Thursday, 31 January 2019

கடிதம் 27 - செல்வத்தின் தலைமைக்கு ஆபத்து - உல்டா.

கடிதம் 27 - செல்வத்தின் தலைமைக்கு ஆபத்து - உல்டா.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 31/01/2019, (கடிதம் 27, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
======================
செல்வத்தின் தலைமை சாதித்தது என்ன?
===================
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்த தொலைபேசி உரையாடலையும் கேட்டிருந்தேன் இதே உரையாடல்கள் போன்று பல புலம்பெயர் ரெலோ தோழர்களிடம் தினம் தினம் சந்திக்கும் போது கேட்கும் பேச்சுக்கள் "செல்வம் என்னவாம் என்ன செய்கிறார் உவங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாது தங்கட குடும்பங்களுக்கு உழைக்கிறாங்கள் மக்கள் பற்றி அக்கறையில்லை" என்பதே !!!!
இரு நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து ரெலோ இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய முன்னின்ற செட்டியும், பிரான்சு நித்தியண்ணரும் தொலைபேசியில் ரெலோ பற்றிய அதிருப்தியில் பேசியிருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டு நின்றவர் இதை செல்வத்துக்கு சொல்ல,
செல்வம் பதறிப் போனாராம் தனக்கு எதிரா ரெலோவுக்குள் சதி என லண்டன் கனடா என தொல்லைபேசி அழைப்புக்களாம்.
இதில் முதலாவது விடயம் எனக்கு ஞாபகம் வந்தது என்னவென்றால் 1984 ம் ஆண்டு சிறீசபாவை கடத்தி கொலைசெய்ய அல்லது அடக்கி வைக்க என சுதன்-ரமேசு செல்வம் உட்பட பிரபாகரனிடம் துப்பாக்கியும் நஞ்சுப் போத்திலும் வாங்கியதை விடவா பெரிய விடயம் நடந்துள்ளது, இதை பிரபாகரன் சிறியை தன்னிடம் தரும் கேட்டது எமக்கு இன்றும் நேற்றுப்போல் உள்ளது. அதில் செல்வமும் உடந்தையே.
ஒவ்வொரு நாளும் செல்வத்தை திட்டும் பலர்.
கிழக்கில் எத்தனை அட்டூழியங்ஙள் நடக்கின்றது இவற்றுக்கு ரெலோ போராட்ட இயக்கமாக என்ன நடவடிக்கை எடுக்கின்றது ? ஏன் இவை பற்றி பேசுவதில்லை இதன் பின்னணியில் ரெலோவும் லஞ்சம் வாங்கிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறதா ? அல்லது துணிவில்லாத ரெலோவா?
செல்வம் தனது சுய நல சிந்தனையை வீட்டு "மக்கள் நல" சிந்தனைக்கு வர வேண்டும் துணிந்து முடிவு எடுக்க முடியாது பயப்பிட்டால் முணிவு எடுக்க கூடியவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
இக்கருத்தை எழுதியவுடன் ஒ, ஓஓ, இவரும் அந்த குழுதான் என்ற சிறுபிள்ளைகள் அழுவது போல் அழ வேண்டாம், நிதானமாக கடந்ததிலிருந்து இனி வரும் காலம் பற்றி யோசியுங்கள்.
நீங்கள் இயக்கத்துக்கு வந்தது பாராளுமன்றத்துக்கு போக அல்ல மக்களை இன அழிவிலிருந்து பாது காக்கவே உங்கள் முன்னால் தமிழ் பெண்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள் இதற்கான சட்ட நடவடிக்கைக்கு ரெலோ முன்னிற்க வேண்டாமா ?
புலிகளின் பின்னர் 10 வருடங்கள் செல்வம் தலைமை வகித்து சாதித்தது என்ன வென்றால் அடுத்த தேர்தலில் " ரனில் ரெலோவுக்கு ஒரு பா உ ஆசனம் என்றாலும் தருவார் " அதை செல்வம் எடுப்பதே, சிலவேளை ஒரு அமைச்சு பதவி எடுக்கலாம் என்ற யோசனையை வளர்த்தது மட்டுமே.
ஏன் செல்வம் தலைமை பதிவியை ஒரு கிழக்கு மாகாணத்தவனுக்கு கொடுத்து மத்திய கமிட்டியில் இருந்து ஆலோசனை வழங்குபவராக இருக்க கூடாது.
செல்வம் என்ன சாகும் வரை ரெலோ தலைவரா ?
ரெலோ மிதவாத கட்சிகள் போன்று 97 வயது வந்து அறளை பேந்தாலும் தலைவர் என்பது மாகாதவறு, புதிய சந்ததியிடம், இதர உறுப்பினர்களையும் அவர்களது சிந்தனையிலுப் இயங்க இடம் கொடுக்க வேண்டும். இதை நான் ஐேர்மன் சந்திப்பில் கூறிய போது ஏற்றுக்கொண்ட செல்வம் இதை இப்போ செய்ய வேண்டும். (இனிமேல் செல்வம் என்னை சந்திப்பீர்களா அந்த ஆழுமை துணிவு இருக்கிறதா என பார்க்கின்றேன்)
ரெலோ உங்கள் வீட்டு சொத்து என்ற நினைப்பை மாற்றுங்கள் ஐனாவை, கென்றியை தலைவராக்குங்கள் அவர்கள் கிழக்கு மாகாண நிலைமைகளுக்கு கிழக்கு மக்களுடன் இணைந்து இயங்க ஒத்துழையுங்கள், இதுவே இன்றய தேவையாகும்.
அல்லது ரெலோ பாராளுமன்ற அரசியலுக்கு சமாந்தரமாக போராட்ட இயக்கத்தை வலுப்படுத்துங்கள்.

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

No comments:

Post a Comment