Search This Blog

Friday, 16 May 2014

துரோகிப்பட்டம் வழங்கிய ஐபிசி வானொலியின் துரோகத்தனங்கள் : ரி சோதிலிங்கம்

துரோகிப்பட்டம் வழங்கிய ஐபிசி வானொலியின் துரோகத்தனங்கள் : ரி சோதிலிங்கம்

Category: புலம்பெயர் வாழ்வியல், சோதிலிங்கம் ரி 

ஜபிசி வானொலி ஆரம்பித்த காலங்களில் இது ஒரு தமிழர் வானொலியாக வளரும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. இது ஆரம்பித்த சில காலங்களுக்குள்ளேயே புலிகளின் வக்காளத்து வானொலியாக மாறத் தொடங்கியது. இப்படி புலிகளுக்கு வக்காளத்து வேலை ஒன்றினாலேயே தமது பிழைப்பை நடத்தலாம் என்பதை பல ஊடகங்கள் அறிந்திருந்த போதும் அன்றைய ஜபிசியும் ரிரிஎன்னும் தாமே தலைவரின் புலிகளின் ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்றும் அதைவிட தமது சண்டித்தனங்களுக்கும் வசைபாடல்களுக்கும் குறைவில்லாமல் தாமே புலிகளாயினர். (வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.)
புலிகள் இயக்கம் எப்படி கொலைகள் மூலம் மற்றைய அமைப்புக்களையும், ஜனநாயக நடைமுறைகளையும் மறுத்து தாமே தம்மை தமிழர்களின் பிரதிநிதியாக்கி கொலைப் பயமுறுத்தல்கள் மூலம் முழு தமிழர்களையும் தமது கட்டுப்பாட்டில் இருத்தி தமது பயங்கரவாதங்களை செய்தனரோ அதே போல, ஜபிசியும் தமிழரின் சுதந்திர ஊடக செயற்பாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதற்காக புலிகளின் பயங்கரவாத்தை லண்டன் உட்பட வெளிநாடுகளிலும் பயன்படுத்தினர். எப்படி புலிகள் நாட்டில் மாற்று இயக்கத்தவரை தமக்கு பிடிக்காதவர்களை துரோகிப்பட்டம் சூட்டினரோ அதேபோல, இங்கு ஜபிசி தமது வியாபார விரோதிகளையும் தமது புலி எஜமானர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்ட தாமும் தாளம் போட்டனர். இவர்களின் துரோகிப்பட்டத்தில் சங்கரி, டக்ளஸ், கருணா, பிள்ளையான், புளொட் ,ரெலோ, ஈபிஆர்எல்எப் மிகமுக்கியமானவர்கள். இவர்கள் பற்றிய செய்திகள் துரும்புகள் கிடைத்தபோதேல்லாம் இவர்களை துரோகிகளாக்கி தமது தொலைபேசியில் வரும் வாடிக்கையாளர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். தமது செய்திகளிலும் செய்தித் தயாரிப்புக்களிலும் திட்டமிட்டு புலிகளுடன் கருத்து முரண்பட்டவர்களை துரோகிகளாக்கி தமிழினத்தை இரண்டாக ,மூன்றாக உடைத்த வரலாறு இந்த ஜபிசியையும் சாரும். ஜபிசி யில் இந்த துரோகிப்பட்டம் வழங்கலை மிக உன்னதமாக நின்று செய்தவர்களினது வாயில் வெளிவந்த பேச்சுக்கள் இன்றும் பல தமிழர்கள் கைகளில் பதிவு செய்யப்பட்டு இருப்பது முக்கியமானது. இப்படியான பதிவு செய்யப்பட்ட பல பதிவுகள் இவர்களிடம் நியாயம் கேட்கும்காலம் வரையில் பொறுத்திருக்கும்.

இதைவிட தொலைபேசியில் வரும் போராட்டம் பற்றிய அறிவே இல்லாத இளைஞர் கூட்டத்தை பயன்படுத்தி தமது பிரச்சாரத்தையும் புலிகளுக்கு சளைத்தவர்கள் தாம் இல்லை என்று ‘board’ போட்டு துரோகிப்பட்டம் வழங்கியவர்களாகும்.

இவர்களால் வழங்கப்பட்ட இந்த துரோகப் பட்டமும் இவர்களால் செய்யப்பட்ட காட்டிக் கொடுப்பும் இந்த ஜபிசி ரேடியோ பெயர் இருக்கும் வரை இவர்களிடம் நியாயம் கேட்டபடியேதான் இருக்கும். அதிலும் இந்த தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதிலும் பின்னின்றுவிடாது.

கடந்த காலங்களில் பாராளுமன்ற முன்றலில் நடந்த போராட்டங்களின் போது செய்த உசுப்பேத்தும் நடவடிக்கைகளின் போது ‘இந்த பாராளுமன்ற சதுக்கத்திற்கு வந்து போராட்டத்தில் பங்காற்றினால் துரோகிகள் மன்னிக்கப்படுவர்’ என்ற ஜெகனின் ‘புரட்சிகர அழைப்பு’ இன்றும் எமது காதுகளில் ஒலிக்கிறது. இந்த அழைப்பு ‘இந்திய உளவாளிகளே, துரோகிகளே சரணடையுங்கள் அல்லது நீங்கள் சுட்டுக்கொல்லப்படுவர்’ என்ற புலிகளின் கூக்குரலுக்கு ஒப்பானவையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. பாராளுமன்றப் போராட்டத்திற்கு ஏமாற்றி அழைக்கப்பட்ட மக்கள்தொகை எத்தனை ஆயிரம். இவர்களுக்கு சொல்லப்பட்ட பொய்கள் எத்தனை. 

