Search This Blog

Friday, 16 May 2014

இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். - தமிழ் பெளத்தர்கள் ஒரு பார்வை. : நோர்வே நக்கீரா

March 3rd, 2009

முப்பது வருடங்களுக்கு மேலாக விழும் பிணங்ளை பிழை பிழையாக எண்ணியே கணக்குப் படிகிறார்கள் எங்கள் பிள்ளைகள். ஆமியில் ஒரு பிணம் இரண்டாகவும், தமிழ் பிணம் அரையாகவுமே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கு என்னவழுத்தமோ யாரறிவார். அரசும் அதிகாரங்களும் ஆமிப் பிணங்களைக் காற்பங்காகவும் தமிழர் பிணங்களை தலைக்கு நான்கு மேலாகவும் கணக்கெடுத்து வரவு வைக்கிறது. புதிய கணித மேதைகள் எங்கள் நாட்டில் இப்படி உருவாகிறார்கள். வாழ்க கணிதம்.

இலங்கையில் போரானது அடிப்படையில் அர்த்தமற்ற கணக்கு என்பதை எத்தனைபேர் அறிவார்கள். இதை முதலில் சிங்கள அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அரசு அழிக்க நினைப்பதும் அழிப்பதுவும் தமதுடன் பிறப்புக்களான தமிழர்களையே.

காலங்காலமாக சிங்கள அரசியல் நலனுக்காகவும், சிங்கள நலனுக்காகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதே மகாவம்சம். திறந்த மனங்கொண்டவர்களால் இதைத் திருத்தியமைக்கக்கூட முடியவில்லை. தேசியம் தேசியம் என தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கட்டியெழுப்பியது துவேசத்தையும் பிரிவினையையும் இனவிரோதங்களையுமே.
இலங்கை பல இராசதானிகளை காலங்காலமாகக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவை யாழ்பாண, கோட்டை, கண்டி இராச்சியங்களாகும். சில காலகட்டங்களில் தென்னிந்திய தமிழ் அரசுகள் முக்கியமாக சோழ பாண்டிய அரசுகள் இலங்கையில் கோலோச்சியுள்ளன. சிங்களவர் தம்மை ஆரியரென்றும் உயர்ந்தவர்கள் என்றும் மகாவம்சம் கூறிக்கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. விஜயன் வடஇந்தியாவில் இருந்து வந்தான் என்றும் அவன் இங்குள்ள கறுப்பும், கட்டையுமான வேடுவப் பெண்ணை மணந்தான் என்றும் கட்டுக்கதைகளை விட்டு இலங்கையில் ஒர் அர்த்தமற்ற இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

விஜயனும், நண்பர்களும் துஸ்டர்கள் என்று ஒரிசார், பீகார் போன்ற இந்திய மேற்குப் பகுதியில் இருந்து அரசனான விஜயன் தந்தையால் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் இலங்கையில் கரையொதுங்கி வேடுவகுலத்தை திருமணம் செய்ததால் சிங்களவினம் உருவானது என்பது ஒருகதை. நல்ல உயரமும், அழகும், பராக்கிரமமும் கொண்ட இந்திய விஜயனும் நண்பர்களும் இப்படிப்பட்டு கறுப்பும் குள்ளமான குவேனியையும் வேடுவிச்சிகளையும் கல்யாணம் கட்டினார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிறதா? தவித்தவாய்க்குத் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மை….?

மதமாற்றங்கள் :
தேவநம்பியதீசன் எனும் இந்து மன்னன் வேட்டையாடிக் கொண்டு இருக்கும் போது ஒருகுரல் கேட்டுத் திரும்பினான். அந்தக் குரல் கூறியது ”மானைத் தொடரும் மன்னரே மதியத் தொடர்வீராக” இது ஒரு பிச்சுவின் குரல். இதனை அடுத்து பல மூளைச்சலவையின் பின் தீசன் புத்தனானான் அவனைத் தொடர்ந்து அவன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களும் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.
புத்தமதமானது சாம்பிராட் அசோகனின் காலத்தில் அல்லது அதற்குப்பின்தான் இலங்கைக்கு வந்திருக்க முடியும். அப்போது இலங்கையில் வேறு ஒருமதம் பிளக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத்தவர்கள் என்று வாதிடுவார்களானால் இவர்கள் அசோகன் காலத்துக்குப் பிந்தியவர்கள் என்பது உறுதி. இதன் பிரகாரம் சிங்கள இனம் மட்டுமல்ல மதமும் வந்தேறியதே.

சுமார் 13ம் நூற்றாண்டுகளில் வடபகுதியான யாழ்பாணத்தில் தொற்றுநோய் காரணமாக பெருந்தொகையான மக்கள் அழிந்தார்கள். இதனால் யாழ் மன்னன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து குடியும் குடித்தனமுமாக தமிழர்களை யாழ்பாணத்தில் குடியேற்றினான். இதனால்தான் யாழ்பாணப்பகுதியில் வாழ்பவர்கள் பேசுவது சிலவேளை மலையாளிகள் பேசுவதுபோல் இருக்கிறது என்று இந்தியத் தமிழர்கள் சொல்வார்கள். சிங்கள மக்களும் அரசும் தமிழர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் முன்பே வந்து நாடு பிடித்தவர்கள் உரிமையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். இதுவே சிங்களவரின் வெறுவாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகிற்று.
இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் புத்தகாப்பியங்கள் என்பதினூடாகவும் புத்தமதம் தமிழுக்கு அன்நியமில்லை என்பதும் நிரூபணமாகிறது. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பலபகுதிகளில் புத்தமதத்தைச் சார்ந்து இருந்துள்ளனர். ஒரே மொழியில் பலமதம் என்பது இயற்கையான ஒன்றென்பது கண்ணூடு. இதே போன்று தமிழ்மொழியைக் கொண்ட பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே காலத்திலேயே யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

யாழ்பாணத்தில் மாதகலுக்கருகில் சம்பில்துறை எனும் சிறிய கடற்கரைக் கிராமம் உள்ளது. அது ஒரு துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். சம்பில்துறை எனும் பெயரிலேயே அது துறைமுகம் என்பது துலங்குகிறது. அங்கேதான் சங்கமித் திரை எனும் பிச்சுணி வந்து இறங்கினாள் என்று சரித்திரம் கூறுகிறது. 80 களில் இக்கிராமத்துக் கடற்கரையில் அன்று நாம் சென்று குளிப்பது வளக்கம். அங்கே ஒரு கற்தூண்வளைவு வீழ்ந்து கிடந்தது. அதுதான் சங்கமித்திரை வளைவுவாகும். அவள் கொண்டுவந்த வெள்ளரசுதான் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் அன்று நின்றது இன்று நிற்கிறதோ தெரியவில்லை. கல்வளைவு வைக்கும் அழவிற்கு யாழ்பாணத்தில் தமிழர்களும் அரசும் புத்தமத்தைச் சார்ந்திருந்தார்கள் அல்லது வரவேற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

புத்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமெங்கும் சிங்களவர்தான் இருந்தார்கள் என்று எண்ணுவதும், விவாதிப்பதும் குருட்டுத்தனமானது. புத்தமதம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது குருட்டு விவாதமே. புத்தம்சார்ந்த மணிமேகலையின் கதையைக் காவிமாக எழுதிய இளங்கோவடிகள் மலையாளப் பகுதியில் இருந்தே அதை எழுதினார் அதை ஏன் தமிழில் எழுதினார்? மலையாளத்தில் எழுதவில்லை? இன்று மணிமேகலை தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளமெனும் மொழி இல்லாது இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சி மொழியில்லாது இருந்திருக்கலாம். பௌத்தம் தமிழுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அன்று இருந்திருக்கிறது என்பது சான்று.

உங்கள் மனங்களில் தமிழர்களும் இந்துமதம் எப்படி என்று கேள்வி எழலாம். தமிழர்கள் ஒரு காலத்தில் சிவனை, முருகன், வைரவர், காளி, வீரபத்திரர்களை வணங்கும் சைவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சிவனை வணங்கும் சைவமானது சமணம், வைஸ்ணவம் புத்தம் போன்ற மதங்களால் அழிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக புத்தமத வருகையால் சைவம் முற்றாக அழியும் நிலைக்கத் தள்ளப்பட்டது. அரசர்கள் மதம் மாறும் வேளை மக்கள் விரும்பியும், விரும்பாமலும் மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள். சமயகுரவர்கள் தான் மீண்டும் சைவசமயத்தை தென்னிந்தியாவில் கட்டி எழுப்பினார்கள் என்பது தான் வரலாறு.

இலங்கையில் தென்னிந்தியாவின் பாதிப்பு என்றும், ஏன் இன்றும் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. சைவ மதவழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மேற்கு இந்தியாவிலும் இன்றைய பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதிலும் இருந்த இந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ கரப்பா எனுமிடங்களில் நாகரீகமடைந்த ஒரு இனமாக வாழ்ந்தார்கள். ஆரிய வருகை, படையெடுப்புக்களால் வேடுவத்தன்மை குன்றிய திராவிடர்களான தமிழர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் கீழ்பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்பது சரித்திரம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் தமிழர்கள் இயற்கையையும் சிலர் சிவலிங்கத்தையும் வணங்கினார்கள் என்று அறியப்படுகிறது. இது பற்றிய ஆய்வு இக்கட்டுரைக்கு முக்கியமற்றது.

மதவருகைகளாலும் அரசர்களின் மதமாற்றங்களாலும் மொழியில் பல மாற்றம்களும் புதிய மொழிகளும் உருவாயின. உதாரணம் திராவிடமொழிகளான கர்னடம், மலையாளம், தெலுங்கு, துலு. தமிழ்தாய் வணக்கப்பாடலில் இதைக் கேட்கலாம் இந்தத் துலுவே உலகஅழகி ஐஸ்வரியாவின் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திராவிட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்தே உருவாயின. இந்து, பௌத்த மதங்களின் வருகைகளே மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு மொழிதானே இனத்தை வரையறுக்கிறது. இதனால் புதிய இனங்கள் உருவாயின. தமிழும் 70 விகித வடமொழியும் சேர்ந்தே தெலுங்கும், 40விகித வடமொழியால் மலையாளமும் உருவாகியது. இதே போன்றே இலங்கையில் சிங்களமும் உருவாகியது என்பதை அறிக. பௌத்தமதத்தின் மந்திரங்களான பிரித்துகள்கள் முக்கியமாக வடமொழியிலும் பாழியிலும் தான் இருந்தது. பாழிமொழி இருந்த இடம் தெரியாது வடமொழிக்கு முன்னரே செத்துவிட்டது. இப்படியான மொழிக் கலப்புக்களால்தான் புதிய இனங்கள் உருவாயின.

