Search This Blog

Showing posts with label தோழர்கள். Show all posts
Showing posts with label தோழர்கள். Show all posts

Saturday, 22 December 2018

அறிவுடையோராக வாழ வேண்டும்=சமத்துவத்தை புரிந்து வாழ வேண்டும்.
--------------------
தர்க்கிப்போம் - யார் மக்களின் வாழ்வில் அக்கறை கொண்ட அரசியல்வாதி.
தமிழ் மக்களுக்கு யார் வேண்டும், தமிழ் மக்கள் தமது அதிகாரங்களை யாரிடம் குவித்தால் , பதவியை கொடுத்தால் என்ன நடக்கும் என்ற சரியான தெளிவுடன் தமது அதிகாரங்களை தேர்தல் மூலம் வழங்க வேண்டும்.
அறிவுடையவராக வாழ வேண்டும்.
சமத்துவம் ஒன்றே விஞ்ஞானபூர்வ சமாதானமாகும்.
தமிழர்கள் தமது பிரதிகளுடன் தொடர்பாடல் இருக்க வேண்டும்.
சமூகத்தில் சமத்துவத்தை அங்கீகரிக்கும் அறிவை(கடவுளை) பெற வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகளில், இடது சாரிய சிந்தனையுடன், சமூகத்தில் சமத்துவம் மற்றும் அடிமட்டத்தில் வாழ்வுக்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள் ஒரு சில கட்சிகளே இதர கட்சிகள் இலாப நோக்குடன் செயற்படும், சொந்த பந்நச்களுக்காக மட்டும் பதவியை, கட்சியை பாவிக்கும் கம்பனிகளே !!!
இரண்டு தரப்பினரை உதாரணமாக ஒப்பிட்டால் தோழர் அசோக் பாராளுமன்ற பிரதி தலைவராக இருந்ததையும் அவரால் வன்னியில் மேற் கொள்ளப்பட்ட உதவிகள் அபிவிருத்திகளும்,
செல்வம் தோழர் பாராளுமன்ற பிரதி தலைவராக இருந்து என்ன உதவிகள் செய்துள்ளார் என்பதுமாகும்.
இவற்றுடன் அமைச்சு பதவி கிடைத்த நேரம் தொடக்கம் தோழர் டக்ளசின் செயற்பாடுகளின் பண்புகளில் உள்ள மக்களுக்கு உதவும், மக்களுக்காக இயங்கும் உணர்வுகளை இணைத்து ஒப்பிட வேண்டும்.
இதற்க்கு மேலாக எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்த சம்பந்தர் என்ன செயற்பாடுகளை செய்துள்ளார் என்பதும்.
ஒவ்வொன்றும் தர்க்கித்து பகுத்து ஆய்வு செய்து அறிவாக்கிக் கொள்ள வேண்டும்.


சோதிலிங்கம்
தமிழ்கருத்துக்களம்
29/11/201
8