March
13th, 2011
இனப்பிரச்சினைக்கான
தீர்வு : தமிழ் மக்கள்-இலங்கை அரசு-இந்திய அரசு : த சோதிலிங்கம்
Category: சோதிலிங்கம்
ரி,
கட்டுரைகள்/ஆய்வுகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாட்டிலிருந்து டில்லி வரை நடைபெறும் பாதயாத்திரைக்கு ஆதரவாக லண்டனில் மார்ச் 13ல் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் த சோதிலிங்கம் வழங்கிய உரை.
._._._._._.
எம்மை சூழவுள்ள பலங்கள் பலவீனங்கள் தற்செயல் மட்டுமல்ல வேறுவேறு வகையான பலமும் வேறு திசைகளில் இயங்கும் நடத்தைகளும் கூட எமக்காக நாம் விரும்பும் தீர்மானத்தை தீர்மானிக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள தவறி விடுகிறோம். அதைவிட இந்த விடயங்கள் பற்றி அறிவு இல்லாமல் நான் நாம் மட்டுமே எமது பிரதேசத்தின் எமது மக்களின் விருப்புக்களை உருவாக்குகிறோம் என்பதை ஆணித்தரமாக நம்புவதும் தவறான ஒரு விடயமாகும்.
இந்தியாவில் டில்லிக்கு பயணம் என்ற அசைவு எம்மை இங்கு கூட வைத்துள்ளது. அதிலும் கடந்த சில மாதங்கள் வரையில் நினைத்திருக்காதவர்கள் இன்று இந்த சபையில் ஒன்றாக இருக்கிறோம். அவ்வளவுக்கு எம்மை மீறி சிலவிடயங்கள் எம்மை ஆட்கொள்வதை நாம் உணர வேண்டும். இன்று நாம் இங்கு ஒன்று கூடியிருப்பது பலம் என்பதை நாம் உணர வேண்டும். அத்துடன் இந்தப் பலத்தை உடனடியாக இயங்கவும் வைக்க வேண்டும் அப்படி வைப்பதன் மூலம் தமிழர்களின் அரசியல் உரிமைகள் விடயத்தில் ஒரு அங்குலம் என்றாலும் பயணிக்கலாம்.
இங்கே இந்த அரங்கில் எத்தனையோ புத்திஜீவிகள் இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றிய தமது ஆய்வினை தமது கருத்தினை முன்வைக்கக்கூடிய, அதில் உள்ள சரி பிழைகளை எடுத்துக்கூற வல்லவர்கள் உள்ளனர். அவர்கள் இங்கே முன்வைக்கும் கருத்துக்களில் பலவற்றுடன் நானும் உடன்பாடுகள் எட்டக் கூடியவன். காரணம் இங்குள்ள பலருடன் இணைந்தே எனது கடந்தகால அரசியல் கருத்துக்களை, புலிகள் பற்றிய விமர்சனத்தை பொதுத்தளத்தில் வைத்துள்ளேன். இந்தக் காலங்களில் நாம் தேசம்நெற்றினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட பொதுத்தளத்தில் இலங்கையில் சிங்கள, தமிழ். இஸ்லாமிய இலங்கை மக்களுக்கான ஒரு பொது உடன்பாடு ஒன்றினையும் தயாரித்திருந்தோம்.
நான் மேலே குறிப்பிட்டபடி இலங்கையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும் என்ற ஒரு விசை தற்போது இந்திய பிராந்தியத்தில் உருவாகியிருப்பதை புலம்பெயர் மக்களும் இலங்கையில் தமிழ் சிங்கள மக்களும் உணரத் தொடங்கியுள்ளனர். இதில் இலங்கையில் இன்றுள்ள அரசியல் நிலைமைகளும் இறுதிக்கால போர்சூழலும் இதற்கு ஒரு ஊடகமாக செயற்படுகின்ற காரணமாகவும் மீண்டும் இல - இந்திய ஒப்பந்தத்திற்கான அல்லது அந்த ஒப்பந்தத்தை சூழவுள்ள ஆதரவுத் தளம் புலம்பெயர் நாட்டில் உயர்வதை அவதானிக்கலாம்.
நான் இந்த இல - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி கோரி இலங்கை சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியவன் என்னுடன் போராட்டத்தை நடாத்தியவர்கள் இந்த அரங்கில் உள்ளனர். நாம் அன்றும் இன்றும் இலங்கை அரசும் இந்திய அரசும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்வைத்த இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி கோரினோம். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜனநாயக நடைமுறைகளை தவறவிடகூடாது என்றும் ஜனநாயக நடைமுறைகளை தொடர்ந்தும் பேணுதல் போராட்டத்திற்கு இன்றியமையாதது என்று புலிகளுக்கும் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே சரியானது என்றும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் அன்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
அதைவிட இலங்கையில் தமிழர்களின் அரசியல் தீர்வு என்பது இந்தியாவுடன் ஒரு இணைவு இல்லாமல் முடிவுக்கு வரமுடியாதது என்ற நிலைப்பாட்டை கடந்த 60 வருட கால இலங்கையில் தமிழர்கள் மீதான இனக்கலவர வரலாறு எழுதியுள்ளது. இந்த இனக்குரோத மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. இந்திய அரசின் ஆதரவின்றி தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை பெறமுடியாது என்ற நிலை அன்றிலிருந்து இன்று வரையில் தமிழர்கள் மத்தியில் பலமாக உள்ளது. அது இன்று சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமலும் பெறமுடியாது என்ற யதார்த்தத்தை இணைத்துள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எதிர்ப்பதே ஒரு வழி என்ற மனப்பான்மையில் தமிழர் போராட்டம் நடைபெற்றுள்ளது. எதிர்த்து எதிரியாக்குவது என்ற தந்திரோபாயம் எமக்கு மட்டுமல்ல தற்போதுள்ள உலகில் தவறான தந்தரோபாயமாகி உள்ளது. ஆனால் இவை இன்றுவரை தமிழ் சமூகத்தில் வட- கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் மீண்டும் பரீட்சிக்கப்படுவதையும் இந்த பொறுப்பற்ற தந்திரோபாயங்களுக்கு ஊடகங்களும் பத்திரிகைகளும், ரேடியோக்களும் எண்ணை ஊற்றிக் கொண்டிருக்கின்றன. தனிமனித லாபம் பிரதேசவெறி, சாதிவெறிகளையும் பரீட்சித்துக் கொண்டிருப்பதையும் அதற்கும் மேலாக 1980 களில் செய்யப்பட்ட மாற்றுக்கருத்து கொண்டவர்களை எதிரியாக்குதல் அல்லது அரச உளவாளி என்று பட்டம் சூட்டுதல் போன்ற பொறுப்பற்ற செயல்கள் மீண்டும் ஆரம்பித்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதையும் அவதானிக்கிறோம்.
