1.
T Sothilingam on November 17, 2010 10:22 pm
இலங்கையில் உள்ள தமிழர்கள்
சிங்களவர்கள் முஸ்லிம்கள் சோனகர்கள் எல்லோரும் திராவிட இனத்தவர்களே இவர்கள் வந்தேறு
குடிகளான பலருடன் கூட்டு சேர்ந்ததாலும் மதம் மாற்றிக்கொண்டதாலும் தமிழர்களில் சிலர்
தம்மை சோனகர் என்றும் சிலர் தம்மை முஸ்லிம்கள் என்றும் மாற்றம் பெற்றனர்.
ஒரு இனம் என்ற வரையறையை
மாக்சிசம் தவிர வேறு ஒருவராலும் திட்டவட்டமாக இனத்துக்குரிய வரைவிலக்கணத்தை முன்வைக்கவில்லை
“ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியை கொண்டவர்கள் தம்மை தாம் வாழம் சூழலில் இருந்து தமக்கென ஒரு இன அடையாளம் உண்டு என அந்த தொகை மக்கள் கருதுவார்களானால் மக்களை அந்த மக்களை ஒரு இனமாக அங்கீகரிக்க வேண்டும்”
இதில் அவர்கள் தம்மை மதத்தால் நிறத்தால் பேசும்மொழியால் வாழும் பிரதேசத்தால் தமக்கென உள்ள விசேட கலாச்சாரத்தால் தம்மை ஒரு இனமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
“ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியை கொண்டவர்கள் தம்மை தாம் வாழம் சூழலில் இருந்து தமக்கென ஒரு இன அடையாளம் உண்டு என அந்த தொகை மக்கள் கருதுவார்களானால் மக்களை அந்த மக்களை ஒரு இனமாக அங்கீகரிக்க வேண்டும்”
இதில் அவர்கள் தம்மை மதத்தால் நிறத்தால் பேசும்மொழியால் வாழும் பிரதேசத்தால் தமக்கென உள்ள விசேட கலாச்சாரத்தால் தம்மை ஒரு இனமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
இதன்படி இலங்கையில் தமிழ்
தேசிய இனம் சிங்கள தேசிய இனத்துக்கு அடுத்து மலையக தமிழர்கள் ஒரு தனி இனம் இஸ்லாமியர்கள்
ஒரு தனி இனம் சோனகர்கள் ஒரு தனி இனம் இன்னும் பல இனங்களுக்கான காரணங்களுடன் இலங்கையில்
பல பிரிவு மக்கள் உள்ளார்கள்
நாம் இங்கு விவாதிப்பது
எழுதுவது எம்மடையே ஒரு நல்லறிவை வளர்க்க, இனங்களிடையே உறவுகளைப் பலப்படுத்தவே. இவற்றிக்காக
பலவிடயங்களை பேச வேண்டியும் உள்ளது. இதில் பல விடயங்களை பலர் அறிந்திராத போது அவை
சிலருக்கு புதிதாக சில விடயங்களில் அவர்களது அறிவை சிந்தனையை திறக்கும் என்பதே எனது
வாதமாகும் அல்லது அவர்கள் வேறு ஒரு விடயத்தை வாசிக்கும்போது அல்லது கேள்விப்படும்
போது இந்த புதிய தகவல்களில் தரத்தை பலப்படுத்தும் அல்லது மேலும் சிந்தனைக்கு வித்திடும்
இதைவிட இங்கு வேறு இல்லை.