பேய்க்காட்டல்கள் எத்தனை. இவையாவும் புலிகள் முள்ளிவாய்க்காலில் தாம் இறக்க முன்பு தமிழர்களுக்கு செய்த துரோகங்களுக்கு ஒப்பானவைகளே. இந்த துரோகங்களுக்கு எப்படி புலிகளும் புலிகள் இயக்கமும் புலிக்கொடியும் தப்பி விடமுடியாதோ அதேபோல இந்த ஜபிசியும் தனது பங்குக்கு செய்த துரோகங்களிலிருந்து தப்பிவிடமுடியாது.  தலைவர்கள் அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீசபாரத்தினம், நீலன் திருச்செல்வம் போன்றோரது கொலைகளுக்கு இறுதிவரை நியாயம் கற்பித்தது இந்த ஜபிசி நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர்களாக புலிகளின் வன்னிப்பிரதிநிதி அமர்த்தப்பட்டபின்பு இந்த ஜபிசி நிறுவனத்தின் செயற்பாடுகள் மேலும் பல மடங்கு மாற்று இயக்கத்தவர்கள் மீது பழிபோடுதல், குற்றம் சுமத்துதல், போராட்டத்திற்கு வராதவர்களை வசைபாடுதல் போன்ற ஊடக தர்மத்திற்கு முரணான செயல்களில் இயங்கி வந்தமை பல தடவைகள் பலரால் வானொலி கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டும் பதிவுகள் கையளிக்கப்பட்டும் இருந்ததே.

எப்படி புலிகளும் புலிகளின் கையாட்களும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு மொத்தப்பணத்தை தமது பணமாக கையாடினரோ அதே போல இந்த ஜபிசி நிறுவனமும் தமிழ் தேசிய வானொலி என்ற பெயரில் வர்த்தக நிறுவனங்களிடம் நிதி வசூலித்தது. இந்த நிறுவனமும் புலிகள் நிறுவனம்போன்றே இன்றுவரை தமிழீழ மக்கள் போராட்டம் என்ற சொல்லின் உதவியுடன் புலம்பெயர் மக்களிடம் பல மில்லியன் தொகைகளை கையாடிவிட்டு இன்று வரை இதற்கும் தாம் எந்த பொறுப்பும் அற்றவர்கள் போலவே நடக்கின்றனர்.

இவர்கள் போரட்டம் என்பது என்ன? இது எப்படியான சர்வதேச நடத்தைகளுடன் ஈடுபடுகின்றது? இந்தியாவின் செயற்ப்பாடுகள் என்ன? என்பதை என்றுமே அறியாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பலராலும் எதிர்வு கூறப்பட்டது போல் புலிகள் இயக்கம் தனது அழிவின்போது மிகச் சில காலங்களில் அழிந்து போகும் தன்மை கொண்டது என்பதையும் அறிந்திலர்.


இவர்களும் புலிகளின் ஆதரவாளர்கள் போலவே புலிகளின் இழப்பில் திண்டாடிவிட்டு இன்று ஒன்றும் தெரியாததவர்கள் போல் மீண்டும் புதியவர்கள் போல் எழுந்து நிற்கின்றனர். முள்ளிவாய்க்காலில் எம் தொப்புள்கொடி உறவுகளைப் பணயம் வைத்தது புலிகள் மட்டுமல்ல ஐபிசி, ரிரிஎன், தீபம், ஈழமுரசு, ஒரு பேப்பர் போன்ற ஊடகங்களும்தான். அங்கு மக்கள் ஆயிரம் ஆயிரமாக மரணிக்க தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்று றன்னிங் ஸ்கோர் கொடுத்த இந்த ஊடகங்களின் உப்புச் சப்பற்ற ஈவிரக்கமற்ற இதயமற்றவர்களின் அரசியல் ஆய்வுகளை என்னவென்பது. இவர்கள் தங்கள் பழைய பிளாவில் புதுக் கள்ளு அருந்துவதற்கு தங்களை தயாராக்கிக் கொண்டு இருக்கிறார்கள். (ஐபிசி மற்றும் புலி ஊடக ‘அரசியல் ஆய்வாளர்கள்’ : ஆர் யூட்)
இதன் ஒரு கட்டமே ஜபிசி ரேடியோ திங்கள் 17ம்திகதி முதல் காலையில் 3 மணி நேர ஒலிபரப்பு ஆரம்பமாக உள்ளது என்ற அறிவிப்பாகும். இந்த 3 மணி நேர காலை ஒலிபரப்பு பற்றிய அறிவிப்பை ஜபிசி கடந்த ஒரு வார காலமாக செய்துவருகிறது.