அத்துடன் இன்றுள்ள அரசுக்கு ஆதரவாகவும் இன்றுள்ள அரசுக்கு எதிராகவும் என்ற பொறுப்பற்ற முறையில் தமிழர்களை தமிழர்களின் அரசியல்வாதிகள் நடாத்திச் செல்வதை காண்கிறோம். இந்த விடயங்களில் இலங்கையில் உள்ள சமூக முன்னணியாளர்களும் புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதின் அவசியத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இதில் குறிப்பாக தமிழரசுக் கட்சியும் இன்று தனது ஏகபோக பிரதிநிதித்துவம் என்ற புதிய முள்ளிவாய்க்காலை உருவாக்குவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
நண்பர்களே தோழர்களே!
நாம் நடைமுறை யதார்த்தத்துடன் பிராந்திய பலத்துடன் சர்வதேச உடன்பாடுகளுடன் ஒத்துப்போவது மிகமிக அவசியமானதும் இது பற்றிய விளக்கங்களையம் வழிகாட்டிகளையும் ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். சர்வதேச மயப்படுத்தப்பட்ட பொருளாதாரம் உலகை வழிநடத்துகின்றது. இதனூடாகவே இனிமேல் தமிழ் மக்களின் வாழ்வை கட்டி எழுப்ப முடியும், எமது மக்களின் நல்வாழ்வை கட்டியெழுப்ப இந்த சர்வதேச ஒப்பந்தத்தை நாம் மீண்டும் முன் கொண்டுவர வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
இலங்கையில் புலிகளின் அழிவிற்கு முன்னர் இன்றைய அரசு தமிழ் மக்களுக்கு, அரசியல் தீர்வே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றும் அதை தாமே கொண்டு வருவோம் என்றும் கூறினர். புலிகள் அழிவின்போது புலிகளை அழிப்பதும் அரசியல் தீர்வும் சமாந்தரமாக செய்யப்படும் என இன்றைய அரசு அறிவித்திருந்தது, பின்னர் புலிகள் அழிப்பின்போது புலிகள் அழிவின் பின்னர் அரசியல் தீர்வு என்றனர். இன்று இரண்டு வருடங்களாகியும் அரசியல் தீர்வு பற்றி இழுத்தடிப்புக்களையே தமிழ் மக்கள் கண்டுள்ளனர். எந்த ஒரு அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. தமிழர்கள் தாம் ஏமாற்றப்பட்டுள்தாகவே கருதுகின்றனர். இலங்கை அரசுடன் இணைந்து இயங்கிய பல தமிழர்கள் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவே இன்று கருதுகின்றார்கள். இங்கே தமிழர்கள் SLFP மக்கள் ஜக்கிய முன்னணியிரால் ஏமாற்றப்பட்டுள்ளதாகவே கருதுகின்றனர்.
திம்பு பேச்சுவார்த்தையில் உடன்பட்ட அம்சங்களுடன் இல - இந்திய ஒப்பந்தத்தை ஒரு சர்வதேச ஒப்பந்தமாக தமிழர்களின் பிராந்திய வல்லரசின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்காக உருவான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் பணிகளை ஆரம்பிக்க முடியும் என தமிழ் மக்கள் நம்பினர். ஆனால் புலிகள் பிரேமதாஸா உறவுகளால் இந்த சர்வதேச ஒப்பந்தத்ததை நிறைவேற்றுதல் என்பது தவறிப்போய் புலிகள் தமிழர்கள் UNP யிடம் ஏமாந்து போயினர். இங்கே UNP அரசும் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.
ஏமாற்றங்களை தமிழர்கள் காலத்துக்கு காலம் சந்தித்தே வந்துள்ளனர். ஒப்பந்தங்கள் ஒன்றுக்கும் குறைவில்லை. பண்டா - செல்வா விலிருந்து பல வந்துள்ளன. ஆனால் இல - இந்திய ஒப்பந்தத்தில் மட்டும் எமக்காக கையெழுத்திட்ட இந்தியாவும் இலங்கை அரசினால் ஏமாற்றப்பட்டுள்ளது என்பது முக்கியமானது. அதைவிட இந்தியாவும் இலங்கையும் ஒன்று சேர்ந்து இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியுள்ளது. இங்கே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா தனது பொறுப்பை காப்பாற்ற தவறிவிட்டது. தமிழர்கள் இது பற்றி இந்தியாவிடம் கேட்க வேண்டிய நேரமிது.
நண்பர்களே தோழர்களே!
இலங்கையின் மக்களிடையேயான ஜக்கிய தன்மையை மேலும் வலுப்படுத்த தமிழ் சிங்கள மொழி பேசும் மக்களிடையேயும் ஒரு பொது இணக்கப்பாட்டை இரு தரப்பினரும் அங்கீகரிக்கும் வழிவகைகள் செய்தல் வேண்டும். இந்த இலங்கையின் பொதுமைப்பாட்டை இந்திய பிராந்திய பொதுமைப்பாட்டுடன் இணைப்பதும், இந்திய பிராந்திய பொருளாதார ஆசிய அபிவிருத்தியில் இலங்கை லாபமீட்டவும் தமிழ் மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கும் உதவும் என நான் நம்புகிறேன். இவற்றிக்கான அடித்தளமாக திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உருவான இல - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்ப்படுவதே இலங்கைக்கும், தமிழர்களுக்கும் சரியானது என நான் நம்புகிறேன்.
இலங்கை இன்று தன்னை சர்வதேச பொருளாதார சந்தைக்குள் தன்னை இட்டுச்செல்வது தவிர்க்க முடியததாக இருப்பதும், இந்திய பிராந்தியம் தனது பொருளாதார வளர்ச்சியில் சர்வதேச பொருளாதாரத்தின் பங்களாளிகளாக வளர்ந்து செல்லும் போக்கு, இலங்கையிலும் இந்தியாவிலும் அதன் அண்டைய நாடுகளின் உள் விவகாரங்களிலும் அந்நாட்டு சிறுபான்மையினருக்கு அதிகாரப்பரவலாக்க மாற்றங்களை தவிர்க்க முடியாதபடி ஏற்படுத்தும். இது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களின் உரிமைகளை அந்தப் பிரதேசங்களின் வளங்களின் உரிமைகளை அங்கீகரிக்கும்.
இலங்கையில் தமிழர்களின் பிரதேச சுயாட்சி என்பது சிங்கள மக்களின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்படல் வேண்டும். இதற்கான பல சிங்கள முற்போக்கு சக்திகளின் ஆதாரத் தளங்கள் முனைந்து கொண்டிருந்தன. இந்த முனைப்புக்களை தமிழர் போராட்டம் உள்வாங்கிக் கொள்ளவில்லை, பதிலாக எதிர்ப்பு எதிரியாக்குதல் என்ற வன்முறைக் கலாச்சாரத்தையே தமிழர் தமது போராட்ட முகமாக காட்டினர் இதுவும் தமிழர்களை தோல்வியில் தள்ளியது.
இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் இந்திய கலாச்சாரத்தில் ஒன்றானவர்கள். பௌத்த இலக்கியங்கள் காவியங்களில் மிக முக்கியமானவைகளும் மிகப்பெரும்பான்மையானவைகள் தமிழிலேயே எழுதப்பட்டவைகளாகும். இலங்கையில் பௌத்த சமயத்தை தமிழர்கள் கிறீஸ்த்துவிற்கு முன் 300ம் ஆண்டுகள் வரையில் பின்பற்றியிருந்தனர். தமிழர்களே பௌத்தத்தை தென்கிழக்காசிய நாடுகளுக்கு கொண்டு சென்றனர். இவை இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையே பொது உடன்பாடுகளை வளர்க்க உதவக்கூடியன. அவற்றை தமிழ் மக்கள் பயன்படுத்த தவறியுள்ளனர்.
