Search This Blog

Friday, 16 May 2014

விடுதலைப்புலிகள் தேசம் என்பதன் அர்த்தம் அது வெறும் நிலமாகவே கருதினர் அதே போல பிரிஎப்ம் கருதுகிறது என பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

81.   T Sothilingam
தமிழர் அமைப்புக்களினது கூட்டங்களையும் பிரித்தானிய தமிழ் அமைப்பின் அங்கத்தவர்களின் பேச்சுக்களையும் அவர்களது செயற்பாடுகளையும் அவதானிக்கும்போது கடந்த காலங்களில் புலிகள் எப்படி தமிழர்களது உரிமைப் போராட்டத்தை விளங்காமல் நடாத்தினார்களோ, அதே போலவே தொடர்ந்தும் இவர்கள் செயற்பட முனைவது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தேசம் என்பதன் அர்த்தம் அது வெறும் நிலமாகவே கருதினர் அதே போல பிரிஎப்ம் கருதுகிறது என பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.
பிரிஎப் டன் யாரும் ஒரு 30 நிமிடங்கள் பேசினால் இவைகள் புரிந்துவிடும். இந்த பிரிஎப் ம் கடந்தகாலங்களில் புலிகள் அமைப்பும், மக்கள் வெகுஜன அமைப்புக்கள், அந்த மக்கள் வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்கள், போராட்டவடிவங்கள் அவற்றை நெறிப்படுத்துவது போன்ற படிப்பினைகளை படிக்க முனைப்படவில்லை. அப்படி அவர்கள் அறிந்திருந்தால் புலிகள் இராணுவ அமைப்பினையும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் செயற்ப்பாடுகளையும் வேறுபடுத்தி செயற்படுத்தியிருப்பர்.
வெகுஜன போராட்ட வடிவங்கள் பற்றி தமிழர் கலாச்சாரத்தில் ஊன்றும் காலங்களிலேயே புலிகள் மற்ற அமைப்பினரை கொலை செய்தும், கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொலை செய்தும், இந்த மக்கள் வெகுஜன போராட்ட வடிவங்களை ஆரம்பத்திலேயே நசுக்கி விட்டனர்.
இயக்க ஆரம்ப காலங்களுக்கு முன்பே தமிழர் பிரதேசங்களில் மாக்சிச கட்சியினர் பலர் இப்போராட்ட வடிவங்களையும் அதன் அவசியங்கள் பற்றியும் பல தடவைகள் எடுத்துக் கூறியும் முன் உதாரணமாக செய்தும் காட்டினர். இதில் கம்யூனிஸிசக் கட்சிகள் குறிப்பாக சண்முகதாஸன் மற்றும் பல தோழர்கள் உதாரணமாக விளங்கினர். இவர்கள் தமிழர் பிரதேசங்களில் செயற்பட அனுமதித்திருந்தாலும் இவர்களிடமிருந்து பல பாடங்களைப் பெற்றிருக்கலாம் அல்லது எமது உரிமைப் போராட்டம் அவர்களது வழிநடத்தலை பெற்றிருக்கும் அல்லது குறைந்த பட்சம் மக்களின் இறப்பை குறைத்திருக்கும் எனவும் கருத்துக்களுண்டு.
ஆனால் புலிகள் எப்பவுமே மக்களை தவறாகவே தமது இயக்கத்தின் பாதுகாப்பிற்காக பாவித்துள்ளனர். தமது ஆதரவாளர்களையும் இயக்க உறுப்பினர்களையும் பாவித்து மக்கள் தமக்காக அணிதிரளுகின்றார்கள் என்ற மாயைத்தோற்றத்தையே உலகுக்கு காட்டியுள்ளனர்.
இங்கு மக்கள் தமக்காக போராட அனுமதிக்கப்படவில்லை என்பதை கவனம் எடுக்க வேண்டும். அப்படி அனுமதித்திருந்தால் அல்லது சுயமாக செயற்பட அனுமதித்திருந்தால் மக்களில் பலர் உயிர் பிழைத்திருப்பர். சிலவேளை புலிகளில் பலர் காடுகளில் ஒளித்து தப்பிபிழைத்திருப்பர் என பல முன்னாள் புலிகள் அபிப்பிராயப்பட்டுள்ளனர். எல்லாமே மக்கள் போராட்டம் பற்றிய தப்பான அறிவும் பயங்கரவாதிகளுக்குள்ள குணாதிசயங்களுடன் புலிகள் செயற்ப்பட்டதுமேயாகும்.