தற்போது இந்த வானொலி அடிக்கடி தாம் ‘போரை வெறுப்பவர்கள் பாடல்களை’ பாடவிட ஆரம்பித்துள்ளனர். அதேவேளை எடுத்தகாரியம் யாவினும் வெற்றி என்ற வாக்கியத்தையும் இடைக்கிடை விடுகின்றனர்.
ஆனால் நேற்று 14ம்திகதி மாலை புலிஆதரவாளர் கோமதி என அழைத்தவர் ‘அண்ணை நீங்கள் இப்ப தலைவர்  பாடல்கள் தேசிய எழுச்சிப் பாடல்கள் போடுவதில்லை காயங்களை அவ்வளவு கெதியாக மறந்துவிட்டீர்கள்’ என்ற போது அறிவிப்பாளர் இதுதான் மக்கள் விருப்பம் அந்த மக்களின் விருப்பத்தையே நாம் வழங்க வேண்டியிருக்கின்றது  என்றார். இந்த மக்கள் விருப்பம் என்று கூறிய இந்த ஜபிசி அன்று மக்கள் தம்மை வெளியே விட அனுமதிக்கும்படி கேட்டபோது தலைவரை விட்டுவிட்டுவரும் துரோகிகள் என தூற்றிய ஐபிசி வானொலி இன்று மட்டும் என்ன மக்கள் விருப்பம் என்று சொல்லுகிறார்கள்.

இப்போது ஜபிசி தேசிய எழுச்சிப்பாடல்கள் தேசியப்பாடகரின் வரிகள் ஆணிவேர்கள் எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு இந்திய சினிமா குப்பைகளை கிண்ட ஆரம்பித்துவிட்டனர் என்பது வெள்ளிடைமலை.
இன்று 15ம்திகதி மாலை இன்னுமொரு நேயர் இந்த புதிய ஒலிபரப்பினை வரவேற்று கருத்து சொல்ல ஜபிசியினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வந்து நீங்கள் இப்போ சினிமாப்பாடல்களை என்று பேசத்தொடங்கியதும் ‘இல்லை நாங்கள் அரசியல் சினிமா போன்ற செய்திகளை மாலை நிகழ்ச்சியில் கொண்டுவருவோம்’ என்று தானே முடித்துவிட்டு தொலைபேசியை வைக்கிறார். இந்த நேயர்கள் எல்லோருமே இந்த ஜபிசி வானொலியின் நிரந்தர நேயர்களும் ஜபிசியின் செய்திகளை நம்பி தமது ஈழ அரசியல் பற்றிய, புலிகள் பற்றிய முடிவுகளை எடுத்திருந்தவர்கள் என்பதும் மிகவும் முக்கியமானது. அதைவிட இந்த ஜபிசி வானொலி புலிகளின் குரலுக்கு அடுத்து இவர்களது நம்பிக்கைக்குரிய வானொலியாகவும் இருந்ததாகும். இன்றும் இந்த வானொலி தமக்கு வன்னி மற்றும் முகாம்களில் உள்ள மக்கள் பற்றிய செய்திகள் தமக்காக அர்ப்பணித்த புலிப் புபோராளிகள் பற்றிய செய்திகள் இல்லாதிரப்பதில் ஏமாற்றம் காணபவர்களாய் இருப்பவர்களாகும்.
கடந்தகாலங்களில் ஜபிசி போன்ற பலர் தாம் கூறிய, பேசிய பேச்சுக்களின் தாக்கத்தை இன்றும் புரியாமலே இருப்பதும் தவறான போராட்டம் பயங்கரவாதத்திற்கு துணை போனதும் தமது சுயலாபத்திற்காக இந்த தமிழர் போரட்டத்தையும் புலிப்போராளிகளின் வீர மரணத்தையும் தமது சுயலாபத்துக்குமாய் பிரயோகித்துவிட்ட இவர்கள்  இன்றும் ஜரோப்பிய புலம் பெயர் நாடுகளில் திரிய ஆரம்பித்துவிட்டனர்.

ஜபிசியில் வந்து போர்க்காலங்களில் தமது பெயர்கள் தொலைபேசி இலக்கங்களை கொடுத்து பேசியவர்களின் இலக்கங்கள் இன்று தொடர்பில்லாமல் இருப்பதும் இவர்களால் வழங்கப்பட்ட பல ஈமெயில்கள் செயலற்று இருப்பதும் (பிரிஎப் அங்கத்துவ விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட ஈமெயில்கள் தொலைபேசி இலக்கங்களில் 40 சதவிகிதமானவைகள் உண்மையல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்)

தலைவன், சூரியத்தேவன், தேசியத்தலைவன் என்றெல்லாம் வர்ணித்தும் ‘தலைவா ஆணையிடு’ ‘இன்றே புலிகள் வென்றுவருவர்’ என்று கர்ச்சித்த ஜபிசி இன்று அந்த தலைவனின் மறைவில் அஞ்சலி  செலுத்தினால் விளம்பரதாரர்களின் நிதிவசூல் வீழ்ந்துவிடும் என்பதற்காக மௌனம் காக்கிறது. வன்னியில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டால் சர்வதேச நாடுகள் தலையிட்டு தமிழீழம் பெற்றுத்தரும் என்று உலறிய இவர்கள் ‘எடுத்த காரியம் யாவிலும் வெற்றி’ என்ற கோசத்துடன் மீண்டும் தமது சுயலாபமீட்டும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த காலம் நடந்தது நடந்து போச்சு இனி என்ன என்று விட்டுச் செல்ல இயலாது.
கடந்தகாலங்களில் போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் பெயரில் நடாத்தப்பட்ட கொலைகள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கெல்லாம் விமர்சனங்களும் பதில்களும் இல்லாமல் மீண்டும் தமிழர்க்காக செயற்ப்படுகிறேன் என்பதை அனுமதிக்க முடியாது.

