Search This Blog

Showing posts with label T Sothilingam. Show all posts
Showing posts with label T Sothilingam. Show all posts

Friday, 16 May 2014

இஸ்லாமியர்கள் பற்றிய எனது பார்வை. - த சோதிலிங்கம், தேசம்நெற்

இஸ்லாமியர்கள் பற்றிய எனது பார்வை. -த சோதிலிங்கம், தேசம்நெற்

25ம் திகதி நவம்பர ,  2011 எழுதியதை மீண்டும் பதிகிறேன் இது தான் இஸ்லாமியர்கள் பற்றிய எனது பார்வை.

இந்திய பிராந்தியத்தில் உள்ள அத்தனை குடும்பங்களும் பெருவாரியாக இரண்டு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளன அதில் மிகவும் பெரிய பிரிவான திராவிட இனக்குழுக்களின் பரம்பரையினரே இன்றுள்ள பெரும்பான்மையினரான இந்திய பிராந்தியத்தினர் இவர்களில் ஆரியக் கலப்பின் பல தொடர்புகள் இருந்துள்ளதையும் இன்று திட்டவட்டமாக மரபணுப்பரிசோதனை நிரூபித்து விட்டது.(1)

இன்று இலங்கையில் இருக்கும் இனக்குழுமங்கள் அனைத்துமே இந்த திராவிடக் குடும்பமே தவிர வேறு அல்ல இவர்களில் மரபணுவில் பல்வேறுபட்ட கலப்புக்கள் இருப்பதும் உண்மை. மனித குலம் பொதுவான இன அடையாளத்தை பொதுவான பொதுக் குணாதிசயங்களைக் கொண்ட ஒரு இனமாக உருமாறும் ஒரு நோக்கை நோக்கியே இந்த மனித இனத்தின் வரலாறும் நடைபோடுகின்றது. இதில் அதன் ஒரு கட்டத்தில் இருந்து கொண்டே நாம் எமது மனித இனம் எப்படியான மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதை எம்மையும் அறியாமலே இருக்கிறோம். இந்த பெரிய பூமிப்பந்தில் வாழும் நாம் எமது பூமி சுழல்வதை உணரமுடியாதுள்ளது போன்றதே இந்த மனிதகுலமும் ஒரு பொதுவான இனத்தை இன அடையாளத்தை ஏன் பொதுவான மொழி அடையாளத்தை நோக்கி இயங்குகின்றதை புரியமுடியால் திண்டாடுகின்றோம். (2)

இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் சோனகர்கள் அல்லது இஸ்லாமியர்கள் இவர்கள் இலங்கையில் சிங்கள தமிழர்கள் ஒரு பத்து பரம்பரையினர் என்றாலும் இஸ்லாமியர்கள் ஒரு ஜந்து பரம்பரையினர் என்றாலும் வாழ்ந்து விட்டனர் இவர்கள் இந்த இந்த சோனகர்கள் இஸலாமியர்கள் இலங்கையின் பரம்பரையினர் என்ற அடையாளத்தை எப்போதோ பெற்றுவிட்டனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம் இவர்களின் ஒவ்வோரு இனமும் தமக்கென ஒரு அடையாளத்தையாவது தனித்துவமாக கொண்டுள்ளனர்.(3)

இன்று தமிழர்கள் சிங்களவர்கள் என்ற அடையாளத்தை திட்டவட்டமாகவும் அரசியல் ரீதியாகவும் உருவாக்கம் பெற்றுள்ளது ஆனால் இந்த முஸ்லீம்கள் தனியான இனம் என்ற கருத்தில் பலர் பலவாறாகவும் கருத்துக்களை பலகாலமாக முன்வைத்தே வந்துள்ளனர். இதில் உள்ள முக்கிய விடயம் என்னவென்றால் அந்த சோனகர்கள் அல்லது முஸ்லீம்கள் தம்மை தமது மத அடையாளங்களுடன் தம்மை ஒரு இனமாக கருதி தம்மை ஒரு இனமாக பகிரங்கப்படுத்தினர். அதை நாம் இதர இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வதே சரியான வழி அல்லது இயற்கையானது இதில் இனிமேலும் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அப்படி ஒரு மாற்றம் வரவேண்டுமானால் அது அந்த சோனக இனத்தால் தாம் தமிழர்கள்தான் தமது மதம்தான் வேறானது அது அந்த அடையாளம் முக்கியத்துவமானது அல்ல என்ற வாதம் அவர்களிடமிருந்து எழுந்து அது மாறினால் ஒழிய வேறு வழியால் இனிமேல் வரமுடியாது. அப்படியாக உலக வரலாற்றில் ஒரு இனமாக தம்மை அடையாளப்படுத்தியவர்கள் அதை கைவிட்ட வரலாறு நான் கேள்விப்படவில்லை.(4)

