Search This Blog

Friday, 16 May 2014

இஸ்லாமியர்கள் மீண்டும் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடன் வருவது அந்த இஸ்லாமிய மக்களினால் செய்யப்பட வேண்டிய முடிவு.

101. T Sothilingam |
நண்பர் லோகன்
இலங்கை அரசு வன்னி மாணவர்களில் அக்கறையில்லை என்றே நான் கருதுகிறேன் இந்த மாணவர்கள் புலிகளின் கொலைக்களத்திலிருந்து வெளியேறி இத்தனை மாதங்களாக என்ன சுதந்திரமாகவா இருக்கிறார்கள் அல்லது நீங்கள்; இந்த மக்கள் சுதந்திரமாக இருப்பதாகவா கூறிக் கொண்டு கருத்து எழுதுகிறீங்கள். இலங்கை அரசுக்கு இந்த 3 மாதகாலம் போதும் நிலக் கண்ணிவெடிகளை அகற்ற ஆனால் இன்னும் அதை செய்து முடிக்கவில்லை என்பது ஒன்றே போதும்; அரசு என்ன செய்கின்றது என்பதை ஊகித்துக்கொள்ள: 30 வருடங்களாக இருந்த இயக்கத்தை திட்டமிட்டு ஒரு நாளைக்கு பல மில்லியன்கள் செலவழித்து பேராராடிய அரசு எத்தனை இராணுவத்தை இந்த நடவடிக்கைக்கு பாவித்தது எனபதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
அரசு இந்த இந்தளவு இராணுவத்தை 2 கிழமை உபயோகித்தாலே போதும் இந்த நிலக் கண்ணி வெடிகளை முழு வட மாகாணத்திலிருந்தும் அகற்றிவிடலாம். ஆனால் அப்படி செய்யவில்லை ஏன்? இங்கே தான் அரசின் பின்புல திட்டமிடலும் செயலாக்கமும் எதை நோக்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.?
வன்னி மாணவர்களுக்கு உதவி செய்வதாயின் வன்னி மக்களுக்கு உதவி செய்வதாயின் இந்த மூன்றாம் மாதம் வன்னி அகதி முகாம்களை மூடியிருக்கலாம்; அரசு போர் செய்த அதே வேகத்தில் இந்த மக்களை மீள குடியமர்த்த இயங்கவில்லை என்பதே எமது அபிப்பிராயம். இங்கே தான் சந்தேகங்கள் வலுக்கிறது. இதைத்தான் நாம் புலிகள் வன்னியில் அடைத்து வைத்திருந்த மக்களை அரசு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது என்று சொல்ல வருகிறோம் சிலவேளை புலிகள் பரந்த காட்டுப் பகுதிக்குள் இந்த சிறைச்சாலையையும் அரசு குறுகிய நிலப்பரப்புக்குள் சிறைச்சாலையையும் வைத்திருக்கிறதா? ஏன்று தமிழ்பேசும் மக்கள் குழம்பிக் கொண்டிருப்பதை உணரமுடியவில்லையா?
இது ஒரு செய்தியாகத்தானே தேசம் நெற்றில் வெளிவந்துள்ளது. கட்டுரையாக அல்ல.
அது இருக்க…
முஸ்லீம்கள் தனியான இனம் என்று நாம் அங்கீகரிக்கிறோம் அதற்கு முதலாவது காரணம் புலிகள்; அவர்கள் ஒரு தனியான இனம் என்ற காரணத்தால் அவர்கள் மீது பாவித்த பலாத்காரமும் அவர்கள் தனியான இனமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இனிமேல் அவர்கள் தாம் ஒரு தனி இனமா? மத அடிப்படையிலான இனமா அல்லது தமிழ் மொழியை பேசும் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடன் தம்மை இனமாக வெளிப்படுத்துவார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். நாம் எல்லோரும் தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாட்டுடன் இலங்கையில் தமிழ்பேசும் சிங்கள மொழிபேசும் மக்கள் என்ற கோட்பாட்டில் வாழமுடியும்.; பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று ஆரம்பகால போராட்ட கருத்துக்களுக்கு சிலவேளை நாம் மீண்டும் வரலாம் பொறுத்திருக்க வேண்டியுள்ளது.
அரசு அக்கறை காட்டினால் தமிழர் இல்லை என்று எழுதுங்கோ (செய்தி இப்படியாக வெளிவந்ததை குறிப்பிட்டு இருந்தீர்கள்) தமிழர்கள் இன்றும் அரசை நம்புகிறார்களா இல்லையா என்பதை கடந்த வவுனியா யாழ் தேர்தல்கள் எடுத்துக் காட்டியுள்ளதை அவதானிக்கவும்.
