Saturday, 22 December 2018

கடிதம்01, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

எழுச்சி /23/10/2018
(
கடிதம்01, மாதம்10, கிழமை03)
தமிழீழ விடுதலைஇயக்கம்
இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்:
கடந்த பல வருடங்களாக அவதானித்து வந்த பல விடயங்கள் வீணுதலை இயக்கம் என்ற வரையறைகளை அவமானப்படுத்துவதா அமைந்திருந்ததை சுட்டிக்காட்டி, நாலாவது தலைமைத்துவத்தை ஏற்று இயங்கும் விடுதலை இயக்கம் கடந்த கிழமை வவுனியாவில் ஒரு தமிழ் குடுப்பத்துக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு அந்த வீட்டுக்கு திறப்பு விழா நடந்தது பற்றி தமிழ் ஊடகங்களில் வெளிவந்த செய்தியால் பல இயக்க தோழர்களும், ஆதவாளர்களும் முன்னாள் இயக்க உறுப்பினர்களும் இது ஒரு வெட்கத்துக்குரிய முறையில் நடைபெற்றுள்ளதாக கருத்து கொண்டுள்ளனர்.
இங்கே கூறப்படும் முக்கிய விடயமாக ஏழைகள் கடின வாழ்வு வாழ்பவர்களின் நெஞ்சில் ஏறிநின்று தேர்தல் பிரச்சார யுத்தியை ஒரு விடுதலை இயக்கம் செய்வதா? என்பதாகும்.
இவற்றிக்கு மேலாக அந்த வீட்டின் முன்னால் சேமக்காலையில் தலைக்கல்லு வைப்பது போன்று கட்சியினால் அமைக்கப்பட்ட வீடு எனவும் இயக்கத்தின் பெயரை கல்லில் பதிவு செய்து விடுதலை இயக்கத்தின் பெயரை இழிவு படுத்தியுள்ளீர்கள், மேற்கூறிய நடவடிக்கைகளை அரசியல் பதவி ஆதாயத்துக்காகவும் மக்கள் பணியின் பண்பு புரியாமலுமே செய்துள்ளீர்கள் என்பது பல கட்சியில் இயங்கும் தோழர்களின் கருத்தாகும்.
இது போன்ற நலிந்தவர்களின் வாழ்வில் பதவி அரசியலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்கு குறிப்பிடும் வீடு என்பது வீட்டுக்குரிய விடயங்களை கொண்டதல்ல என்பதையும் இது ஒரு தற்காலிக கொட்டகை என்பதையும், இது போன்ற வீடுகளில் நீங்கள் உங்களை உங்கள் உறவினர்களை வைத்து நிலைமைகளை உணரும்பணி கேட்டுக் கொள்கின்றோம்.
ஒன்றுமற்ற மக்களுக்கு ஒன்று கொடுத்ததை வரவேற்கும் அதேவேளை இவற்றினை விழாவாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
விடுதலை இயக்கம் என்ற பெயருக்குரிய வரலாற்றையும், தமிழின் இலக்கணத்துக்கு ஏற்பவும் நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
சோதிலிங்கம்.
23/10/2018.

தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com

No comments:

Post a Comment