இவை சிங்கள மக்களின் ஆதரவினை மேல் எழுப்பக்கூடிய கருவிகளாகும். இவற்றை பண்பாக பயன்படுத்த தமிழர் தரப்பினர் தவறிவிட்டனர். இன்று தமிழர்கள் தமது கையில் என்னவற்றை வைத்துள்ளனரோ அவற்றிலிருந்து என்ன செய்யலாம் என்றே முயற்சிக்கின்றனர். இதில் ஒன்றே இந்த இலங்கை இந்திய ஒப்பந்தமாகும்.
தமிழர்கள் மீதான இனக்குரோத நடவடிக்கைகளில் காலம் காலமாக UNP, SLFP, JVP என்பவர்களே - இம்மூவினருமே காரணமாக இருந்துள்ளனர் என தமிழ் மக்கள் நம்புகின்றனர். காலத்துக்கு காலம் நேரத்துக்கு நேரம் தமது பதவிக்காக இனக்குரோதத்தை வளர்த்தவர்கள். இன்று மீண்டும் ஒரு பக்கத்தினர் எமக்காக பேசுகின்றனர். பின்னர் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இன்றைய ஆட்சியாளர்கள் எமக்காக பரிவுரைகள் பேசுவார்கள். இவர்களால் தான் இலங்கையில் இனக்குரோதம் தமது பதவிகளுக்காக வளர்க்கப்பட்டது. இந்த இனக்குரோதம் இவர்களாலேயே தான் களையப்படல் வேண்டும். இவர்களாலேயே தான் தமிழர்களின் பிரதேச அதிகார பரவலாக்கம் தடைசெய்யப்பட்டது. இவர்களாலேயே தான் இந்த அதிகாரபரவலாக்கம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். தமிழர்கள் இதற்காக செயற்பட வேண்டிய தருணத்தில் இன்று உள்னர்.
புலிகளை இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறிந்த பிராந்திய சர்வதேச சக்திகள் எப்படி புலிகளுக்கு எதிராக தாம் இணைந்து இயங்கினரோ அதேபோன்று இன்று தமிழர்களின் பிரதேச அதிகார பரவாலாக்கத்துக்கு இணைந்து செயற்பட வைக்க புலம்பெயர் மக்கள் வலியுத்த வேண்டும். அன்று அதை செய்தவர்கள் இன்று இதையும் செய்ய வேண்டும்.
இன்று எம்முன் உள்ள ஒரே நம்பிக்கையுடன் இருக்கக் கூடியது இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றே தான். அந்த ஒப்பந்தத்தை முழுமையாக 13வது திருத்த சட்டமூலத்தின் அமுலாக்கல்கள் மூலம் தமிழர்களின் பிரதேசங்களில் அதிகாரப் பரவலாக்கல்களை செய்ய வேண்டும். அதை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியாவும் தமிழர்களின் வாழ்வை மீள தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பில் உள்ளதை உணர்ந்து செயற்ப்படல் வேண்டும். அதை நாம் இந்தியாவிடம் கோர வேண்டும். இந்தியாவின் பொறுப்புணர்வை இந்தியாவிடம் தட்டி கேட்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வினை முன்வைத்து தமிழ் மக்களை தேசத்தின் பங்காளிகளாக்க அரசு முன்வரவில்லை. புலம்பெயர் தமிழர்களின் ஆதரவினை பெற இலங்கை அரசு விரும்பவில்லை என்றே நான் கருதுகிறேன். இலங்கை அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பில் அக்கறையற்று இருப்பதாகவே நான் கருதுகிறேன். புலிகள் அழிவின் பின்னர் ஆகக்குறைந்தது புலம்பெயர் மக்களிடம் இலங்கையில் தமிழர்களின் அரசியல் தீர்வு பங்களிப்பு அபிவிருத்தி இன உறவுகள் ஜக்கியம் பற்றிய கருத்துக்களையாவது பெற்றிருக்க வேண்டும். மாறாக ஒருசிலரின் கருத்துக்களை புலம்பெயர் மக்களின் கருத்து என கூறுவது தவறாகும். இது உண்மையில் செயற்ப்பட அக்கறை இன்மையேயாகும். இலங்கை அரசு புலம்பெயர் மக்களின் பங்களிப்பை தவறாகவே விளங்கிக் கொண்டு செயற்படுகின்றனர் என்றே நான் கருதுகிறேன்.
இன்றுள்ள இலங்கை அரசின் மீதான நம்பிக்கையற்ற தன்மை தமிழ் மக்களை இந்தியா நோக்கி மீண்டும் நகர்த்துகின்றது என்பது வெளிப்படையாகிறது. இந்த 2 வருடங்களில் இலங்கை அரசு தமிழ் மக்களிடம் அவர்களது அரசியல் எதிர்காலம் பற்றிய ஒரு ஜனநாயக வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்தியிருக்கலாம். அப்படி ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை நடாத்தத் தவறிவிட்டது. அந்த வாக்கெடுப்பில் மக்கள் கூறும் தீர்ப்பை நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கலாம்.
புலிகள் அழிவின் பின்னர் இலங்கை அரசு அiசியல் தீர்வை முன்வைத்திருந்தால் இன்று புலம்பெயர் நாட்டிலுள்ள எத்தனையோ அரச எதிர்ப்பு அமைப்புகள் இருந்திருக்காது ஆனால் அரசு அதை செய்யவில்லை. இதை செய்ய முடியாமைக்கான காரணங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் சில பிரிவுகள் தொடர்ந்தும் இனவாத நோக்குடனேயே இயங்குகின்றது என பலர் சந்தேகங்கள் கொண்டுள்ளனர்.
ஒரு ஜனநாயக அரசானது தனது அதிகாரங்களை மக்களிடம் பகிர்ந்தளித்து நாட்டின் இதர பிரதேசங்களும் சுயமாக வளர்ச்சியடையவே உதவி செய்யும். மாறாக இலங்கையில் மத்தியில் அதிகாரங்களை குவித்து வைத்திருப்பது என்பது ஒரு அடக்குமுறைக்கு ஒப்பானதேயாகும்.
