1. T Sothilingam |
//இன்னும்
பாருங்கள் நீங்கள் உங்களனினத்தை முதன்மை படுத்திக்கொண்டு என் இனத்தை பற்றி கதைக்கவும்
கூடாது எங்கின்றிகளே. என்ன காரணம்? இது உரிமை மீறலாகா தெரியவில்லையா? மொழி ஒன்று இருந்தால்
தான் ஒரு இனம் உருவாக முடியும் என்றிர்கள் இந்த வரைவிளக்கணத்தை விளக்குவீர்களா?????? ////
இஸ்லாமியர்கள்
அரபு நாடுகளில் உள்ளவர்கள் ஏன் மொழி மூலம் தம்மை அடையாளப்படத்துகிறார்கள் என்பதை நீங்கள்
விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் யதார்த்தத்தை இனம் கண்டுகொண்டுள்ளனர் என்பதே உண்மை.
இதைவிடுத்து மதங்கள் பிற்போக்கானது. மதத்தை முதன்மைப்படுத்தி இனத்துக்கு அடையாளம்
தேடுவதானால் அத தவறேயாகும். இந்த விடயத்தில் கிறீஸ்த்தவர்களும் கத்தோலிக்கர்களும்
மிகச்சரியாகவே ஜனநாயகத்துடன் மொழியுடன் அடையாளப்படுத்துவதால் அவர்களும் யதார்த்தத்துடன்
இணைவுள்ளவர்களாக உள்ளனர்.
மொழி தான்
மனிதனுக்கு பிரதானம் மொழியன்றி மனிதனை வேறு எதுவும் உருவாக்கவில்லை மதம் பொய்யானது.
ஆனால் தனிமனிதன் தனது விருப்புக்காக மன திருப்திக்காக இன்றும் மதத்தில் நம்பிக்கை வைத்து
வணங்குகிறான் பரவாயில்லை செய்து விட்டுப்போகலாம் அது மற்றவர்களை துன்புறுத்தாது விட்டால்
சரி
மொழிதான்
பிரதானம் மொழி தான் மனிதன் மொழியே மனிதனை உருவாக்கியது மனிததன்மையுடன் இன்று இந்த
தேசம் தளத்தில் சிங்களவர்கள் பாக்கிஸ்தானியர்கள் ரஷ்சியர்கள் வந்து எழுதவில்லை யார்
எழுதுகிறார்கள் என்றால் தமிழர்கள் தான் எழுதுகிறார்கள். இதுவே இங்கு மிகவும் பலமானதாக
இருப்பதை நாம் எமது இந்த தேசத்தில் எழுதும் ஒரு சிறு விடயத்தினால் உறுதிப்படுத்திக்
கொள்ளலாம்.
ஆனால் நான்
எதிர்பார்க்கிறேன் இனிவரும் காலங்களில் இலங்கையில் இஸ்லாமியர்கள் தமது மொழி அரபிக்
என்றும் இலங்கையில் அடுத்த மொழிக்கான ஒரு சண்டையும் நடைபெறலாம் என்பதே. அதையும் இலங்கை
மக்கள் ஒரு முள்ளிவாய்க்காலில் பல ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்ய காரணமாகிவிடக்கூடாது
என்பதேயாகும்.
