- T Sothilingam
நன்றி றோகன். இப்படியான பலவிதமான பக்கங்களின்
தரிசனம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அத்யாவசியமானது இந்த அடிப்படையை என்றோ இந்திய
தத்துவங்கள் கொண்டிருந்ததையும் அப்படியான கலாச்சார் பின்ணியை நானும் கொண்டிருப்பதையிட்டும்
மகிழ்சியடைகிறேன் இன்றய காலங்களில் இதன் அடிப்டையிலேவே உலகில் காசூத்திரம் என்று ஒரு
பக்கமும் இப்படியான ஆண் பெண் பாலியல் உறவுகளின் மூலமே மனிதன் ஆத்மாவை அறிகிறான் என்று
ஒரு பக்கமுமாக மனிதகுலம் அன்பாக அமைதியாக வாழ இந்திய தத்துவங்கள் வழிகாட்டியுள்ளது.
நான் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டது
போன்று இந்திய தத்துவங்கள் 300 வகைகளாக இருந்துள்ளதும் இவற்றிலிருந்தே இந்த மனித குலம்
தனக்குரிய நாகரீகங்களையும் அறிவியலையும் வளர்த்துள்ளது இந்த மனித குலநாகரீகத்தின்தொட்டிலாக
மாகாபாரத் என்ற இந்தியா இருந்துள்ளது (ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் பங்களாதேஸ் பூட்டான்
திம்பு இன்னும் ஈரானின் ஒரு பகுதிப்பிரதேசம் என நீண்ட பிரதேசங்களாக இருந்துள்ளது) இந்தியாவிலிருந்தே
உலகில் இன்று பெருமையுடன் வழங்கும் மொழிகள் சமயங்கள் கலைகாலாச் சாரங்கள் தமது அடிப்டைகளை
பெற்றுள்ளது.
இன்றய இந்தியாவில் உள்ள இந்து சமயம்
என்பது என்றுமே தன்னை இந்து அல்லது சைவம் அல்லது சமணம் அல்லது சாத்வீகம் என்ற அடிப்படையை
பிரித்து சமயங்களாக இருந்ததில்லை இவை சமயம் என்ற பெயரைப் பெற்றிருக்கமாயின் இன்று இந்தியாவில்
கிறீஸ்தவம் இஸ்லாம்போன்று கிட்டத்தட்ட 100 மதங்கள்(சமயங்கள் இருந்திருக்கும் ஆனால்
இவைகள் யாவும் ஒன்று பட ஒரு சமயமாக சிந்து பிரதேசத்தை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டதினால்
இந்து என்ற ஒரு கட்டமைப்புக்குள் உருவாகிக்கொண்டதே இன்றுள்ள இந்து சமயம் அதிலும் இந்த
நிலைப்பாட்டை மாற்று சமயங்களின் வருகையும் அந்த சமயங்களின் பிற்போக்கதனங்களின் விருத்தியும்
இந்து என்ற பெயரை உள்வாங்கி வளர்ந்து கொண்டது சிந்து வெளியின் பெயரை தனக்கு ஏற்ப்படுத்திக்கொண்டது
இதை சுவாமி பிரபு பாபுதா தனத பகவத்கீதை விளக் உரையில் விளக்கமாக குறிப்பிடுகின்றார்
பிற்காலத்தில் இந்து சமயமும் அதே போன்ற பிற்போக்தனங்களுக்குள் தன்னை இழுத்துப் போட்டுக்கொண்டது.
