Search This Blog

Friday, 16 May 2014

இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என்று அடையாளங்களை தேட ஆரம்பிக்கும்போது நாம் இன்னும் மேலும் பேச வேண்டிய தேவையுள்ளது.

1.     T Sothilingam on November 14, 2010 11:35 am
இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என்று அடையாளங்களை தேட ஆரம்பிக்கும்போது நாம் இன்னும் மேலும் பேச வேண்டிய தேவையுள்ளது.

இலங்கையின் ஆதிவாசிகளான இயக்கர் நாகர் பரம்பரையினர் அதன் பின்னர் இவர்களின் பரம்பரையினரான வேடர்களும் இன்றுள்ள சில குறிப்பிட்ட சாதியினரும் இருந்துள்ளனர் இவர்களின் பின்னர் இந்திய பிராந்தியத்தின் சனத்தொகை பெருக்கத்தின் விளைவாகவும் இந்திய பிராந்தியத்தின் நிலப்பரப்பு புவியியல் மாற்றங்களினாலும் இந்திய பிரதேச மக்கள் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர் தம்மையும் இனம் பெருக்கிக் கொண்டனர் இந்த வளர்ச்சி ஒரு நீண்ட காலப்பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆரம்பத்தில் இந்தியாவில் உருவாகிய பல கோட்பாடகளில் 300 மேற்பட்ட கருத்து தொகுப்புக்கள் எழுந்தது இவைகளில் சில இயற்கையின் பயம் காரணமாகவும் சில இந்த பயங்களில் இருந்து தெளிந்து சிவ வழிமுறைகளையம் கொண்டும் இந்த தொகுப்புக்கள் உருவாகியிருந்தன இவற்றின் பரம்பல்கள் நாளடைவில் இலங்கைக்கும் பரவியது அதே போன்று பல் தேசங்களுக்கும் பரவியிருந்தது இப்படி பரவிய பல் வேறுபட்ட கருத்துத் தொகுப்பின் வளர்சசி நாளடைவில் தனி வளர்ச்சியுடன் மேலும் பலரின் உட்சேர்க்கைகளால் பெரிய தொகுப்புக்களாக வளர்ந்து கொண்டது இந்த உட்சேர்க்கைகளில் பல தனி மனிதர்களின் ஆழமான அறிவிற்க்கு உட்பட்டது என்றோ அல்லது அவை கடவுள் தந்தார் என்று கூறப்படும் நித்திரையால் எழுந்து தமது நினைவில் (பயம் காரணமாகவம்) உருவான நினைவுகளையும் தொகுத்து நாளடைவில் இவைகள் தமது அன்றாட வாழ்வில் தம்முடன் இருந்து வாழ்ந்து மரணமடைந்தவர்களின் நினைவின் பெயராலும் அதற்க்கு ஒரு தியறி என்று பெயரிட்டும் தமது இனத்தவர்கள்என்று இன்று கூறப்படும் தம்முமன் இணைந்து வாழ்ந்தவர்களுக்கு கதைகளாக கூறப்பட்டும் கடமைகள் என்று சொல்லி நாளாந்த நடத்தைகளடன் இணைத்தும் பரம்பரையினருக்கு கடத்தப்பட்டு வந்துள்ளன இவைகளின் எச்ச சொச்சங்களே நாளடைவில் இந்திய பிராந்தியத்தில் 300 மேற்ப்பட்ட சமயங்களாக இருந்துள்ளது.

இதில் ஒரு கிளை சீனா நோக்கியும் இன்னொரு கிளை இன்று சொல்லப்படும் அரபு நோக்கியும் தனது பரம்பல் பயணத்தை தொடர்ந்தது (இவைகளையே இன்று கீழைத்தேச நாகரீக பரம்பல்கள் என்றும் இவைகள் நாளடைவில் எழுத்துக்கள இலக்கங்களை உருவாக்கிக்கொண்டும் உள்ளன.

இதில் முக்கியமான ஒரு சமயப்பிரவாக இருந்தது கடவுள் என்றோ அல்லது இறந்தவர்கள் எம்மீது ஆளுமை செலுத்துவதில்லை என்ற கோட்பாடும் உருவாக ஆரம்பித்தது இங்கிருந்து சமயத்தவர்களிடையே வாக்குவாதங்கள் சண்டைகள் உருவாக ஆரம்பித்துக் கொண்டன இப்படியான சண்டைகளில் வெற்றி கொண்டவர்களும் இப்படியான கருத்துருவாக்கங்களினால் தமது இனக் குழுமத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதுமான தந்திரோபாயங்களை கண்டுகொண்டவர்களும் தமக்கு தமக்கொன புதிய புதிய கோட்பாடுகளை உருவாக்கி தமது இனத்தின் அடையாளமாகவும் வளர்த்தெடுத்தனர்.
இப்படி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு சமயமாக சைவத்தை பார்க்கலாம் சைவம் சைபர் என்ற கருத்து உருவாக்கத்துடன் ஒன்றுமில்லை கடவுளுமில்லை இறந்தவர்கள் எம்மீது ஆளுமை செலுத்துவதில்லை அவர்கள் எம்மிடம் திரும்பி வரப்போவதுமில்லை இறந்த உடல்களை தம்முன்னே எரித்துவிடலாம் அல்லது மண்ணில் புதைத்து விடலாம் என்றும் நம்பினர் ( இந்தக்காலத்திற்க்கு சற்று முன்னர் இறந்த உடல்களை பாதுகாப்பாக வைத்திருந்தும் அந்த உடல்களுக்கு பக்கத்தே தினமும் உணவுகளையும் வைத்தும் இவற்றின் பயனாக ஏதுவும் நடைபெறுவதில்லை என்ற அனுபத்தின் பின்னர்) இறந்தவர்கள் கடவுள் என்ற கோட்பாட்டில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என் கோட்பாட்டிலிருந்தும் மாற்றங்கள் சமூகத்தில் எழுந்துவிட்டது.