//மொழி
இல்லாத இனங்கள் உலகத்தில் ஏறாளகமாக இருக்கின்றனவே. எமக்கு மொழியே இல்லை என்றால் மேற்சொன்ன
பிரிவிற்குள் எம்மை அடக்கலாமே.//
நிஸ்தார்
நீங்கள் கூறும் மொழி இல்லாத இனங்கள் பற்றி இங்கே விளக்கமாக கூறுங்கள் மொழி இல்லாமல்
மனிதர்கள் இல்லை மொழி இல்லை என்றால் அவர்களைப்பற்றிய தொடர்பு எப்படி உருவானது சிலவேளை
நீங்கள் சொல்லலாம் அது ஊமைப்பாசை என்று நான் சொல்லுவேன் அதுவும் மொழியே தான் அதுதான்
அந்த அடையாளம் அவர்களடன் பேசும் ஊமைப்பாசைகூட அந்த அவர்கள் பாரம்பரியமாக வாழம் அந்த
சூழ்நிலைக்கு ஏற்றால் போல்தான் இருக்கும் அந்த ஊமைப்பாசைக்கும் ஒரு தனித்துவம் இருக்கும்
//அலாவுதீன்
சொன்ன “அருவி”(பெயர் சரியோ தெரியாது), நான் இப்போது சொல்லும் “எழு” மொழி பற்றி
ஏதாவது கேள்விப்பட்டதுண்டா? அந்த மொழிகளில் ஏதாவதொன்று இலங்கை சோனகரின் மொழி என்றால்,
உங்கள் வாதப்படி இவர்களுக்கும் மொழி உண்டு எனவே இவர்கள் தமிழர் அல்லர் என்று ஏற்றுக்
கொள்ளும் பக்குவம் வருமா?//
நண்பர் நிஸ்தார்
அவர்கள் குறைந்தது திரு தியாகராஜா அவர்களின் அல்லது டாக்டர் மாகாதேவனின் திராவிட இனத்தின்
வரலாறுகளை படித்திருப்பது நல்லது. இந்த எழு மொழியே திராவிட இனத்தின் ஆரம்ப மொழி என்றும்
இரு திராவிடத்தின் ஏழு அதாவது ஏழுபேர்களில் இருந்து எழுந்த இனம் என்றும் (இன்றும் சில
கிராமங்களில் தமது முதாதையர்கள் என்று கூறம்போது ஏழு பேர்களில்த்தான் ஆரம்பிக்கபட்டதென்ற
கருத்து உள்ளது) அதைவிட எழு எழுங்கள் இனமே என்ற கொசத்துடன் எழுந்தது திராலிட இனம்
என்றும் எழு, எழுதல், பொட்டு, முறுக்கு,மீன்-வளையல் ஏழு(7) மூன்று என்பன திராவிட கலாச்சார்
ஆரம்ப சொற்கள் என்றும் இதில் இருந்தே ஏழு உலகம் என இந்து சைவ லோகய பேச்சுக்கள் வந்தது
என்றும் ஏழு பிறப்பு என்று மணிக்கவாசர் திருவாசகமும் இப்படியாக பல விதமான ஆய்வுகள்
பல உண்டு. எழு என்ற சொல்லே திராலிடர்களின் தென்எழு தெற்க்கு நொக்கிய பயணம்(ஆரியர்
வருகையின் போது)இந்த தென்எழு தேன் எழு என்றும்பின்னர் இது தமிழு என்றும் தமிழ் என்றாகியதாக
இவர்களது ஆய்வுகளில் உள்ளதை அவதானிக்கலாம்.
இலங்கையில்
தமிழர்கள் சிங்களவர்கள் சோனகர்கள் முஸ்லீம்கள் என்று பிரிவுகள் கொண்டு இலங்கையை கட்டியெழுப்ப
முயல்வோமாயில் மீண்டும் மீண்டும் முள்ளிவாய்கால்களே உருவாகும்.நாம் கடந்த புலிகளின்
தோல்விகளிலிருந்தும் அதன்போது உருவான முள்ளிவாய்காலில் இருந்தும் பெற்றுக்கொண்ட
பாடங்கள் என்ன?
இனிமேல்
இலங்கையில் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கும் அல்லது அதை நோக்கிய எமதுபயணம் இருக்க
வேண்டும் அதைவிடுத்த இஸ்லாமியர்களுக்கு தமிழருக்கு என பிரதேசம் கேட்டால் இங்கே இன்னுமொரு
முள்ளிவாய்க்காலையே பெரும்பான்மை இனம் உருவாக்கும்.