சர்வதேச ஒப்பந்தமான இல - இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதே தமிழர்கள் முன் உள்ள அரசியல் தீர்வென மீண்டும் எழுகிறது. இது இந்திய ஆதரவுடனேயே நடைபெற முடியும். இல - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிகார பரவலாக்கம் என்பதை இல - இந்திய ஒப்பந்தத்தினூடாகவே நடைமுறைப்படுத்த தமிழர்கள் விரும்புகின்றதையே இது எடுத்துக்காட்டுகின்றது அல்லது இலங்கை அரசு தமிழர்களின் அதிகாரப் பரவலாக்கத்திற்கான அரசியல் தீர்வையும் அதற்குரிய கால அட்டவணையையும் முன்வைக்குமானால் அது சிலவேளை நிலைமைகளை மாற்றிவிடக்கூடும். அதுவரையில் தமிழர்கள் இலங்கை அரசு உடன்பட்ட கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அமுல்படுத்தவே தமிழர்கள் விரும்புகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி அவர்கள் கடந்த சில நாட்களுக்குள் ஊவா மாகாணத்தில் கருத்துவைத்துள்ள போது தான் புலம்பெயர் மக்களுக்கு 17ம் திகதி தான் ஏதோ சொல்ப்போவதாக கூறியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நண்பர்களே தோழர்களே!
கடந்த கால ஆயுத கலாச்சார நடவடிக்கைகள் தமிழ் சமூகத்தின் பயங்கரவாத முகத்தையே காட்டியுள்ளது. ஆயுதங்களால் தமது தமிழ் மக்களை, சகோதர சிங்கள மக்களை, சகோத முஸ்லீம் மக்களை, இந்திய மக்களை இப்படி எல்லா தளங்களிலும் ஆயுதம் தவறினை இழைத்துவிட்டது. எமது சமூகம் இனிமேல் ஆயுதம் தூக்கும் தகுதியை இழந்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வது என்பதே பிரதானமானது. தமிழர்கள் இலங்கையில் அரசியல் உரிமைகளுடன் வாழ வேண்டும் அதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதே புலம்பெயர் தமிழர்களின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர வன்முறையை தூண்டுவதாகவோ அல்லது பிரிவினையை தூண்டுவதாகவே இருப்பது மீண்டும் முள்ளிவாய்க்கால்களையே உருவாக்கும்.
வன்முறையையும், ஆயுதக்கலாச்சாரத்தையும் மறுத்து ஜனநாயக வழிமுறைகளை பேணி இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் நேரம் இது இன்றுள்ள நிலைமைகளில் ஒரு பொதுவான தமிழர் கூட்டமைப்பு புலம்பெயர் நாட்டில் அவசியமாகின்றது.
புலிகளை ஆதரித்தோர், ஆதரிக்காதோர், இலங்கை அரசை ஆதரிப்போர், ஆதரிக்காதோர் என பலரும் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான தளம் உருவாக்கப்படல் வேண்டும். ஏற்கனவே உள்ள தளங்களும் அமைப்புகளும் தொடர்ந்து தாம் இயங்கவும் அதனூடாகவும் ஒரு பொது அமைப்பில் ஈடுபடக் கூடியதுமான அமைப்பையும் மனநிலைகளையும் வளர்த்துக் கொள்வதின் அவசியம் உருவாகியுள்ளது. புலம்பெயர் நாட்டிலுள்ள பெரும்தொகை தமிழர்கள் பலம்பொருந்திய அமைப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் தற்போது ஒவ்வொரு புலம்பெயர் தமிழர்களாலும் உணரப்படுகின்றது.
கடந்தகால தவறுகள் பிழைகளை விட புலம்பெயர் தமிழர்களின் ஜக்கிய பொது தளத்துக்கு முன்னுரிமை கொடுத்து இயங்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
This entry was posted on Sunday, March 13th,
2011 at 11:12 pm and is filed under சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள். You can follow
any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own
site.
14
Comments so far
1. பல்லி on
March 14, 2011 10:12 pm
சோதிலிங்கம்
உங்கள் பேச்சு நிதானமாக உள்ளது; அது செயல்படுமோ இல்லையோ என்பதுக்கு அப்பால் உங்களை
போன்ற எண்ணம் கொண்டவர்களை ஒன்று சேர்க்கும்; மேலும் சந்திப்பு விபரமும் இதில் இருந்தால்
நல்லாக இருக்கும்; முடிந்தால் இனைத்து விடுங்கள்;
நட்புடன் பல்லி;
நட்புடன் பல்லி;
2. kovai on
March 15, 2011 2:35 pm
இனப்படுகொலை
என்பது அறுவது ஆண்டுகளுக்கு மேலாக ஓரினத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பார்வையாளனாகிய சர்வதேச சமூகம் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பார்வையாளனாகிய சர்வதேச சமூகம் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாடழிந்து
போகிற ஆதிக்குடிகளில் ஒன்றாக தமிழ் சமூகம் போய்விடப் போகிறது.
உலகமயமாதலின் பின்னணியில், சர்வதேசத்தமிழர், அதற்குத் துணை போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
உலகமயமாதலின் பின்னணியில், சர்வதேசத்தமிழர், அதற்குத் துணை போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
“…கடைசியாக,
மே மாதம் 15 ஆம் திகதி அளவில் – தாம் முல்லைத்தீவில் தரையிறங்குவதற்கான அனுசரணையை இந்தியாவிடம்
கேட்ட போது,
‘நாம்
விரும்பிய விதமாகவே போர் நடந்து கொண்டிருக்கின்றது. நாம் அதைப் பார்த்துக்கொள்கிறோம்.
நீங்கள் விலகி இருங்கள்’
என்று
தம்மிடம் இந்தியாவால் சொல்லப்பட்டதாக அமெரிக்கத் தரப்பால் உருத்திரகுமாரனிடமும் பத்மநாதனிடமும்
சொல்லப்பட்டது…”
என்று
மறுஆய்வு இணையம் தன்னிடம் சுவடிகள்
[ “திரு. பத்மநாதனுடன் சேர்ந்து இந்த முயற்சியல் ஈடுபட்டவர்களுடனான தொடர்புகளும், அதற்கான அனைத்து ஆதாரங்களும், ஆவணங்களும் மறு ஆய்விடம் உள்ளன.”
-http://maruaaivu.wordpress.com/2011/03/10/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e2%80%a6/#comments] இருப்பதாக மார்தட்டுகிறது.
[ “திரு. பத்மநாதனுடன் சேர்ந்து இந்த முயற்சியல் ஈடுபட்டவர்களுடனான தொடர்புகளும், அதற்கான அனைத்து ஆதாரங்களும், ஆவணங்களும் மறு ஆய்விடம் உள்ளன.”
-http://maruaaivu.wordpress.com/2011/03/10/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e2%80%a6/#comments] இருப்பதாக மார்தட்டுகிறது.
மீண்டும்
இந்தியாவை நம்பு என ‘இந்திரா காந்தி அறக்கட்டளைக்காரன்’, ‘காங்கிரஸ்தான் இந்தியாவென’
நடைபயணம் செய்கிறான். அதற்கு ஆலாபனை செய்து, ஒரினத்தையே வேரறுக்க முயற்சிப்பது அறிவுடைமையானதா?
ஏகபோக உரிமையை நாம் வைத்திருக்கக் கூடாது என்றபடியே, இந்தியாவிடம் மட்டும், எம்மை தாரைவார்க்கும் அறிவு நியாயமானதா?
ஏகபோக உரிமையை நாம் வைத்திருக்கக் கூடாது என்றபடியே, இந்தியாவிடம் மட்டும், எம்மை தாரைவார்க்கும் அறிவு நியாயமானதா?