சோனகர்கள் ஒரு தனிஇனமாக இருந்ததாலேயே அவர்களை தனியாக அடையாளப்படுத்தி அவர்களை புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினர் சோனகர்கள்(இஸ்லாமியர்களை) ஒரு இனமாக அங்கீகரிப்பதற்கு இது ஒரு காரணம் போதுமானது ஆனால் மட்டக்களப்பிலோ கண்டியிலோ இப்படி யாரும் முஸ்லீம்களை வேறாக பிரித்து நடாத்தவில்லையே என்ற வாதம் எழாமல் இல்லை.(5)

முஸ்லீம்கள் இன்று தமிழை மட்டும்தான் பேசும் இனமாகவும் பாரக்க முடியாத நிலை உருவாகியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் இன்று சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழிமூல வாழ்க்கையில் அமைதியாக வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளதையும் அவதானிக்கலாம். ஆனால் தமிழர்கள் தமிழ் மொழியை மட்டும் அடையாளமாக கொண்டவர்கள் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்ட இனமாகவே இருக்க முடியும் இது தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் திட்டவட்டமான முடிவாகவே உள்ளதையும் மறந்துவிடக்கூடாது.(6)

இஸ்லாமியர்களை தமிழர்களுடன் இணைத்து ஓர் (இனமாக்கும்) இனமாக உருவாக்கும் முயற்சியில் யாரும் இறங்கியதில்லை அதைவிடுத்து அவர்களை எம்மில் ஒரு இனம் என்று வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை! இயற்கைக்கு எதிரானதும் கூட. நாம் மனிதர்கள் எமது அடையாளங்களைக் கொண்ட தேசியங்கள் தாம் வாழும் நாட்டில் பெரும்பான்மை என்றதும் சிறுபான்மையினரின் சுயாதிபத்தியத்தை அங்கீகரிப்பதில்லை அவற்றுக்கு மாறாக அவர்கள் மீது வற்புறுத்தலே செய்வது சாதாரணமாக உள்ளது. இதில் புலிகளும் இதையே செய்தனர் இந்த இஸ்லாமியர்களை தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தினுள் கொண்டுவரும் முயற்சியில் பல இஸ்லாமியர்களும் சேர்ந்து எடுத்த பல முயற்சிகள் ஆரம்ப முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது (இதற்கு நல்ல உதாரணம் த.வி.கூ அமிர்தலிங்கம் ஈழமாணவர் பொதுமன்றத்தால் அடிக்கடி பிரயோகிக்கப்பட்டு வந்த தமிழ்பேசும் மக்கள் என்ற பதத்தை பல தடவைகள் எதிர்திருந்தார். பல பொதுக்கூட்டங்களில் எதிர்த்தும் பேசியிருந்தார்) பின்னர் இவைகள் யாவும் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டு விட்டது.(7)

இந்த சோனகர்கள் தனி இனம் என்பதை ஏற்க முடியாதவர்கள் சோனகர்களை தமிழ் இனமாக உருவாக்கும் அந்த பாரிய கடமைகளில் இருந்து தவறி விட்டார்கள். அதையும் விட அந்த சோனக இனத்தை அல்லது இஸ்லாமியர்களை தம்மைவிட வேறு ஒருவராக தமிழர்களும் சிங்களவர்களும் தம்மிடையே கருதியும் அதற்கான வேறுபாடுகளையும் காட்டியே கடந்த பல பரம்பரையினர்கள் நடந்து கொண்டுள்ளனர். இந்த வேறுபாடான நடத்தையும் சோனகர்களை அல்லது இஸ்லாமியர்களை ஒரு இனமாக பிரகடனம்செய்ய போதுமானது ஆனால் அதைவிட பல காரணங்கள் உண்டு சோனகர்களை தனி இனமாக பிரகடனம் செய்வதற்கு. அதில் ஒன்று உத்தியோக பூர்வமாக இலங்கையில் முஸ்லீம்களில் பெரும்பான்மையினரை சோனகர்கள் என்றே பிறப்புப்பதிவு செய்து வந்துள்ளோம்.(8)

இரண்டாவது இவர்கள் தனித்துவமான மதஅடையாளத்தை கொண்டவர்கள் மதஅடையாளமே இவர்களின் மிகவும் பிரதானமான அடையாளமாகவும் இன்று தொனிப்பொருளாகவும் உருவாக்கப்பட்டும் இதன் பின்னால் மதத்தின் பெயரால் அழைக்கும் அடையாளமும் (முஸ்லிம்கள்) இருக்கின்றது.(9)