அதைவிட யார்
இலங்கைக்கு முதலில் வந்தது இலங்கையர் தமிழர்களா சிங்களவர்களா? முஸ்லீம்களா? என்று ஆராய
முற்படுவோமானால் இஸ்லாம் முஸ்லீம்கள் என்ற அடையாளம் காற்றாய்ப்பறக்கும் அதன் பின்னர்
இன்றுள்ள தமிழரும் சிங்களவரும் முஸ்லீம்களும் ஒரே இனம் என்று பிடரியில் அடித்து விஞஞானம்
நிரூபிக்கும் (மரபணுச்சோதனைகள் நிரூபித்துவிட்டது) பின்னாள்களில் மனிதர்கள் இடம்பெயந்தே
இந்தமாற்றங்கள் மிக குறுகிய காலங்களிலேயே வந்தது என்பதை நன்கு தெரிந்த விடயமாகும் இந்திய
உப கண்டத்துக்கு இஸ்லாம் ஒரு 500 வருடங்களுக்குள்ளும் கிறீஸ்தவம் ஒரு 300 வருடங்களுக்குள்ளாகவுமே
தமது கால்களை பதித்தது என்பதையும் (இந்துக்கள்) சமணர்களும் சைவர்களும் பெளத்தர்களும்
இதர இந்து பிரிவுகளும் மிக நீண்டகாலமாக தம்மிடையே அடிபட்டு பின்னர் இந்து என்ற பொது
அடையாளத்துக்குள் வந்தனர் அதன்போதே இவர்கள் புத்தரையம் இந்துக்களின் தெய்வமாக்கினர்(புத்தர்
தன்னை வணங்க வேண்டாம் நான் கடவுள் இல்லை சொல்லியும் கூட) இவைகள் பின்னர் வந்த இஸ்லாம்
கிறீஸ்தவத்துக்கு எதிராக அந்த மதங்களின் சமயத்தை திணிக்கும் நடவடிக்ககைகளக்கு எதிராக-
இவர்களை மேலும் பலமாக ஒன்றிணைத்தது என்பதே உண்மையாகும்.
இலங்கையில்
இரண்டு இனங்கள் இரண்டு மொழிபேசும் மக்களே இருந்துள்ளனர் இதில் புலிகள் தமது ஆட்சிக்காலத்தில்
ஒரு பிரிவினரை முஸ்லீம்களை அவர்களை வேறு அடையாளம் கொண்டவர்கள் என்ற காரணத்தினால் அந்த
முழு மக்கள் மீது தமது எதிரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் (இதன்போது முரண்பட்ட முஸ்லீம்களை
அல்லது புலிகளை காட்டிக்கொடுத்த முஸ்லீம்களை மட்டும் யாழ்பபாணத்தை விட்டு விரட்டியடித்திருந்தால்
அது வேறு விடயமாகி யிருக்கும்) இது முஸ்லீம்களை தம்மை ஒரு தனியான இனமாக அடையாளப்படுத்த
வேண்டிய நிர்ப்பந்தத்திற்க்கு தள்ளியுள்ளது இதுவே முஸ்லீம்களை ஒரு தனி இனமாக உருவாக்க
காரணமாகியது ஆனால் இன்றும் பல பெருந்தொகையான முஸ்லீம்கள் தம்மை மொழியால் அடையாளப்படுத்துபவர்கள்
உள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இதேபோன்று
தமிழ் பிரதேசங்கள் தவிர்ந்த சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லீம்களில் பலர் இந்த
மாதிரியான அடையாளப்பிரச்சினைகளை தெரியாமலே உள்ளனர்.
இந்த முஸ்லீம்கள்
ஒரு தனி இனமா என்ற வாதம் இன்றும் நாட்டில் பலமாக நடாத்தப்படவில்லை என்பதையும் இதுவும்
தமிழீழம் என்ற முடிவு போன்றதாகவே பல முஸ்லீம்களிடம் அபிப்பிராயம் உள்ளது.
முஸ்லீம்கள்
ஒரு தனி இனமல்ல என்றவாதம் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் புளொட் அமைப்பில் பங்கு பற்றிய பல இஸ்லாமிய
தோழர்களிடம் இன்றும் உள்ளது.
உதாரணமாக
ஒரு தமிழர் தான் தனது இளமைக்காலத்தில் அனுபவித்த வறுமையின் காரணமாக இஸ்லாமியனாக மாற
வேண்டியதாயிற்று இன்று இவன் பிள்ளை தான் சோனகன் என்றும் முஸ்லீம் என்றும் தமது இனம்
அரபிலிருந்து வந்தது என்றும் தனது இஸ்லாத்தை அடையாளமாக தனது வாழ்வின் நடத்தைகளில் முன்வைக்கிறான்
இவன்.
இன்று புலி
இயக்கம் இல்லை புலிகளின் பாணியிலான நடத்தைகள் இல்லை ஆகவே முஸ்லிம் தனி இனம் என அடையாள
கருத்தை எழுப்புபவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமா?