இன்று இந்து என்ற சொல் சமயங்களின் கூட்டம்
என்ற பொருள் படவே உலகில் உபயோகிக்கப்படுகின்றது சமணம் வைஸ்ணவம் சைவம் இப்படி பல்வேறுபட்ட
பிரிவுகளை உள்ளடக்கியதே இந்து என்ற பொருளாகும் ஆனால் எல்லாப் பிரிவினரும் அடிப்படை
இந்தத்தவமாக ருக்கு யசுர் சாம தர்வ என்ற அடிப்படை வேதங்களை கொண்டே தத்தமது பிரிவிவுகளை
நிறுவுகிறார்கள் இதில் உள்ள முதலாவது இருக்கு முழுமையாக இயற்கை பற்றியதாகும்
இன்றய அறிவியல் உலகம் தன்னை அறிவியலில்
வளரத்துக்கொண்டதின் பயனாகவும் மனிதகுலத் தனது நீண்ட சிந்தனை அனுபவ வளர்ச்சியின் வரலாற்றில்
இந்த மதங்களின் தேவை அருகி விட்ட போதம் இன்னும் மனிதரில் பெரும்பகுதியினர் இன்னமும்
தம்மை நவீன உலகின் அனுபவம் பெற் மனிதர்களாக்கிக்கொள்ளும்(தானாகவே உணர்ந்து வளர்வது)
அல்லது மனிதர்களாகிக்கொள்ளும் (மற்யவர்களின் அனுபவம் அல்லுத மற்யவர்களின் முயற்ச்சியால்
வளர்ந்து கொள்வது) படிநிலையிலேயே இருப்பதால் இன்றும் பிற்போக்க தனமாகிவிட்ட அயோக்கியர்களால்
பிற்போக்குதனமாகிவிட்ட மதங்களின் பின்னால் நிற்க வேண்டியுள்ளது அல்லது அந்த மதங்களின்
பெயரால் தம்மை அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறார்கள் என்பதாகும்.
இந்தியாவின் ஆரம்பகால அறிவியல் வளர்ச்சியில்
காமசூத்திரம் மிகவும் அடிப்படைதத்துவமாக இருந்துள்ளதும் இதன் அடிப்படையில் மனிதர்கள்
தம்மிடையேயான உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருக்கும் தத்துவமாகவும் இருந்துள்ளது
இதனடைய தொடர்புகளை நாம் சிவலிங்கவடிவிலும் அதற்கான விளக்கங்களிலும் அறிகிறோம்.
சிவனின் நடனத்துடன் இணைத்து அதற்காக
ஒரு ஊழியத்தின் நடனம் என்ற அண்டசராசரத்தின் அசைவுகள் என்ற தத்துவத்தையும் எழுதியுள்ளனர்
இந்த அசைவை விஞ்ஞானத்துன் இணைத்தும்(ஊழளஅiஉ னுயnஉந ழக ளுiஎய என்றும்) தொடர்பு படுத்திப்பார்க்கிறார்கள்
இது பற்றிய அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற ஒரு விஞ்ஞான மாநாட்டீற்க்கு இந்திய அணுசக்தி
ஏவுகணை விஞ்ஞானியான அப்துல்கலாம் அவர்கள் ஒரு சிவ நடனம் குறிக்கும் நடராஜர் சிலை ஒன்றினை
ஜேர்மனிக்கு இந்த விஞஞான மாநாட்டினர்க்கு பரிசாகவும் பார்வைப்பொருளாகவும் கோண்டு
வந்திருந்தார்
இதுபோன்று சாத்திரம் யோகாசனம் மூலிகைமருத்துவம்
கட்டிடக்கலை நெசவு விவசாயம் கப்பல்கட்டுதல் போர்க்கலை வர்மம் போர்க்கலை சிலம்பு போன்ற
பல நுறு விடயங்களில் இன்றும் எங்கோ ஒரு மூலையில் பயன்படும் விடயங்களாகவும் இவற்றுடன்
மூடத்தனங்களாக இன்று எம்மால் அறியப்பட்ட பலவும் இணைந்தே இந்தியாவின் ஆரம்காலங்கள் இருந்துள்ளன.
இந்த இப்படியான தத்துவங்களின் கலவையாகவும்
கூட்டாகவுமே இந்த இந்து சமயத்தை பார்க்க வேண்டும்
இந்து சமயம் பார்ப்பனிணத்தின் வருகையின்
முன்னர் பாரப்பனியத்தின் முன்னர் என்றும் பிரித்தும்பாரக்க வேண்டிய தேவையுள்ளது இந்து
சமயத்தில் பார்ப்பணியமே இந்து சமயத்தினை ஒரு அயோக்கியர்களின் சமயமாக தமது சுய வாழ்விற்காக
பல தேவையற்ற சடங்கு முறைகளை புகுத்தி அதன் இயற்கையான சீரான வளரச்சியனை மாற்றியமைத்தாகும்.