ஆனால் நான் எழுதிய பல
விடயங்களில் சிலவற்றை மட்டும் பொறுக்கி எடுத்து கருத்து அல்லது பதில் எழுதும் ஆழுமையை
பார்க்கும்போது உங்களில் சிலர் சமய வாத அடிப்படைவாதிகளாகவே உள்ளீர்கள் என்பதனை எடுத்துக்காட்டுகின்றதை
நான் அவதானித்துக் கொண்டேன். எனது அவதானத்தை என்னுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இலங்கையில் உள்ள சோனகர்கள்
எனப்படுவோர் யார் இவர்களது பூர்வீகம் என்ன? இவர்கள் முஸ்லிம்களாக மாறினார்களா? அப்படி
மாறினார்கள் என்றால் இப்படிமாற முன்பு இவர்களின் மதம், சமயம் என்ன? சரி இவர்கள் இஸ்லாத்தவர்கள்
என்றால் இவர்கள் வகாபி முஸ்லீமா? அல்லது சுகிபி முஸ்லீமா? இவர்கள் பாட்டுப்பாடி தமது
மக்களுடன் ஆடிப்பாடி தொடர்பு கொள்வதை விரும்புபவர்கள் (இது வைஸ்ணவர்களின் ஆடிப்பாடி
கடவுளை வணங்கும் தரம் கொண்டவர்கள் இவர்களை சவுதி அரேபியாவில் தடைசெய்துள்ளார்கள் என
நினைக்கிறேன்) அல்லது சியா முஸ்லிம்களா அல்லது சுன்ணி முஸ்லீம்களா? இது பற்றி சோனகர்
என்ற இனம்தாம் என்று பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் தெரிவிக்க வேண்டும் கருத்துக்களை
தரல் வேண்டும்.
இலங்கையில் உள்ள முஸ்லீம்கள்
ஏன் முஸ்லீம்கள் சவுதியில் ஆடை அணிபவர்கள் போன்று அணிய வேண்டும் ஏன் தாடி வளர்க்க
வேண்டும் இது இஸ்லாத்தின் அடையாளமா? அப்படியாயின் ஏன் துருக்கியர்களும் ஜரோப்பிய முஸ்லீம்களும்
இப்படி தாடி உடுப்புக்களுடன் இல்லை? அல்லது அதைவிட வேற எப்படி இஸ்லாமியனாக அடையாளப்படுத்தலாம்?
இன்றைய முஸ்லீம்கள் இஸ்லாமிய
காலத்திற்கு முன்பு எந்த மதத்தை பின்பற்றினர். அந்த மதங்களில் கண்ட தவறுகள் என்ன? இஸ்லாமிய
காலத்திற்கு முன்பு அரபு நாடுகளில் பின்னபற்றப்பட்ட மதங்கள் சமயங்கள் என்ன? அவற்றிக்கு
என்ன நடந்தது அவை ஏன்? யாரால் எப்போது அழிக்கப்பட்டது என்ன? காரணங்களுக்காக அழிக்கப்பட்டது?
எப்படி பெருந்தொகையான முஸ்லிம்களை கொண்ட பிரதேசமாக மத்திய கிழக்கு கொண்டு வரப்பட்டது
இதில் உள்ள ஏதோ ஒரு இரு காரணங்களே மேற்கு நாடுகளும் இதர நாடுகளும் இன்றும் பயப்பிடுகின்ற
விடயமாக உள்ளதாக நான் விளங்கிக்கொள்கிறேன்.
இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள்
முஸ்லீம் இனம் என கருத்து முன்வைப்போர் முஸ்லீம்களின் வரலாறு எப்போ இருந்து என்று
கூறுங்கள் அந்த வரலாற்றுக்காலங்கள் பற்றி ஆராய்வோம்? இஸ்லாத்திற்கு முன்பு அரபுக்களின்
கலாச்சாரம் என்ன? என்ன காரணத்திற்காக அழிக்கப்பட்டது யாரால் அழிக்கப்பட்டது என்ன நோக்கத்திற்காக
அழிக்கப்பட்டது?
ஏன் இலங்கையில் முஸ்லிம்களை
சிங்கள மக்கள் மரகயா அல்லது மரக்லயா போன்ற வசனத்தால் ஏசுவது வழமை ஏன்? இந்த பெயர்
வரக் காரணம் என்ன?
அரபிலிருந்த வந்த பல
வியாபாரிகளில் பலர் இஸ்லாத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் பலர் இருந்துள்ளனர் ஆனால் யாழ்ப்பாணத்தில்
சாதாரண மக்கள் இவர்கள் முஸ்லீம்கள் என்றே கருதி இன்றும் கருத்துக்களை எழுதுகின்றனர்
இஸ்லாம்தான் இன்றைய விஞ்ஞானத்தின்
தோற்றுவாய் என்று பொய்யாக அறிவுக்குறைவாக சிலர் சொல்லி திரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது/கூடாது.