மீண்டும்
பொன்மானை அல்லது பொய்ம்மானைத் தேடி……….
3. Prof. Soma
on March 15, 2011 3:36 pm
சோதிலிங்கம்
நீங்கள் இனப் பிரச்சினை எனக் கருதுவது எதனை ? தமிழ் மக்களினுடைய அபிலாசை எனத் திரும்பத்
திரும்பக் கூறி வருகிறார்கள். இந்தத் தமிழ் மக்கள் யார் ? யாழ்ப்பாணத் தமிழ் மக்களா
? கொழும்புத் தமிழ் மக்களா ? மட்டக்களப்புத் தமிழ் மக்களா ? வன்னித் தமிழ் மக்களா
? மலையகத் தமிழ் மக்களா ? யார் ? அல்லது தலித்துக்களா ? யார் ?.
அண்மையில்
நாடறிந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா ஒரு பேட்டியில் கூறியிருந்த ஒரு விடயத்தை இங்கு
குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். தமிழ் மக்களினுடைய பிரச்சினைக்கு என்ன
காரணம் எனக் கேட்கப்பட்டபோது அவர் கூறியிருந்தார் : ” இலங்கை தமிழ் நாட்டுக்குப் பக்கத்தில்
இருப்பது”.
அண்மையில்
நான் சிங்கள நண்பர் ஒருவரினுடைய அழைப்பில் மாத்தறைக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு
பாடசாலையில் மாணவர்கள் வரவு 20 வீதம். இதன் காரணத்தை அறிந்தபோது எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது. ஏனெனில் அவர்கள் சாப்பாட்டிற்காக தொழிலுக்குப் போய் விட்டார்கள் என எனக்குக்
கூறப்பட்டது.
தமிழ்
மக்களைவிட தென்னிலங்கை மக்களுக்கு பிரச்சினைகள் அதிகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள
வேண்டும்.
தமிழ்
மக்களின் ஒரு சிறு பிரிவினரின் அபிலாசைகளுக்காக முழு இலங்கை மக்களதும் வாழ்க்கையை பணயம்
வைக்க நாங்கள் ஒரு போதும் இடமளிக்கக்கூடாது.
சோதிலிங்கம்
திரும்பவும் கேட்கிறேன் தயவுசெய்து தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் என்ன என்பதை கூறுங்கள்.
அவர்களது அபிலாசைகள் எனத் தமிழ் இனவாதத் தலைமைகள் திரும்பத் திரும்பத் தெரிவிப்பதை
தெளிவுபடுத்துங்கள்.தமிழ் மக்களதும் சிங்கள மக்களதும் பிரச்சினைகளுக்கு இடையில் உள்ள
வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துங்கள்.
நன்றி.
4. nantha on
March 15, 2011 4:37 pm
அமெரிக்கா
எதற்குப் போனது? அமெரிக்க எடுபிடிகளான புலிகளைக் காப்பாற்றவா அல்லது தமிழ் மக்களைக்
காப்பாற்றவா?
சென்சிலுவைச்
சங்கமே காயப்பட்ட மக்களை அம்போ என்று விட்டு விட்டு காயம்பட்ட புலிகளைப் பாதுகாப்பாக
கடத்தியுள்ளது.
ஆனால்
தற்போது 1987 ஆம் ஆண்டு சூழ்னிலை கிடையாது. இந்தியா கொடுக்க இருந்த 50,000 வீடுகளுக்கும்
ஆப்பு வைத்தவர்கள் யார்? அதனை கண்டு பிடிக்கிறீர்களோ இல்லையோ அது முஸ்லிம்களின்
“தனித்துவ” தலையீடு என்பது பலருக்கும் புரியும்.
13
ஆவது திருத்தம் அதே முஸ்லிம்களால் தகர்க்கப்படும் என்பதனைச் சொல்லத் தேவையில்லை. முஸ்லிம்களுடன்
பாதிரிகள் கூட்டணி சேர்ந்து குளப்பியடிக்க காத்திருப்பது தெரியாத விஷயமல்ல. புலிகளின்
பிரதினிதிகள் பாதிரிகள் என்பது சொல்ல வேண்டிய தேவையில்லை.
இந்தக்
குளப்பங்களைவிட இன்னமும் பத்து வருடத்துக்கு ராஜபக்ஷ இருந்தால் பல பிரச்சனைகள் காணாமல்
போய்விடும். 13ஆவது திருத்தத்துக்கு அவசியம் என்ன என்ற கேள்வியே எழும்!
5. T
sothilingam on March 15, 2011 9:12 pm
பல்லி
கோவை சோமா நந்தா உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி. தொடர்ந்தும் இங்கே கருத்தாடல்கள்
செய்வோம்.
சோமா
தமிழர்களின் பிரச்சினைகள் என்பது உலகில் உள்ள மக்களுக்கும் உள்ள பிரச்சினைகளை விட வித்தியாசமானது அல்ல. இது இந்தியாவில் இலங்கையில் பாக்கிஸ்தானில் பங்களாதேஸ்சில் உள்ள தொழிலாளர்களுடைய பிரச்சினைகளைப் போன்றதேயாகும். தொழிலாளிகள் தமது வேலையும் வேலைகள் பற்றிய பிரச்சினைகளும் தனது வேலையின் சம்பளம் தனது கையில் கிடைக்க வேண்டும் என்ற சர்வதேசப் பிரச்சினைகளில் ஒன்றே தான் (இவை மேலும் விரிவுபடுத்தி பேசப்படல் வேண்டும்)
தமிழர்களின் பிரச்சினைகள் என்பது உலகில் உள்ள மக்களுக்கும் உள்ள பிரச்சினைகளை விட வித்தியாசமானது அல்ல. இது இந்தியாவில் இலங்கையில் பாக்கிஸ்தானில் பங்களாதேஸ்சில் உள்ள தொழிலாளர்களுடைய பிரச்சினைகளைப் போன்றதேயாகும். தொழிலாளிகள் தமது வேலையும் வேலைகள் பற்றிய பிரச்சினைகளும் தனது வேலையின் சம்பளம் தனது கையில் கிடைக்க வேண்டும் என்ற சர்வதேசப் பிரச்சினைகளில் ஒன்றே தான் (இவை மேலும் விரிவுபடுத்தி பேசப்படல் வேண்டும்)
இலங்கையில்
இனப்பிரச்சினை எனப்படுவது இலங்கையில் உள்ள இரு இனங்களில் ஒன்று தன்னை மற்ற இனத்தைவிட
பல தளங்களில் வேறுபாடாக அரசு நடாத்துவதாக கருதுகிறார்கள். இந்தக்கருத்தை இலங்கையின்
இனவாதிகள் தமது அரசியல் பாராளுமன்ற கதிரைகளுக்காக பயன்படுத்தி பிரச்சினைகளை பூதாகாரப்படுத்தி
தமது சுயலாபங்களுக்காக இனக்குரோதங்களை வளர்த்து இரு இனமும் இரண்டாக பிளவுபட்டு இருப்பதே
இலங்கையில் உள்ள இனப்பிரச்சினையாகும்.