இந்தியா பல்லின மக்களையும் மதங்களையும் கொண்ட ஒருநாடு. மதங்கள்தானே உலகில் போர்களின் வித்தாக இருக்கிறது. சரி சிங்களவர் சொல்வது போல் அவர்கள் வடநாட்டில் இருந்து வந்திருந்தால் சிங்கள மொழியில் எப்படித் தமிழின் ஆளுமை ஆழமாக அமைந்திருக்கும். ஆக உண்மை என்னவெனில் மதம் மட்டுமே வடமொழி மந்திரங்களுடன் (பிரித்துகள்களுடன்) வந்ததே தவிர மக்களான திராவிடத் தமிழ் இயக்கர் நாகர் அங்கேயே இருந்தார்கள் என்பதே உண்மை. சிங்களவர்கள் வடவிந்தியாவில் இருந்துதான் வந்தார்கள் எனின் இவர்கள் இலங்கையின் ஆதிகுடியல்லர். இங்கே திராவிடர் ஆரியர் என்ற கதைக்கே இங்கு இடமில்லாது போகிறது. ஆரியம் என்பது ஒருநிலையற்ற சமன்பாடாகும். கிட்லரும் ஒரு சாதிப்பட்டியல் வைத்திருந்தான். அதில் யூதரும் கீழத்தேயத்தவர்களும் நாய்களுக்குக் கீழான சாதியென்றே குறிப்பிட்டிருக்கிறான்.

கடைசி மன்னன்:
இலங்கையின் கண்டி மன்னனும் கடைசி மன்னன் தமிழனான விக்கிரமராஜசிங்கன் என்பது யாவரும் அறிந்ததே. இவனுடைய இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவனை சிறீவிக்கிரமராஜாசிங்கன் என்று அழைப்பது வழக்கம். சிங்களவர் வாழும் பகுதி கண்டி, அங்கே சிங்களவர் தான் வாழ்ந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். முழுக்க முழுக்க சிங்களவர் வாழும் பகுதியில் எப்படி ஒரு தமிழரசன் உருவாகியிருக்க முடியும். இவன் எங்கிருந்து தன்படையுடன் குதித்தான் என்று கூற முடியுமா? கப்பம் கட்டாத சிங்களச் சிற்றரசர்களை சிறைப்பிடித்து அவர்கள் தலையை வெட்டி உரலில் இட்டு அவர்கள் மனைவியரைக் கொண்டு இடிப்பித்தானென்று கூறப்படுகிறது.
இயக்கர் - நாகர்:
மனிதன் குரங்கிலிருந்து வந்தாலும் சரி, மனிதனில் இருந்து வந்தாலும் சரி ஒரு சங்கிலித் தொடராய் மரபணுச்சங்கிலி என்றும் இருக்கும். இயக்கர் நாகர் என்று இரண்டு இனங்கள் இலங்கையில் இருந்ததென்றால் அவை ஒன்றுக்கொன்று இரத்த உறவுடன்தான் இருந்திருக்க முடியும். வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இங்கும் சிங்களவரும் தமிழரும் இரத்த தொடர்புடையவர்கள் என்பது தெளிவாகியது. தந்தை வேறானாலும் தாய் ஒன்றாக இருந்திருக்கலாம். இயக்கருடன் இந்தியாவின் வடபகுதியில் இருந்து தந்தையால் துஸ்டர்கள் எனத்துரத்திவிடப்பட்ட விஜயனும் நண்பர்களும் கலந்து வந்த வம்சம்தான் சிங்களவர் என்று மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறாயின் இவர்கள் வந்தேறு குடிகள் என்பது உறுதியாகிறது. பீகார் அசம் போன்ற பகுதிகளின் சிங்கக்கொடி முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.
இதேபோன்றே தமிழர்கள் நாகரின் வம்சாவளி என்பதற்கும் சிலசான்றுகளை நாம் முன்வைக்கலாம். இந்தியாவின் தென்பகுதியில் நாகர்பட்டினம், நாகர்கோவில் என்றுண்டு. இதேபோல் இலங்கையின் வடபகுதியில் நாகர்கோவில் உண்டு. இந்தியாவில் திருநெல்வேலி போல் யாழ்பாணத்தில் திருநெல்வேலி என்றொருகிராமம் உண்டு. உணவுமுறை கலாச்சரப் பின்ணணிகளில் நாம் தென்னிந்தியரை ஒத்திருப்பது முக்கிய சான்றாகிறது

பூகோளமாற்றம்:
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நடந்தே போகக்கூடிய தரைவழிப்பாதை இருந்தது. இப்போ இராமாயணம், பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இராமபாலம் என்பது பற்றி நீங்கள் வினாவலாம். ஆம் அது வெறும் கட்டுக்கதையே. தரைவழிப்பாதை இருக்கும் போது எதற்குப் பாலம்? ஆபிரிக்காவில் இருந்து அஸ்திரேலியா வரையிலான நாடுகள் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது என்பது ஆய்வு. இதைக் குமரிக்கண்டம் என்றும் லெமூரியாக்கண்டம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில் சுனாமி, நிலக்கீழ் அசைவுகளால் கண்டம் கடலுடன் இழுபட்டுப் பிரிந்தது. அப்போ இலங்கைத்தீவு மட்டும் இந்தியாவின் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது, இருக்கிறது.

பூகோளரீதியாக இலங்கை இந்தியா ஒரே நாடாகவே இருந்தது சான்று. பல சுனாமிகளாலும், நிலவசைவுகளாலும், கடலரிப்புக்களாலும் இலங்கை மீண்டும் காலப் போக்கில் பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. பூகோளரீதியாக இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கை முழுவதும் திராவிடரே இருந்தார்கள். இயக்கர்களும் திராவிடரே. திராவிடரைத் தவிர இன்னொரு இனம் அங்கு வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு புதிய இனம் உருவாகியிருக்குமானால், அது இலங்கையில் தென்பகுதிகளில் வாழ்ந்த திராவிட இயக்கருடன் கலந்ததாகவே இருக்க முடியும்.

அரசியல் பிழைப்புக்காக வோட்டு வங்கிகளை நிரப்ப இனத்தை சாதியையொரு கருவியாகப் பாவித்ததின் பலனே இன்றைய இலங்கை அழிவாகும். அன்று அரசியலில் தலைமை தாங்கிய எல்லா சிங்கள அரசியல்வாதிகளின் பேரன் பூட்டன் எல்லாம் தமிழர்களாகவே உள்ளார்கள். உ.ம்: டட்லிசெனநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா..!! இல்லையென்று கூறமுடியுமா?

இயக்கர் நாகர் என்ற இருவேறுபட்ட குழுக்கள் சாதிவழிகள் இருந்தனவென்றால் சிங்களவர் தமிழர்களை வைத்து மரபணுப்பரிசோதனை எடுத்தால் உண்மை புலனாகும். ஒரே நாடு என்று தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு இதைச் செய்யுமா? இந்தச் சோதனையில் அடிப்படை நேர்மை மிக முக்கியமானது. இந்தப் பரிசோதனையை உலக நாடுகள் நடுநிலையுடன் செய்து எடுத்து வைத்த விஞ்ஞான முடிவை வைத்துக்கொண்டு போரைத் தொடர்வதா விடுவதா? என்பதை அரசும் புலிகளும் தீர்மானிக்கட்டும். இதற்குப் பின்பாவது நாங்கள் இது வரை கொன்றது எமது சகோதரங்களா- இரத்த உறவா? இல்லையா? என்பது புரியும். செய்யுமா அரசு? உதவுமா உலக நாடுகள்? ஓரு கூட்டு முடிவையும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மட்டுமல்ல இனிவரும் காலங்களில் வரவிருக்கும் இன்கலவரங்களைத் தடுப்பதற்குமாக இதைச் செய்வீர்களா? போலித்தனமான, பொய்மையும் இதயசுத்தியுமில்லாத சமாதான உடன்படிக்கைகள், வட்ட மேசை மகாநாடுகள் எமக்கு வேண்டாம். தேசியம் எமது நாட்டில் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்குமானால் இன்று எமக்கும் இலங்கைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

காலங்காலமாக பேச்சுவார்த்தை, வட்டமேசை மகாநாடுகள் எந்தப் பலனையும் அழிக்கவில்லை, அழிக்கப் போவதும் இல்லை. குத்து வெட்டுக்குரோதங்களை மனங்களில் வளர்த்துவிட்டு ஒரேநாடு, ஜனநாயமென்று கதைப்பதும், கொல்வதும் அழிவையே தொடர்ந்து ஏற்படுத்தும். இன்று அரசு புலிகளை அழிக்கலாம். நாளை தோன்றும் புரட்சியையும் இனக்கலவரங்களையும் தடுக்க முடியாது. ஒரேநாடு என்றால் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரசு முன்வைப்பது முக்கியம். ஒற்றுமைக்கான அடித்தளங்களை இருபகுதிகளில் கட்டி எழுப்புவதுடன் மக்களிடையே நாம் இலங்கையர் என்ற தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தாது ஒர் ஐக்கிய இலங்கையை நினைத்தும் பார்க்க இயலாது.

மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என்று முழக்கமிடும் இராஜபக்ச ஐக்கிய இலங்கை பற்றி எப்படிக் கதைக்க முடியும். துவேசப் பிக்குகளின் கட்டுக்கதைப்படி மகாவம்சம் கூறுகிறது தமிழன் ஈனச்சாதி கொல்வது பாவம் இல்லை என்கிறது. புத்தமத்தில் முதலும் மூலமுமே கொல்லாமையாகும். கொல்லு எனக்கூறும் மகாவம்சம் எப்படி ஒரு புத்தநூலாக இருக்க முடியும்?  புத்தனின் பல்லைப் பிடுங்கிவந்தவர்களா தமிழர்களை விடப்போகிறார்கள். இப்படிப்பட்ட துவேசத்தை வளர்க்கும் மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என முழக்கமிடும் இராஜபக்சவால் நாட்டில் எப்படி ஒரு அமைதியான ஐக்கிய இலங்கையை நிறுவமுடியும். இது எமக்குக் காட்டும் சமிக்ஞையானது தமிழ்பேசம் தமிழர்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்படுவார்கள் என்பதாகும்.