இனிமேல் இந்த மதமும் மதத்தின் குணாதிசயங்களும் கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும். மதங்களின் பெயரால் நடைபெறும் அத்தனை நடவடிக்கைகளும் தவறுகளும் கண்ணுக்கு எண்ணை விட்டே அவதானிக்கப்படும் இதன்போது இந்த மதவாதிகள் எம்மதத்தின்மீது கரிபூசாதீர்கள் என்றும் எமது மதம் புனிதமானது என்றும் சத்தம்போடுவது அர்த்தமற்றதாகும். இங்கே இதர இனத்தவர்களால் இந்த மதம் பற்றிய பேச்சுக்கள் (விமர்சிக்கப்படுவதை) இந்த இஸ்லாமிய சமூகமும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதற்காக இந்த இஸ்லாமிய இனத்தவர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் இனிமேல் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றாகிவிட்டது. அதில் முக்கியமாக இன அடையாளம் மத அடையாளத்துடன் பிணைந்து கொண்டதால் மதம் மீதான விமர்சனங்கள் எழுந்தே தீரும். அன்று இவர்கள் சல்மான் ரூஷ்டி மீது நடைபெறும் நடவடிக்கைகள் போல் பதில்களை முன்வைக்கும்போது இவை உள்நாட்டு யுத்தத்தில் முடிவடையக்கூடும். இன்று உலகில் பல்வேறுபட்ட சமூகங்களில் இஸ்லாம் முக்கிய கருப்பொருளாகவும் அவை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உள்ளதையும் உலகின் பல நாடுகளின் அரசியல் உள்விவகாரங்களின் கொள்கை வகுப்புக்களின் பொருளாகவும் உள்ளதையும் அவதானித்துக்கொண்டும் தம்மை உலகின் விமர்சன களத்தில் இலங்கை முஸ்லீம்களும் அதற்குரிய பக்குவத்துடன் சந்திக்க வேண்டி நேரிடும் இவற்றை இலங்கைதீவிலும் நாம் சந்திக்கும் காலம் தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.(10)

இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றில் மதத்தின் அடையாளங்கள் தவறானவைகள் என்றும் மதங்கள் பிற்போக்குத்தனமானது என்ற உண்மை எழுந்தே தீரும் இதில் மிக அண்மைக் காலங்களிலிருந்தே இஸ்லாமியத்தின் நடவடிக்கைகள் பல சர்வதேசங்களால் முற்போக்கு வட்டாரங்களால் பல கண்டனங்களுக்கு உள்ளாக்கப்படுதல் ஆரம்பித்துள்ளது இதில் தலிபான் நடைமுறைகள் சரியா நடைமுறைகள் முன்னிற்கின்றன!(11)

அண்மையில் ஜேர்மனி அதிபர்களில் ஒருவர் (பெண்மணி) கருத்து ஜேர்மனியில் பல் கலாச்சார மக்களைக்கொண்ட சமூகத்தை உருவாக்க முடியாது என்பதன் அடிப்பொருளாக ஜேர்மனியில் உள்ள இஸ்லாமியர்களையே அடிப்டையாக வைத்து இந்த கருத்து முன்வைக்கப்பட்டதை அவதானிக்கலாம் இங்கே இஸ்லாமியர்கள் பல்தேசிய பல்கலாச்சார அடையாளங்களுக்குள் வரமாட்டாதவர்கள் என்பதை பல்வேறு உலக நாடுகளின் கருத்துகளாக வெளிவிடுவதையும் அதேவேளை இஸ்லாமியர்கள் இதன்பால் கருத்துக்களை மறுதலித்தும்இ சிலவேளை எதிர்புணர்வுடனும் செயற்படுவதையும் உதாரணமாக லண்டனில் பொப்பி மலரின் எரிப்புகளில் பல இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் பல பத்திரிகைகளில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுடன் வெளிவந்திருந்ததையும் அவதானிக்கலாம்இ இதைவிட ரைம்ஸ் போன்ற பல சஞ்சிகைகளில் தொடர்ச்சியாக வெளிவரும் செய்திகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு முக்கியத்துவம் பெறுவதையும் அவதானிக்கலாம் இவைகள் இஸ்லாமியர்களை தமது மதத்தின் மீதான மாற்றங்களை கொண்டவர வற்புறுத்துவதாகவே தெரிகின்றது. இதற்கான பதிலாக இவை இஸ்லாத்தின் தவறு அல்ல என்றும் இவைகள் பாரம்பரியமாக உள்ள தவறுகள் என்றும் இவை திருத்திக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் கருத்துக்களை எழுப்பி இஸ்லாம் இவற்றிக் கூடாகவும் தன்னை நிமிர்த்திக் கொள்கின்றதை அவதானிக்கலாம்.(12)