கடந்தகால தவறுகளை அப்படியே புதைத்துவிட்டு அதன் மேல் மீண்டும் ஒரு சமாதிகட்ட அனுமதி கிடைக்கும் என்ற தப்பாக நினைத்துவிடக் கூடாது.

This entry was posted on Sunday, August 16th, 2009 at 4:35 pm and is filed under புலம்பெயர் வாழ்வியல், சோதிலிங்கம் ரி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
19 Comments so far
1.     பார்த்திபன் on August 16, 2009 6:23 pm
ஜபிசி வானொலியை 5 தனிநபர்கள் சேர்ந்து பணம் போட்டுத் தொடங்கினார்கள். அப்போது அவ்வானொலி அரசியல் சார்பற்ற விதத்திலேயே நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தது. இன்னும் சொல்லப்போனால் மழலை நிகழ்ச்சியில் எழுச்சிப்பாடலை பாட அதன் நிகழ்ச்சி அமைப்பாளர் அனுமதிக்கவில்லையென சில புலிப்பினாமிகள் கூப்பாடு போட்ட காலமது. பின்பு வன்னிப்புலிகளின் ஆசியுடன் பிரித்தானியப் புலிப்பினாமிகள் வானொலியை ஆரம்பித்தவர்களிடமிருந்து பலாத்தகாரமாக அபகரித்தனர். இதே பாணியில் தான் ரிரிஎன் தொலைக்காட்சியும் அபகரிப்பின் மூலம் கைப்பற்றப்பட்டது. வானொலியையும் தொலைக்காட்சியையும் அபகரித்தவர்கள் அவ்வூடகங்களுக்குக் கிடைத்த பணத்தை அபகரித்தது தனிக்கதை. இவர்களின் வண்டவாளங்களையும் ..தொடர்புகளையும் எழுதுவதென்றால் தேசம்நெற் அனைத்துப் பக்கங்களையும் இதற்காக ஒதுக்க வேண்டிவரும்.
2.     T Sothilingam on August 16, 2009 7:01 pm
நன்றி பார்தத்திபன் இந்த ஆரம்ப கர்த்தாக்கள் பற்றி அறிந்திருந்தேன் எனினும் இந்த ஜபிசி ஆரம்ப விடயங்கள் பற்றிய முழு விபரங்களையும் இங்கே பதிவிடுங்கள் முடியுமாயின் ஒரு குறிப்பிட்டகாலத்தில் ஜபிசியினுள் ஏற்ப்பட்ட பணியபட்கள் பிரச்சினைகளும் அவை தீர்க்கப்பட்ட விடயங்கள் பற்றியும் தெரிந்தால் பதிவிடுங்கள்.
3.     kula on August 16, 2009 7:08 pm
இந்த ஜபிசி திரும்ப அந்த ஆரம்கர்த்தாக்களிடம் கையளிக்கப்படுமா? ஆரம்பகாலத்தில் இதை உருவாக்கியவர்கள் இதை மீண்டும் தமது கைகளுக்கு எடுக்கும் உத்தேசம் உண்டா? சட்டரீதியான செயற்ப்பாடுகளில் இறங்க வேண்டுகின்றோம்.
4.     மாயா on August 16, 2009 10:36 pm
ஐபீசீ புதிய நிர்வாகத்தின் கீழ் வரவிருக்கிறது. முக்கியமாக சினிமாவும் பொழுது போக்கு அம்சங்களுமே இடம்பெற உள்ளது. ஏதோ ஒரு வழியில் இலங்கையில் இருந்தும் ஆட்களை இறக்கி கல கலப்பு அம்சங்களை சேர்க்க இருக்கின்றனர். காசு பார்க்க இதை விட வேறு வழி?
தேசியம் எல்லாம் இனி ஐபீசீயில் பூச்சியம்.
5.     nadesh on August 17, 2009 6:23 am
ஜபிசி இப்போது யாரடைய கையில் புலிகளின் கையிலா அல்லது தனியாரின் கைகளிலா அந்த தனியார் யார் இவரின் கைக்க இந்த நிறுவனம் எப்படி வந்தது இவர் தான் புலிகளின் பினாமியா இந்த ஜபிசியை ஜெகநாதனிடமிருந்து பறிப்பதற்கு - சட்டம் இடம் கொடக்கிறதே இவர்களை தண்டிக்க.
6.     போராளி on August 17, 2009 6:28 am
ஜபிசியில் இன்னும் ஜெகன் ராஜன் போன்றோர் வேலை செய்கிறார்களா இவர்கிடம் கேள்வி ஒன்று நீங்கள் பேசிய உசுப்பேத்திய வாக்கியங்கள் ஞாபகம் உண்டா? இல்லையாயின் எம்மால் தர முடியும் நீங்கள் திரும்ப ஒரு முறை கேட்பதற்கு.
இன்று நீங்கள் எங்கே?
7.     senthil on August 17, 2009 6:44 am
தார்சீசியஸ், விக்னராஜா(பிபிசி), குமார்(தீபம்), போன்றவர்கள ஆரம்ப பங்குதாரார்களில் சிலராகும். பின்னர் மேற்சொன்ன மூவரும் இதிலிருந்து சிலகாலத்தில் வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் சர்வேயால் சிவரஞ்சித், அ.ரவி போன்றோர் களமிறக்கப்பட்டு நடாத்தப்பட்டது. சமாதானத்தின் பின்னர் சிவரஞ்சித் கஸ்ரோ குழுவினரால் ஜபிசி பொறுப்பெடுக்கப்பட்ட போது நிதி மோசடி, நிர்வாகம் சீரின்மை என காரணம் கூறப்பட்டு சர்வேயின் குழுவினர் ஓரங்கட்டப்பட்டனர்.
