Showing posts with label TELO Ltters. Show all posts
Showing posts with label TELO Ltters. Show all posts

Sunday, 23 December 2018

(கடிதம் 12, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

 கடிதம் 12, த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்
எழுச்சி, 24/12/2018,
(கடிதம் 12, மாதம்12, கிழமை 05)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம்
இலங்கை,
===========
புலிகளின் அழிவின் பின்னர் தமிழ் தேசயித்தின் வரலாறு ஒரு புதிய சமூகஎஜனநாயகத்ததைை நோக்கி பயணிக்கும் என்ற நம்பிக்கையில் இழந்துள்ளது. புலிகளை இந்த ஜனநாயக மீட்பு பற்றிய எதிர்பார்ப்புக்காகவுமே எதிரத்தோம் (புலிகளின் போராட்டத்தை அல்ல) ஆனால் புலிகளின் மறைவுக்கு பின்னரான போராட்ட வரலாறு மக்களை மறந்த இயக்கங்கிளல் இருக்கும் ஒரு சிலர் தமது குடும்பத்தின் நலனுக்காகவே இயங்குpன்ற நிலைமைகளையே காண்கின்றோம். அல்லல்ப்படும் மக்களுக்காக உதவிகளில் கூட மிகவும் அசிரத்தையும் இனவாத மத சாதி வாத முரண்பாடுகளை வளரத்துமே உள்ளது.
இந்த தமழிர்களின் நிலைக்கு இன்றுஅரசியலில் இயங்கும் இயக்கங்களின் கடமைகள் தவறவிடப்பட்டுள்ளது இவற்றிக்காக காரணம் சுயநலப்போக்கே.
போதுவாழ்வுக்கு வருபவர் பொது வாழ்வில் இருப்பவர் பொதுவாழ்வின் ஊடாக தனது சொந்த குடும்ப நலன்களை சுய முதல் தேடும் முயற்சிகளை மட்டுமே தொழிலாக்கியுள்ளது.
இந்த சுயநலப்போக்கில் தமிழீழ விடுதலை இயக்கம் கணிசமாக ஒருசில நபர்களுக்காக மட்டுமே இயங்கியுள்ளதை இயக்கத்தின்உள்ளே யிருந்து கருத்துக்கள் தாராளமாக வெளிவந்துள்ளது.
புலம் பெயர் மக்களை நோக்கி கேள்விகள் அற்றும் அவர்களது பல்வேறு வளங்களை பெற்று இலங்கை த் தமிழர்களின் வாழ்வை வளம் பெற தமிழ் தலைகைளும் ரெலோவும் தவறிவிட்டது.
முன்னாள் ரெலோ தோழர்களின் ஆதரவைக் கூட ரெலோவினால் பெற முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி கூட இன்றுவரையில் ரெலோ கட்சியினுள் புலம் பெயர் ரெலோ என்பவர்களால் உணரமுடியவில்லை? இவற்றிக்காதக காரணங்களில் உறுப்பினர்களின் கடந்த கால கொலை களவு கப்பம் போன்ற நடவடிக்கைகளிலருந்து இவர்கள் இன்னும் வெளிவரவில்லையா? அல்லது அரசியல் சமூகத்திற்காக என்ற அரசியல் புரிந்துணர்வை பெறவில்லையா?
மக்களுக்காக பேராடியவர்கள் சாதாரண குறைந்த பட்ச வாழ்வுக்காக கோரிக்கைகள் விடுத்தும் திரும்பி பார்க்காத அமைப்புக்களை விடுதலைப்போராட்ட அமைப்புக்கள் என்பதா?
இவர்கள் போன்ற ஏதிலிகளை மதவாதிகளும் இனவாதிகளும் ஏமாற்றி குறிப்பாக பெண்களை குழந்தைகளை பெற்றுவித்து ஏமாற்றப்பட்டும் நடுத்தெருவில் நிற்பது போராடிய தலைமைகளுக்கு புரியாபத ஒன்றல்ல>
போராட்டம் காரணமாக கணவனைஇழந்த பெண்கள் பற்றியும் அவர்களது நிலைகள் பற்றியும் தமிழ் தலைமைகள் என்படுவோர்க்கு புரியாத ஒன்றல்ல.
இந்த புரிதல் அற்ற தலைமைகள்தமிழ் மக்களின் தலைமைகளா? இவர்கள் தமைத்துவம் என்றுநினைப்பது என்ன? இவர்கள் போராட்ம் என்றுஇயங்கியது ஏன்?
தமிழ் மக்களின் அக்கறையற்ற தலைமைகள் எனப்படும் ஒரு கபோதிகள் முன்னால் தலைமைகள் என்று தம்மை அடையாளப்படுத்துகின்றார்கள்.
மதங்கள் இனங்கள் சாதிகள் பிரதேசங்களுக்கிடையில் ஜக்கியம் இல்லை என்றால் தமிழ் மக்களிடையேதலைமைஎன்றுஎன்றுஒன்று இருக்கின்றது என்றால் அது என்ன?அது என்ன நோக்கத்துக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றது?
சமூகங்களுக்கிடையில் இருக்கும் தவறான வரலாற்று குழப்பங்கள் சமத்துவமின்மைக்கான காரணங்களை மக்களுக்காக எடுத்துரைக்கும் பொறுப்பு தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு இல்லையா?
புதியசந்ததிகளுக்கு அமைப்பில் .தலைமையில் இடம் கொடுக்காது 98 வயது வரை சம்பந்தர் சாகும் வரை தலைலராக இருப்பதை உயர் வர்க்கத்தினர்க்காகன அரசியலிருந்து தமிழ் இனத்தை காப்பாற்றுவதற்காக> போலித்தமிழ் தேசியத்திலிருந்து தமிழர்களைகாப்பாற்றி முற்போக்கு கொண்ட புதிய தமிழ் தேசியஇனமாக கட்டியெழுப்பும் நோக்குடனேயே ரெலோ உருவாக்கப்பட்டடது ஆனால் இன்று ரெலோ எந்த தமிழரசுக்கட்சியின் பொக்கை எதிரத்து தங்கத்துரையால் கட்டப்பட்ட ரெலோ இன்று அதே தமிழரசு பாணியில் தமது குடும்ப வர்க் நலன்கிள் மட்டும் அரசுடன் கூட்டுறவு என்ற பெயரில் தமக்காக இயங்கும் அமைப்பாகவே காணப்படுகின்றது.( இதற்க்கு நல்ல உதாரணம் கடந்த ரெலோவின் பொதுக்குழு அங்கத்தவர்கள் கூட்டம்).
அழிக்ப்ட வேண்டியபோலித்தேசியத்தையே ரெலோ வள்ர்த்துக்கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையானது இது பற்றி பல சமூக ஆர்வலர்கள் ரெலோ பற்றிய முற்போக்கு பற்றி கேள்வியுடன் இருக்கையில் முன்னாள் ரெலோ போராளிகளாகியநாம் ரெலோவின் தவறான முன்உதாரணங்களையிட்டு வெட்கப்படுகின்றோம்.
காலம் இழந்து விட்டோம்இஅரசியல் மரணம் ஏற்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது காலத்தை இழந்து விட்டோம் அடுத்த 10 வருடங்களில் இவைகள் பற்ற்றிய சமூக அறிவு இல்லாமல் போய்விடும்.
சமூகம் தனது அரசியலில் மரணத்தை பெற்றுக்கொண்டிருக்கினன்றது புதியசமூதாயம் தனது கைகளில் சமூகத்தினை தூக்கி நிறுத்துவரையில் எமது தனிப்பட்ட மரணம் வரை எமது போராட்ட இயக்க தோல்வியின் காரங்களையாவது அவர்களுக்கு தெரிப்போம்.
எதிர்கால சந்ததியிடம்
எமது தோல்வியைஏற்று இறப்போம்.
அதுவரையில் எழுதுவோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
24/12/2018.
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 11, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