என்றுமே உலகில் உள்ள மக்களில் பலர் தம்மை வேறு இனமாகவும் வேறு மதமாகவும் வேறு பால் உணர்வுள்ளவர்களாகவும் மாற்றிக்கொள்வது சாதாரணமானது இது இவர்களின் அறிவியல் (அறிவு கொண்டவர்கள் - அறிவு இல்லாதவர்கள்) காரணங்கள் பற்றியதாகும். இதில் இவர்கள் இஸ்லாம் மட்டுமல்ல இஸ்லாத்தைவிட இன்று உலகில் மக்கள் தாமாகவே தெரிவுசெய்யும் மதமாக இருப்பதில் பௌத்தமே முதலாவதாக உள்ளது அதனை அடுத்து வைஸ்ணவமாகும் ஆனால் இஸ்லாமியர்களின் மதமாற்றங்கள் இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இவற்றை பெரிதாக பறை சாற்றுவதால் உலகில் இஸ்லாத்துக்கு மட்டுமே மதமாதற்றம் நடைபெறுவதாக கூறி புளகாங்கிதம் அடைவதையும் கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது.(13)

அதேபோன்று இன்று உலகில் பல நாடுகளில் இஸ்லாம் பயங்கரவாத மதம் என்றும் அதற்கு மதிப்பளிக்க மறுப்பு தெரிவிக்கும் பலநடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. உதாரணமாக இன்றும் லண்டன் உயர்தர பாடசாலைகளில் பர்தா அணியும் இஸ்லாமிய பெண்களை ஒதுக்கிப்பேசும் பெருந்தொகையான மற்றைய சிறுவர்கள் நல்ல உதாரணமாகும்இ இவை லண்டனில் இந்த குழந்தைகளின் பெற்றோரின் குணாதிசயங்களின் வெளிப்பாடாகவே உள்ளதை அவதானிக்கலாம்இ இப்படி உடை உடுக்க கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் இந்த பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் இப்படி நடப்பதை அறியமுடியாத அறிவு குறைந்தவர்களாகவும் இஸ்லாமிய புத்தகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களாகவுமே இருக்க முடியும் என நம்பலாம்.(14)

இந்த விடயங்களில் இருந்து இஸ்லாமியர்கள் தாமாகவே வெளிவர வேண்டிய காலத்தின் கட்டாயத்தினுள் இருக்கிறார்கள்இ இஸ்லாமியர்கள் இந்த மாதிரியான தன்மைகளிலிருந்து தம்மை வெளியேற்றி புதிய முறையிலான அணுகுமுறைகளை கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டும் உள்ளனர். இதன்காரணமாக புதிய இஸ்லாமிய பரம்பரையினர் (இளம் சந்ததியினர்) இதற்கான போராட்டங்களை தமது இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கள் இஸ்லாமிய அதிகாரங்களை குவித்திருக்கும் வர்க்கங்களிடம் போராட்டங்களையும் நடாத்தி தாமாகவே புதிய செயல் வடிவம் கொடுக்கும் பல பணிகளையும் அவதானிக்கலாம்.(15)

இஸ்லாமியர்களை அவர்கள் தாம் விரும்பும் இனப்பெயரால் அவர்களை இனமாக ஏற்றுக்கொள்வது அவசியம் என நான் நம்புகிறேன். இது முஸ்லீம்களின் சுயமான வளர்ச்சிக்கும் தமிழர்களின் இடை மறிப்பில்லாத வளர்ச்சிக்கும் இதுவே சரியானது என்றே கருதுகிறேன் இக்கருத்தை எதிர்காலம் சரிஎன்று நிரூபிக்கும் எனவும் நம்புகிறேன்.(15.1)

இது அறிவியல் உலகம் இவர்கள் மீது தனது பார்வையினை செலுத்தியுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. அறிவியல் உலகம் இந்த தவறான அடையாளங்களிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தியே தீரும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.(16)

இதன்பால் வெளியிடப்படும் கருத்துக்களில் பல இந்திய பிராந்தியத்தில் இஸ்லாமிய வரலாறுகளை பலரும் குறிப்பாக இஸ்லாமியர்களால் இஸ்லாத்துக்காக இஸ்லாமிய புத்தகத்துக்காக மாற்றிப்பேசியும் இதற்காக நிறுவல்களை தரவும் முயற்சிக்கிறார்கள் இதிலும் இவர்கள் தாமாகவே திருந்திக் கொள்ள வேண்டிய நிலையை அறிவியல் சமூகம் உணர்த்தியே தீரும்.(17)