மேற்கூறிய விடயங்களை பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் அதில் தமக்குப் பின்னால் மக்கள் உள்ளனர் என்ற ஒரு மாயையை உலகுக்கும் காட்டவே வெளிநாடுகளில் செய்யப்பட்ட முயற்சியாகும். சிலர் இல்லை இப்படி மக்கள் ஆதரவளித்தனர் என்று சொல்லலாம். ஆனால் இன்று மக்கள் புலிகளின் மீது அவதூறு போற்றுவதன் மர்மம் என்ன? புலிகளை ஏற்றுக் கொண்டவர்கள் புலிகள் அரசினால் வீழ்த்தடிக்கப்பட்டதும் ஏன் தாம் ஆதரித்த இயக்கத்தின் மீது அவதூறு பொழிகிறார்கள்.
தமது மக்களுக்காக என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே ஊர்வலங்களுக்கும் பொங்கு தமிழுக்கும் மக்கள் கூட்டம் வருகை தருகிறார்கள். அப்படி அவர்களது வருகையை தாம் எப்படி பணமாக திரட்டுவது என்பதிலேயே இந்த பிரிஎப், புலம்பெயர் புலிகள் அக்கறையுடன் செயற்படுத்தினர். பின்னர் தாம் திரட்டிய பணத்தை திரும்ப புலிகள் கேட்டாலும் என்று, தாம் திரட்டிய பணத்தை திருடிக்கொள்ள புலிகளே இவர்களை அழியவும் திட்டங்கள் கொடுத்திருக்கலாம் எனவும் புலிகளின் உறுப்பினர்களே கருத்துக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். இதில் முக்கியமாக பிரிஎப் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, ‘முள்ளிவாய்க்கால் காலத்தில் பிரபாகரனுக்கு பிரிஎப் தான் தமக்கு 72 பிரித்தானிய எம்பிக்கள் ஆதரவு உண்டு. இவர்களின் உதவியுடனும் இவர்களால் வழங்கப்பட்ட மக்கள் தொகையாக இலங்கை அரசால் அழிக்கப்படும்போது தாம் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வைப்போம்’ என்ற நம்பிக்கையூட்டல் பற்றியும் இன்றும் பலரும் பரவலாக பேசப்படும் விடயம்.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அரசினால் குண்டு மழை பொழியும் பிரதேசங்கள், இடங்களிலேயே புலிகள் மக்களை வைத்திருந்தனர் என்பதும் மக்கள் செறிவாக இருந்த பிரதேசங்களிலிருந்தே செல்தாக்குதல்களை செய்ததும் ஏன்? என்பதுமாகும். இவை புலிகளும் பிரிஎப் ம் மக்கள் பெருவாரியாக அழியும்போது தாம் வெளிநாடுகளை தலையிட வைப்போம் என்று உறுதி கூறியதாகவே களத்திலிருந்து வெளியேறிய புலிகள் உறுப்பினர்கள் கருத்துக்கொள்கின்றனர். வன்னிப்போராட்டத்தின் போது தமது தலைவர் முக்கியமாக புலம்பெயர் லண்டனில் உள்ளவர்களின் புத்திமதிகளை கேட்டு நடந்ததாகவும் இது தமக்கு வியப்பாக இருந்ததாயும் இந்த புலிகள் கருத்து வெளியிட்டுள்னளனர்.
இந்த நம்பிக்கையிலேயே பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் தன்னையும் மக்களையும் புலிப்போராளிகளையும் ஒதுக்கிக் கொண்டார் என்பதும் - புலிகளின் பல பேராளிகளும் தளபதிகளும் காட்டுப்பகுதிக்குள் தப்பிப்போக நேரமும் காலமும் இருந்தும் போகாமல் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தங்கினர் என்பது இன்றும் ரிஎன்ஏ உறுப்பினர்கள் உட்பட பல முன்னாள் புலிகளின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாகவே பிரிஎப் ஜபிசி ஜிரிவி போன்றவர்கள் லண்டனிலும் வெளிநாடகளிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை இந்த தந்திரோபாயத்திற்கு ஆதரவாகவே நடாத்தினர் என்பதும் இந்த புலிகளின் கருத்தாக உள்ளது. எனவே பிரிஎப் ஜபிசி ஜிரிவி போன்றவர்களும் தமிழர்களின் முள்ளிவாய்ககால் அழிவிற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் என்பதும் இந்த புலிகளின் உறுப்பினர்களின் அபிப்பிராயமாகும்.