Sothilingam
கடிதம் 11, த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்
எழுச்சி, 21/12/2018,(கடிதம் 11, மாதம்12, கிழமை 04)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
விடுதலைப் புலிகள் மட்டுமல்ல ரெலோ தமிழீழ விடுதலை இயக்கத்தை புலிகள் அழித்த போதும் புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பணங்கள், சொத்துக்கள், தளபாடங்கள் காணாமல் போனது, பதுக்கப்பட்டது, யாரும் கேட்பாரற்றுப் போனது,
இன்று இயங்குபவர்களில் சிலரும் இந்த களவின் பங்காளிகள், இன்று லண்டனில் இயங்கும் london harrow சாமியார் என்பவர் அன்றிலிருந்து இந்த களவுகள் பற்றி வாய் திறப்பதில்லை, களவின் பங்காளிகளுன் கூட்டில் இருப்பவர், நடந்த முழு களவுகளும் தெரிந்தவர், மக்கள் அமைப்பு என்றால் வெளிப்படையாக இருக்க வேண்டியவைகளை வெளிப்படையாகவே மக்கள் முன் வைக்க வேண்டும், எது சரி எது பிழை என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், இதுவே விடுதலைப் போராட்ட இயக்கம் என்ற பெயருக்கு உரிய நடவடிக்கை, இயக்கத்தின் களவுகளை மறைப்பது கள்வர் கூட்டமே தவிர விடுதலைப் போராட்ட இயக்கம் அல்ல.
இன்று இயங்கும் ரெலோவும் இவை பற்றி பொது மக்களுக்கு எந்த அறிக்கையும் தரவில்லை, இந்த களவில் சட்டத்தரணிகளும் பின்னாள் புலிகளின் நிதி திரட்டியவர்களும் , ரெலோ இன்றய பொறுப்பாளர்களும் அடங்கும்.
நாமாக கருத்துக்களை வெளியிடும் போது ரெலோ கிளைகள் சட்ட சிக்கலுக்குள் அகப்பட வேண்டியே வரும்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/12/2018.
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com
------