உதாரணமாக திருமண வைபவம் மரண சடங்கு போன்ற
வைபவங்களை சடங்குகளாக்கியதும் அவற்றைசுற்றி தமது பாpழைப்புகளை வளரத்ததும் ஒரு வகையில்
இந்த சமயத்தின் இயற்கையான வளர்ச்சியிலும் சமூக அந்தஸ்த்திலும் அதனை கீழடையச்செய்யதாகும்.
இந்துசமயம் கடவுளை எங்கும் தேடும்படி
கோரவில்லை உன்னுள்ளேயே தேடும் படியும் உன்னிக்குள்ளே ஆனந்தத்தை தேடும்படியும் கோருவது
இறந்தவர்கள் உதாரண புருசர்களாக கோண்டும் இயங்குவதாகும்.இங்கே காமசூத்திரம் அல்லது
ஆண் பெண உறவும் திருப்தியும் ஒரு முக்கிய பங்ககாற்றுகிறது அன்பே சிவம் என்பது அன்பு
எனபது இன்ப சுகமாகவும் வாழ்வியல் திருப்தியாகவும் குறிப்பிடலாம்
இதன்காரணமாகவே இந்துக்கோவில்களில் சிவலிங்கமும்
காசூத்திரத்தில் குறிப்பிடும் பாலியல் நடத்தைகளை சித்தரிக்கும் உருவங்கள் சிலைகள் இந்துக்கோவில்களில்
இருக்கிறத இவை சாதாரண மனிதர்களின் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாலும் மனிதரின்
அத்தியாவசிய பாங்காகவும் உள்தாலும் மனிதனுக்கே என்ற அடிப்படையில் இவற்றின் பிரசன்னம்
இவற்றின் அறிவும் மனிதருக்கு தேவையானதுதம் அடிப்படையானதுமாகும்.
இந்து கோயில்களின் அமைப்பு ஒரு ஆண்
நிலப்பரப்பில் படுத்து இருப்பது போன்றும் அல்லது ஒரு பெண் குந்தி இருப்பது பொன் அமைப்பிலுமே
கட்டப்படுவதாகும் ஆண்நிலப்பரப்பில் படுத்து இருக்கும்போது கால்பாதங்கள் கோபுரமாகவும்
ஆணின் குறி கொடித்தம்பமாகவும் நெஞசு/இருதயம் பலி பீடமாதகவும் மூளை மூலஸ்தானமாகவுமே
அமைக்கப்படும் இவை பொதுவாக தென் இந்திய கோவில் அமைப்புககளில் காணலாம் நாம் இந்த உடல்
புள்ளிகளை (அமைப்புக்களை) யோகாசனத்தில் இருக்கும்போது இந்த இடங்களை மையமாக கொண்டு
மனித உடலில் உள்ள சக்கரங்கள்( இயங்கும் புள்ளிகள் எனப்ப குறிப்பிடுகின்றனர் இவை ஒன்வொன்றிக்கும்
ஒருவொரு வரைபடமும் பெயரும் மந்திரங்களும் யந்திர இணைப்புக்களும் உண்டு)
இதே போன்று பெண் ஒருத்தி குந்தி இருப்தும்
அதில் கால்பாதம் உயரம் முழங்கால் மடிந்து இருக்கும் போது அதன் உயரம் அளவத தலை யின்
உயரங்களுக்கு ஏற்றவாறு கோயிலை அமைப்பதாகும் அங்கு மூலஸ்தானம் எனப்படுவது பெண்ணின்
கருப்பையாகும் இப்படியான கோயில் அமைப்புக்களை வட இந்தியாவின் பல பகுதிகளில் காணலாம்.