இன்று யாழ்ப்பாணத்தை துப்பாக்கி முனையில் வாய்மூடி மௌனியாய் வைத்திருப்பது போன்று தொடர்ந்தும் வைத்திருக்க இயலாது. இன்று புலிகளை அழிக்கலாம், ஆனால் வெகுசனம் வெகுண்டெழுந்தால் எல்லாம் தவிடுபொடியாகும். இன்றைய இலங்கையின் அரசதலைவர் தன்னரசியல் வாழ்வைத் தக்கவைக்க புலிகளை அழிப்பது என்று தமிழர்களையும் ஏழை எளிய சிங்களச் சிப்பாய்களையும் களபலியெடுத்தும், கொடுத்தும் கொண்டு இருக்கிறார். சிங்கள மக்களிடையே புரையொடிக்கிடக்கும் பொருளாதார, வேலையின்மைப் பிரச்சனைகளை மறைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் தமிழர், புலியழிப்பு போர் நடக்கிறது. இலங்கையானது அயல் நாடுகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஏலம்போட்டு விற்று, ஆயுதங்கள் பெற்று வங்கி பெட்டிகள் எல்லாம் நிரப்பி முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலில் வெல்லுவதும் உறுதியாயிற்று.

புலிகளை ஓரங்கட்டியபின் சிங்கள மக்களிடையே எழவிருக்கும் வெகுஜனப்போராட்டத்துக்கு முகம்கொடுக்க அரசு தயாரா? ஒரே நாடு என்பவர்கள் ஒரேமக்கள், பொதுவேலைத்திட்டம் துவேச அழிப்பு, அது பற்றிய விளக்கங்கள், சட்டதிருத்தங்கள் என்ற குணங்குறிகளைக் காட்டுங்கள். அன்றேல் சிங்கள, தமிழ் பகுதிகளில் எழவிருக்கும் புதிய ஆயுதப் புரட்சிகளுக்கு இனிவரும் அரசுகள் முகம் கொடுக்க முடியாத நிலைவரும். இது ஒரு இலங்கைக்கான எதிர்வு கூறலாகும்.

தமிழ்மக்கள் புரட்சிக்கும் போருக்கும் பழக்கப்பட்டவர்கள் பயிற்றப்பட்டவர்கள். எழுச்சி என்று வரும்போது புரட்சியடைய நேரம் காலம் எடுக்காது. புலிகளை முற்றாக அழிப்பது மிகக்கடினம். அப்படி அரசால் முடிந்தால் அடுத்து இலங்கை அரசு எதிர்கொள்வது ஒரு தேசிய பொதுவுடமைக்கான ஆயுதப்புரட்சி என்பதை யாரும் மறுக்கக்கூடாது. இதை சிங்கள தமிழ்மக்கள் இணைந்தே செய்வார்கள் என்பது திண்ணம்.

சரித்திரரீதியாகவும், விஞ்ஞான ஆய்வுரீதியாகவும், தர்க்கரீதியாகவும் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பது உண்மை. புத்த சின்னங்கள் இருக்கும் இடமோ அன்றி அகழ்வுகளில் எடுக்கப்படும் இடமோ சிங்களவர்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இக்கட்டுரையில் தமிழ்பேசும் முஸ்லீங்களைத் தனியாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. இவர்களும் தமிழர்கள்தான் இஸ்லாத்தை மதமாகக் கொண்டுள்ளனர்.

இன்று அரசு நடத்துவது ஒரு குருட்டுத்தனமான அரசியலும், தூரநோக்கற்ற சுயலாப வியாபாரமுமே. சிங்கள மக்களை ஏமாற்றும் உத்தி. மகாவம்சத்தை நிறைவேற்றுவதன் ஊடாக புலியழிப்பு போர் எனும் போர்வையில் தமிழின அழிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.

உங்கள் கருத்து

This entry was posted on Tuesday, March 3rd, 2009 at 12:06 am and is filed under
நக்கீரா, ::இனப்பிரச்சினைத் தீர்வு. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
37 Comments so far

Nackeera on March 3, 2009 12:44 pm
நன்றி ஜெயபாலன். இக்கட்டுரை இன்றைய தேவை என்று கருதுகிறேன்
1.     palli on March 3, 2009 1:04 pm
பல்லிக்கு ஒரு சந்தேகம் இலங்கைக்கு சுகந்திரத்தை (அப்படிதானே சொல்லி மிட்டாய் கொடுக்கிறார்கள்) கொடுத்த பிரிட்டிஸ்நாடு இந்தா வைத்துகொள் எனவா கொடுத்திருக்கும். பல யாப்புகள் எழுதியிருக்காதா?? இந்த தமிழர் சிங்களர் பிரிவினையோ அல்லது பங்கீடுகளையோ எப்படி எழுதி இருக்கும். அப்போதே தமிழருக்கு சாபகேடு வைத்தார்களா? அல்லது அதன்பின் வந்த சிங்கள அரசுகள் தமக்கு இதமாக யாப்புகளை தயாரித்தனவா? அந்த தயாரிப்புக்கும் அன்றய சேர் பொன் போலவும் இன்றய கருனா மற்றும் சிலர்போல் அரசின் ஆக்கிரமிப்புக்கு துணை போனார்களா? ஒன்னுமே பல்லிக்கு புரியுதில்லை. யாராவது புரித்தால் எழுதுக்கோவன்.
சரி அப்படியானால் பிரிட்டிஸ்அரசிடம் அந்த யாப்பின் பிரதி இருக்கும்தானே? அதை லண்டன்வாழ் தமிழ் கல்விமான்கள் பார்வையிட முடியாதா? இந்த திருவிளையாடலை சுகந்திர கனியாக இருவரிடமும் கொடுத்து நாரதர் வேலையை செய்த பிரிட்டிஸ் இதுக்கு ஒரு தீர்வை சொல்லக்கூடாதா??
என்னடா இது பல்லி கேனைதனமாய் எழுதுகிறது என யோசிக்க வேண்டாம். தெரியாத லெனினை போராட்டத்தில் தூக்கி நிறுத்தின இயக்கங்கள் இந்த சுகந்திர சிந்து விளையாட்டை சொல்லாதது அவர்களுக்கும் தெரியாதோ என்னவோ.

2.     யெயக்குமார் on March 3, 2009 10:15 pm
தங்கள் நீண்ட கட்டுரைக்கு நன்றி.
இவர்களுடை முன்னோர்கள் தமிழர்களென்பது வை.கோ(தெலுங்கர்) தன்னையும் தமிழர் எனச் சொல்லிக்கொள்வது போலுள்ளது.நாயக்க என்பது தெலுங்கு நாயக்கர்களை மாத்திரமே குறிக்கும்.அவர்கள(நாயக்க-நாயக்கர்) தமிழ் வேந்தர் பலம் குன்றிய வேளை பாலை நில மறவர் உதவியுடன்(காட்டிக் கொடுப்பு)தமிழ்நாட்டுக்குள் புகுந்து இன்று வரையிலுள்ள சகல சீர்கேடுகளுக்கும் காரணமாயிருப்பவர்கள்.தாங்கள் குறிப்பிடும் “தமிழர்; சிங்களவர் ஒரே இனம்” என்பது உண்மை.அது வேறு விதத்தில்.
யெயக்குமார்

3.     Nackeera on March 3, 2009 11:33 pm
பல்லி கேட்பது நியாயமானது தான். என் சிறிய அறிவுக்கு எட்டியவரை பதில் எழுத முயல்கிறேன். ஆரம்பகாலங்களில் தமிழர் சிங்களவர்களுக்கிடையில் பெரிய பிரச்சனைகள் இருக்க வில்லை காரணம் பொது எதிரி. உ+ம்: இந்தியா இராணுவம் இலங்கையில் நின்றபோது சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு உதவி செய்தது> அரசு புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்தது. முதன் முதலில் சிங்களவர் பிரச்சனையை ஆரப்பித்ததே முஸ்லீங்களுடன்தான் ஆதாரம்: விக்கிபேடியா. இது நோவேயின் மொழியில் உள்ளது. இதன் பொருள்”முதன் முதலில் சமநிலை குலைந்து பிரச்சனை ஆரம்பித்தது தமிழ் சிங்களவர்களுக்கு இடையில் அல்ல> சிங்கள முஸ்லீங்களுக்கிடையே 1915ல் தான்.

De første motsetningene omkring denne «strukturelle ubalansen» hadde likevel ikke vært mellom singaleser og tamiler, men mellom singaleser og muslimer i 1915. Muslimene var fratatt deres muligheter om å delta i maktfordelingen og medvirkning mens de buddhistiske singaleserne var meget frustert over deres redusterte betydelighet i forhold til de andre religioner, spesielt den protestantisk-kristne gjennom den britiske kolonimakten
இதன் ஆங்கிலப்பிரதியை இங்கே தருகிறேன்.

Ali had inadvertently omitted the vital fact that the “first major racial riot in Sri Lanka in 1915” was between Muslims and Sinhalese Buddhists. However the Sinhalese Buddhists and Muslims attempt to fake communal harmony between themselves, the hostility flares up frequently at unexpected times.
பழைய சிங்கத்தலைவர்களுடன் ஒரே பாடசலைகளில் படித்த எமது பழந்தமிழ் தலைவர்களும்> வெள்ளைக்காரப் பெண்ணைத்திருமணம் செய்த பொன் இராமநாதனும் அவரின் கட்சியுமான தேசிய காங்கிறசும் எதிர்காலச் சந்ததியைப்பற்றி யோசித்திருப்பார்கள் என்பது சந்தேகம்தான். சேர் பொன் இராமநாதனை தேரில் வைத்து இழுத்தார்கள் தெரியுமா?

அன்று கலிங்கம் என அழைக்கப்பட்ட இன்றைய ஒரிசாவில் இருந்துதான் புத்தம் 3ம் நூற்றாண்டில் பிக்கு மகிந்தாவால்தான் புத்தம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. சிங்களவர்கள் நம்புவது போல் விஜயனுடன் புத்தம் வரவில்லை என்பது உறுதியாகிறது. தரவு இலங்கைவிபரணம். அப்படியே அதை ஆங்கிலப்பிரதியை இங்கே தருகிறேன்.

The island was also invaded by the kingdoms of Kalinga (modern Orissa) and those from the Malay Peninsula. Buddhism arrived from India in the 3rd century BCE, brought by Bhikkhu Mahinda, who is believed to have been the son of Mauryan emperor Ashoka. Mahinda’s mission won over the Sinhalese monarch Devanampiyatissa of Mihintale, who embraced the faith and propagated it throughout the Sinhalese population.
இதேபோன்று இயக்கரை அரக்கர்கள்> பேய்>துர்தேவதைகள் என்றும்> நாகரை நாகம் என்றும் எண்ணப்பட்டது. இது மகாவம்சம் சொல்வது. இது உண்மையோ பொய்யோ அரக்கர் இருந்ததற்கு சான்றுகள் இன்றும் தெரிகிறது. சிங்களவ இனம் இயக்கரில் இருந்து வந்தாகவும் கருதப்படுகிறது. இயக்கர் இலங்கையின் தெற்குப்பகுதியில் வாழ்ந்தார்கள். சீதையும் தெற்கிலே சிறைவைக்கப்பட்டாள் (மித்தலோயி)கூட்டிக்கழித்து மீதியைக் கணக்குப்பாருங்கள்.