முஸ்லீம்கள்
தனிஇனமாக கருதும் இந்த வளர்ச்சிப்போக்கு பற்றி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஏற்ப்படுத்தியுள்ள
கருத்துப்பரிமாற்ங்கள் என்ன?
இலங்கையில்
தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் பொதுவான மொழியை பேசுபவர்களாக இணைந்து கொள்வதும்-
இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் பொதுவான இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களாக
இணைந்து கொள்வதும்- இலங்கையில் இந்துக்களும் பெளத்தர்களும் ஒரே அடிப்டையான சமயத்தை
கொண்டவர்களாக இணைவதும்- இலங்கையில் தமிழ் சிங்கள கிறீஸ்தவர்கள் ஒரே சமய அடிப்படையில்
இணைவதும் காலத்தின் தேவையாக உயர்ந்து நிற்பதை காண்கிறோம். இந்த இணைவுகள் மூலம் இலங்கையர்
என்ற பல் இனக்குழும இலங்கையை உருவாக்கத்திற்கான சிந்தனைப்போக்கு அவசியமாகின்றது.
முஸ்லீம்கள்
தாம் ஒரு வேறான இனம் என்ற கருத்தை முன்வைக்கும் உரிமையுண்டு அந்த உரிமையை நான் மதிப்பளிக்கிறேன்,
முஸ்லீம்கள் தமக்கென பள்ளிவாசல்களை அமைத்து அங்கு அமைதியாக தமது தொழுகைகளை செய்யவும்
உரிமையுண்டு இந்த உரிமையை புலிகளினால் முஸ்லீம்களின் வெளியேற்றம் பலப்படுத்தியிருந்தது
(இவைபற்றி இன்னும் நியறயவே பேச வேண்டியுள்ளது)!!வாழ்க்கை முறையை இஸலாமிய வாழ்வியல்
அடையாளம் அடிப்படையாக கொண்டு இந்த வாதத்தையும் பிரதிவாதங்களையும் எழுப்ப முடியும்,
ஆனால் மத அடையாளம் பிற்போக்குததனமானது கடவுள் பொய்யானது நிரூபிக்கப்பட்டு 150 வருடங்களாகி
விட்டது.
கடவுளின்
துதுவர்கள் என்று யாரும் இங்கு வந்ததில்லை (எங்கிருந்து வர)எல்லாம் எம்முடன் வாழ்ந்தவர்கள்
தம்மை தாமே அல்லது பக்கத்தில் இருந்த முட்டாள் (அறிவில் குறைந்தவர் )அவரை கடவுளின தூதுவராக்கினார்
அல்லது அவரது உறவினர்கள் அவரின் நினைவுடன் வாழ அல்லது அந்த கதைகளை வைத்த தனத வாழ்க்கைகயை
கொண்டு நடத்தத இறந்தவரை கடவுளின் துதாவராக்கினார்.
முஸ்லீம்கள்
யாழ் சென்று குடியேறுவது அவர்களது உரிமை அந்த உரிமையை அவர்கள் இஸ்லாம் என்ற மத அடையாத்தினால்
பெற்றவர்கள் அல்ல பல வருட கால வராற்று ரீதியாக வாழ்ந்த இனம் என்ற அடிப்படையில் இந்த
உரிமை உருவானது அதுபோல எந்த மொழியை அடிப்படையில் தமது வாழ்வியல் மொழியாக பாவிக்கிறார்களோ
அந்த மொழி மூலமே அவர்கள் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்.
இதைவிட்டு
இஸ்லாமிய ரீதியான உரிமைகளை முன்வைத்து யாழில் குடியேற்றம் என்று கூறமுடியமா? இஸலாமிய
ரீதியில் இலங்கையில் இஸ்லாமிய அடையா இனக்குழுமத்தின் தோற்றுவாயை உருவாக்க முடியுமா?
இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லீம்கள்
திராவிட இனத்தவர்கள் இவர்களில் ஆரிய, மத்திய ஜரோப்பிய, பேசிய, இனக்கலப்புக்கள் உள்ளதை
மரபணு சோதனைகள் நிரூபித்துவிட்டது.
No comments:
Post a Comment