அரபு வியாபாரிகள் தான் இந்தியாவிலிருந்த பல தொழில்நுட்பங்களை அரபு பிரதேசத்திற்க்கு
எடுத்துப்போனவர்கள் என்பது உண்மை அவை பின்னர் அரபிலிருந்து ஜரோப்பாவிற்கு கிறீக்கும்
பின்னர் கிறீக்கிலிருந்து ரோம்க்கும் வந்த அவை ரோம்ல் இருந்து லண்டனுக்கும் வந்தது
இதற்கு நல்ல உதாரணம் கணிதம் பரம்பல் - இப்படி பரம்பல் நடக்கும்போது அவை ஒவ்வோரு இடத்திலும்
அவை விரிவுபடுத்தப்படும் அல்லது திருத்தப்படும் அதில் அல்ஜிபிரா இதில் உள்ள அல் என்ற
அரபு மொழிப்பாவனையை எடுத்துக்கொண்டு அதில் இருந்து இது இஸ்லாமிய கண்டுபிடிப்பு என்ற
பொய்களை காணலாம் இதர கணிதப்பிரிவுகளுக்கு மட்டும் ஏன் அல் என்ற வார்த்ததை பிரயோகம்
காணவில்லை என்று கேட்டால் விளங்காமல் உள்ளனர். நாம் பிரச்சினைகளை காலத்துடன் அதன் பரம்பலுடன்
ஆய்வு செய்தல் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு பலநூறுவருடங்கள்
முந்தியது அரபு மொழி என்பதை ஞாபகம் கொள்ள வேண்டும். (இன்று இது உன்னுடையது இது நாளை
இன்னொருவனுடையதாவது தவிர்க்க முடியாதது.)
திடீரென வானத்திலிருந்த
ஒரு இரவில் ஒரு நாட்டில் ஒரு சில காலப்பகுதியில் முழு கணிதவியலும் ஆதியும் அந்தமுமாக
உருவாகிட முடியாது என்ற யதார்த்தத்தை விளங்க ஏற்றுக்கொள்ள அறிவு விருத்தி தேவை. அல்லாவிடின்
இது கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் கண்ணை மூடிக்கொண்டு கேட்பவர்களுக்கு மட்டுமே
சொல்ல முடியும். மாற்றம் ஒவ்வொன்றையும் மாற்றியே தீரும் மாற்றம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே
இருக்கும் (பெளத்தம் இதை கூறுகின்றது) மாற்றத்தை மறுதலிப்பது புத்திசாலித்தனம் அல்ல அரபுக்கள் தம்மை இஸ்லாமிய
இனம் என்று கூறுவதில்லையே தம்மை அரபுக்கள் என்றே கூறுகிறார்கள் இரானியர்கள் தம்மை பேசியன்கள்
என்றே கூறுகிறார்கள் பேசியன்கள் தமது அரசர்களை பல்லவ என்று கூறுவது வழமை இவர்களுக்கும்
இந்திய பல்லவர்களுக்கும் தொடர்புகள் இருந்துள்ளது. ஈரானியர்கள் தம்மை அரபுக்களிடம்
உள்ள தொடர்பிலும் இந்தியாவுடன் உள்ள தொடர்பு நீண்ட காலமாக இருந்தது என்கிறார்கள்
அதாவது இஸ்லாத்திற்க்கு முந்திய காலப்பகுதிகளை குறிப்பிடுகிறார்கள்? இவர்களுடன் தான்
பஞ்ச கம்மாளர்கள் அரபு நாடுகளுக்கு போயிருந்தனர் என்ற இந்தியர்களின் ஆய்வும் உண்டு.
இந்த பஞ்ச கம்மாளர்கள் இரும்பு வேலை செய்பவர்கள் பொன் உருக்கி வேலை செய்பவர்கள் மரவேலை
செய்பவர்கள் மண் வேலை செய்பவர்கள் என பிரிவுகள் உண்டு இன்றும் ஈரானில் உள்ள மிக ஆதிகால
மண் வீடுகளின் அமைப்பு திராவிட கலாச்சார மொகஞ்சதாரோ கரப்பாவை ஒத்ததாக உள்ளதை வெளிவந்த
படங்கள் மூலம் அவதானிக்கலாம்.