The earliest chronicles the Dipavamsa and Mahavamsa say that the island was inhabited by tribes of Yakkhas (demons), Nagas (cobras) and devas (gods). [8] These may refer to totemist iron age autochthones.

வெள்ளையர் ஆட்சியில் மதங்கள் முக்கியமாக துவேசிக்கப்பட்டது. இதில் முக்கியமானது இஸ்லாம். தமிழர்கள் முக்கியமாக ஆங்கிலேயர்களின் நன்மதிப்புக்குரியவர்ளாய் இந்ததானாலும் ஆங்கிலேயர் தமிழ் சிங்கள இடைவெளியை துவேசத்தினூட விரிவித்ததாலும். இன்று நாம் இந்த நிலையில் நிற்கிறோம்.

4.     Nackeera on March 4, 2009 12:07 am
ஜெயக்குமார்! வை.கோ வை வன்னியர் என்கிறார்கள். அவரது சரித்திரம் எனக்குத் தெரியாது. இந்தோ ஐரோப்பிய மொழிகளு க்கு மூலமொழியாய் இருந்தது வடமொழி. மொழி ஆய்வாளர்க ளும் விஞ்ஞானமும் ஒப்புக்கொண்ட உண்மை. இதோபோன்றே தமிழும் வடமொழிகாலத்தில் சிறந்திருந்தது. பலதமிழ் சொற்கள் திசைச்சொற்களாக வடமொழியில் கலந்திருந்தது.

தமிழ் வடமொழி இரண்டுமே ஆதிமொழிகளாக இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். தெலுங்கு>கன்னடம்> மலையாளம்> துலு இவை அனைத்தும் தமிழ் வடமொழிக்கலப்புக்களே. திராவிடமொழிகளான இவை வடமொழி இந்துபாப்பணிய வருகைகளால் கலப்புற்றதால் தமிழில் இருந்து விலகி கலப்பு மொழிகளாக மாறின. ஆகவே வைகோவின் தாய்மொழி தமிழாக இருப்பதாலும்> வைகோவின் பீட்டுனோ பீட்டனின் பீட்டனே தமிழனாகத்தான் இருந்திருப்பான்.
திராவிடருக்கு உரிய பண்புகள் அகன்ற தோழ்கள்> கறுப்பு நிறம்> சிறந்த கட்டிடக்கலைஞர்கள். இதைக் கோவில் அமைப்புகளில் இன்றும் காணலாம். வடஇந்திய இந்துக்கோவில்களுக்கும்> தென்னிந்திய கோவில்களுக்கும் கட்டிட அமைப்பில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இனி வைகோ யார் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

உலகின் மிக மிகப்பழமைவாய்ந்த மொழிகள் மூன்று. 1) எரித்திரியா எத்தியோப்பியாவில் இருந்த கெஸ் எனும் மொழி. இதுவே அம்காரிஸ் திகிரின்யா எனும் மொழிகளின் தாய்மொழி என்று கருதப்படுகிறது 2) தமிழ் திராவிடமொழி 3) வடமொழி இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய்மொழி.
இனப்பரம்பல் போல் மொழிப்பரம்பலையும் நாம் பார்க்கலாம். வடமொழியில் இருந்து ஏழை எழிய மக்களினூடாக வளர்ந்ததுதான் கிந்தி. கிந்தியின் சத்தத்தையும் அராபிய எழுத்தையும் கொண்டது தான் பாக்கிஸ்தானியர் கதைக்கும் உருது. மேற்பக்கமாகப் போக அராபிய மொழியும்> இரானியி அராபிக்கலப்பாக குறுடிஸ் மொழியும் பரிணாமம் பெறுகின்றன. இவற்றை விபரிக்கப்போனால் ஒருபெருங்கட்டுரையே எழுதலாம். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

5.     Nackeera on March 4, 2009 12:13 am
சிறீமா பரம்பரை நாயக்கர்கள் என்கிறார்கள். இலங்கையின் கண்டி அரசனும் கடசியரசனுமான சிறீவிக்கிரமராஜசிங்கனையும் நாயக்கர் என்னிறார்கள். இவை சாத்தியமாக இருக்கலாம். சிறீமாவோவின் 2பரம்பரையைப் பின்நோக்கிப்பார்த்தால் தமிழர்கள்தான் உள்ளார்கள்.

6.     palli on March 4, 2009 11:17 am
ஆக தமிழர்தான் இலங்கையை ஆழுகிறார்கள் என உங்கள் ஆய்வுகள் சொல்லுகிறது. இதுக்குதான் ஆய்வுகளும் அளவோடு இருக்க வேண்டுமென சொல்லுவது. பாருங்க ஆய்வுகூட சர்வதேசத்தோடு சேர்ந்து தமிழர்க்கு எதிரியாக உள்ளது (சொன்னது பல்லியல்ல சிலரது பின்னோட்டம்)

7.     vijayakumar on March 4, 2009 3:03 pm
அட்ரா சக்கை என்டானாம். 60களில் கூத்தணியினர் ஒரு கதைசொல்லி (அதுதான் ஆண்ட பரம்பரை)வாக்குகளை அள்ளி மிளகாய் அரைத்து அப்புறம் தங்கத் தம்பிகள் வந்து புதிய கதை சொல்லி ததிங்கிணத்தோம் பாடும் இவ்வேளை திரும்ப என்ன புதிய கதை. அப்ப சிறிமாவோட புருஷன்ட இரண்டாவது அக்காட புருஷன்ட பெரியப்பாட மச்சான்ட மூத்த தாரத்துன்ட கொள்ளுப்பேரன்தான் பிரபாகரன் ஆகவே பொதுமக்களே …….ஐயா ஆளை விடுங்கய்யா !என்ட பிள்ளைகளெல்லாம் பிரான்ஸ் சிற்றிஸன்கள். என்ட அக்காட குடும்பம் நோர்வே சிற்றிஸன்கள். அண்ணன் குடும்பத்தோட பெல்ஜியத்தில பல வருடமாக இருக்கின்றார். பெண்டாட்டியின்ர சகோதரம் எல்லாம் அமெரிக்காவில கிறீன்கார்ட் ஹோல்டர்.

நக்கீரன்! சிலம்டோக் மில்லயனர், நான்கடவுள் என நிறைய படங்கள் வந்துள்ளது. அதைப் போய் பாருங்கள். இந்த பழைய பஞ்ஞாங்கங்களை தூக்கிவந்து கொதிப்பேத்தாதேயும்.
பல்லி! இதுக்கு நச்சென ஏதாவது இச்சுக்கொட்டுங்களேன். பிளீஸ்.

8.     சுரேஸ் எம்.எம்.ஏ on March 4, 2009 7:40 pm
ஆமாம் விஜயகுமார். இதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்க முடியாது. பிரான்ஸ் நோர்வே பெல்ஜியம் அமெரிக்கா என்று உலகம் முழுவதும் நாம் வேரூன்றி கிளைகள் வியாபித்து எங்கள் சைவத்தையும் சாதியையும் இன்னும் ஆழமாக வளர்ப்போம். அகழ்வாராய்ச்சியாளர்கள் பொழுது போக்குக்காக வெய்ய வேண்டிய வேலையை நக்கீரன் கிண்டி எடுத்துக்கொண்டு வந்து எழுதுகின்றார். விடுங்கோ விஜயகுமார். நாங்கள் எந்த நாட்டு சிற்றிசனாக மாறினாலும் பத்துப் பொருத்தமும் பார்த்து, குலம் கோத்திரம் பார்த்து வீரகேசரி மணவிளம்பரம் கணணியில் இன்னமும் செய்து கொண்டுதானே இருக்கிறோம். நக்கீரனென்ன நக்கீரனை எரித்த சிவனே வந்தாலும் நாங்கள் மாறப் போவதில்லை என்பதில் உறுதியா இருக்கிறோம்தானே. அது போதும். சும்மா ரென்சனாகாதேங்கோ.
சுரேஸ் டபுள் எம்.ஏ

9.     Kullan on March 4, 2009 9:13 pm
எனக்கு நக்கீரனின் கருத்துடன் உடன்பாடுண்டு. இரகசியமாக ஊருக்குள்ளை (தமிழ்பகுதிகளில்) அரசங்கன்றுகளை நட்டுவிட்டு இங்கே சிங்களவர்தான் இருந்தார்கள் என்று புத்தகோவில்களை கட்டி புத்தபிச்சுக்களை கொண்டுவந்து இருந்தி சிங்களமயமாக்கும் அரசு இக்கட்டுரைக்கு என்ன சொல்லப்போகிறது. நான் அறிந்தவரையில் புத்தமதம் இலங்கையில் நுளைந்ததே வடபகுதியில் என்று நான் வாசித்த ஞாபகம் இருக்கிறது.

நக்கீரன் பார்வையில் இலங்கையை வெள்ளையரைத் தவிர என்றும் திராவிடரே ஆண்டிருக்கிறார்கள்- ஆள்ளிறார்கள் என்று எண்ணுகிறேன். உங்களால் வைகோவை தமிழன் என்றும் திராவிடன் என்றும் ஏற்க முடிகிறது ஏன் சிங்களவரையும் சிறீமாவையும் ஏற்க மறுக்கிறீர்கள். சுரேஸ் சொல்வது போல் சிந்திக்க மாட்டோம் என்று ஏன் அடம்பிடிக்கிறீர்கள். ஏன் இப்படி இருக்கத்கூடாது என்று சிந்தித்துப்பாருங்கள்.

10.   Nackeera on March 4, 2009 9:45 pm
என்கட்டுரைக்கு பின்னோட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி. பின்னோட்டமும் தர்க்கங்களும் ஆரோக்கியமானதாக இருந்தால் நல்லது. பழையது என்று நாம் ஆய்வுகளை கொச்சைப்படுத்துவதூடு நாம் எமது ஆணிவேரை அறுக்க முயலுகிறோம். மாதவி தாசிகுலத்துவள் என்று இளங்கோவடிகள் விட்டிருந்தால் மனிதருள் மாணிக்கமான கோவலனின் மகளான மணிமேகலையை உலகம் அறிந்திருக்காது. நல்லவைகள் எல்லாம் நாறியிருக்கும். இன்று எமக்குக்கிடைத்த நல்ல நூல்கள் கிடைக்காது மனிதவர்க்கமே வளர்ச்சியடையாத மிருகங்களாக வாழ்ந்திருக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் அகழ்வாய்வுகளும் பழமையைப் போணலும் நிறையவே நடக்கின்றன. புத்தனின் பல்லை கொணர்ந்து பாதுகாத்துக் கொண்டாடும் சிங்களவர்களுக்கு இருக்கும் பேணல் எமக்கு இல்லையே என்பது வருத்தத்துக்கு உரியது.