இதில்
வேடிக்கையானது என்னவென்றால் இலங்கையின் இரு இனமும் ஒரே கலாச்சாரத்தை கொண்டவர்களை பிளவுடுத்தி
தமது சுயலாபமடைவதை இந்த இரு இனமும் இன்னமும் விளங்கிக்கொள்ள வில்லை என்பதும் இலங்கையில்
உள்ள இனப்பிரச்சினையாகும்.
தமிழ்
மக்கள் என்பவர்கள் தமிழ் மொழியை பேசுகிறவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துபவர்கள்
தமிழர்கள் ஆவர்.
இலங்கையில்
தமிழ் மக்களுக்கும் சிங்கள் மக்களுக்கும் உள்ள பிரச்சினைகள் பல வருடங்களுக்கு முன்னே
ஒரே மாதிரியான பிரச்சினைதான் என்பதில் எந்தவித மாற்று கருத்துமில்லை. சாதாரணமானவர்கள்
தமது அன்றாட ஜீவாதார வாழ்க்கைப் பிரச்சினைகளே மிகமுக்கியமானதாக முதலாவதான பிரச்சினைகளும்
இவற்றை மையப்படுத்தி இதன் அடுத்த சுற்றில் உள்ள பிரச்சினைகள் என்பவைகள் மேற்சொன்ன சாதாரணமானவர்களின்
ஜீவாதாரப் பிரச்சினைகளை வலுப்படுத்தும் அல்லது தடுப்பவைகளாகும். இவை பற்றி அதிமான சாதாரண
மக்கள் புரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள் இந்த விடயங்களில் சமூகத்தின் முன்னோடிகளே
சிந்திப்பார்கள்.
தோழர்
ஜீவா சொன்னது போன்று ”இலங்கை தமிழ் நாட்டுக்குப் பக்கத்தில் இருப்பது” இதில் பலவிடயங்களை
அவர் சொல்லிவிட்டார் இந்தியாவில் உள்ள பழமைவாதம் எவ்வளவுதான் இலங்கைத் தமிழர்கள் ஜரோப்பா
வந்து மாற்றங்களை அங்ககீகரித்து இந்த பக்கத்து நாட்டு வியாதி திரும்பவும் புகுந்துவிடும்
என்பதையேயாகும்.
தமிழ்
மக்களின் ஒரு சிறு பிரிவினரின் அபிலாசைகளுக்காக முழு இலங்கை மக்களதும் வாழ்க்கையை பணயம்
வைக்க நாங்கள் ஒரு போதும் இடமளிக்கக்கூடாது என்ற உங்கள் கருத்தடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்
ஆனால் இந்த சிறு பிரிவினரே இலங்கையில் வரலாற்றில் இலங்கையை இனவாத நாடாக மாற்றியவர்கள்
இந்த ஒரு சிறுபிரிவினரே இலங்கையில் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தமது கைகளில் வைத்துக்கொண்டு
தாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இனவாதத் தீயை வளர்ப்பவர்களாகும். இந்த சிறுபிரிவினரே
இலங்கை மக்களை தமது சுயலாபங்களுக்காக பிளவுபடுத்தி வைத்துள்ளார்கள்.
தமிழ்
மக்களின் பிரச்சினைகள் என்பதும் சிங்கள மக்களது பிரச்சினைகளம் ஒன்றேதான் ஆனால் இதை
இந்த இரு இனமக்களிடமும் இன்று நீங்கள் போய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இலங்கையில்
இனங்களை இரு பெரும் பிரிவுகளாக்கி ஆளப்படுகின்றது. ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு
தான் என்ன என்று கேட்டால் இன்றுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப 13வது திருத்தசட்ட மூலத்தை முழுமையாக
அமுல்படுத்தி மத்தியில் உள்ள அதிகாரங்களை பிராந்தியங்களுக்கும் பரவலாக்கி பிராந்தியங்களையும்
சுயமாக வளர ஊக்குவிக்கும் என்பதேயாகும்.
இதையே
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனலாம்.
இலங்கையில்
தமிழ் இனவாத அரசியல்வாதிகள் தமது பாராளுமன்ற கதிரைகளுக்கே அரசியல் செய்கிறார்கள் மக்களுக்காக
அல்லவே. இப்போ இயக்கங்களிலிருந்து வந்தவர்களும் இந்த குட்டையிலே விழுந்து தமது சுயலாபங்களுக்காகவே
அரசியல் செய்கிறார்கள். இவர்களால் மக்களுக்காக செய்யப்பட்ட ஒரு சிறு துரும்பை உதாரணமாக
காட்டமுடியாதே!
இலங்கையில்
உள்ள தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றி தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு சிறு முன்னேற்றத்தையும்
ஏற்படுத்தவர்கள் தமிழ் மக்களின் தொழில் வாய்ப்புகள் விவசாயம் மீன்பிடி போன்றவற்றிக்கு
உதவி செய்யாதவர்கள் ஒரு குடும்பத்தையாவது முன்னேற்ற உதவி செய்யாதவர்கள் இவர்கள் ஏன்
தமிழ் மக்களின் பெயரில் அரசியல் (வாழ்வியலில் உதவி) செய்ய வேண்டும் இப்படியானவர்களை
மக்கள் இனம்காண மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
6. mao on
March 15, 2011 10:15 pm
இந்திய
முதாலித்துவதிற்கு வக்காளத்து வாங்குவதே ஈ.என். டி.எல்.எப் இன் போராட்டம். பழம்குடிமக்கள்
சாதியால் பிளவுண்டுள்ள மக்கள் விவசாயிகளின் வியப்பூட்டும் தற்கொலை எண்ணிக்கைள். கடை
பூட்டும்வரை காந்திருந்து தாழ்வாரத்தில் ஒருசில மணிநேரங்களை படுத்துறங்க துடிக்கும்
பிச்சைக்காரர்கள்.
இது
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல சகலஇந்தியாவுக்கமே விதிகப்பட்ட விதியாகிவிட்டது.
நாளாந்த
செய்திகள் எமக்கு என்னவோ இந்தியா உலகப்பொருளாதாரத்தில் முன்னேறிவருகிறது என்பதே!.
எமக்கு கிடைக்கும் செய்தியோ! பிச்சைதட்டுகளின் எண்ணிக்கை பல பத்துமடங்ககாக உயர்ந்து
வருவதே!.
விவசாயம்
சாத்தியம் இல்லாதுபோனபோது நகரத்தைதேடி புறப்பட்டவன் யந்திரங்களில் சிக்குண்டவன் தனதுகுடும்பத்தை
மேலும் இயக்கமுடியாமல் வட்டி கந்துவட்டி… இறுதியில் தற்கொலைஎன்கிற முடிவுக்கும் வருகிறான்.
இதற்கு நல்ல உதாரணம் திருப்பூர். திருப்பூர் ஆடைதொழில்சாலைகளில் வேலை செய்பவர்கள்
தற்கொலை செய்யும் எண்ணிக்கை மாதம் ஐம்பதையும் தாண்டிவருகிறது. இந்த இடத்தில் பயண யாத்திரைகளைகாரர்களையும்
இடைமறித்து கேள்வி கேட்கவேண்டியதாக இருக்கிறது.
