செய்கின்றனர் காரைநகர் சிவன் கோவிலில் உள்ள மூலஸ்தான விக்கிரகங்கள் போத்துக்கீசர் ஒல்லாந்தர்களால் கோவிலின் கேணிகளில் தூக்கிவீசப்பட்டது. இந்த சிலைகள் பின்னர் கண்டெடுக்கப்பட்டு இன்றும் கோவிலின் உள்வீதியில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.)

யாழ். பிரதேசத்தில் மட்டும் சைவர்கள் பலதரப்பட்ட கொடுமைகளை ஒல்லாந்தர் போத்துகீசரினால் அனுபவித்த காலம் இதே போன்று முன்னைய நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மூலஸ்தானத்தில் சைவர்கள் வைத்து வணங்கிய வேல் விக்கிரகம், இந்த சந்தைப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இரகசியமாக வைத்து சைவர்களால் இரகசியமாகவே வணங்கப்பட்டு வந்தது. இந்த மாதிரியாகவே யாழ்ப்பாணத்தில் சைவ சமயம் போத்துக்கீசர் ஒல்லாந்தர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது இன்றும் யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு சைவத்தவர்களாலும் குறிப்பிட்டு பேசப்படுவதாகும்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக வரும்போது பூசைகள் வணக்கங்கள் செய்வதும், சிக்கலான நேரங்கள் வரும்போது சந்தைப்பகுதியில் விக்கிரகத்தை ஒளித்துவிடுவதுமான சைவ நடவடிக்கைகளே இருந்துள்ளது. (சந்தை என்றதும் தனியே அரேபியர்கள் மட்டும்தான் வியாபாரிகள் என்று முடிவு கொள்ள வேண்டாம்)

போத்துக்கீசர் ஒல்லாந்தர்கள் வெளியேறிய பின்னர் இந்த மாப்பாண முதலிகளின் பரம்பரையினர் தமது உரிமையுள்ள நிலத்தை மீண்டும் கைப்பற்றி அங்கே நல்லூர் கோயிலை ஸ்தாபித்தனர். இந்த முதலிகளின் பெருந்தன்மை காரணமாகவே இன்றும் அந்த சேர்ச் நிமிர்ந்து நிற்கிறது.

இந்த வியாபாரம் செய்ய வந்த நாடோடிகளில் பல இந்தியர்களும் பெளத்தர்களும் இந்திய கேரளர்களும் (சிலர்) மீண்டும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கும் மீளவும் சென்று விட்டனர் ஆனால் அரபுக்காரர்களில் சிலரும் இந்தியாவிலும் இருந்து வந்த சிலரும் மற்றும் வேறு இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நல்லூர் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியமர்ந்தனர். இது யாழ் ஓட்டுமடம் மானிப்பாய் றோட் வரையில் நல்லூர் என்றே அழைக்கப்பட்டது. இந்த பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் தமது வாழ்விடங்களாக அமைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழத்தொடங்கினர் இவர்கள் வாழும் பிரதேசங்களே பின்னர் சோனகத்தெரு, சோனக கடை, சோனக குறிச்சி, எனவும் பெயர் பெற்றும் யாழ்ப்பாணத்தில் சோனகர்கள் வரலாறு உருவாகியது.

இந்தக்காலத்திலிருந்தே பல கேரள இந்தியர்கள் சைவ ஹோட்டல்களை தொழிலாக கொண்டனர் இவர்கள் நாளடைவில் தென்இலங்கை நோக்கியும் இடம் பெயர்ந்தனர் இவர்களிடமிருந்த இன்றைய நல்லூர் கோயில் இருக்கும் இடத்தை மீளப்பெற்றதாலும் இந்த சந்தை இல்லாமல் போனதாலும் இந்த சந்தையை அடிப்படையாக கொண்ட ஜீவனம் நடாத்திய இந்த புதிய யாழ்வாசிகளான சோனகர்கள் அரபுக்களுக்கு மாப்பாணமுதலியார் இந்த கோயில் பிரதேசத்தில் வியாபாரம்செய்யும் உரிமைகளை வழங்கினார். இதன் ஒருவிடயமாகவே நல்லூர் கோவிலின் இடது பக்கத்தில் உள்ள வீதிப்பிரகாரத்தில் சோனகர்களுக்கு-முஸ்லீம்களுக்கு மட்டுமே கற்பூரம் விற்பதற்கு உரிமை கொடுக்கப்பட்டது. இது மாப்பாண முதலியாரின் பரம்பரையினரின் பெருந்தன்மை காரணமாகவே இந்த ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் எங்கும் கோயிலில் உரிமையோ நிலத்தில் உரிமையோ கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டும்.
இதையே பின்நாட்களில் சோனகர்கள்(முஸ்லிம்கள்) எல்லாவற்றையும் மாற்றி இந்த நல்லூர் கோயிலின் உள்ளே தமது பிரேத அடக்கம் உள்ளது அதையே நீங்கள் போய் வணங்குகின்றீர்கள் என்றும் கதைகள் இவர்களாலே கட்டப்பட்டது.

ஒரு பிரேதம் இருந்தால் அந்த இடத்தில் இந்துக்கோயில் கட்டுவார்களா? அதைவிட பின்னாளில் அரையும் குறையுமாக இந்த கதைகளை தெரிந்த முஸ்லீம்கள் சோனகர்கள் நல்லூர் தமது சொத்து என்றும் இதை மீளப்பெற வேண்டும் என்றும் தமது பரம்பரையினரே நல்லூர் பரம்பரையினர் என்றும் பல பொய்யான புனைவுகளை பலதடவைகள் விட்டுள்ளனர் என நல்லூரின் உரிமையுள்ள பரம்பரையினர் நல்லூர் கோயில் நடாத்தும் உரிமையாளர்களும் எனக்கு கருத்து சேர்த்தனர்.


No comments:

Post a Comment