மதங்களின் வரலாறு முட்டாள்தனமானது மதங்கள் பயத்தினால் உருவானது. மதங்களே என்றும் மனித குலத்தின் ஜக்கியப்பாட்டுக்கு இடையூறாக இருந்துள்ளது ஆனால் கால அட்டவணையில் இந்த மதங்கள் நான் முன்பு குறிப்பிட்டது போன்று 100 மீற்றர் நீளமாள அளவு கோலில் 2 சென்றி மீற்றர் காலத்திலேயே இந்த மதங்களின் அடையாளங்கள் மக்கள் மீது பல விதமான நெருடல்களை கொண்டுவந்துள்ளது இதில் இறுதிக்காலத்தில் உலகிற்கு வந்த இஸ்லாம் இதன் ஒட்டுமொத்த கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளதுஇ இதற்கு சற்று முன்பாக உலகிற்கு வந்த கிறிஸ்தவம் இப்படியான கட்டுப்பாடுகள் அடக்குமுறைகளை அமுல்ப்படுத்தி இறுதியில் தோல்வியுற்று ஜனநாயகத்துடன் சமரசம் செய்து கொண்டு இன்று இயங்குகின்றதுஇ இதேபோன்று கிறிஸ்தவத்துக்கு முன்பு பல நூறு தசாப்தங்களுக்கு முன்பு வந்த பௌத்தம் அதற்கு முன்பு இருந்த சமயங்களின் அடிப்படைவாதங்களையும் சாதீய வெறிகளையும் மூட நம்பிக்கைகளையும் தவறுகளையும் அடக்குமுறைகளையும் மாற்றம் காணவே முற்பட்டதுஇ இதில் பௌத்தம் ஒன்று மட்டுமே கடவுள் என்ற போலியை மக்களுக்கு சரியாக எடுத்துரைத்தது.(18)

ஆயினும் இன்றைய நவீனகாலத்திலும் இந்த மதபிற்போக்குதனங்களை பயன்படுத்துபவர்களால் இந்த மதங்களில் பல தம்மை ஸ்தாபனமயப்படுத்தி ஜனநாயகத்துடன் போட்டியிட்டு மக்களை மடையர்களாக்கி மனிதகுலத்தின் முன்னோக்கிய நகர்வை பின்தள்ளவே செய்கின்றன.(19)

இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் செய்ப்படும் பலவிதமான கேவலமான இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய அறிவாளிகள் அல்லத தவறு என்று உணர்பவர்கள் இன்றுவரையில் வெளியே வந்து தவறுகளை விமர்சிப்தாக இல்லை மாறாக தாமும் அந்த குட்டையிலே விழுந்து விடுகிறார்கள் அத்துடன் இவர்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் என அவர்களின் செயற்ப்பாட்டுக்கு ஒரு ஒத்தணம் கொடுப்பதையும் அவதானிக்கலாம்

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலம் எடுக்கும் இவர்கள் இப்படியாக அறிவாரத்தமாக தமத மதம் பற்றி விமர்சனப்போக்கை த்மடையே எடுத்துக்கொள்ள அங்கீகரிக்க (விமர்சனம் என்பது எதிர்த்து பேசுவது அல்லது கருத்து எழுதுவதல்ல :தவறுகள் பிழைகள் மற்றவர்கள் கொண்ட கருத்துக்கு பதல் தருவது அல்லது தவறு என்றால் திருத்திக்கொள்வது) அது வரையில் இதர இனங்களின் நடவடிக்கையில் இந்த தவறான மதங்கள் பற்றிய அடிப்டையில் நேர்மையில்லாத உண்மையில்லாத தவறான விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படாத விடயங்களில் தமது வாழ்வை இழுத்தடித்துக் கொண்டிருக்க விடுவது சரியான உபாயம் அல்ல அவர்கள் அவர்கள் பாட்டில் தமது கடந்தகால வரலாற்றுப்போக்கினை உணர்ந்து கொள்ள விடுவதே மேலானது (இது புலிகளின் தவறுகளை புலிகளின் ஆதவாளர்கள் இன்று பரிந்து கொள்வது போன்று)சிலவேளை பலவிடயங்களில் பலர் பின்னாலேயே நின்றுவிடுவார்கள் சிலர் பல முன்னேற்றமான விடயங்களை அறியாமலே தமது வாழ்வுக்காலத்தையும் முடித்துவிடுவார்கள் இவை யாவும் சமூகத்தில் சகஜமானதே.

உதாரணத்திற்க்கு லண்டனில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தொலைக்காட்சியை தமது வீடுகளில் வைத்திருப்பதில்லை காரணம் தமத பிள்ளைகளின் அறிவில் சமய அறிவு ஏறாது போய்விடும் என்றும் தவறான விடயங்கள் அவர்கள் மனதில் ஏறிவிடும் என்பார்கள் ஆனால் அந்த குழந்தை 20 வயதானதும் பார்க்கலாம் என்பார்கள் ஆனால் அந்த குழந்தை 20 வயதில் திருமணம் செய்து குழந்தையை பெற்றதும் குழந்தைக்கு தொலைக்காட்சி கூடாதே என்பார்கள் ஆகவே இவர்கள் இந்த சமூகம் தொலைக்காட்சியே பாரப்பதில்லை இந்த சமூகம் குடைபிடிப்பதை தரித்திரம் என்று சொல்லி குடை கூட பிடிக்கமாட்டார்கள் மழையில் நனைந்து சன்னி பிடித்ததும் மருந்து எடுப்பார்கள்( இந்த மருந்துக்கு சமயத்தில் கட்டுபாடு இல்லை)(அப்பாடா என்றாக வில்லையா?) (இஸ்லாத்திலும் ஒருகாலத்தில் இப்படியாக இருந்ததே)(19.1)