இந்தியதேசிய முதாலித்துவத்திற்கு இனபிரச்சனை தீர்த்துவைக்கிற தகமையிருக்க முடியுமா? என்பதே. இதற்கு இது பதில் சொல்லமுடியாது என்பது தெரிந்ததே! நடைபயணம் செய்பவர்கள் யாரின் உந்துதலின்பேரில் இந்தபயணத்தை மேற்கொள்ளுகிறார்கள் என்பதையும் தமிழன் யார்? என்பதையும் குறிப்ப்பாக சோமவின் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும் கடமைப்பாடு உண்டு.
இந்தியதேசிய முதாலித்துவத்திற்கு இனபிரச்சனை தீர்த்துவைக்கிற தகமையிருக்க முடியுமா? என்பதே. இதற்கு இது பதில் சொல்லமுடியாது என்பது தெரிந்ததே! நடைபயணம் செய்பவர்கள் யாரின் உந்துதலின்பேரில் இந்தபயணத்தை மேற்கொள்ளுகிறார்கள் என்பதையும் தமிழன் யார்? என்பதையும் குறிப்ப்பாக சோமவின் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும் கடமைப்பாடு உண்டு.
7. nantha on
March 16, 2011 9:52 am
புரபசர்
சோமாவின் கேள்விகள்தான் எனது கேள்விகளும். இயக்கங்கள் ஆரம்பமான பொலுது மாத்திரமல்ல
அதற்கு முன்னரும் “இந்த தமிழ் பிரச்சனை” என்றால் என்ன என்று யாராவது சொல்லுங்களேண்
என்பதற்கும் பதில் தராது கொல்லுவேன், துரோகி என்றுதான் கூவினார்கள்.
தமிழர்கலுக்கு
மாத்திரம்தான் பிரச்சனைகள் உள்ளது போலநடத்தப்படும் பிரச்சாரங்களில் என்ன பிரச்சனை
என்று கோடிட்டுக் காட்ட யாரும் தயாரில்லை. அதனால்த்தான் பல “தமிழ்” கட்சிகள் இருக்கின்றன.
பிரச்சனைகளை
அடையாளம் காணாத வரையில் அவை பிரச்சாரங்களே ஒழிய வேறொன்றுமில்லை!
8. தோஸ்து on
March 16, 2011 10:19 am
//அண்மையில்
நான் சிங்கள நண்பர் ஒருவரினுடைய அழைப்பில் மாத்தறைக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு
பாடசாலையில் மாணவர்கள் வரவு 20 வீதம். இதன் காரணத்தை அறிந்தபோது எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது. ஏனெனில் அவர்கள் சாப்பாட்டிற்காக தொழிலுக்குப் போய் விட்டார்கள் என எனக்குக்
கூறப்பட்டது.// Prof. Soma
மிக மிக அதிர்சியான செய்தி. மகிந்தா தலைமையில் கொம்முனிஸ் ஜாதிககெலஉறுமய முஸ்லிம் காங்கிரஸ் … ஆட்சியால் 80 வீத சிறுவர் பாடசாலைக்கு போகாது சிறுவர் தொழிலாளிகளாக மாறிவிட்டார்களா! ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லை இந்தக் கொடியவர்களின் ஆட்சியின் விளைபயனை கேட்கும் போது. மேன்மைமிகு ஆரியவம்ச மக்களின் நிலையே இப்படியானதெனில் இராண்டதர பிரசைகளாக நடத்தப்படும் தமிழரின் நிலை?? உண்மை செய்தி தந்த Prof. Somaக்கு கோடி நன்றிகள்.
//இந்தியதேசிய
முதாலித்துவத்திற்கு இனபிரச்சனை தீர்த்துவைக்கிற தகமையிருக்க முடியுமா?//mao
இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்றில்லை. அங்குள்ளது மகிந்தா தலைமையில் கொம்முனிஸ் ஜாதிககெலஉறுமய முஸ்லிம் காங்கிரஸ் … ஆட்சியால் 80 வீத சிங்கள சிறுவர்களின் பசியும் பட்டினியும் தான் பிரச்சினையென Prof. Soma சொல்கிறார். நீங்கள் “முதாலித்துவத்திற்கு இனபிரச்சனை தீர்த்துவைக்கிற தகமையிருக்க முடியுமா?” என அர்த்தமற்று புலம்புகிறீர்கள்.
இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்றில்லை. அங்குள்ளது மகிந்தா தலைமையில் கொம்முனிஸ் ஜாதிககெலஉறுமய முஸ்லிம் காங்கிரஸ் … ஆட்சியால் 80 வீத சிங்கள சிறுவர்களின் பசியும் பட்டினியும் தான் பிரச்சினையென Prof. Soma சொல்கிறார். நீங்கள் “முதாலித்துவத்திற்கு இனபிரச்சனை தீர்த்துவைக்கிற தகமையிருக்க முடியுமா?” என அர்த்தமற்று புலம்புகிறீர்கள்.
9. DEMOCRACY
on March 17, 2011 11:26 am
/அத்துடன்
இன்றுள்ள அரசுக்கு ஆதரவாகவும் இன்றுள்ள அரசுக்கு எதிராகவும் என்ற பொறுப்பற்ற முறையில்
தமிழர்களை தமிழர்களின் அரசியல்வாதிகள் நடாத்திச் செல்வதை காண்கிறோம். இந்த விடயங்களில்
இலங்கையில் உள்ள சமூக முன்னணியாளர்களும் புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள
வேண்டியதின் அவசியத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
புலிகளை இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறிந்த பிராந்திய சர்வதேச சக்திகள் எப்படி புலிகளுக்கு எதிராக தாம்(புலம்பெயர்ந்த ஈழதமிழர்) இணைந்து இயங்கினரோ அதேபோன்று இன்று தமிழர்களின் பிரதேச அதிகார பரவாலாக்கத்துக்கு இணைந்து செயற்பட வைக்க புலம்பெயர் மக்கள் வலியுத்த வேண்டும். அன்று அதை செய்தவர்கள் இன்று இதையும் செய்ய வேண்டும்./- ஆமோதிக்க வேண்டும்!.
10. bala on
March 17, 2011 5:50 pm
தமிழ்
மக்கள் என்பவர்கள் தமிழ் மொழியை பேசுகிறவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துபவர்கள்
தமிழர்கள் ஆவர்……
ஆகவே;
தமிழ் மொழியை பேசுகிறவர்கள் தம்மை சோனகர்கள் என்று அடையாளப்படுத்துபவர்கள் சோனகர்கள்
ஆவர். இதிலென்னத்தைக் கண்டு தூக்கிப் பிடித்துக்கொண்டு அடிபடுகிறீங்கள்
11. Ajith on
March 17, 2011 8:52 pm
ஏன்
இந்த பிரச்சினையை இன, மத ரீதியாக அணுகுவதை விட்டு தமிழ் பேசும் பிரதேசம் என்ற ரீதியில்
யாரும் அணுக முடியவில்லை. இலங்கை என்ற தீவில் சிங்களம் தமிழ் பேசும் பிரதேசங்கள் தெளிவாக
வரியருகபட்டு உள்ளன. தமிழ் பிரதேசங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட கிழக்கு இலங்கை
தமிழ் பேசுபவர் களாலும் ஏனைய பிரதேசங்கள் பெரும்பான்மையாக சிங்களம் பேசும் மக்களும்
வாழுகின்ற பிரதேசங்களும் அடங்கும். இந்த நாட்டில் உள்ள பிரச்னை மொழி ரீதியானது. அதாவது
சிங்களம் பேசும் மக்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து தாமே முழ
நிர்வாகத்திற்கும் முழு உரிமை கொண்டாடுவது மட்டுமல்ல சட்டம் நீதி துறைகளை சிங்களம்
பேசும் மக்களுக்கு சாதகமாகவும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி வருவதும்
தான் பிரச்சினை. ஒரு நிர்வாகத்திற்கு மொழி அவசியம் ஆனால் மதம் இனம் என்பன அவசியம் அற்றவை.