ஜெயபாலன் கூறிய இந்து ஆலயங்களில் மனித
உருவில் உள்ள கடவுள்கள் ஏன் விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபடும் சிற்பங்கள் வரையப்படுகின்றது
என்ற கூற்று போன்றதே கோவில்களில் உச்சாடனப்படுத்தப்படும் மந்திரங்களும் அங்கே மூலஸ்தானங்களில்
வைக்கப்படம் திரு உருவங்களுமாகும். இவற்றிக்கும் இந்து சமயம் மந்திர தந்திர யந்திர
என மூன்று வகையான வாழ்வியல் நடைமுறைகளையும் (இவை சாம பேத தான தண்டத்துடன ஒப்பிட்டும்
கூற முடியும்) முலாவது ஓதுதல் மூலம் கடவுள் பற்றி நினைத்தல் இரண்டாவது நடைமுறையில்(உதவிப்பணிகள்
செய்தல்)கடவுள் பற்றிய அறிவுடன் இருத்தல் மற்றயது யந்திரம் எனப்படும் திரு உருவங்களை
பாரத்தல் மூலம் கடவுளை நினைத்தல் எனப்படுவது( இவற்றைவிட மேலும் பல பல்வேறுபட்ட விளக்கங்களை
இவைகள் கொண்டுள்ன)
இந்துக்கோவில்கள் என்றுமே மனிதனின்
அடிப்படை நிலைகளிலிருந்தே அவை கட்டப்பட்டும் அந்தக்காலத்தில் இருந்த நிலைகளுக்கு ஏற்ப்பவுமே
கட்டப்படுகின்றது இன்று கட்டப்படும் எந்த புதிய கோவில்களிலும் காசூத்திர சிற்பங்களை
வைத்து கோயில்கள் கட்டியதாக என்னால் அவதானிக்க முடியவில்லை.
மாற்றாக முட்டையில்லாத கேக்குகளை கோவில்களில்
படைப்புக்காக கொண்டிருப்பதை காணலாம்.
கோவில் சிற்பங்கள் காசூத்திரத்தில்
செய்யக் கூடியவைகள் சேய்யக் கூடாதவைகள் என பலவற்றையும் கூறுபவைகளாகும் அந்த சிற்பங்களில்
தாய் தனது ஆணுடன் இருப்பதும் - தாய் தனது குழந்தைகளை பாராமரிப்பதும் பெண் இசைக்கருவிகளை
இசைப்பதையும் இவற்றை ஆண் பெண் குழந்தைகள் எல்லோரும் ரசிப்பதையும் கூட சித்தரிக்கப்பட்டிருக்கினறன
இந்த சிற்ப்பங்கள் பல ஆதியானவை என்பதையும் அக்காலத்தில் சமூகம் என்பது என்ன? அறிவு
என்பது என்ற ஆய்வுகள் தேவையாக உள்ளது0.
இப்படியான சித்தரிப்புக்ள் இன்றய மனிதவாழ்வின்
அறிவியல்வளர்ச்சியில் தேவையற்தாகிவிட்டபோதும் இவை மீளவும் பயிற்ச்சி செய்யும் எத்தனிப்புக்களை
அவதானிக்கலாம் இன்று யோகாசனம் பற்றி மில்லியன் கணக்காக புத்தகங்களும் காசூத்திரங்கள்
பற்றி பல ஆயிரக்கணக்கான புத்தகங்களும் வெளிவற்துள்ளன அத்தனையும் இந்தி மண்ணை தாண்டி
உலகின் இதர இடங்களிலேயே வெயியிடப்படுகின்றன இப்படி வெளியிடப்படுவதன் அர்தம் இந்த மனித
அடிப்படை மனித மன நல தேவைகள் மனித குலம் உள்ளவரையிலும் தேவையானது என்பதலாகும்.
காமசூத்திரம் ஒரு பெண்ணுடன் உடலுறவு
கொள்வதால் ஏற்ப்படும் இன்பக் களிப்பு என்பது ஆண் பெண் இருதரப்புக்கும் ஏற்ப்பட வேண்டும்
இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்படல் வேண்டும் என்பதன் அடிப்டையிலும் இதனால் ஏறப்படும்
பாதிப்பு/ அல்து ஒரு உயிரின் உருவாக்கத்திலுள்ள பொறுப்புணர்வு பற்றியும் குறிப்பிடுவத
ஆனால் பொதுவாக கருத்தரித்தலின் பொறுப்புணர்வு பற்றிய அத்தியாயங்களை வியாபார மயப்படுத்திய
காலங்களிலிருந்து அவை நீங்கலாகவே காமசூத்திரம் பரப்பப்பட்டு வந்துள்ளது.