இந்தியா எவ்வளவு காலத்திற்கு
முன்பே இரும்புத்தொழிலில் முன்னேறியவர்கள் என்று இன்றும் அதிசயமாக பார்க்கப்படுவது
டில்லியில் உள்ள மிகப்பெரிய இரும்புத் தூண் ஆயிரக்கணக்கான தொன் நிறையுடைய இந்த இரும்பு
தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பழுதடையாமல் இருப்பது பற்றியது இந்தியாவில்
செய்யப்படும் வாளுக்கு அரபு நாடுகளில் நல்ல மதிப்பு இருந்துள்ளது பின்னர் காலங்களில்
கிறீக் மன்னர்கள் அரபு மன்னர்களுக்கு இந்திய வாள் பரிசாக கொடுத்துள்ளார்கள் பின்னாளில்
இந்திய வாள்களையே கொண்டு வந்த முஸ்லீம்கள் இந்தியர்களை கைப்பற்றி இஸ்லாத்தை வாள் முனையில்
இந்தியாவில் புகுத்தினராம்.
மொரோக்கர்களும் துருக்கியர்களும்
இந்தியாவை இலங்கை பாக்கிஸ்தான் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் உட்பட முழுபிரதேசமான இந்துஸ்த்தான்
என்றே அழைத்தனர் அதன்காரணமாகவே தான் இன்றும் இந்திய பிராந்திய முஸ்லீம்களை (துருக்கியர்களும்
மொரேக்கர்களும் ஈரான் ஈராக்கிலுள்ள உள்ள சிலபிரிவினரும்) இந்துக்கள் என்றும் இவர்கள்
உண்மையான முஸ்லிம்கள் இல்லை என்றே கூறுகிறார்கள்.
இதேபோன்று இன்று மலேசியாவில்
உள்ள இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம்’ கேட்டால் மலேசியாவின் கடைசி மன்னன் ஒரு இந்து எனவும்
இவர் தமிழன் என்றும் சொல்லுவார்கள் இங்கும் இஸ்லாம் வரலாற்று ஆய்வினை மேற்கொண்டால்
பாக்கிஸ்தான் நிலைதான்?
மலேசியாவை அண்டிய பகுதியான
யாவாவில் ஆதிகால வியாபாரங்கள் செய்ததிற்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளது இதில் வியாபார
வங்கிகள் நடாத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை யாவா அரசு இன்றும் வைத்திருக்கிறது இதில் பல
கணக்குகள் இன்றும் தமிழில் உள்ளனவே?
இலங்கையின் கடைசி மன்னன்
விக்கிரமராஜசிங்கன் தமிழன், பின்னர் ராஜசிங்க என்ற சிங்களவராக்கப்படும் முயற்சிகள்
நடைபெற்றது அதற்கிடையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல இவற்றிக்கு தடையாக வந்துவிட்டது
-பதவியா குளம் நாரததேசிகரால் கட்டப்பட்டது ஆனால் சிங்கள அரசு இந்த குளம் சிங்கள மக்களால்
கட்டப்பட்டதாகவே கூறுகின்றது.
இலங்கையில் புத்தளத்தை
அண்டிய பகுதியில் பெம்பரிப்பு என்ற இடத்தில் செய்யப்பட்ட ஆய்வில் இந்த இடத்துக்கும்
இந்தியாவில் அரிக்கமேடு என்ற இடத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இங்கு
கண்டுபிடிக்கப்பட்ட பெண் உடல்களின் கழுத்தில் அவர்களின் திருமணத்தின்போது கணவனால்
கட்டப்பட்ட தாலியுடனேயே மரணசடங்கின் இறுதியில் அடக்கம் செய்துள்னர் இந்த இந்தமுறை இந்திய
உப கண்டத்திலேயே இந்த இரு இடங்களிலும் மட்டுமே தான் அறியப்பட்டுள்ளது.