11.   palli on March 4, 2009 10:53 pm
நக்கீரன் கோபிக்க வேண்டாம் பல்லிக்கு இப்படி யோசிச்சே பழகிபோச்சு. சிலவேளை இந்த வரலாறு எல்லாம் எமது பின்னோட்டம் போல் இருக்குமா. அல்லது ஒருவர் இருட்டுக்கை இருந்து தனக்கு பிடித்ததை எழுதியிருப்பாரா?

கோவலன். இவர்தானே கண்ணகியையும் திருமணம் முடித்து வீட்டில் இருத்திவிட்டு மாதவி வீட்டுக்கு குச்சுபிடி பழக போனவர். அப்படியாயின் அவர் மனிதருள் மாணிக்கம்தான். //வளர்ச்சியடையாத மிருகங்களாக // சிங்கமும் புலியும் தானே? இதுதானையா இன்று பிரச்சனை.

12.   ஜெயக்குமார் on March 5, 2009 12:08 am
Nackeera on March 4, 2009 12:07 am ஜெயக்குமார்! வை.கோ வை வன்னியர் என்கிறார்கள். அவரது சரித்திரம் எனக்குத் தெரியாது.

From:ஜெயக்குமார்
தங்கள் கருத்துக்களில் பிறர் தெரிந்து கொள்ள வேண்டியவைகளுமுண்டு. சுருக்கியுள்ளீர்கள். வை.கோ அசல் தெலுங்கர். அவரின் பெயருக்குப்பின்னே அவரின் சாதிப்பட்டமுண்டு கவனியுங்கள். அது வையாபுரி கோபால்சாமி நாயக்கர் (நாயுடு) என்பதாகும்.அதன் சுருக்கம் தான் வைக்கோ என்பது. இவர்களை வடுகர் என அழைப்பர். இவர்களின் தொப்புள் கொடி சிறிதளவு (வடுகர்) யாழ்ப்பாணத்திலுமுண்டு.சரித்திர ஆதாரங்களின்படியும் நடைமுறை உண்மைகளின்படியும்.

13.   Ruban on March 5, 2009 1:05 am
பின்னூட்டங்களில் நாங்கள் முக்கியமான ஒரு விடயத்தை தவறவிடுகிறோம். நக்கீரா சொல்ல வந்த முக்கியமான விடயம்
1. இலங்கையில் இருந்த பெளத்தர்கள் அனைவரும் சிங்களவர்கள் அல்ல. தமிழ் பெளத்தர்களும் இருந்துள்ளார்கள்.
2. சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு அடிப்படைகளில் ஒரே வகையினர். - பிரித்தானிய அரசியின் டிஎன்ஏ அலகுகளில் குறிப்பிட்ட விகிதம் (சரியாகத் தெரியவில்லை) கறுப்பின டிஎன்ஏ கலப்பு உள்ளதாம். அப்படியானால் தமிழ் - சிங்கள மக்களிடையெ உள்ள கலப்புப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்ல உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்கள் என்ன மொழி பெசினாலும் என்ன மதத்தை பின்பற்றினாலும் அடிப்படையில் அவர்கள் ஒரேமாதிரியானவர்களே.

14.   Nackeera on March 5, 2009 10:49 am
நான் சொல்ல வந்த விடயத்தை ரூபன் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன். உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அவைவரும் ஒரே சாதிதான்.

இலங்கையருக்கும் கறுப்பினத்தவர்க்கும் மரபணுத்தொடர்புகள் இருப்பதற்குச் சாத்தியம் உண்டு. காரணம் ஆபிரிக்க ஆசிய நிலப்பரப்புக்களை இணைத்து லெமூரியாக்கண்டம் இருந்தது என்றும் கடலகோள்களால் இழுபட்டுச் சென்றது என்பதும் வரலாறு. இன்றும் இதற்கான அடித்தளத்தைக் காணலாம். பூகோளப்படத்தில் அவுஸ்ரேலியா கண்டத்தையும் அதைச்சுற்றிய நாடுகளையும் எடுத்து வந்து இந்தியாவின் கீழ் பொருத்திப்பாருங்கள் வரைபடம் ஒரே நிலமாகும். காவரிப்பூம்பட்டினம் இன்று கடலினுள் கிடக்கிறது காரணம் கடல்கோள். என்ன தொடர்புகள் இருந்தாலும் விகிதாசாரத்தில் வித்தியாசப்படும். கல்தோன்றி முள்தோன்றாக்காலத்திலேயே முன்தோன்றிய மூத்த குரங்கு நாம் என்றால் எமக்கும் கறுப்பினத்தவர்களுக்கு மட்டுமல்ல வெள்ளையருக்கும் மரபணுத்தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

எனது விவாதம் என்னவெனில் 2500 வருடங்களுக்கு முன் இலங்கைத்தீவுக்கும் இந்தியாவுக்கும் நிலப்பாதை இருந்தது என்றால் தமிழர் (நாகர்அடி)செறிந்து வாழும் பகுதிகளைத் தாண்டி உள்ளே சிங்களவர் (இயக்க அடி)எனும் ஒரு புத்தம் புதிய இனம் உருவாகி இருக்க இயலாது. வெள்ளரசை நட்டுவிட்டு இங்கே சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் எனும் அரசின் வாதம் முற்றிலும் மூடத்தனமானது என்பதே என்விவாதம்.

பல்லி என்ன சொன்னாலும் நான் கோவிப்பதில்லை. காரணம் பல்லியல்லவா நான் ஆரூடத்தை நம்பாவிடிலும் பல்லியை நம்புகிறேன். கோவலனை மனிதருள் மாணிக்கம் என்று கூறவில்லை. குப்பையில் குண்டுமணிபோல் கோவலனுக்கும் இப்படி ஒருமாணிக்கம் மணிமேகலை என்றேன். புலி சிங்கம் இரண்டுமே மிருகம், - வேட்டைக்குரிய மிருகம்- அவற்றின் கைகளில் கொலைக்கருவிகளைக் கொடுத்தவர்களின் மனநிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் அமைதிவேண்டி நிற்பார்களா? சிங்கக்கொடியைப் பார்த்தால் வெட்டுவேன் என்கிறது. புலிக்கொடி அதைவிட மோசமானது. மனிதனுக்குத் தேவை அமைதி. ஒருநாட்டில் தேசியக் கொடியில் கூட அமைதியைக் காணோம். நாட்டில் எப்படி??? முதலில் கொடிகளை மாற்றினால் பார்ப்பவனின் மனதிலாவது அமைதி வரட்டும்.

15.   Nackeera on March 5, 2009 11:03 am
ஜெயக்குமார் நீங்கள் சொல்வது உண்மை. நீங்கள் கூறியதுபோல் நான் சுருக்கியுள்ளேன் தான் காரணம் பெரிய சரித்திரத்தை இங்கு எழுத இயலாது தானே. இந்த வடுகர் கோவியர் பற்றிய சிலவிடயங்களை நான் வாசித்ததுண்டு. நீங்கள் சொல்வதை விட வேறு விளக்கமும் எண்டு. யாழ் மன்னர்கள் சிங்களமக்களைச் சிறைபிடித்து வந்து குறிப்பிட்ட இடங்களில் கூலிவேலைகளுக்காகவும், வீட்டுவேலைக்காகவும் வைத்திருந்தார்கள். இவர்கள் உண்மையிலேயே சிங்களவிவசாயிகள் என்பதாகும். சிங்களத்தில் இவர்களை கோவியாஸ் என்று அழைப்பர். இது மருவியே கோவியர் என்று வந்தது. சுண்ணாகம் போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட புத்தசிங்னங்கள் அவர்களின் வணக்கத்துக்குரியதாக இருந்திருக்கலாம். இவர்களை சிறைக்கோவியர், சவம்காவிக்கோவியர் என்னப்பல தொழில் குறித்த குறியீடுகளால் அழைக்கப்பட்டனர். வைகோ, இராமதாஸ் போன்றவர்கள் தாம் வன்னியர்கள் என்கிறார்கள். இது எந்தவன்னி என்பதுதான் புரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை நாயக்கர்கள் திராவிடர்கள் தான்.

16.   palli on March 5, 2009 11:41 am
நக்கீரா உம்மிடம் இருந்து சில விடயங்களை வெளிகொனரவே நகைசுவயாய் எழுதினேன். மற்றபடி எனக்கு வரலாறு பற்றி விமர்சிக்க தெரியாது. தெரிந்து கொள்ள அதுவும் தேசத்தின் விமர்சனமூடாக உண்மை வரலாறு தெரிந்து கொள்ள விருப்பம். மன்னிக்கவும். தொடருங்கள்.

17.   ஜெயக்குமார் on March 5, 2009 6:22 pm
நாயக்கர்கள் திராவிடர்கள் தான். ஆரியரல்ல ஆரியர் தமிழருமல்ல. மிக நீண்டகாலத்துக்கு முன்பு ஒரே இனமாக இருந்திருக்கிறார்கள். இராமதாஸ் வன்னியர் தான். வைக்கோ அல்ல. தமிழகத்தில் தமிழ் வேந்தர் ஆட்சி அதிகாரம் வீழ்சியடைந்த பின்பு தலைமையிழந்த வேந்தர் மரபினர் அடக்கப்பட்டு பண்ணையாட்களாய் வீழ்ச்சியடைந்தனர். தமிழ் வேந்தர் ஆட்சியதிகாரம் மறைய உதவியவர்களாகிய (காட்டிக்கொடுத்தவர்க்கு)வெள்ளாளர்: பாலை நில மறவர்: காட்டு வாணர்: இன்னும் சிலருக்கும் சில பாளையப்பட்டுகள் வழங்கப்பட்டது. தொல்காப்பியத்திலும் இலக்கியங்களிலும் கீழோர் எனக்குறிப்பிடப்படும் சுத்திரர்களாகிய வேளாளர் கை ஓங்கியது. அதன் எதிரொலியே யாழ்ப்பாணச் சீர்கேடுகள். பின்பு யாழ்ப்பாணம் மடப்பள்ளி முதலியார் வெள்ளாளர் வன்னியர் ஆதிக்கத்திலேயே இருந்துள்ளது. சோழ பாண்டிய மாமன்னர்கள் தங்கள் ஆட்சிக்காலங்களில் வெள்ளாளர்களுக்குச் செய்த மிகப்பெரிய நன்மைகளை மறந்து அவர்களின் மரபினர்க்கு தலையில் சிறுநீர் கழித்துவிட்டார்கள்.