TELOLONDONGMAIL.COM

Saturday, 22 December 2018

கடிதம் 10, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

 ( சோதிலிங்கம் எழுதும் ஆயிரம் கடித தொடர்)
எழுச்சி, 17/12/2018,
(கடிதம் 10, மாதம்12, கிழமை 04)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
------------------------
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
ரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.
இது போன்ற கருத்துப் பகிர்வுகள் உங்களில் பலருக்கு தலையிடி கொடுப்பதாக நீங்கள் பாவனை காட்டி ஒருவர் மீது இவர் ஏன் எழுதுகிறார் என்ற கேள்வியோ (அவரது எழுத்துரிமையை மறுக்கும் செயல்) சிலவேளை கோபமோ ஏற்படுகிறது என்றால் நீங்கள் இன்னமும் மனிதர்களை மதிப்பது பற்றி தெரியவில்லை, தமிழ் மக்களுக்கா போராாடவில்லை என்பதேயாகும், அல்லது உங்களில் சிலரது தனிப்பட்ட சுய நலத் தேவைகளுக்காகவே விடுதலை இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி செயற்ப்படுவதாகவே இருக்கும்.
அல்லது விடுதலைப்போராட்ட - அரசியல் கட்சிக்குரிய பெறுமதிகளையோ, அரசியலை மக்கள் நலன் பற்றி புரியாதவர்களாகவும் இருக்கலாம்.
விடுதலைப்போராட்ட இயக்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது பொது அமைப்பு ஒன்று தன்மீது விமர்சனங்களை வரவேற்க்க வேண்டும் தனது சரிபிழைகளை வெளியில் இருப்போர் அவதானித்து கூறுவதை அறிந்து தெரிய வேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும். இது பொது மக்களுக்காக சேவை செய்யும் அனைவரினதும் மிகவும் முக்கியமான அடிப்படை இதனை ஏற்றுக்கொள்ளாத கட்சி, இயக்கம் பொது அமைப்பு என்பது மக்களுக்கானது அல்ல அது சுயநலக்கும்பலின், கொலையாளிகளின் கூட்டமேயாகும்.
பொது அமைப்புக்கள் இயல்பாகவே தவறுகளை செய்யும் ஆனால் தவறுகள் பிழைகளால் வளர்க்கப்படுவதில்லை, தவறுகள் பிழைகளை திருத்தி, தாம் இயங்குப் மக்களிற் அபிப்பிராயங்களை அறிந்து திருத்தியமைண்து இயங்குவதே முன்னேற்ற கரமானதும், அறமுமாகும்.
தமிழிழ விடுதலை இயக்க வரலாற்றில் பல தவறுகளை செய்துள்ளது தவறுகளில் உயிரிழப்பற்ற தவறுகளை பிரித்து மனிதர்களின் உயிர்வாழும் உரிமைகளை மறுத்த விடயங்களை இங்கே வெளிப்படுத்தி இவைகள் பற்றி கட்சி ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் இதன்மூலம் கட்சி தன்னைப் பலப்படுத்த வேண்டும்.
1) இந்தியாவில் இயக்கத்தின் உள்ளே நடைபெற்ற கொலைகள் யார் யாரையெல்லாம் கொலை செய்யப்பட்டுள்ளது அதற்கான காரணங்கள் நியாயங்கள்.
2) இலங்கயில் இயக்கத்தினால் செய்யப்பட்ட இயக்கத்தினுள் கொலைகள் அதற்கான காரணங்கள் நியாயங்கள்.
இங்கே தோழர் நேருவை குறிப்பிடுகிறேன்.
3) இலங்கையில் மிதவாத அரசியலில் ஈடுபட்ட ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றோரது கொலைக்கான காரணங்கள் நியாயங்கள்
4) வடமராட்சியிலிருந்து ரெலோவினை ஏதிர்த்து ஊர்வலமாக வந்த மக்கள் மீதான துப்பாக்கி பிரயோகமும் அதன் போது கொல்லப்பட்டவர்கள் விபரங்கள், காரணங்கள், நியாயங்கள்.
5) யாழ் வைத்திய சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் விபரங்கள், நியாயங்கள்.
6) இந்திய இராணவத்தின் காலங்களில் நடைபெற்ற பொது மக்கள் மீதான கொலைகள்.
7) இந்திய இராணுவத்தின் காலத்தில் தலைமைக்கு ஆதரவளிக்காத அல்லது கொள்ளை கொலைக்கு ஆதரவளிக்காதவர்கள் கொல்லப்பட்திற்கான காரணங்கள், விபரங்கள், நியாயங்கள்
இந்த சந்தர்ப்பத்தில் தோழர் கிருட்டி (மட்டக்களப்பு), மற்றும் செந்தோழர், இவர்களின் உறவினர்கள் தோழர் கிருட்டியி்ன் சகோதரிகள் இன்றும் ரெலோ இதற்காரன நியாயம் வழங்கவில்லை கேட்பாரற்று கிடக்கும் நியாயம் என ஐரோப்பாவரை குரல் எழுப்புகிறார்கள்.