பின்னர் கஸ்ரோவின் தத்துப்பிள்ளையென தன்னைத்தானே கூறிக்கொண்ட ரமணன் என்பவரின் கையில் ஜபிசி. இவரின் ஆலோசகராக புலிகளில் இருந்து ஓடிய மண்டைக்கண்ணன் என்ற குண்டப்பா ரகு ஜபிசிக்குள் கஸ்ரோவால் உள்நுழைக்கப்பட்டார். இவர் 1991 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்த போதும் இவரை கைது செய்ததாக பதிவு ஏதுமில்லை. இவர் இந்தியாவின் எல்லா உளவு நிறுவனங்களுடனும் தொடர்பிலிருந்து இந்தியாவில் புலிகளின் ஆதரவாளர்களை காட்டிக்கொடுத்ததாக எல்லா வல்வெட்டிதுறையாரும் சொன்னபோதும் இன்ரும் ஜபிசிக்குள் இருக்கிரார். ரமணன் நிதி முறைகேடு, பாலியல் பிரச்சனை காரணமாக எவருக்கும் தெரியாமல் நீக்கப்பட்டார். பின்னர் கஸ்ரோவின் இன்னொரு தத்துப்பிளையான சுவிஸ் நாதன் என்ற பாண்டியன் ஜ்பிசிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவரே ரி.ரி.என் நிறுத்தப்படுவதற்கும் ரி.ரி.என் நிர்வாக முரண்பாட்டுக்கும் காரணமென சொல்லப்படுகிறது.
இப்போது மீண்டும் ஜபிசிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியதை தொடர்ந்து இப்போதய ஜபிசியின் பினாமி பங்குதாரர்கள் பாண்டியன், சின்னரஞ்சித் என்போரை வெளியேற்றிவிட்டு புதுனிர்வாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இதேவேளை புது ரிவி தொடங்கும் முயற்சியில் இந்த ஜபிசியிலிருந்தும், ரி.ரி.என்னில்லிருந்து வெளியேறி நிற்கும் வளரிக்கூட்டங்கள் முயற்சிப்பதாகவும் தெரிகிறது. கவனம் தமிழ் மக்களே!
8.     மாயா on August 17, 2009 8:18 am
ஐபீசீ தனியாருக்கு போகவில்லை. புலிகளுக்குள்ளேயே ஆள் மாறுகிறது. அவ்வளவுதான். புலத்து புலிகளை தொடர்ந்து தமக்குள் வைத்திருக்க ஊடகங்கள் தேவை. 1. பணம் கறத்தல் 2. பணம் சம்பாதித்தல் 3. தமது நிலைகளையும் இருப்புகளையும் காப்பாற்றல். இவைக்காக மீதமாக உள்ளது இவர்களது ஊடகங்கள் மட்டுமே. புலியாக இருந்தவர்கள், பசுத்தோல் போர்த்திய புலிகளாக மேக்கப் போட்டுக் கொண்டு களம் இறங்கியுள்ளார்கள். அவ்வளவுதான்.
சொறிந்த கை சும்மா இருக்காது.
9.     பார்த்திபன் on August 17, 2009 11:52 am
செந்தில்
ஆசிரியர் ஒருவர் தனது மாணவனைப் பார்த்துக் கேட்டாராம் இந்தியாவின் தேசத்தந்தை யார்? என்று. அதற்கு மாணவன் சொன்னானாம் ராஜீவ்காந்தி என்று. உடனே திகைத்துப் போன ஆசிரியர் நகைச்சுவையாக மாணவரைப் பார்த்துச் சொன்னாராம் “நீ சொன்ன பதிலில் பாதி சரி பாதி பிழை” என. அது போல்த் தான் உங்கள் பின்னூட்டமும் இருக்கின்றது. ஐபிசியின் பணம் போட்டு ஆரம்பித்தவர்களில் நீங்கள் குறிப்பிட்ட தாசீசியஸ் அவர்கள் தான் முக்கியமானவர். குமாரும் விக்னராஜாவும் பகுதி நேர அறிவிப்பாளர்கள் மாத்திரமே. குமார் செய்திகளுக்கு பொறுப்பாகவும் செயற்பட்டார். ஐபிசி பங்குதாரர்களில் பெரிதாக பாதிக்கப்பட்டவர் தாசீசியஸ் அவர்கள். காரணம் அவர் ஐபிசி பணிப்பாளராக இருந்த போது வானொலி விருத்திக்காக மனைவியுடன் சேர்ந்து வங்கியில் கடன் எடுத்தும் கொடுத்தார். அந்தக் கடன் வானொலி வருமானத்திலிருந்து கட்டுவதாகவே முடிவெடுத்து எடுக்கப்பட்டது. ஆனால் வானொலி புலிப்பினாமிகளினால் அபகரிக்கப்பட்டதன் பின்னால் அந்தக் கடனுக்கான பணம் செலுத்துவதையும் நிறுத்தி விட்டார்கள். அதனால் அந்தக் கடனை தாசீசியஸ் அவர்களே கட்டி முடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தனியாரால் தொடங்கப்பட்ட வானொலியில் நிதி மோசடி நடக்கின்றதென்று விசாரணை நடாத்த புலிப்பினாமிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றாவது யோசித்தீர்களா?? உண்மையில் திட்டமிட்டு ஐபிசி வானொலியை அபகரிக்க இடையில் சிவரஞ்சித்தை ஒரு ஊழியராக உள்ளே புகுத்தினார்கள். அதன் பின் தான் படிப்படியாக அபகரிப்பை நடாத்தினார்கள்.