இந்த தாலி இந்துக்களின்
தாலி என்பதும் உறுதியாக உள்ளது இந்த தாலிகளை யாழ்ப்பாணத்தில் சரடுவுடன் சேர்த்து பாவித்தார்கள்
என்றும் என்றும் கூறப்படுகின்றது (யாழ்ப்பாணத்தில் தாலியும் சரடும் தாலிக்கான கொடியும்
பாவிக்கப்படுவது கொடி பிற்காலத்திலேயே பாவனைக்கு வந்தது சாதாரணமாக சரடுகளே பாவித்தனர்)
(இன்றய காலத்தில் தாலியை இறுதிச்சடங்கில் வைத்து விட்டு அதை மீளப் பெற்றுவிடுவார்கள்).
புத்தளம் உடப்பு பிரதேசத்தில்
உள்ளவர்களில் பலர் தாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பு இந்தியாவிலிருந்த வந்த இனம் என்றும்
தம்முடைய இனத்தவர்களே புத்தளம் இஸ்லாமியர்கள் என்றும் இவர்கள் பிற்காலத்தில் அரபு நாட்டவரின்
வருகைகளின் போதே மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்றும் சிலர் இந்தியாவில் கேரளாலிலிருந்து
வந்தவர்கள் என்றும் சிலர் இந்தியாவிலிருந்தே மதமாற்றம் செய்யப்பட்டு வந்தவர்களால்,
மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்றும் கருத்துக்களை பரிமறிக்கொள்கிறார்கள் புத்தளம் பிரதேசத்திற்கு
அண்மையாக இருந்த துறைமுகம் இந்த தொடர்புகளின் வாயிலாகவே உருவாகப்பட்டது என்றும் இங்கிருந்தே
கேரளாவிற்கும் இந்தியாவிற்கும் வணிகம் நடாத்தப்பட்டது என்றும் கருத்துக்களை வைத்துள்ளார்கள் இதே போன்று காரைநகரிலும்
காரைநகர் மேற்கு கரையோரமாகவே சில காரைநகர் குடியினர் தாம் வந்ததாகவும் இன்றும் கூறப்படுகின்றது
இவர்களில் சிலர் தமது உறவினர்கள் இறந்தபோது அவர்களின் அஸ்தியை காரைநகரின் மேற்கு கரையோரம்
எடுத்துப்போய் தாம் வந்த வழிபார்த்து அஸ்தியை கரைக்கும் வழக்கம் உள்ளது இவர்களிடமும்
இந்த புத்தளத்தின் வரலாறு போன்ற கருத்துக்கள் உண்டு இவர்களும் காரைநகரின் துறைமுகத்திலிருந்து
கேரளாவிற்கும் நாகபட்டினத்திற்கும் வணிகம் நடாத்தியுள்னர். அதைவிட கேரளாவுடன் தொடர்பும்
இருந்துள்ளது. இன்றும் காரைநகரில் பாவிக்கப்படும் பல சொல்பதங்கள் கேரள சொற்பதங்களே
(பறைதல், ஏநாட்டியம்)
காரைநகரில் இரு துறைமுகங்கள் இருந்தள்ளது ஒன்று கடல் பெருக்கினால் அழிந்து விட்டது
இது காரைநகர் கோவளத்தில் இருந்தது. இங்கிருந்து இந்தியா கேரளாவில் உள்ள கோவளம் என்ற
பெருடைய இடத்திலுள்ள துறைமுகத்திற்கே தொடர்பும் இருந்துள்ளது கடல் நடுவே பிரிக்க இருபக்கமும்
ஒரே பெயரைக்கொண்ட இடமாக இருந்துள்ளது மக்களின் பரம்பலின் தாக்கங்களை குறித்துக்கொள்கிறது.