8)புலிகளுடன் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தவர்களை ரெலோவினுள் சிலர் புலிகளுடன் ஏற்ப்பட்ட நட்புகள் காரணமாக புலிகளுக்கு இவர்களது நடமாட்டம் தெரிவித்து புலிகள் கொல்ல உதவப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள்.
9) விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பெயரில் கொல்லப்பட்ட 38 கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்கள் இவர்களின் கொலைகள் ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினருக்கு மட்டக்களப்பு மக்களால் வழங்கப்பட்ட தகவல்களும், ரெலோ இணையத் தளத்துக்கு (telo org) கிடைத்த உறுதி செய்யப்பட்ட தகவல்களும் வெளிவந்து பல காலங்கள் ஆகியும் ரெலோ பாராமுகமாக இருக்கின்றது.
இங்கே இந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய எனது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களில் உள்ள கொலைகளுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் பொறுப்பாகும், இந்த கொலைகளில் தொடர்புபட்ட உறுப்பினர்கள் தனிப்பட பொறுப்பாளிகள் அல்ல, ஆகவே தமிழீழ விடுதலை இயக்கம் (இன்றய அரசியல் கட்சி) இந்த செயல்களுக்கான பொது மன்னிப்பை இலங்கை அரசிடமோ, சர்வதேச சமுகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்டவர்களின் உறவினரிடமிருந்தோ பெற வேண்டும் அல்லது அவர்களுக்குரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்.
இதன் மூலமே தமிழீழ விடுதலை இயக்கம் தனது கடந்த காலத்திலிருந்து வெெளியே வரமுடியும், அதுவே விடுதலைப்போராட்ட இயக்கத்துக்குரிய முக்கியமான குணாம்சமும் ஆகும்.
இதை தவிர்த்து இவைகள் எல்லாம் பழசு மறைத்து விட்டு போகலாம் என்ற எண்ணம்களுக்கான பொது அமைப்பின் பொறுப்பான நடவடிக்கைகள் அல்ல என்பதை தெரிவிக்கின்றோம்.
இந்த கொலைகளுடன் தொடர்புடைய பலர் ரெலோ உள்ளேயும் புலம் பெயர்ந்தும் இருக்கின்றார்கள் இந்த தனிநபர்கள் மீது இனிமேல் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கங்களும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எதிர்காலம் உள்ளதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இங்கு குறிப்பிடப்பட்ட சில சம்பவங்களை தொகுப்பு செய்த Holland மனித உரிமைகள் அமைப்பு லண்டனில் ரெலோ பொறுப்பாளர் ஒருவரின் "தானே புலம் பெயர் ரெலோவின் பொறுப்பாளர்" என்ற வாக்கு மூலத்தையும் பெற்றுள்ளார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவும்
தமிழீழ விடுதலை இயக்கம்
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்றால் தனது அமைப்பினால் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும், அல்லது அவர்களது பொது மன்னிப்பை பெற வேண்டும். தனிப்பட்ட ரெலோ உறுப்பினர்களை இந்த கொலைக் குற்றத்தில் தள்ளிவிட்டு தம்பிக்க கூடாது இது விடுதலை இயக்கம் என்ற பெயருக்கும் அதன் இயங்கு முறைக்குமான அவமானமாகும்.
"விடுதலை இயக்கம்" என்பது பல்வேறு ஆழுமைகள் கொண்ட தோழமைகள் ஒன்றிணைந்து பொதுப் பெயரில் பொதுவாக இயங்குவதே அதன் சரி, தனிப்பட்டவர்கள் சரி, பிழைகளோ உடமைகளோ அல்ல.
இவை கடந்தகால விடுதலை இயக்கத்தின் இயங்கு முறைகளின் தவறுகளே அன்றி தனிநபர்களின் தவறுகளாக வரலாறு பதியப்படக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
சோதிலிங்கம்.
10/12/2018.
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும்:
தமிழீழ விடுதலை இயக்கம் ( uk,Canada,Swiss,France, Germany)


தொடர்புகளுக்கு
0784 6322 369(uk)
uktelo@gmail.com, telolondon@gmail.co
m