18.   Nackeera on March 5, 2009 7:29 pm
எனக்கு வைகோவின் சரித்திரம் அதிகம் தெரியாது. இது ஒருபக்கமிருக்க இன்று சிங்களவர் கூறும் தமிழர்கள் 13ம் நூற்றாண்டுகளில் வந்து குடியேறியவர்கள் ஆவர். இதை வைத்துக்கொண்டுதான் சிங்களவர் குதிக்கிறார்கள். உண்மையில் தொற்று நோய்கள் காரணமாக பெரும் மனிதப்பேரழிவு வடக்கில் நடந்தது. அப்போதுதான் யாழ்மன்னன் அடிமை குடிமைகளுடன் தென்னிந்தியாவில் இருந்து இறக்குவித்து நிலங்களை அவர்கள் பெயரில் எழுதிக்கொடுத்தான் இவர்களில் ஒருபகுதிதான் யாழ்பாணத்து வெள்ளாளர். இவர்கள் இலங்கையின் ஆதிகுடிகளல்லர். இங்கே இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிடுவது முக்கியம். யாழ்மன்னன் சங்கிலியன் வெள்ளையரை விரட்ட தென்னிந்தியாவில் இருந்து போர்வீரர்களைக் கடன்வாங்கினான் என்றும். இந்தப்போர்வீரர்கள் போரில் அக்கரையற்று படையை விட்டு நழுவினார்கள் என்றும். நழுவி வந்தால் நளவர் என்று தாழ்சியுற்றார்கள். மேலும் தொல்காப்பியம் கூற முன்பே வர்ணாச்சாரியங்களை வகுத்தார்கள் பிராமணியள். தொல்காப்பியருக்கு முன்பே வர்ணங்கள் வகுக்கப்பட்டன. என்ன செய்வது சமூகத்தின் பிரதிவிம்பபே ஒரு படைப்பு. இதில் எனக்கு தொல்காப்பியதை குறைசொல்வதில் இஸ்டமில்லை. எங்குபார்த்தாலும் இனத்துடன் மதம் பின்னிப்பிணைந்த இருந்தாலும் இனத்தைப்பிறிப்பாகவும் மதத்தை பிறிம்பாகவும் பார்ப்பது முக்கியம். இதைச் சரியாகப் பார்க்கவில்லை சிங்கள அரசு என்பது தான் என்வாதம். ஒரு பண்டைய இனத்தின் வரலாற்றை நாள் பூராக அல்ல ஆயுள் பூராகவும் விவாதிக்கலாம். மீண்டும் நான் குறுகிக்கொள்ளவே விரும்புகிறேன் விவாதத்திசை மாறாதிருக்க.

ஜெயக்குமார்! உங்களுக்குத் தெரிந்த மற்றய விடயங்களை ஏன் தேசத்தின் வாயிலாக வெளியிடக்கூடாது. ஆரோக்கியமான விவாதங்கள் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு வழிவகுக்கும். நான் தேசத்தை இடைக்கிடைபார்த்து வந்து பின் பின்னோட்டங்களைப் பார்ப்பதினூடு பல்லியின் பகிடிகளை இரசித்து வந்தேன். எனது நண்பன் தோழி இருவரின் இலக்கியம் பற்றிய ஆர்வம் என்னை இதை எழுதத்தூண்டியது. மீண்டும் பழைய இடத்துக்கோ போகிறேன். பலர் தமிழும் சைவமும் ஒன்றென்பார். இதையே சிங்களமும் புத்தமும் ஒன்றென்கின்றனர் சிங்கள அரசம் அரசியலும் பெளத்தமும். தமிழில் இந்துக்களுக்கு எங்வளவு ஆதிக்கம் இருக்கிறதோ அதேயளவு ஆதிக்கம் புத்தமதத்துக்கும் உண்டு.

19.   ஜெயக்குமார் on March 5, 2009 8:25 pm
யாழ்ப்பாண வைபவ கெளமுதி(History of Jaffna)சொல்கிறது வட சிறைக்கோவியரே வடுகரென.வட சிறைக்கோவியர் அடிமைகளாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவரெனின் தென்சிறைக்கோவியரே யாழ்ப்பாணச் சரித்திரம் விபரிக்கும் சிங்களக்கோவிய.இவர்களில் மிக உயரமானவர்களே சவம்காவிகள்.தமிழக ஆய்வாளர் ;கோவியர் கேரளாவிலிருக்கும் கோவி என்ற சமுகத்தைச் சேர்ந்தவர்களெனவும் அவர்கள் இப்பொழுது இலங்கையிலிருக்கின்றாரகளெனச் சொல்கின்றார்கள்.எனது ஆய்வின்படி கோவியர் போர் வீரர்களென்பதாலேயே சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டார்கள். History of Jaffna சொல்கிறது வடமராட்சியிலிருக்கும் நழவர்கள் சிங்கள(துராவ) மரமேறிகளென்றும். சிங்கள மீனவர்கள்(கராவ) முழுப்பேரும் அசல் தமிழரென்றும்.

20.   palli on March 5, 2009 10:56 pm
நக்கீரன் பல்லி இந்த இடத்தை…..பிறப்பிடமாக கொண்டது. பல்லி சிங்களவனா? தமிழனா? அல்லது வன்னியனா, வடுகனா? தொலுங்கனா? தொல்காப்பியனா? என்பதை சொல்லவும். உண்மை தெரியாமல் உறக்கம் குழம்பி விட்டது. இதைதான் சொல்லுறது தெருவிலை போற குடிமகனுடன் குசாலாய் பேசிவிட்டு. குத்திபுட்டான் மூக்கு மீது என முணகுவது. பல்லிதானே இந்த விளையாட்டை ஆரம்பித்தது.
பல்லி

21.   Nackeera on March 6, 2009 8:10 am
ஒரு குரங்கு என்று மனிதனானதோ: அன்றி மனிதனில் இருந்து என்று மனிதன் தோன்றத்தொடங்கினானோ அன்றில் இருந்தே மனிதனோ குரங்கோ இடம்பெயரத் தொடங்கினர்.ஊரும் நிலையில் மனிதன் இருந்தபோது அது ஊரானது. குறுகியிருந்த தால் கிராமமானது. நகரும் நிலைக்கு மாறியபோது நகரமானது. இந்த அசைவுகள் அன்றில் இருந்து இன்று வரையும் வளங்களைத்தேடியே இருந்தன. விஞ்ஞானம் வளர வளர உலகமே ஒரு கிராமம்: நகரம் போலாகிவிட்டது.
பல்லியின் கேள்விக்கான பதில்:அழிந்து போகும் சாதியை தட்டி எழுப்புவது அல்ல எனது நோக்கம். இடம்பெயர்வுகள் அதிகரிக்கும் போது மனிதர்கள் கலப்படையத்தொடங்குகிறார்கள். இது சாதியழிப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது. பாப்பணியம் அழியும் போது சாதியம் அரைப்பங்குக்கு மேல் அழியும். சாதியழிப்பில் பெளத்தம் இந்தியாவில் முக்கிய பங்கை வகிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல்லி எங்கு பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழன் என்பது என்னளவில் பெருமைக்குரியது.

22.   Kullan on March 6, 2009 8:16 am
பின்னோட்டங்கள் கட்டுரையின் கருவிலிருந்து விலத்திப்போவதாக உணர்கிறேன். கட்டுரையின் சாரம் தமிழும் பெளத்தமுமே தவிர சாதியம் அல்ல என்பது எனது எண்ணம்.

23.   palli on March 6, 2009 10:24 am
நன்றி நக்கீரா இந்த பதில் இல்லாமல் (தமிழன்) வேறு ஏதாவது வந்திருந்தால் மிகவும் வேதனையாக இருந்திருக்கும். காரனம் இவ்வளவு அறிவுள்ளவர்கள் கூட சாதியம் பேசுகிறார்களே என. குலன் கவனிக்கவும் சாதியம் எப்படி தவறாக தொன்றியது என நக்கீரன் சுட்டிகாட்டினாரே தவிர அவர் அது சரியெனவோ அல்லது அதுக்கு என்ன தீர்வு எனவோ வாதம் செய்யவில்லை. பல்லிக்கு பிடித்த வசனம். (//இடம்பெயர்வுகள் அதிகரிக்கும் போது மனிதர்கள் கலப்படையத்தொடங்குகிறார்கள். இது சாதியழிப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது.//) ஆகவே எதுவும் நிரந்தமல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள இந்த அள்ளவு அழுவு தேவையா? பலரது குற்றசாட்டு தேசத்தில் என்ன எழுதி கிழிக்கிறார்கள் என. நக்கீரன் போன்ற பலர் எழுதுகிறார்கள். பல்லி போல் சிலர் கிழிக்கிறார்கள்.

24.   Suresh M.M.A on March 6, 2009 12:53 pm
(//இடம்பெயர்வுகள் அதிகரிக்கும் போது மனிதர்கள் கலப்படையத்தொடங்குகிறார்கள். இது சாதியழிப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது.//)

இதுதான் யதார்த்தம். இப்படித்தான் உண்மையில் இருந்திருக்க வேண்டும் ஆனால் வெளிநாடுகளுக்கு நாம் புலம் பெயர்ந்த பின்னும் இன்னமும் தன் சாதியில் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் அவலமும் இன்னமும் மறையவில்லை. ………………………………
சுரேஸ் டபுள் எம்.ஏ

25.   Nackeera on March 6, 2009 7:27 pm
முதன் முதலில் பல்லிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பல்லி சுட்டிக்காட்டிய முக்கியமான விடயத்தை மீண்டும் தொடுகிறேன். குண்டுகளுக்கு சாதிமதம் கிடையாது. அதே போன்று குண்டுகளுக்குப் பயந்து இடம்பெயரும் போதும் சாதிமதம் கிடையாது. பசி வயிற்றைப்பிடுங்கும் போதும் சாதி மதம் கிடையாது. என்று ஒருஇடத்தில் குந்தியிருந்து மனிதன் கொழுக்க வெளிக்கிடுகிறானோ அன்றுதான் அடையாளங்களைத் தேடப் புறப்படுகிறான். அப்போது சாதி முதன்மை அடைகிறது. பிராமணன் போன்று பொய் சொல்பவனை ஐயா போட்டு விழுந்த கும்பிடும் சமூகம். உங்கள் சுற்றம் சூழல் துப்பரபாக இருப்பதற்காக தான் அசிங்கங்களைச் சுமக்கும் கூலித்தொழிலாளியை மதிக்கிறதா?: நான் என்சமூகத்திடம் கேட்பது ஒன்றுதான் செருப்பு மாதிரி இருந்தீர்களானால் வாசலுக்கு வெளியில்தான்: மக்களைச் சுமவுங்கள் மக்களுக்காக தேயுங்கள் மமதைகளுக்கு மண்டியிடாதீர்கள்; செருக்குடன் இருங்கள். தொழிலை உழைப்பை மதிக்காத சமூகங்கள்தான் சாதியை உருவாக்கி வைத்திருக்கும். தொழில்சார்ந்து வந்ததுதான் சாதி ஆகவே உயர்சாதிக்காரன் அதே கழுவல்தொழிலை கையுறையுடன் செய்தால் அவர்களை எப்படி அழைப்பது?

