Search This Blog

Showing posts with label Buddhist Mathagal. Show all posts
Showing posts with label Buddhist Mathagal. Show all posts

Tuesday, 20 May 2014

பௌத்த விகாரை – Buddhist Vihara at Mathagal Sampilthurai.

 

பௌத்த விகாரை – Buddhist Vihara at Mathagal(North of Sri Lanka) Sampilthurai and its build by sri lankan Military during the WAR period.

<a href="http://www.youtube.com/watch?v=6FyXfrs71mo&amp;list=UUEbuILb7HMcUJm6mQN11-zA&amp;index=1&amp;feature=plcp">http://www.youtube.com/watch?v=6FyXfrs71mo&amp;list=UUEbuILb7HMcUJm6mQN11-zA&amp;index=1&amp;feature=plcp</a>

கட்டிடம் பெளத்த கோவில் இருக்கின்றது எண்ணை விளக்கு எரிக்கின்றது இராணுவம் காவலுக்கு இருக்கிறார்கள் வருபவர்களிடம் தங்கள்னி வருகையை பதிவு செய்யு மாறு கேட்கிறார்கள் பதிவு செய்தோம்.

வேறு எவரும் இல்லை ஆடு மாடு கூட இல்லை மனித சஞ்சாரமற்று இருந்தது சற்று தொலைவில் குடிமனைகள் தெரிகின்றது அந்த குடியானவர்கள் இந்த வழியால் போக்கு வரத்து செய்வதில்லை பெளத்த கோவில் இருக்கும் இடத்துக்கு இரு பக்கமும் தொலைவில் சுழிபுரம் பக்கமாக ஒரு பெரிய கிறீஸ்த்தவ தேவாலயமும் கீரி மலை பக்கமாக ஒரு கத்தோலிக்க மாதா சுருவம் கொண்ட கல்வாரியும் உள்ளது

மதகுருமார்கள் பெளத்த கோவிலின் பக்கத்தே குடியிருக்கிறார்களா என்பது புலப்படவில்லை?

யாழ்ப்பாணத்தில் நயினாதீவில் உள்ள மூன்று பெளத்த கோவிலுமே வெறுமனே கட்டடிம் இருக்கின்றது மக்கள் சுற்றி வந்து சைவக்கோவிலில் கும்பிடுவது போன்று கும்பிட்டு விட்டு போகிறார்கள்.
எனது பார்வைக்ககு சைவக்கோவிலையும் பெளத்த கோவிலையும் ஒன்றாக இணைத்துவிட்டால் மக்களுக்கு கொஞ்சம் செளகரியமாகவும் இருக்கும் மக்களிடையே ஒற்றுமையும் வளர்ந்து கொள்ளும் என நினைக்கிறேன் (இது சைவத்திற்க்கும் கோவிலுக்கும் ஆஅபத்து என சிலர் நினைக்க கூடும்: கோவில் மக்களுக்காகதானே)

கீரிமலை கோயிலின் பக்கத்தே உள் வீதியில் தம்பலகொடுன என்ற ஊருக்கு போக வழிகாட்டப்பட்டிருந்தது எமக்கு கொஞ்சம் குழப்பம் நான் நினைத்தேன் இது ஒரு புதிய சிங்கள கிராமமாக இருக்குமோ என்று (மாதகலின் வரலாற்று பெயர் பற்றி தெரிந்திருந்தும்) இராணுவத்தினரிடம் கேட்டேன் அவர்கள் தம்பலகொடுன வுக்கு தான் போகிறது என்றார்கள் திரும்பவும் கேட்டேன் பின்பு மாதகல் என்றார்கள்.
நாம் மாதகல் போன போது அங்கே இந்த பெளத்த கோவில் பக்கம் யாரும் போவதில்லை மினிபஸ் இடத்திலிருந்து 3கிலோ மீற்றர் நடக்க வேண்டும் அங்கே கொண்டு போகும் படி மினிபஸ் நடத்துனரை கேட்டோம் எடுத்து போனார்கள்.