திரு.சோதிலிங்கம் அவர்கள் கேட்டது போல் வேண்டுமானால் ஐபிசியில் நடந்த திருகுதாளங்களையும் இங்கு பதிய முடியும். ஆனால் அதற்கு முதலில் ஐபிசியின் ஆரம்ப பங்குதாரர்களின் சம்மதத்தைப் பெற்ற பின்பே எழுத முடியும். காரணம் அந்த ஆரம்ப பங்குதாரர்களின் பணத்தில் 5 பெனி கூட அவர்களுக்கு திரும்ப வழங்க புலிப்பினாமிகள் முன்வரவில்லை. இதனால் தற்போது அவர்கள் ஐபிசியின் நிர்வாகத்தில் வழக்கு போடவும் முயற்சிக்கலாம். எனவே அவர்களின் அனுமதி கிடைத்தால் தொடர்கின்றேன்.
10.   Ramanan on August 17, 2009 3:12 pm
திருவாளர் தாசீசியஸ் அவர்கள் இலங்கையில் வாழ்ந்த பொழுது நவீன நாடகத்துறைக்கு மிகவும் பங்கு அளித்ததோடு முற்போக்கான கருத்துக்களையே முன் வைத்தார். ஆனால் லண்டனில் அவர் சுஜமாக இயங்குவதற்கு புலிகள் அவரை அனுமதிக்க இல்லை.
11.   நண்பன் on August 17, 2009 4:01 pm
பார்த்திபன் , உண்மைகளை எழுதுங்கள். அதற்கு எவர் அனுமதியும் தேவையில்லை.
ஐபீசியை அபகரித்தது போலத்தான் புலிகள் தமிழ் ஒளி - ஒலியையும் குகநாதனிடம் இருந்து பறித்தார்கள். TRTக்கு பல பங்குதாரர்கள் இருந்தார்கள். அவர்களது பணத்தை குகநாதன் மோசடி செய்கிறார் என்று உள்ளே வந்த புலிக் கும்பல் , அடுத்து இருந்த அனைத்தையும் கொள்ளையடித்து பறிமுதல் செய்தது. குகநாதனிடம் TRT இருந்த போது பங்குதாரர்கள் , தம்மை பங்குதாரர் என்றாவது சொல்லிக் கொள்ள முடிந்தது. TRT புலிகளின் ஊடகமாக பறிக்கப்பட்டு , TTN ஆக மாறிய போது , பங்குதாரர்கள் வெறும் கையோடு வெளியேறினார்கள். அந்த பணத்துக்காக வன்னிக்கு அவர்கள் பணம் கேட்டுச் சென்று பிரபாகரனோடு பேசிய போது , நீங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்யுங்கள். அது நல்லா வரும் போது எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம். போன வந்த காசும் அம்பேல்.
கடைசியில் தீபம் தொலைக் காட்சியின் உரிமை கொண்ட படத்தை TTN போட்டதால் வழக்கில் பெரும் தொகை கட்ட வர , அதை லண்டன் குழு ஒன்றில் பெயரில் TTNயை மாற்றி தகிடு தாளம் செய்தார்கள். இவர்களெல்லாம் நாட்டை நேர்மையாக நடுத்துவார்கள் என நம்ப முடியுமா? புலிகளே நேர்மையில்லாத போது புலிகளது ஆட்சி மட்டும் எப்படி நேர்மையாக நடக்கும்?
TRTயில் புலிகளை விமர்சித்த ஒரு சிலர் தற்போது TRT வானோலி நடத்துகிறார்கள். ரங்கன் எனும் தர்ஸன் புலிக் கொடியின் கீழ் பியர் குடித்து ஆடுகிறார்கள் என்று பாரீஸ் புலிகளுக்கு எதிராக சுவிஸ் நேரத்தில் விவாதம் நடத்தி , தமிழ் ஒளியில் காட்சிகளை போட்டு கடைசியில் குகநாதனுக்கே ஆப்பு வைத்து இப்போது புலிகளாகியிருப்போர் குறித்து என்னத்தை சொல்ல? சிங்கப்புரிலிருந்து தங்கம் கடத்திய கூட்டம் , இப்ப அடுத்தவர்களுக்கு நேர்மை போதிக்கிறார்கள்.
இப்படி ஒரு அவலம்தான் ஐபீசீயும். எல்லாம் ஒரே குட்டையில் முத்துக் குளித்த தங்கங்கள்தான். அதனால்தான் நாற்றம்.
12.   uma maheswaran on August 17, 2009 4:17 pm
We are not anti management we are against anti bad management dont we? good subjec.
13.   Edision on August 17, 2009 6:09 pm
எங்கள் தலைவனைக் காட்டடிக் கொடுத்ததே இந்த ஜபிசி தான் இந்த காட்டிக்கொடுத்தவர் இன்னும் புலிகளின் ஆதரவாளனாகவே தன்னை இனம்காட்டிக் கொண்டிருக்கிறார் தக்க சமயத்தில் வெளியிடுவோம்.