இந்த உண்மையை நாம் யாரும் சிந்திபதில்லை.
12. அலாவுதீன்
on March 17, 2011 10:43 pm
பாலா,
நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் நியாயம் “இன விரோத” அடிப்படை வாதத்தில் ஊறியிருப்பவர்களுக்குப்
புரியுமா என்பது சந்தேகமே.
நண்பர்
அஜித், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான அரசியல் மாற்றங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள
இன விரோத அடிப்படை வாதிகள் முயல்வதே இதற்குப் பிரதான காரணம்.
முஸ்லிம்
மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவ உரிமையைப் பறிக்க வேண்டும் என்று திட்டமிட்ட நவீன
முன்னோடி இராமநாதரிலிருந்து இந்தக் கசப்புணர்வு அவ்வப்போது இரு சமூகங்களுக்குள்ளும்
தேவைக்கேற்றவாறு வளர்க்கப்பட்டும், வாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. அருணாச்சலம் போன்ற
கல்வி மான்கள், பகுத்தறிவாளர்கள் தற்போது நீங்கள் கூறுவதைப் போன்று “ஒற்றுமையை”ப் பேணும்
வகையில் தம் கருத்துக்களை முன் வைத்தாலும் கூட அவ்வப்போது இன விரோதிகள் தோன்றி பெறுபேற்றை
இல்லாமலாக்கி மகிழ்ந்திருக்கிறார்கள்.
சோனகர்களை
மொழியடிமைகளாகவும், இன ஆதிக்கத்தின் வினை பொருளாகவும் பாவிக்க முனையாத வரை, “தமிழ்
பேசுவோர்” எனும் நிலையிலிருந்து அவர்களாக விலகிக்கொண்டதில்லை, காலத்திற்குக் காலம்
எதையாவது “உருவாக்கி” பிரிவினைகளை ஏற்படுத்துவோரின் “குரல்” உயர்ந்திருக்கும் அளவுக்கு
அனைவரையும் “சமமாகப்” பார்க்கும் மன நிலையுள்ளவர்களின் “குரல்” கடந்த கால தமிழ் பேசும்
சமூகத்திலும், தற்போதும் “மங்கிய” நிலையில் காணப்படுவதே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை
மாற்றுவதற்கு “பலர்” விரும்பினாலும், “சிலரால்” இது பின்தங்கிக்கொண்டே தான் இருக்கிறது.
எதிர்காலத்திலாவது உருவாகுமா ?
13. bala on
March 19, 2011 10:48 pm
“தமிழர்
பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது”- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ்
கட்சித் தலைவர் சோனியா காந்தி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக உண்மையான கரிசனைகளை கொண்டிருப்பதாக
தாம் கருதுவதாக இலண்டனில் அவரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்
தமிழோசையிடம் தெரிவித்தார்.
லண்டனில்
உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் உரையாற்ற வந்த சமயத்தில் சோனியா காந்தியை தாம் சந்தித்துப்
பேசியதாக சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
சோனியா
காந்தியிடம் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள்,அங்கு தற்போது நிலவும் சூழல் குறித்து
தாம் பேசியதாகவும் அப்போது சோனியா காந்தி “அந்த வீடியோவை நானே நேரில் பார்த்தேன். மிகவும்
கவலைப்படுகிறேன்” என்று தமது கண்ணை நேரில் பார்த்து கூறியதாகவும் சுரேன் தெரிவித்தார்.
தானும்
தமது அரசாங்கமும் தமிழருடன் இருப்பதாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இலங்கையின்
இறுதி கட்டப் போரில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி புலம்
பெயர் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சோனியா
காந்தியின் லண்டன் வருகையை கண்டித்துக் கூட ஒரு போராட்டம் லண்டனில் வியாழக் கிழமை நடைபெற்றது.
இருந்தும்
இந்த சந்திப்பின் போது இலங்கை நிலவரம் குறித்து தமது கவலைகளை இந்திய அரசு இலங்கையிடம்
தெரிவித்ததாக கூறிய சோனியா காந்தி, போர் குற்ற விசாரணைகள் குறித்து கருத்து தெரிவிக்க
மறுத்து விட்டதாகவும் சுரேன் சுரேந்திரன் கூறினார்.
டிரினிடாட்
நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் இருந்த அந்த சமயத்தில்
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தம்மோடு சோனியா காந்தி, 11 நிமிடங்கள் பேசியதாக
அவர் கூறினார்.
சோனியா
காந்தியின் சந்திப்புக்கு பின் இலங்கை விடயத்தில் அவரது கருத்துக்கள் உண்மையாக இருப்பதாகத்
தமக்குத் தென்படுவதாகவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
BBC
NEWS
14. BC on March
20, 2011 2:56 pm
இங்கு
புரபெஸர் சோமா,MAO, நந்தாவின் கருத்துக்கள் சிந்திக்க தக்கவை.
கடை பூட்டும்வரை காந்திருந்து தாழ்வாரத்தில் ஒருசில மணிநேரங்களை படுத்துறங்க துடிக்கும் பிச்சைக்காரர்கள்.
கடை பூட்டும்வரை காந்திருந்து தாழ்வாரத்தில் ஒருசில மணிநேரங்களை படுத்துறங்க துடிக்கும் பிச்சைக்காரர்கள்.
MAO கூறியது தான் இந்தியாவின் நிலை. அப்படியிருக்கும் போது இந்தியாவில் சோசலிச சமதர்மத்துக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற இயக்கம், இந்தியாவில் பல தாய்கள் மிக மோசமான நிலையில் வாழும் போது தீவிர புலி ஆதரவாளர் மதிமுக கட்சி தலைவர் வைகோவை குற்றம் சாட்டுகிறது தனது வினவு இணையத்தில். எதற்க்காக என்றால்!
//பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.//
——–
//சோனியா காந்தியின் சந்திப்புக்கு பின் இலங்கை விடயத்தில் அவரது கருத்துக்கள் உண்மையாக இருப்பதாகத் தமக்குத் தென்படுவதாகவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.//
அப்போ இனி சீமான், வைகோ காங்கிரஸுக்கு (திமுக கூட்டணி) ஆதரவு தெரிவிக்க போகிறார்களா?
No comments:
Post a Comment