மீண்டும் பிரிஎப் தமது நிதி சேகரிக்கும் தந்திரங்களையும் திருடிய பணத்தை எப்படியும் காப்பாற்றும் திட்டங்களுடனுமே இன்றும் பிரிஎப் போன்றவர்கள் செயற்ப்படுகிறார்கள் என பிரிஎப் டன் இணைந்து வேலை செய்த புலிகளின் ஆதரவாளர்களின் கருத்தாகவும் உள்ளது.
புலிகளின் உடமைகள் சொத்துக்கள் கையிருப்புக்கள் புலிகள் இயக்கத்தின் இன்றய நிலை அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய எந்த முன்னுரைகளும் இதுவரை வெளிப்படாமைக்கான காரணங்கள் என்ன?
எல்லாமே தாம் சேர்த்துக்கொண்ட பணத்தையும் சொத்துக்களையும் காப்பாற்றும் பொருட்டாக நடத்தும் நாடகமேயாகும். இப்படியாக சில கூட்டங்களை சில குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை நடாத்தினால் தாம் புலிகள் அமைப்பு பற்றிய சலசலப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு காலத்தை கடத்திவிட்டு பின்னர் சொத்துக்கள் திருடிய பணத்தடன் மெதுவாக விலகிக் கொள்ளலாம் என்ற திட்டமே என்பது பல முன்னாள் புலிகளின் கருத்தாக உள்ளது.
தமது இயக்கம் விட்ட தவறுகளையும் அரசியற் தவறுகளையும் விமர்சித்து தாம் (முன்னாள் புலிகள்:: 2009 மே மாத்தின் பின்னர் புலிகள் இயக்கத்தை தெடரமுடியாமல் இருக்கும் புலிகள் உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது) புதிய வழியில் செற்பட வேண்டும் என்ற கருத்துடன் உள்ள புலிகளின் கருத்தாகவும் உள்ளது. ஆனால் இவர்களுக்கும் சொத்துக்களையும் பணத்தையும் வைத்திருப்பவர்களுக்கும் என்றுமே தொடர்பு இருந்திருக்கவில்லை என்பதாகும் காரணம் இவர்கள் தாம் தமது தலைமை இருக்கும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டதேயாகும்.
மொத்தத்தில் புலிகளால் தமிழ் மக்களின் போராட்டம் எல்லா தளங்களிலும் இனிமேல் போராட எழமுடியாத அளவு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் இதனாலேயே பலர் புலிகள் தமிழர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்கிறார்கள். இந்த தமிழர்கள் மீண்டும் தமது சொந்த உணர்வுகளுடன் சுயமரியாதையுடன் துணிவுடன் செயற்பட அரசு இடம்அளிக்காது என்பதே பலரின் அபிப்பிராயமாகும். ஆகவே இனிமேல் போராட்டம் என்பதைவிட சிங்கள மக்களுடன் கூட்டுறவு முறையில் தமது உரிமைப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்
புலிகளும் புலி ஆதரவாளர்களும் சிங்கள மக்களைக் கூட தமிழர்களின் எதிரியாகவே பல தடவைகள் நடாத்தியுள்ளனர் (உதாரணம் புலம் பெயர்நாடுகளிலும் ஜபிசி யிலும் ஜிரிவி லும் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் பாராளுமன்றத்தின் முன் நடாத்தப்பட்ட கோசங்கள் வெளிப்படையானவைகள் இன்றும் பல புலிகளின் இணையத்தளத்தில் இவற்றைக் காணலாம்)
கடந்த 30 வருட போராட்டத்தில் புலிகள் குறைந்த பட்சம் தமிழர்களின் போராட்ட நியாயத்தை சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கலாம்.
மேல் உள்ள பிரிஎப் ன் கூட்டத்தில் நடைபெற்ற விடயங்களுக்கு வந்தால் பிரிஎப் என்றுமே ஜனநாயக கூட்டங்களை பார்த்து கேட்டு பழக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் இராணுவ அமைப்பு போன்றே செயற்பட விரும்புபவர்கள். இந்த பிரிஎப் டன் கூட்டு சேர்ந்து செயற்பட்டவர்களின் பல கருத்துக்கள் இனி வருங்காலங்களில் புலிகளின் அனுபவங்கள் போன்று வெளிவரும் போது மேலும் விளக்கம் பெறமுடியும்.