இது இப்படி இருக்க குதிரையடன் மிருகங்களுடன்
உடல்உறவு கொள்ளுதல் என்ற நிலையை மெருகூட்டல் நிகழ்ச்சியை மெருகூட்டி எழுதுவதும் விரிவுபடுத்தி
பேசுவதும் என்பதாகவே பார்க்க வேண்டும் அல்லாவிட்டால் இது என்ன சாத்தியமா? என்ற கேள்வி
உடனேயே எழும்.
இதேகாலத்தில் மனிதர்கள் காம இன்பங்கள்
என மிருகங்களை குறிப்பாக நாய்களை பயிற்ச்சியளித்து தமது இச்சைகளுக்காக வளர்ப்பதும்
அந்த நாய்களுக்கு தேவையான உடுப்பு கையணி காலணிகள் (மனிதரை கீறிகொள்ளாதபடி)தயாரித்தும்
இவை இன்று ஜரோப்பாவின் முன்னணி வியாபாரமாகியுள்ளதையும் இவற்றிக்கு நல்ல கிராக்கி அரபு
நாடுகளில் இருப்பதையும் இணையத்தளத்தின் காணக்கூடியதாக உள்ளது.
மனிதர்களின் மனம்இ காமம்இ சிந்தனைஇ உணர்வுஇ
வாழ்வுஇ ஆண்இ பெண் இவர்களுக்கடையிலான உணர்வுகள் தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டும் கடவுள்
என்ற பின்னால் வந்த பிற்போக்கு தனத்தில் மூழ்கியும் இவையாவற்றினதும் வெளிப்பாடகவே
இந்து சமயம் கோவில் இன்று எம்முன் வெளிப்பட்டு நிற்கிறது.
கடவுள் சாதிகள் சடங்குகள் இவைகளை வெளியேற்றிவிட்டு
கோவிலையும் அமைப்புக்களையும் தத்துவங்களையும் பாரத்தால் அடிப்படையில் இன்பம் ஒன்றுக்காகவே
தான் இவைகள் யாவும் என்பதாகவே இருக்கும்/ கடவுள் என்பது போலி என்பது ஸ்தூலமாக விளங்கும் ஆசை என்பவற்றிக்காகவே என்றும்இ இன்ப ஆசையே எல்லாவற்றினதும்
தோற்றுவாயாக இருப்பதும் ஆசை அடக்குதல் என்ற இந்து தத்துவத்தினை அடிப்படையாக கொண்டும்
உள்ளதே உண்மையுமாகும். இந்துகோயிலில் இது
மூடி மறைக்கப்படாமல் வெளிப்படையாக உள்ளது ஒரு சிறப்பான தாகும்.
முஸ்லீம் அடிப்படைவாதிகளால் முன்வைக்கப்படும்
ஒரு கருத்து இந்துக்களிடம் பல ஆயிரம் கடவுள்கள் உண்டு என்பது அறிவீனம் இந்துக்களின்
இணைப்பில் உள்ள தத்துவங்களஜல் ஒரு கடவுள் ஒன்று என்தேயாகும் கடவுளை பலவழிகளிலும் எங்கும்
எதிலும் எந்த செயலிலும் காணலாம் எனதையே யாகும் கடவுளை கற்பனையால் காண்பதல்ல அவன் என்று
சொல்லும்போதே ஒரு ஆண் ஆக சித்தரிக்கப்படுகிறது
இந்துக்கள் ஆணாகவும் பெண்ணாகவும் பெண்கும்
ஆணை அடக்கும் சக்தியுள்ளவளாகவும் சித்தரிக்கப்படுகிறது
இன்னும ஒருசாரார் பெண்தான் கடவுள் என்றும்
அதுவும் அம்மன் எனப்படும்(எகிப்தியர்களின் கருத்து போன்றது) அதுவும் கறுப்பான பெண்
என்பதாகவும் இந்த பெண்ணின் கீழேதான் மூன்று பெண்கள் அந்த மூன்று பெண்களின் கணவனாக மும்மூரத்திகளையும்
சித்தரிக்கிறார்கள். இங்கே குடும்பம் சுமூகம் எபதன் அடிப்படையிலேயே கடவுளையும் சித்தரிக்கப்படுகின்றது
இதில் நாம் ஆபிரிக்க மூலம் என்பதையும் இது எடுத்தும் காட்டுகின்றது.
No comments:
Post a Comment