3000 வருடங்களுக்கு முன்பு தாடியுடன் இருந்த ரிசிகள் தாடிவழிப்பதற்க்கு உபகரணங்கள் இருக்கவில்லை சரி அவர்கள் துப்பரவாக வைத்திருந்தார்கள் ஆனால் எப்படியோ 2500 வருடங்களுக்கு முன்பு கௌதம புத்தர் முழுமையாக வழிப்பதை அமுல்ப்படுத்தினார்(சடை வளர்ப்பதம் வழிப்பதும்??) ஆனால் இதன் பின்னால் உருவான சமயத்தில் எப்படி சடை வளர்த்தல் தாடி வளர்த்தல் கட்டாயமாக்கப்பட்டது? இன்றய உலகில் சோசலிச ஜனநாயகம் ஒன்றே இன்றய உலகின் சரியான வழிகாட்டியாகும் என்பதை இன்று வரையில் அஙகீகரிக்காத பெருந்தொகையானோர் உள்ளனரே இங்கே தான் அறிவியல் சார்ந்த நடைமுறைகள் என்ற கருத்தை நான் ஆரம்பிக்க முயற்ச்சிக்கிறேன்.(19.2)

இலங்கையில் முஸ்லீம்களே இனம் என்றும் வேறு சிலர் சோனகர்களே இனம் என்ற வாதப்பிரதிவாதங்களை லண்டனிலும் இன்றும் காணலாம் இப்படியாக விவாதிப்பவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் பின்னணியில் இருப்பவர்களாகவும் வேறு சிலர் வெறுமனே இலங்கைத்தீவின் மக்களாகவும் வேறு சிலர் இனிமேல் இலங்கைக்கு போக மாட்டேன் ஆனல் இஸ்லாத்தில் உள்ள அக்கறை காரணமாகவும் என்ற தளங்களை பார்கலாம். இவர்கள் ஒன்று சேர முன்வந்து தாம் இஸ்லாமிய இனமா அல்லத சோனக இனமா என்ற முடிவான தீர்மானத்தை அறிவிப்பார்களா என்பதே சந்தேசம்.(19.3)

மதங்களின் வரலாறுகளை எடுத்து கூறும் பல நண்பர்கள் காலத்தை சரியாக கூறாமலே அந்த மதங்களின் காலங்களை ஆதிகாலம் முன்னயகாலம் என்று அழைப்பதன் மூலம் கடந்தகாலத்தில் எல்லா மதங்களும் இனங்களும் மொழிகளும் ஏதோ ஒரு இரு வருடங்களின் இடைவெளியில் நடைபெற்றது போன்ற தோரணையில் சொல்லி மதம் பரப்பும் போதனைகள் போன்று சொல்லிலிட்டு போகிறார்கள்.(20)

இதில் இலங்கையில் முஸ்லீம்களுக்காக வரலாறுகளை எழுதிய பலரிடம் இந்தப்போக்கு உள்ளதை அவதானிக்கலாம் இந்து பௌத்தங்களின் வரலாறு நீண்ட பல வரலாற்றுகளை கொண்டது என்பதையோ இந்து மதங்கள் பெருமளவு தம்மிடையே பல மாற்றங்களையும் பிரச்சினைகளையும் கண்டது என்பதையோ அரபு இஸ்லாமியர்களின் காலங்களுக்கு முன்பு இவைகளில் பல சமயங்கள் ஒன்றாகவே கீழைத்தேய சமயங்கள் இருந்தனவென்பதையோ எழுதாமல் மழுப்பலுடன் இஸ்லாத்திற்கு உரமூட்டி எழுதும் தன்மையினையும் பார்க்கலாம். இது மனிதர்களை தமது அறிவியல் ஊட்டத்திலிருந்து வெளியே போகவிடாது வைத்திருக்கும் அயோக்கியதனமேயாகும் இப்படியான போக்குகளில் புத்தர் மிகவும் முற்போக்கானவர் என்பதை இன்றைய உலகம் கண்டு கொண்டுள்ளதே அவரது போதனைகள் பற்றி பாரிய அறிவியலில் நாட்டம் கொள்ள காரணமாக உள்ளது.(21)

இலங்கையில் கிறீஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் இந்துக்களும் பௌத்தர்களும் தம்மை மத அடையாளங்களுக்குள் உள்ளாக்காமல் தம்மை மொழிவாரியான அடையாளத்திற்கு உள்ளாக்கியதில் அவர்களின் அறிவியல் யதார்த்தப்போக்கில் அவர்கள் கொண்ட முற்போக்கு பாத்திரத்தை போற்றிட தவறிவிடக்கூடாது.(22)