அதுமட்டுமல்ல அரசுடன் கூட்டுச்சேர்வதைக்கூட அவர்கள் விரும்பவில்லை என்பதை அவதானிக்கவும். நல்ல உதாரணம் ஈபிடிபி யினர்க்கு யாழ்ப்பாணத்தில் நல்ல பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்படாமை. காரணம் அரசுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் நின்றதே என்று நான் கருதுகிறேன். ஈபிடிபி தனியாக தேர்தலில் தமது கட்சியின் பெயரில் தேர்தலை சந்தித்து இருந்தால் நல்ல பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருப்பார்கள் என ஒரு ஈபிடிபி உறுப்பினரே யாழ்பாணத்திலிருந்து தனது கருத்தை தேசம்நெற்றுக்கு கூறியிருந்தார்.
அரசு ஈபிடிபியினர் மற்றும் கட்சிகள் மீது பிரயோகிக்கும் அழுத்தங்களையும் எம்மால் மிகவும் துல்லியதாக அவதானிகக் கூடியதாக உள்ளதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தமிழர்கள் இன்னும் அரசில் நம்பிக்கையில்லாது இருக்கும் சூழ்நிலையும் அரசு தமிழர்களை தெரிவு செய்யாது விட்டதும் பாரதூரமானதாவே நான் கருதுகிறேன் இப்படியான விடயங்களும் தமிழர்கள் அரசக்கு எதிராக போராட காரணமாக இருந்ததை ஏற்றுக்கொண்ட அரசு இதை எப்படி கவனம் எடுக்காமல் விட்டது.
ஏன் நீங்கள் எழுதிய விடயங்களை சற்று கவனம் எடுக்கவும் நாம் தேசம்நெற் இலங்கை தமிழர்கள் தமிழ் பேசும் மக்கள் சம்பந்தமான எந்த விடயங்களுக்கும் களம் அமைக்க தயாராகவே இருக்கிறோம். இதுபற்றிய எந்த விவாதங்களுக்கும் தேசம்நெற் தயாராகவே உள்ளது.
இஸ்லாமியர் மதத்தால் மட்டுமே மொழியால் தமிழின் ஆதிக்கத்தையும் இலக்கணம் இலக்கியத்தையும் நிலை நிறுத்திக்கொண்டிருப்பவர்கள். // இந்தவிடயம் யாரும் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லாதது. இஸ்லாமியத் தமிழர்கள் தமிழர்க்கு செய்யும் தொண்டுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இஸ்லாமியர்கள் தமிழின் நாதமாக தமிழிலிருந்து பிரிக்கமுடியாத தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.; அது அவர்களது மொழியும் அவர்களது வாழ்க்கையும் என்ற யதார்த்தத்தை மறந்து அவர்கள் தமிழுக்கு சேவை செய்கிறார்கள் என்று எமது உடைமையாக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்’டும்
இதன் காரணமாகவே இஸ்லாமியர்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தை போராட்ட ஆரம்பகாலங்களில் குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் தமிழ் இயக்கங்களில் பாரிய பங்காளிகளாக இருந்ததை யாரால் மறைக்க முடியும்.
இஸ்லாமியர்கள் மீண்டும் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடன் வருவது அந்த இஸ்லாமிய மக்களினால் செய்யப்பட வேண்டிய முடிவு. அதற்கு நாம் யாரும் எதுவும் செய்ய முடியாது. இப்படியாக இஸ்லாமியர்கள் தம்மை முஸ்லீம்கள் என்ற அடையாளத்திலிருந்து தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்திற்கு வர - தம்மை முஸ்லீம்கள் என்ற அடையாளத்தை (தமிழர்கள் சார்பில் புலிகளால் ஏற்ப்படுத்தப்பட்ட நம்பிக்கையின்மையே) உருவாக்க காரணியாக இருந்த காரணங்களின் அழிவே உதவி செய்யும். இதைவிட முஸ்லீம்கள் என்ற இனம் ஒருபலம் பொருந்திய இனமாக இலங்கைத் தீவில் இரண்டாம்தர இனமாக வளர்ந்த வரும் சந்தர்ப்பங்களும் உள்ளதையும் மறந்துவிடலாகாது.
நண்பர் லோகன் எழுதிய கருத்துக்கள் என்னையும் கருத்துக்கள் எழுத தூண்டியது நன்றிகள்

No comments:

Post a Comment