அங்கே வெறும் இடம் மட்டும்தான் கடற்படை காவல் நிலையங்கள் இருக்கின்றன.

இதை சிறப்பாக கூறுவது என்றால் ஆக்கிரமிப்பு என்பது இது தான் அயலவர்கள் போவதில்லை அல்லது ஊக்குவிப்பதும் இல்லை( அவர்கள் வெறுக்கிறார்களோ தெரியவில்லை) தாம் தமது சிங்கள் மக்கள் வருகைக்காக என்று மட்டும் கட்டிவைத்து கடற்படை காவல் போட்டு இருப்பது ஏன் இல்லாவிட்டால் ஒரே இரவில் கோவில் இருந்த இடம் இல்லாது போய்விடும் என்றது போன்ற உணர்வு எனக்கு பட்டது.
வரலாறு கொண்ட இடம் ஆனால் வரலாறு இலங்கையின் ஒரு குறிப்பிட்டவர்களின் இடமாக மட்டும் உணர்தத்படுவது போல் தெரிந்தது: இதை நான் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு என்றே கூற வேண்டும் (வேறு கருத்து பட முடியாது)உள்ளே கதிர்காமம் ஆலயம் என்று முருகனையும் பிள்ளையார் கோவில் என்று பிள்ளையாரையும் வைத்திருக்கிறார்கள் இது ஆக்கிரமிப்பா என்ற கேள்வியும் எழுந்தது.
இராணுவ காவல் இருப்பதால் ஆக்கிரமிப்பு எனன்லாம்.

இதே போன்று பக்கத்தே மீன்பிடியாளர்களுக்கான ஒரு துறை முகத்தையும் கட்டியிருக்கலாம் ஏனோ செய்ய வில்லை.

புலம்பெயர்நாடுகளிலிருந்து வங்கியில் பணம் வட்டிக்கு எடுத்து யாழ்ப்பாணத்தில் இராஜ கோபுரம் கட்டப்படுகின்றது அது தனியார்கள் செய்கிறார்கள் இவற்றுடன் ஒப்பிடலாமா?

இந்துக்கள் , இந்துக்கள் என்ற அடையாளங்களை பெற முன்பு இந்த குறிப்பிட்ட மாதகல் துறையும் திருவடிநிலையும் முக்கிய துறைகளாக இருந்துள்ளது இங்கிருந்து இந்திய தொடர்புக்ள பல நடைபெற்றுள்ளது இங்கேயே பல இந்து துறவிகள் , பெரியவர்கள் வந்திறங்கியுள்ளனர் பின்னாளில் பெளத்தமும் இதே பாதையை பின்பற்றியே இந்திய கிழக்கு கரையோரத் தொடர்புகள் சூடாமணிவிகாரம் வரையில் போய்வந்துள்ளனர்

பின்னய வரலாறுகளை மட்டும் மீள நிர்மாணிக்கிறார்கள் இதன் வரலாற்று முக்கியத்துதுவம் மக்களின்தொடர்புகள் என்பதைவிட பெளத்த தொடர்புகள் என்று மட்டும் குறிப்பிடுவதால் ஆக்கிரமிப்புக்கள் எனலாம்.

இதை மீள்நிர்மாணத்தை இந்துக்கள் செய்திருந்தால் இது ஆக்கிரமிப்பா? இருபக்கமும் கிறீஸ்தவ கோவில்கள் ஏன் இங்கு எழுப்பப்ட்டது இதன் முக்கியத்துவத்தில் தானும் தனது பங்கினை பெற்றுக்கொண்டுவிட கட்டியிருக்கலாமா.?யார் ஆதிக்க்தில் இருக்கிறார்களே அன்று அது சார்பாக அது புனர்நிர்மாணம் செய்ப்படுகின்றதே தவிர தொடர்சியான வரலாற்றுடன் அவை செய்ப்படுவதில்லை என்பதை ஆப்கானிஸ்தான் பற்றிய கட்டுரை ஒன்றில் வாசித்தேன்.