மேலும் சுரேஸ் சொன்ன விடயத்தை கவனத்தில் கொள்வது முக்கியம். மனிதர்கள் புலம்பெயரும்போது எந்த கலை கலாச்சார மத விழுமியங்களுன் வந்தார்களோ அதுவே தமது அடையாளமும் சொத்துக்களும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கு மாற்றங்களும் முன்னேற்றங்களும் வெகுவிரைவாக இருக்கும். உ+ம் மலேசிய சிங்கப்பூர்த்தமிழர்களைக் குறிப்பிடலாம். அடயாளத்தேடல் என்பது அவசியமானதுதான் அது அசிங்கங்களைத் தேடுவதாய் இருக்கலாகாது. பல்லி சொல்வது போல் மாற்றம் என்பது மாறாதது. மாற்றங்களை மகிழ்சியுடன் வரவேற்போம். மாற்றமடையா மனிதனும் மொழியும் வளர்ச்சியடையாது. வளர்ச்சி என்பதும் மாற்றம்தானே ஆகவே மாற்றங்களை மகிழ்சியுடன் வரவேற்போம்.

இன்று போரினால் ஏற்படும் பொருளாதாரச்சிதைவுகள் வேற்றுமைகளை மறக்கவும்; பசி பட்டிணி காரணமாக பொதுவுடமைச் சமூகத்தை உருவாக்கவும் வழிவகுக்கலாம். தமிழ் சிங்களப்பகுதிகளில் வேற்றுமை மாயை அழிந்து பசி எனும் ஆயுதம் தூக்கப்படும்போது பொருவுடமைச் சமூகம் உருவாகும்.

26.   santhanam on March 6, 2009 8:55 pm
புலத்தில் இடம் பெயர்ந்தும் சாதியம் அழியவில்லையே. சாதியம்தான் எமது தேசவிடுதலை போரட்டத்தின் மிக பெரிய தடைக்கல். ஒரு சமுகத்தின் பெரும்பான்மை மற்றய சமுகத்தை அடக்குறார்கள் ஏன் என்றால் எமது தேசத்தில் பிராமணன் சிறுபான்மை, அவன் மற்றவர்களிடம் கையேந்திதான் வாழ்கிறான். ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. இதற்கு விபரமான ஆய்வு தேவை.

27.   palli on March 6, 2009 10:25 pm
சந்தானம் நீங்கள் சொல்லும் விடயத்தில் உனமை இருந்தாலும் அதை தமது சொந்த வியாபாரமாக செய்யும் …….. பார்த்து கொள்வார்கள். ஆனால் நக்கீரன் சொல்லும் விடயம் இவைகள் எப்படி தவறாக தோன்றியது என்பதும் இவை எப்படி அழியும் என்பதுமே. அதை விட அவர் பரிசிலோ அல்லது லண்டனிலோ மகாநாடு கூடுங்கள் என வாதிடவில்லைதானே. எம்மைநாமே தாழ்த்தி உள்ளோமே தவிர நம்மை யாரும் தாழ்த்தவில்லை என்பதுக்கு எமது வரவு தெரிய வேண்டும்.பல்லி பல்லியாக இருக்கும் போது எந்த பிரச்சனையும் பல்லியை அண்டாது. ஆனால் பல்லி அக்குவாகவோ அல்லது நக்கீரனாகவோ ஆசை கொண்டால் அரோகரா சொல்லுவது கூட அராசகமாகதான் இருக்கும்.

28.   ஜெயக்குமார் on March 6, 2009 10:40 pm
சோழர்களின் ராஜ குருக்களாக இருந்த அந்தணர்களான தீக்ஷிதர்கள், சோழரைத்(mallar/pallar) தவிர மற்றவர்களுக்கு முடிசூட்டமாட்டோம் என்று சொல்லி கேரள தேசத்திற்குத் சென்றுவிட்டனர் என்று சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் அவர்கள் குறித்து பெருமையாகக் கூறுகின்றார். உண்மையில் மூவேந்தர்களும் ஒடுங்கிவிட்ட நிலையில், களப்பிரருக்கு முடிசூட்டி, தமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற வாய்ப்பு இருந்தும் அதை அவர்கள் மறுத்தது ஏன்?

29.   ஜெயக்குமார் on March 6, 2009 10:40 pm
விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் ”வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர் என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. (SII ங:253)

30.   Nackeera on March 6, 2009 11:51 pm
சந்தானத்தின் கேள்வி எனக்குச்சரியாக விளங்கவில்லை. என்நண்பனுக்கும் புரியவில்லை. அரசியலின் பெருப்பான்மை சிறுபான்மையை அடக்கி ஆள முயலும். இரண்டாவது இனமோ ஆயுதம் எடுத்துப்போராடும். உ+ம் சிங்கள முஸ்லீம்கலவரமே முதலில் நடந்தது. கடசியில் ஆயுதம் எழுப்பது 2ம் இனமாகமே. ஆனால் சாதியில் அப்படியல்ல. சிறுபான்மையே அதிகாரத்தை வைத்திருந்தது. இதற்கான காரணங்கள் பல. பிராமணர் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் சிறுபான்மைதான். இவர்கள் அடிமடியில் கைவைப்பவர்கள். நம்பிக்கை கைவைப் பவர்கள். உண்மையில் பிராமணன் என்பவன் பிரமத்தை உணர்ந்தவனாகவும் பிச்சையேந்தி உண்பவனாகவும் இருக்க வேண்டும். ஐயர் லிட் போட்டுத்தந்துதானே நீங்கள் பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறீர்கள்.

அரசன் உடல்வலுக்கொண்டவனாக இருந்தாலும் போதியளவு மூளைவலுக்கொண்டவனாக இருக்கவில்லை என்பது தான் உண்மை. கண்ணால் காணாத கடவுளை அங்கு இங்கு என்று சுத்திய ஏமாத்தினான் பிராமணன். தான் பிழைப்பதற்காகவே சமஸ்கிருதத்தை மறைத்து வைத்தான். காலப்போக்கில் மறைத்த பாசை மறைந்தே போனது. கடவுளுக்கு தேவபாசையான சமஸ்கிருதம்தான் தெரியும் என்றால் எமக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? தமிழையே விளங்கிக் கொள்ளாதவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? சாதியத்தில் எவன் நன்றாக ஏமாத்தினானே; எவன் மற்றவன் உழைப்பை தட்டிப்பறித்தானோ; எவன் நன்கு பொய் சொன்னானோ அவனே உயர்த்தசாதியானான். இவனிடம் சொத்து;பணம் இருந்தது. சாதி ஒருவகையில் முதலாளித்துவத் தோற்றமே.

இந்தியப்பிராமணர்கள் எம்பிராமணர் போல் கோவில்களை மட்டும் நம்பி வாழாது உயர்தொழில் ஊடகங்கள் போன்றவற்றை தம்கைகளுக்குள் வைத்துக் கொண்டனர். இது அவர்களின் சாதியாதிக்கத்தை வேரூன்றி வைத்திருக்க உதவுகிறது. இன்றும் சோ, ஜெயலலிதா போன்றோர்கள் பாப்பணியர்களே. இவர்களை உயர்த்தி வைத்திருப்பவர்கள் ஷரிஜன் (தாழ்தப்பட்ட- தலித்துக்கள்) தான்

31.   ஜெயக்குமார் on March 7, 2009 8:36 pm
கல்வெட்டில் பறையர்
நம்மில் பல இனத்தவரைப் பற்றி தவறான கருத்துகளை சிலர் கொண்டுள்ளனர். குறிப்பாக ஜாதி என்ற சொல்லைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை. வரலாற்று அடிப்படையில் ஜாதிகளைப்பற்றி அறிந்தால் சமுதாயச் சீர்திருத்தங்களை செவ்வனே செய்ய இயலும். இதற்கு நம்மிடையே வரலாற்று அறிவு வளர்தல் வேண்டும். வரலாற்று அறிவு சிறக்க அடிப்படை ஆதாரங்களாக விளங்குபவை கல்வெட்டுகள்.

இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நுற்றாண்டில்) “கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்” என்று உள்ளது. வெள்ளாளரில் பைய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவினர் இருந்துள்ளனர் என இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் “வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான். இது போல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். “வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்” என்பவன் குறிக்கப்பெறுகிறான். இதிலிருந்த்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் 15ஆம் 16 ஆம்ஆம்நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளது.