இலங்கையில் சோனகர்கள் இதர இனத்தவர்களால் வேறுபடுத்தியும் தாம்கொண்ட பல்வேறு இனக் கலப்பின் அடையாளங்களில் குழம்பி மதம் பற்றிய அடையாளத்தையே கொள்ள வேண்டிய சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.(23)

இஸ்லாமியர்கள் தம்மை ஒரு இனமாக அடையாளப்படுத்தி தனித்தவத்தை பேணுவதற்கான பல முயற்சிகள் இந்திய பிராந்தியத்திலும் உலகின் பல நாடுகளிலும் தோல்வியுற்றுள்ளதையும் அவதானிக்க வேண்டும் இதில் பாக்கிஸ்தான் இன்றும் சர்வதேச ஆய்வாளர்களின் முன்னால் உள்ள நல்ல உதாரணம் இஸ்லாமிய நாடு என்று தம்மை அடையாளப்படுத்தியும் தம்மிடையேயான வேறுபாடுகளை நீக்கிக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றது. இஸ்லாம் இந்த விடயத்திலும் தோல்வியினையே கண்டுள்ளதையும் காணலாம். மிக அண்மைய வரலாறுகளில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களை அழித்தவரலாறு மிகவும் கொடூரமானது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் இது மக்களின் பொருளாதாரத்தை அடிப்படையாகவே கொண்டுள்ளதையும் அதற்கான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் உள்ள இடர்பாடுகளேயாகும் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியாத கட்டத்தில் இஸ்லாத்தை அல்லது இதர மதத்தவர்கள் தமது மதத்தை முன்கொண்டுவந்தும் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுகிறது என்றே தெரிகிறது.(24)

இதில் இஸ்லாம் தான் தனது இஸ்லாத்தினுள்ளே பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு உண்டு என்று கூறிக்கொள்ளும் அதேவேளை இஸ்லாமிய நாடுகளிலிருந்து பொருளாதார சமூகப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாமல் வெளியேறும் மக்களின் தொகைக்கு இந்த மதங்களின் தீர்வில் நம்பிக்கை இல்லை என்பதை புரிந்து கொள்ள தவறுகிறார்கள். இன்றைய உலக நாடுகளில் பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணைவளமும் அதன் பெறுமதியும் இஸ்லாத்தை ஒரு வலுவுள்ள மததாக இஸ்லாமியர்களால் சித்தரிக்க முடிகின்றதையும் எண்ணை வளமில்லாத நாடுகளில் இவை தாழ்ந்து இருப்பதையும் பார்க்கும்போது பொருளாதாரமே இஸ்லாமிய சமூகத்தினதும் பிரச்சினையே என்பதை உணரமுடியும்.(25)

இலங்கையில் உள்ள சோனக இனம் தனது மொழி அடையாளத்தில் தொடர்ந்தும் உருவாகி வரும் நெருக்கடிகள்இ இந்த இனத்தை தமக்கான மொழி உருவாக்கம் என்ற தேடலையும்இ அதில் சோனகர்கள் அரபு மொழியை தமது தாய் மொழியாக உருவாக்கும் நிலைகளும் உருவாகலாம். இதற்கான பின்புல தயாரிப்புக்களில் சிலர் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் ஏற்படவிருக்கும் பின்விளைவுகளையும் பொறுப்புக்களையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும்.(26)

புதிய சந்ததிகளும் வளர்ந்து வரும் விஞ்ஞான சமூகமும் புதிய வழிவகைகளை காணும்.(27)

காலியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ்இ சமஸ்கிருதம்இ சீனம் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதின் காரணம் என்ன? அரபு மொழியில் கல்வெட்டுக்கள் எதுவும் இலங்கையில் காணவில்லை - இது அரபு மொழியின் காலம் இஸ்லாமிய காலத்திற்கு முன்பாக இருந்த போதிலும் அரபு மொழியை ஒரு முக்கிய ஆட்சி மொழியாக பாவிக்க முடியாதிருந்ததிற்கான காரணம் அக்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தமிழ் மொழியே தான். அன்றைய அரபு வணிகர்கள் தமிழை படிப்பதில் ஆர்வம்காட்ட வேண்டியிருந்ததும் தமது வணிகத்தை இலகுவாக்கவேதான் இதன் காரணமாகவே தான் பல அரபு வழிவந்தவர்கள் அவர்களது பரம்பரையினர் தமிழை தமது மொழியாக்கினர். அதைவிட அரபு மொழி மட்டுமே இந்த வணிகர்களின் மொழியாக இருக்கவும் இல்லை இவர்களில் பலர் பாரசீகம் போன்ற வேறு பல மத்திய கிழக்கு நாடுகளின் மொழிபேசுபவர்களுமே வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் இஸ்லாத்தின் பரம்பலுக்கு பின்னரே அரபு மொழி இந்த அளவு ஆதிக்கத்தை பெற்றுக்கொண்டது ஆகவே தான் ஆரம்பகாலத்தில் அரபு மொழியில் அரபுக்காரன் கூட கல்லை கொண்டுவரவில்லை அவர்கள் வணிகம் செய்ய பொருளீட்டவே தான் வந்தார்கள் மொழி பரப்பவோ மதம் பரப்பவோ வரவில்லையே.(28)