இன்றும் காரைநகரில் உள்ள ஈழத்து சிதம்பரம் சிவன்கோவிலின் பிராமணர்கள் தாம் உத்தமகோச
மங்கையிலிருந்த வந்தவர்கள் என்பதை கூறுகிறார்கள் பின்னர் இன்று தொடர்பற்றுப் போனார்கள் சீனாவிலிருந்து பல தடவைகள்
செங்கோ என்ற zen ku என்ற அரசன் 5 தடவைகள் சீனாவிலிருந்து வந்த ஒகினோ பேசியன் தமிழ்
மொழிகளில் பொறிக்கப்பட்ட சின்னங்களை பல இடங்களிலும் பதித்து சென்றுள்ளான் இதில் ஒன்று
இலங்கையிலும் உள்ளது இதை இப்போது சிங்கள ஆய்வாளர்கள் தமிழின் வரலாற்று ஆய்வினை மறைக்க
இது தமிழ் அல்ல மலையாளம் என்றே கூறி இருந்த இடம் தெரியாமல் மறைத்துள்ளனர். இதனால் தமிழை
மறைக்கப்போய் சிங்கள மக்களின் வரலாற்றையும் மறைப்பதாகவே முடியும்.
இலங்கையில் தென்பகுதிகளிலும்
மட்டக்களப்பு மாகாணத்திலும் தற்போது இஸ்லாம் கடுமையாக பின்பற்றப்படும் நிலைமைகளை அவதானிக்கப்
படுவதாகவும் இங்கே தவறுகள் மறைக்கப்படுவதற்கே இவைகள் வழிகோலுகின்றன என்றும் அல்லது
இதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரபிய நாடு எது? என்றும் கேள்விகள் வெளிவர ஆரம்பித்தள்ளது?
ஒரே அளவான ஒரு சமயம்
எல்லாருக்கும் பொருந்தும் என்ற கனவில் யாரோ செயற்படுவதாகவே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.
இது இலங்கையில் அரச தரப்பிலுள்ள இராணுவதரப்பிலுள்ள பலஅதிகாரிகளின் கருத்தாக உள்ளதை
அவதானித்துள்ளேன்.
இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை
முஸ்லிம் இனம் என்பதா? அல்லது சோனக இனம் என்பதா? அழைப்பது எது சரியானது என்றவாதத்தை
ஆரம்பிக்கப்படல் வேண்டும்? இருதரப்பினரும் இந்த வாதங்களில் கலந்து கொள்ள வேண்டும்
அத்துடன் இந்த இருவரும் இனங்கள் இல்லை இவர்கள் தமிழ்பேசும் இனமே என்ற வாதத்தை முன்வைப்பவர்களும்
கலந்து கொள்ள வேண்டும்.
அல்லது இலங்கையில் இரண்டு
இனங்களே வேறு இனங்கள் என்று ஒன்று இல்லை என்ற வாதங்களை கொண்டுள்ளவர்களும் உள்ளனர்
இவர்களுக்கு எதிர்வாதம் என்ன?
இங்கே குறிப்பிடும் ஆய்வுகள்
வைக்கப்படும் கருத்துக்களினால் வரலாறுகளின் சில தகவல்கள் என்ற பார்வைக்கு மட்டுமேயாகும்
இதில் எழுதப்படும் கருத்துக்களால் இலங்கையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த
இனத்தையும் அவர்களின் இலங்கையில் வாழும் உரிமையை மறுதலிக்கும் கருத்தாக அல்லது துணைபோகும்
நடவடிக்கைகளாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படியாக உள்ள பல தரப்பட்ட கருத்துக்களை
முன்வைத்து இந்த வாதப் பிரதிவாதங்களை ஆரம்பிப்பதன் மூலமே இதன் உள்ளார்த்தம் விளங்கியும்
வரலாறு அறியப்பட்டும் மக்கள் ஒருவருக்கொருவர் உணர்ந்து ஒற்றுமையாக வாழும் சூழ்நிலைகளை
உருவாக்க முடியும் என நான் கருதுகிறேன் இதே போன்ற கருத்துக்கள் எழுத்துக்களை தமிழ்மக்கள்
சிங்கள மக்களை நோக்கியும் சோனக - இஸ்லாமிய மக்களால் எழுப்பப்படல் வேண்டும் எனவும்
நான் கருதுகிறேன்.
இலங்கையில் உள்ள அத்தனை
மக்களும் இலங்கையர்கள் இலங்கை நாட்டினுள் பல்வேறுபட்ட கலாச்சார பண்புகளுடன் வாழும்
பல் இனங்களை கொண்ட சமூகமேயாகும்.
No comments:
Post a Comment