32.   Nackeera on March 8, 2009 12:06 am
மீண்டும் பின்னோட்டம் இனங்களைக் கதைக்க வந்து சாதிக்குள் போய் நிற்கிறது. இதைத் தொடர்வதா விடுவதா என்பது எனது பிரச்சனையாக உள்ளது. நான் செத்துக்கொண்டிருக்கும் சாதியை தூக்கி நிறுத்து விரும்பவில்லை. ஜெக்குமாரின் ஆர்வத்தால் பதில் எழுத முயல்கிறேன். கல்வெட்டுக்கள் எமது அடிப்படைச்சான்றுகள். ஆனால் கல்வெட்டுக்கள் அனைத்தும் பூடகமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. அதை நாம் ஆய்வு செய்யும் கால் அந்தகாலத்து தமிழ்வடிவததையும் கவிமுறைகளையும் கவனமாக படித்திருப்பது முக்கியமாகிறது. மேலும் இந்தியாவின் சாதி முறைக்கும் இலங்கையின் சாதி முறைக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. இவை இரண்டையும் ஒன்றுக்கொன்று நேராக ஒப்பிட இயலாது. உதாரணமாக ஜெயக்குமாரர் கூறும் வசனத்தை எழுத்துக் கொள்வோம். //கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்” // பறையன் என்பது கடையன் என்றும்; பேசமாட்டாதவன் என்றும்; சிவன் என்றும் பொருள் உண்டு.பறை என்பது பேசு என்றும் பறையன் என்பது பேசாதவன் என்றும்; பறையன் என்பது அழிந்துபோபவன் என்றும் பொருள். வெள்ளாளனை விவசாயி என்றும் நிலப்பிரபுக்கள் என்றும் வளங்கப்பட்டு வந்தது. தமிழ் இலக்கியத்தில் இடமற்றிந்த பொருள் கொள்ளல் இலக்கிய மரபு. இங்கே பறையன் பறையன் என்று இருதரம் வரவதால் இவை இரண்டும் இருபொருட்கருத்துடைய இடுகுறிப்பெயராகவோ| காரணப்பெயராகவோ|உவமையாகவோ வந்திருக்கலாம். நேரடிப் பொருள் கொள்ளல் பிழையானது. இது இந்தியாவின் சாதியமைப்பைத் தழுவியிருப்பதால் இதுபற்றிய போதுமான அறிவு எனக்கு இல்லை. மேலும் நிலப்பிரபுக்களிடம் பலசாதியைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வார்கள் இவர்களை குடியானவர்கள் என்பர். சிலவேளை அடிமை குடிமைகள் என்றும் சொல்வது வளக்கம். முக்கியமாக யாழ்பாணத்தில் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் வெள்ளாளர்கள் (இடங்கள் தெரிந்தும் குறிப்பிட விரும்பவில்லை) உண்மையில் ஈழத்தின் ஆதிகுடியல்லர். இவர்கள் தம் அடிமை குடிமைகளுடன் 13ம் நூற்றாண்டில் குடியேறியவர்களாவர். அதாவது குடிமக்கள் (சாதிகளைக் குறிப்பிட விரும்பவில்லை) அந்த வெள்ளாளன் என்ற நிலப்பிரபுக்குச் சொந்தாக இருப்பான். அந்தவசனத்தில் நிலப்பிரபுக்குச் சொந்தமான பறையன் எனவும் எடுக்கலாம்.
இருவசனங்களையும் சீர்தூக்கிப்பார்த்தால் //வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான்// //“வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்”// இங்கே பைய்யரின் என்பது பிள்ளைகளின் என்று பொருள் படாது. புல்லிகள்: பையன் என்பது வெள்ளாளனின் ஏதே ஒரு உடமைகள் என்பது பொருள். வெள்ளாளன் என்பது பலவிடங்களில் சாதியைக் குறிக்காது காரணப்பெயராக வந்துள்ளது.சிவனைச் சடையன் என்பது வழக்கம். கல்வெட்டுக்களை வாசித்து விளங்கிக் கொள்வதற்கு எனத் தனிப்படிப்பும் பட்டமும் உண்டு. இக்கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் புல்லி சடையன் பறையன் வெள்ளாளன் என்பன நிச்சயமாகச சாதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

33.   Nackeera on March 8, 2009 12:48 am
பல்லி|ஜெயக்குமார் போன்ற பலர் சரித்திரங்களில் இலக்கியங்களில் ஆர்வம் காட்டியதால் சில குறிப்புக்களை தருகிறேன் 1) கண்டிச்சாசனங்கள் சிங்களத்தில் எழுதப்படவும் இல்லை சிங்களத்தில் கையெப்பமிடப்படவும் இல்லை எல்லாம் தமிழிலேயே நடந்தேறியிருக்கின்றன.
2) கண்டிமன்னனும் கடசிமன்னனுமான சிறீ விக்கிரமராஜசிங்கன் ஒருநாயக்கன்.
3) ஆரியர் என்பது பலவிடங்களில் இனத்தைத்தைக் குறிப்பிடவில்லை. ஆரியர் என்பது ஆதாரம் அற்ற ஒன்று. சாதியை வெறுக்கும் பாரதியார் தன் குயில்பாட்டில் ஆரியனே கேட்டருள்வீர் எனக்குறிப்பிடுகிறார். இங்கே ஆரியன் என்பது பெரியவன்| அறிவாளி எனும் பொருள் படவே வருகிறது.
4) ஆரியர் எனத்தமக்குப் பட்டையம் தீட்டிக்கொண்டவர்கள் இந்தியாவுக்கு வரமுன்னரே சாதி என்பது இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவை இன்றைய சாதியம் போல் மேலோன் கீழோன் என்று இருக்கவில்லை.
5)ஆதியில் தமிழனையே திராவிடன் என்று வழங்கப்பட்டது
6) நாயக்கன் என்பது வடுகர் வன்னியர் என்று தமிழகராதியில் கூறப்பட்டாலும் நாயக்கர் என்பது மலையாளத்தில் மருவி நாயர் என்று வந்தது இவர்கள் வீரர்> பலசாரிகள்> வீறாப்புடையவன்> அரசன் என்று பலபொருட்கள் உண்டு. நாயக்கர் என்பது பெருமைக்குரிய சொல்லாகவே அன்றில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரியாரும் நாயக்கரே
7) எல் என்றால் சூரியன் இதுவோ மரவி அராபிய மொழியில் அல் என்று வந்தது. உ+ம் அல் கைடா. இந்தச்சூரிய வணக்கமே பின் சிவவணக்கமாக மாறியது. ஈரானின் இஸ்லாம் வருவதற்கு முன்னர் அங்கிருந்து சார்தொஸ் எனும் மதம் நெருப்பையும் சூரியனையுமே வணங்கியது. இந்தவணக்கமே சிவவணக்கமாகவும் ஆண்குறிக் குறியீராகி லிங்கமாக வணங்கப்பட்டதற்கான சான்றுகள் உண்டு. சிவன் ஒரு வேடுவ அதாவது வேட்டையாடி உண்பவர்களின் கடவுளாகவே இருந்திருக்கிறார்.
நாயன்மாகர்கள் சுமார் 6>7>8ம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்தவர்கள் அதாவது 1300 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள். அன்று திருநாவுக்கரசர் மத்தீஸ்வரம்| மதினீஸ்வரம் என்று சிவனைக்குறித்துப்பாடியுள்ளார். இது மெக்கா மதீனாவையே குறித்து நிற்கிறது. ஆனால் இஸ்லாம் 850-900 வருடங்களுக்கு முற்பட்டதே. ஆகவே இஸ்லாமின் தோற்றத்துக்கு முன்னரே இப்பாடல்கள் பாடப்பட்டது.
நான் இவற்றை இங்கு ஏன் குறிப்பிட்டேன் என்றால் தேடல்கள் தொடரவேண்டும் என்பதற்காகவே.
34.   ஜெயக்குமார் on March 8, 2009 10:22 pm
இன்றும் சோ ஜெயலலிதா போன்றோர்கள் பாப்பணியர்களே. இவர்களை உயர்த்தி வைத்திருப்பவர்கள் ஷரிஜன் (தாழ்தப்பட்ட- தலித்துக்கள்) தான்.

———————————————————
தலித்துக்கள் என்ற சொல் இலங்கையிலில்லை. மேற் சொல்லப்பட்ட கருத்துக்கள் கையாலாகதவர்களின் பொய். தமிழ்நாட்டில் தாழ்தப்பட்டவர்களில் அநேகர் நீண்டகாலமாக கிறித்துவ மற்றும் இசுலாமிய மதத்திலிருக்கின்றார்கள் .பிராமணர்களை உயர்த்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. அப்படிச் செய்து கொண்டிருப்பவர்கள் கோயில் முதலாளிகளாயிருப்பவர்களே! (வெள்ளாளர்களுட்பட).
இங்கு என்னால் வழங்கப்பட்ட கல்வெட்டு ஆதாரங்கள் டாக்டர். இரா. நாகசாமி (தமிழ்நாடு கல்வெட்டியல் அறிஞர்) அவர்களால் படிக்கப்பட்டது. இந்துமதச் சாத்தான்களை ஒழிக்க விரும்பாமல்; பிராமணர்களைக் கண்மூடித்தனமாக எதிர்தர்துத் தன் பாசிச வெறியை அவர்கள் மீது துப்பியவர் இராமசாமி நாயக்கர். பறையர்கள் வெள்ளாளராய் மாறியதற்கு நுhற்றுக்கணக்கான வரலாற்று ஆதாரங்களுண்டு. நீங்கள் குறிப்பிடும் யாழ்ப்பாண பிரபுக்கள் (முதலியார்…. வெள்ளாளர்)பற்றி வரலாற்றறிஞர் Edgar Thurston”The Title Mudali is used chiefly by the offspring of of Devadasis,Kaikolars and Vellalas “(castes and tribes of South india Page 84)முதலி என்ற பட்டத்தை தேவதாசி வழி மரபினரும் கைக்கோளரும் வெள்ளாளரும் தரித்துவருவதாக இயம்புகிறார். நீங்கள் குறிப்பிடும்; அடிமை குடிமைச் சாதிகள் பற்றி அப்பெயர்கள் குறிப்பிடத்தயங்குவதேன்? மள்ளரும்(பள்ளர்) குறிப்பிடப்பட்டனர். விஐயநகர வடுகர்களின் ஆட்சியதிகாரத்தின் போதே மள்ளர் என்ற சிறப்பு மிகுந்த சொல் பள்ளர் என மாற்றப்பட்டது. “மள்ளர் குலத்தில் வரினும் இரூ பள்ளியர்க்கோர் பள்ளக்கணவனாய்… (முக்கூடற்பள்ளு இலக்கியம்) .”அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர - என்று திவாகர நிகண்டும். செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் - என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன. மள்ளர் சோழ, பாண்டிய அரச குலத்தவர்களென்று சங்க இலக்கியம் முழுவதும் மற்றும் திருவிளைளாடற் புராணமும் சொல்கின்றன. நானல்ல.

35.   palli on March 9, 2009 12:14 am

//தலித்துக்கள் என்ற சொல் இலங்கையிலில்லை. மேற் சொல்லப்பட்ட கருத்துக்கள் கையாலாகதவர்களின் பொய்//
ஜெயகுமார் பல்லியின் தூக்கத்தை கெடுத்ததுக்கு நன்றி. சில மாதத்துக்கு முன்புதானே, பாரிசிலும் லண்டனிலும் தலித்துக்கள் மகாநாடு நடந்தது. அதுக்கு ஈழ தமிழர் தானே உன்மையான தலித்தென தலித்தின திடீர் தலைவைர்கள் தொண்டர்கள் நியலனம் செய்யபட்டு. பல்லிக்கும் ஒரு பதவி இலவசமாக கிடைத்தது. இவர்களது திருவிளையாடலையும் அம்பல படித்தினால் பல்லி போன்ற புரியாத புதிர்கள் புரியட்டுமே

No comments:

Post a Comment