சைபர் என்பது தொடங்கிய இடத்திலே முடியும் என்பதாகும் இதன் கருத்திலிருந்தே சைபர் இந்தியாவில் உருவானது என்றும் இது பின்னாளில் கணிதத்தில் இன்ற நவீன தொழில்நுட்பத்தின் முலமாகவும் இருப்பதையும் காணலாம்.
இது மனிதன் பிறப்புக்கு முன்பு என்று ஒன்றுமில்லை அதேபோல இறப்பின் பின் ஒன்றுமில்லை என்ற அர்த்தத்திலே உருவானதாகும் என்கிறார் அப்துல் கலாம் பிறப்புக்கு முன்பு என்று ஒன்றுமில்லை அதேபோல இறப்பின் பின் ஒன்றுமில்லை என்ற கருத்தின் அடுத்த வடிவமே பெளத்தம் ஆகும் பெளத்தம் இன்று இப்போது வாழ்கின்ற வாழ்வே பிரதாதனம் என்பதையும் பிறப்புக்கு மன்பும் பின்னும் ஒன்றுமில்லை கடவுள் என்று யாரும் பயப்பிட அங்கு இங்கு எங்கும் ஒன்றுமில்லை இதுவே நிஜம் என்ற யதார்த்தத்தை முன்வைத்தது.

இப்போது சமூகமும் தனக்குரிய அனுபவங்களில் இருந்து பெளத்தம் உதித்தது எனலாம். பெளத்தம் தனக்குரிய பாணியிலான வளர்ச்சியில் இருக்கும் அதேவேளை மற்றய கிளை பரப்புக்களை கொண்ட கோட்பாடுகளும் தொடரச்சியாக தமது வளர்ச்சியில் கேவலங்களையம் மூடநம்பிக்கைகளையும் உள்வாங்கி வியாபித்துக்கொண்டன.
இந்த வளர்ச்சியில் உருவான சமயங்களே இன்றும் மிக நவீன முறையில் அயோக்கியத்தனங்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இதில் இந்துகள் தம்முடன் வாழ்ந்தவர்களே தமது கடவுள் என்றும் எல்லாம் கடவுளின் வடிவம் என்றும் கடவுளை எங்கும் காணலாம் என்றும் கோட்பாடுகளிலும் கிறீஸ்தவம் இஸ்லாம் கடவுள் என்றும் எங்கேயோ இருக்கிறார் என்றும் அவரை நினைந்து வாழ்வதற்காகவும் கோட்பாடுகளையும் பெளத்தம் கடவுள் இல்லை என்ற நம்பிக்கை நிலைநிறுத்தியும் சமூகத்தில மக்கள் மத்தியில் பல இன்னோரன்ன சீரழிவுகளை செய்து கொண்டிருக்கின்றன.

மனித குல வளர்ச்சி பயத்தினாலும் ஒரு சிலரின் சில இக் குழுமத்தின் தேவைகளுக்காகவும் மதம் சமயம் கடவுள் கொள்கைகளை வளர்த்து விட்டுள்ளனர் இதுவும் இன்று மனிதகுலம் சந்திக்கும் பாரிய ஆபத்தாகவும் மாறிவிட்டுள்ளது இதற்க்கு நல்ல உதாரணமாக இருப்பது பெளத்த சமயமாகும் கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை தெட்டத்தெளிவாக புத்தர் கூறிய போதும் புத்தருக்கு பூசைகள் செய்யப்படகின்றனவே


அவரின் பெயரால் ஆக்கிரமிப்புக்களும் நடைபெறுகின்றன இந்த சமயத்தில் எல்லோரும் கடவுளின் படைப்புக்ள என்று கூறிவிட்டு வெட்கம் கெட்ட சாதிய வேறுபாடுகளை அங்கீகரித்து வளர்ந்து நிற்கிறது இஸ்லாம் கல்லெறிந்த கொல்லுவதும் கைமுறித்தவனின் கையை எடுத்தல் கொலைக்க கொலை என்ற பாதகத்திலும் இன்று எம்முன் நிற்கின்றது.

No comments:

Post a Comment