14.   Ranjan on August 17, 2009 6:14 pm
//கஸ்ரோவின் தத்துப்பிள்ளையென - புலிகளில் இருந்து ஓடிய கண்ணன் ஜபிசிக்குள் கஸ்ரோவால் உள்நுழைக்கப்பட்டார்- -இவர் 1991 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்த போதும் இவரை கைது செய்ததாக பதிவு ஏதுமில்லை. இவர் இந்தியாவின் எல்லா உளவு நிறுவனங்களுடனும்- நிதி முறைகேடு- பாலியல் பிரச்சனை –கஸ்ரோவின் இன்னொரு தத்துப்பிளையான சுவிஸ் நாதன்-// பாருங்கள் என்ன போராட்ட இயக்கமா இப்படியெல்லாம் செய்தது இவர்கள் அழிந்து போனதிற்கான நியாயத்தை இந்த செந்திலின் பதிவு மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. இவர்களின் அழிவில் சந்தோசம் படத்தானே முடியும்.
முன்னின்று போராடிய வீரமறவர்களை மதிக்கிறேன்.
15.   sivaji on August 17, 2009 6:37 pm
நண்பர்களே நீங்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இன்று காலை இந்த ஜபிசி ரேடிடேீயாவை கேட்டீர்களா அங்கு மீண்டும் துரோகிகள் என்று தொடங்கி விட்டார்கள் இன்று காலை ஜபிசிக்கு வாழ்த்து சொல்ல வந்த ஒரு பினாமியின் பெயர் கி சி துரை இவர் டென்மார்க்லிருந்த இவர் சொன்னார் ஜபிசி மீண்டும் எழும்பி விட்டது தமிழினத்தின் விடிவிற்காய் காக்கை வன்னியர்களும் எட்டப்பர்களும் ஒழிக்கும் காலம் வரும் போனவர் வருவார் பொங்கு தமிழே என்று தமிழ் பொங்கும். பாருங்கள் இவர்கள் தேசியத்தலைவன் என்று கத்தியவவர்களுக்கு ஒரு அஞசலி தராதவர்கள் மீண்டும் அவர் பெயரில் வியாபாரம் தொடங்கி விட்டனர்.
கார்மேகம் நந்தா வந்தார் 1997 முதல் ஜபிசி களம் கண்டது ஜபிசிக்கு தெரியும் தமிழினத்தை எப்படி வழிநடத்துவத என்று…..
கணேசர் மேகநாதன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரே வெட்டி விழுத்தல்
நைன விஜயன் சொன்னார் ஜபிசி ஒர கலாச்சார விழுமியமாகி விட்டதாம் (நன்றாகவே சமூகம் பற்றித்தான் பேசுகிறார்)
சின்னக் குட்டி தயாநிதி (அப்புக் குட்டி தம்பி) ஊடக தடங்கல்களை எல்லாம் வென்று வந்துள்ளதாம்.
முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஜபிசி தமிழர் கலாச்சார அடையாளமாகி விட்டதாம் இவர்கள் எல்லாம் தமிழர்களின் ஜபி சி துரோகங்கள் பற்றி தெரியாதா என்ன? இல்லை இவர்களும் இந்த பணப் பறிப்பில் அல்லது சமூக அந்தஸ்த்துக்களை காப்பாற்ற இப்படி வேசம் போடுகிறார்கள்.
இவர்களை விட டெவிட் என்பவர் ஓரே புழுகு புழுகிக் கொட்டடினார் அதாவது ஜபிசி பல இடர்களையும் தாண்டி வந்துள்ளது என்பதே முள்ளிவாய்க்காலுக்கு வழி வெட்டிவிடவர்கள் இந்த ஜபிசி என்பதை இவர்கள் மறந்து பொயிட்டார்களா அல்லத பல்டி அடித்துள்ளார்களா?
பாவம் ஏ இ மனோகரனுக்கும் ஒரு ஆசையுடன் எழும்பிப்பார்க்கிறார்.
அப்துல் ஜபார் தனது வழமையான புழுகுப் பெட்டிதான் இவர்களுக்கு ஜபிசியின் திருகுதாளங்கள் என்ன தெரியாத ஒன்றா? ஜபிசியின் துரோகங்கள் புரியாத ஒன்றா?
எல்லோரம் தலைவன் தேசியத்தலைவன் தேசம் தேசியம் (கருத்து விளங்காமலே) என விளக்கமில்லாமலே பேசிவிட்டு துரோகிகள் காட்டிக் கொடுப்போர் என பட்டஙகள் சூட்டிவிட்டு இப்போ………. இவர்கள் எல்லோருக்கும் முள்ளிவாய்க்கால் ஒன்றே தான் பதில்.
அது மட்டுமல்ல மீண்டும் ஜி எஸ் குமார் என்ன தில்லு முள்ளோ தெடர்ந்து அவதானிப்போம் இந்த high way to the முள்ளிவாய்க்கால் (Mullivaikkal -Vanni)
16.   vanthiyadevan on August 17, 2009 11:28 pm
one of the ibc founder member sockkan alies kumar died in an accedent in jaffna in 2006
17.   பார்த்திபன் on August 18, 2009 9:53 am