இங்கு கவனிக்க வேண்டியது “இந்த கூட்டங்களில் மாற்று இயக்கத்தவர்களோ அல்லது புலிகளால் துரோகிகள் என்று முத்திரையிடப்பட்டவர்களோ இங்கு வாதாட வரவில்லை”. இந்த பிரிஎப் அங்கத்தவர்கள் அல்லது புலிகளின் ஆதரவாளர்களே இவர்களுடன் விவாதிக்க வந்தனர். இவர்களை தமது ஆதரவாளர்களின் கருத்துக்கள் இவை மிக முக்கியமானவை என்றுகூட சிந்திக்கவில்லை. இவர்களிடம் யாரும் ஜனநாயகத்தை என்றுமே எதிர்பார்க்க முடியாது.
இவர்களுக்கு ஜனநாயகம் என்பது அவசியமில்லை. சேர்த்த பணத்திற்கு இவர்கள் கணக்கு வழக்கு கேட்காமல் விட்டால் சரி அவ்வளவுதான். இவைபற்றி திட்டவட்டமாக இன்னும் சிலவருடங்களில் மக்களுக்கு தெரியவரும். அதுவரை இவர்கள் இப்படி கூட்டங்களை அங்கொன்று இங்கொன்றாக நடாத்துவார்கள். அவவளவுதான் பின்னர் இப்டி கேள்வி கேட்போர் சோர்ந்து விடுவர். சேர்த்த பணம் அவர்களுக்கே சொந்தமாகி விடும் என்பது பிரிஎப் டன் இணைந்து வேலை செய்த புலிகளின் ஆதரவாளர்களின் கருத்தாகவும் உள்ளது.
உண்மையிலேயே பிரிஎப் உறுப்பினர்களிடம் அரசியல் ஜனநாயக அறிவு இல்லை என்பது வெளிப்படையான உண்மை இவர்கள் என்றுமே தமது புலி ஊடகங்கள் தவிர வேறு தமிழ் ஊடகங்களுக்கு பதில் அளிக்க வரமாட்டார்கள். வந்தாலும் தாம் அமைப்பு சார்பாக வரவில்லை தனிப்பட வந்தோம் என்பார்கள். அப்படி சன்ரைஸ் ரேடியோவுக்கு வந்த பிரிஎப் டாக்டர் இந்துவின் கருத்துக்களை மீள செவிமடுத்தால் விளங்கும் என்ற கருத்தும் உள்ளது.
கடந்த போராட்டகாலங்களில் எத்தனை விவாதங்கள் கருத்தறியும் நிகழ்வுகளை புலிகளும் புலிகளின் ஆதரவு அமைப்புகளும் நடத்தியுள்ளது? இது ஒன்றே போதும் மக்களின் அபிப்பிராயங்களுக்கு இடம் அளிக்கப்படாத போராட்டம் ஒன்றை புலிகள் நடத்தியுள்ளனர் என்பதற்கு. மக்கள் வன்னியில் பசி பட்னியால் அழுது கொண்டிருந்த வேளையிலும், மக்களுக்கு உணவு சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட உணவு காசுக்கு விற்கப்பட்டுள்ளதும், காசு இல்லாதவர்களிடம் அவர்கள் தங்க நகைகளை பெற்றுக் கொண்டே உணவு வழங்கப்பட்டதும், சிலரின் வாகனங்களை வாங்கிக் கொண்டே உணவு வழங்கப்பட்டதும், இப்படி பறிக்கப்பட்ட தங்க நகைகளை இராணுவத்தினர் பல தடவைகள் பல இடங்களில் மீண்டுள்ளதும் நல்ல உதாரணங்களாகும்.
அன்றும் இன்றும் இவர்கள் பணத்தின் பின்னாலே அன்றி மக்களுக்கான போராட்டத்திற்காக அல்ல இல்லை என்றால், வன்னியில் எப்படி 3 லொறி நிரம்பிய பணத்தை ஏன் வைத்திருந்தார்கள்? பின்னர் ஏன் அதை எரித்தார்கள்? என்று அகதி முகாம் மக்கள் கேட்கின்றனர்.
இன்றும் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி சிந்திக்கும் புலிப்போராளிகள், பிரிஎப் ன் உறுப்பினர்கள், தம்மை முழுமையாக விமர்சனம் செய்து மக்களுக்கான செயற்பாட்டாளர்களுடன் இயங்க வேண்டும் என்பதே எல்லோரினதும் கருத்தாக உள்ளது.
இனி ஒரு கோரக் கொலை, வெள்ளை முள்ளி வாய்க்கால் வேண்டவே வேண்டாம்


No comments:

Post a Comment