இலங்கையில் சோனகரின் இருப்பு தமிழருக்கு மிகவும் முந்தியதான வரலாறும் உள்ளது என சிலர் கருத்துக்கொள்கிறார்கள் இது தவறு இப்படியான வாதம் சில எழுத்தாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதேயாகும். இலங்கையில் தென்இந்திய தமிழர்கள் இல்லாமல் வரலாறு காணமுடியாது.(29)

இப்படியான கைங்கரியத்தை பல எழுத்தாளர்களாலே ஏற்பட்டது தமிழ் மொழி முக்கிய மொழியாக இந்திய உப கண்டத்தின் பல நாடுகளிலும் இருந்துள்ளதும் இதை மறைக்க பலர் பல பிராயச்சித்தங்கள் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. தமிழ்மொழியுடன் சைவமும் இணைந்தே வளர்ச்சி கண்டிருந்ததை வரலாற்றுடன் ஒப்புவிக்க முடியும் பின்னர் சைவத்திலிருந்து தமிழர்கள் பௌத்தத்தை தழுவி இருந்த காலத்தில் தமிழ் பௌத்த காவியங்களையும் படைத்திருந்ததையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தமிழர்களே பௌத்தத்தை கொண்டு சென்றனர் என்பதையும் (அவரின் பெயர் நைனார் ஆகும் இப்பெயர் ஒரு இஸ்லாமியப்பெயர் என்று இன்று சிலர் வாதிடலாம்(தவறு) ) இதனாலேயே இன்றும் யப்பானிய மொழியில் தமிழ் சொற்பதங்களின் கலப்புள்ளதை காணலாம். இந்த கேரளத்து பெயர் கொண்டவர் காஞ்சிபுரத்தில் பௌத்த பீடத்தின் தலைமையில் இருந்தவர் அன்று கேரளத்தில் தமிழ் மொழியே பேசப்பட்டது என பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.(30)

மொழியின் பரம்பலுடன் காலமாற்றங்களையும் இணைத்துப் பார்க்காமல் மொழியின் சொற்களை கொண்டு இது இஸ்லாமிய சொல் என பலர் இங்கே வாதிடுவதை காணலாம்(தவறு)(31)

பௌத்தத்தின் பின்னர் தமிழர்களை மீண்டும் சைவர்களாக்கியோர் நாயன்மார்களேயாகும் (நைனாவின் திரிபா?) இது கிறீஸ்துவுக்கு முன்பு 3ம் கிறீஸ்துவுக்கு பின் 3ம் நூற்றாண்டுகளிலாகும்.(32)

இஸ்லாத்துக்கு முந்திய காலத்தில் கூட இலங்கையில் அரபிகளின் பிரசன்னம் இருக்கவே செய்தது. பாபா ஆதம் மலை எனப்படும் சமனல கந்தவைத் தரிசிப்பதற்கும் வர்த்தகத்துக்காகவும் வந்த அவர்களில் சிலர் இலங்கையின் அழகில் மயங்கி இங்கேயே தங்கி விட்டதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. (இது வேறு காலம் 1) இந்தக்காலத்தில் இந்திய பிராந்தியத்திற்கு வந்த அரேபியர்களும் இந்தியாவில் உள்ள சிந்தனை முறைகள் போன்றே இயக்கையான தெய்வங்களை வணங்கியவர்கள் இவர்களின் தமிழர்கள் போன்றவற்றுடன் பல உடன்பாடுகளை கண்டிருந்திருக்க முடியும்.(33)

ஒரு காலத்தில் அராபிய ஜமுக்காளம் தான் அனுராதபுர கால மன்னர் மாளிகை மற்றும் பௌத்த கோயில்களில் பயன்படுத்தப்பட்டிருந்தது. (இது வேறு காலம் 2- இவையிரண்டையும் ஒன்றாக எழுதுவதால் இங்கே ஒரே காலம் அல்லது அயல் அயல் காலம் என கருத இடமளிப்பது தவறாகும்)இவை மிகவும் பின்னைய காலங்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவும்.(34)

கால அட்டவணை தேடவும் அரபு மொழி உருவாக பல நூறு வருடங்களுக்கு முன்பே அரேபியர்கள் தமிழில் வியாபாரம் செய்கிறார்கள் காரணம் தமிழர்கள் இவர்களுக்கு முன்பே இவர்களிடம் தேடி சென்றவர்கள் இவர்களுக்கு மொழி கலாச்சாரங்கள் கற்ப்பித்தவர்கள் இந்தியாவே உலகின் கலாச்சாரத் தொட்டிலாக இருந்துள்ளது.(35)