வந்தியத்தேவன்,
நீங்கள் குறிப்பிடும் சொக்கன் என்ற சிறிகணேசகுமார் விபத்தில் இறந்தாலும் அவரது மனைவி பிள்ளைகள் பிரித்தானியாவில் தான் உள்ளார்கள். சொக்கனும் ஐபிசியின் முன்னாள் பங்குதாரர்களில் ஒருவர் தான். சொக்கனின் மனைவியும் முன்பு பகுதிநேர அறிவிப்பாளராக ஐபிசியில் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிறிகணேசகுமார் விபத்தில் இறந்தது 2006ம் ஆண்டிலல்ல 2005இல்.
18.   visuvan on August 18, 2009 12:27 pm
அட பாவிகளா! இன்னுமா உந்த புழுகுப்பெட்டியை கேட்டு இங்கை விமர்சனம் செய்யிறியள்! நான் இப்ப மூண்டு வருசத்துக்கு மேலை இந்த புழுகுகளை கேட்டு! சோதி விமர்சிக்க பல விடயங்கள் இருக்கு! ஆக்கபூர்வமாக எழுத பல விசயங்கள் இருக்கு! கேட்க பல ஊடகங்கள் இருக்கு இப்ப! நீங்கள் முதலிலை இந்த வானெலியை கேட்கிறதை நிப்பாட்டுங்கோ! தேசியத்திலை பறந்தவை இப்ப நிக்கிற இடம் சரியான பள்ளம்! தண்ணி வந்து மூட கனநாள் எடுக்காது! நீங்கள் சும்மா வேலை மினக்கட்ட விமர்சனம் எழுதி உசுப்பேத்தி அவங்களுக்கு உயிர் கொடுக்காதையுங்கோ!
தேசம் வானொலி தொடங்கினால் நான் கேட்க ரெடி!
19.   Niru on August 29, 2009 11:06 am
பார்த்தீபன் நல்லாச் சொன்னீர்கள். போட்டுக் கிளியுங்கள். ஐபிசியை கைப்பற்ற அனுப்பப்பட்ட சிவரஞ்சித் (கந்தையா அம்மான்) யாழ்பல்லைக்கழக முற்றுப்பேறாப்பட்டதாரி. கோப்பாயைச் சேர்ந்தவர். இவர் புலிகளின் பிரச்சாரப்பீரங்கியாக செயற்பட்ட காலத்தில் கருந்து மோதல்களால் புலிகளால் தலைக்கு தீர்வு வைக்கப்பட நோர்வேய்கு தம்பியாரின் உதவியுடன் ஓடிப்போனார். அங்கு எந்தத்தொடர்வுகளும் இல்லாமல் இருந்தவேளை புலிகளின் பலம் அதிகரிக்க மீண்டும் ஒட்டிக்கொண்டார். இவரை ஐபிசி தளபதியாக நோர்வேயில் இருந்து இலண்டனுக்கு எடுத்தார்கள். மெல்ல மெல்ல ஐபிசி கைப்பற்றப்பட்டது. ஐபிசியை தொடர்ந்து நடத்துவதற்கு சிவரஞ்சித்தும் பணம் கடன்வாங்கிக் கட்டமுடியாமல் முக்கித்தக்கினார்; முக்கித்தக்குகிறார்; உதைத்தான் சொல்லுலது செய்தது திரும்பி வரும் என்று. நோவேயிலும் இதேமாதிரி வானொலி உடைப்புகள் அமைப்பு உடைப்புகள் பள்ளிக்கூட உடைப்புகள் கடைஉடைப்புகள் நடத்தி எல்லாம் புலி அபேஸ் பண்ணியது.
//ரங்கன் எனும் தர்ஸன் புலிக் கொடியின் கீழ் பியர் குடித்து ஆடுகிறார்கள் என்று பாரீஸ் புலிகளுக்கு எதிராக சுவிஸ் நேரத்தில் விவாதம் நடத்தி தமிழ் ஒளியில் காட்சிகளை போட்டு // இதே தர்ஸன் ஐரோப்பிய நேரத்தில் நோர்வேயின் முதல் வானொலியான தமிழ்நாதத்தின் நிகழ்ச்சிகள் சில டென்மனக்கி நூடாக ரி ஆர் ரி வானொலிக்குப் போனபோது அது புலிகள் அல்லாத வானொலி அவர்கள் நிகழ்சிகளை இதல் ஒலிபரப்பக் கூடாது என்று குத்தி மறித்தவர் என்பதை அறிவீர்களா? இந்தத் தர்ஸன் போட்ட கூத்துக்களை அடுக்கவா?
ஐபிசியில் இன்னிசைக்குரல் என்று ஐரோப்பா முழுவதும் போய் போட்டி வைப்பார்கள். நடுவர்கள் நிச்சயம் புலிப்பினாமிகளாகவே இருப்பார்கள். புலியில்லாப் பெற்றோரின் பிள்ளைகள் மிக மிகத் திறமையாகப் பாடினாலும் பரிசு புலிகளின் பிள்ளைக்கத்தான். இப்படித்தான் புலிகள் குண்டிச் சட்டிக்குள் குதிரை ஓட்டி தமிழினத்தையே அழித்தது. தமிழனின வரலாற்றில் தமிழர்களை அழித்த வடு புலிகளுக்கு மட்டும் தான். தலைவர் சொல்வாராம் தோற்றால் சம்பவம் வென்றால் சரித்திரம் என்று. முட்டாள் தமிழின அழிவை சம்பவமாகவா நினைத்தாய். வென்றாலும் சரித்திரம்தான் தோற்றாலும் சரித்திரம்தான் தரித்திரனே. காக்கைவன்னியனின் வரிரையில் உன் பெயரை உச்சரிப்பவன் நாக்கை அறுத்துச் சாகக்கடவது.


No comments:

Post a Comment