Search This Blog

Tuesday, 20 May 2014

மனோ கணேசனின் இஸ்லாமிய தரப்பினர் பற்றிய கருத்துக்கு கருத்து

 

September 30, 2012
மனோ கணேசனின் இஸ்லாமிய தரப்பினர் பற்றிய கருத்துக்கு கருத்து
தமிழ் கட்சிகள் தமிழர் பாரம்பரிய பிரதேசத்திற்கான தமிழர் சுயநிர்ணய உரிமைக்கான அரசியலை பாரத்துக்கொள்ள வேண்டும் இதைவிட சிங்கள் மககளிடன் கலாச்சார உறவுகளையும் அதன் வரலாற்று பாரம்பரியங்களையும் புதப்பித்துக்கொள்ள வேண்டும்.

முஸ்லீம்கள் தமது அரசியலை தமது நிலைமைகளுக்கு ஏற்கவே முன்வைப்பார்கள் அங்கு அவர்கள் இஸ்லாத்தின் அடிப்டையிலான நிலைமையை எடுக்கும் நாம் அந்த அடிப்படைவாதநிலையில் எப்படி இணையமுடியம் என்பது அடிப்படையான விவாதமாகும்.

பாரம்பரிய பிரதேசம் கலாச்சாரம் என்னும்போதும் அங்கு சில சிக்கல்களை உருவாக்கும் எப்போதும் இஸ்லாமிய தரப்பினரை தனியாகவே இயங்க வேண்டியிருக்கும்.

தமிழர் தரப்பு தேவையில்லாமல் தலைப்போடுவதால் கிழக்கில் ஏற்ப்பட்ட நிலைமைகளே மீண்டும் மீண்டும் வரும் – முஸ்லீம்கள் நிலைகளுக்கு ஏற்ப்ப முடிவு என்ற (எமது நிலையில் அது சந்தரப்பவாதமாக பார்க்கும் நிலையே) நிலையையே எடுப்பார்கள் அதுதான் அவர்களது அரசியலாக இனிமேலும் இருக்கும் காரணம் தென் இந்திய – இந்திய பிராந்திய நிலைப்பாடமகள் அவர்களை அப்படியாகவே தொடர்ந்தும் பல தலைமுறைகளுக்கு வைத்திருக்கும்.அல்லது பொதுவுடைமைத்துவத்துடன் இணைந்த அரசியலை ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் அறிவுவளர்ச்சி மதம் கடந்த நிலை வரும் வரையில் இந்த அரசியலில் இருந்து முஸ்லீம்கள் விலகமுடியாத இறுக்கமான பூட்டுக்குள் இருக்கிறார்கள்.

(1990ம்ஆண்டு ஈராணில் தூக்கிலடப்பட்ட இஸ்லாமிய பெண் வெயியிட்ட பல கருத்துக்கள் இவறற்றிக்கு ஆதாரம் சேர்க்கின்றது)

தமிழர்கள் என்ற பொது அடையாளத்தை மலையக வடகிழக்கு மக்கள் இணைந்து பெறும் நிலையை அடைவதும் உலகளாவிய ரீதியில் தமிழர்களின் பொத நிலைப்பாட்டை உருவாக்குவதும் உடன் எம்முன் உள்ள கடமைகளாகும்

இலங்கையில் தமிழ்ரக்ள என்பவர்கள் ஒரு பொது அடையாளமாக வளர்ததெடுக்கும் பணி தமிழ் தவைவர்களின் பொறுப்பில் பொறுப்புணர்வில் உள்ளது எமது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் பழையகாலநினைவிலேயே அரசியல் நடாத்துகிறார்கள் அதைவிட்டு அவர்கள் வெளியே வர வேண்டும் .

மனோ கணேசன் போன்றோர் தமிழக தவலவர்களடன் தெடர்புகளை பலப்படுத்தி உலக பொது தமிழ் அடையாளததிற்காகவும் இயங்க வேண்டும்.

இஸ்லாமிய சமூகம் இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் சமூக நிலைப்பாடுகளையும் உள்ளடக்கிய பொது அடையாளமாகிய தமிழ்பேசும் சமூக அரசியலை முன்னெடுக்க முடியாது என்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் ( நான் இதை பல இடங்களில் குறிப்பிடும் போது என்னை இஸ்லாமிய வெறியனாக்கினார்கள்) இவற்றிக்கு பயப்படடமல் இஸ்லாத்துக்கும் பொது உடமைத்தத்துவத்திற்க்கும் இணைவு ஏற்ப்படாது என்பதை வெளிப்படையாக பெச வேண்டும் ( இதை பல இஸலாமியர்களே இன்று பேச ஆரம்பித்துவிட்டார்கள் ஆனால் நாம் தமிழர்கள் பேசுவதுஇல்லை) சமயவாத உணர்வு பொது அரசியலுடன் இணைவு ஏற்ப்படுத்த முடியாது இரண்டும் வேற வேறாகவே இருக்க வேண்டும்.

சமயங்களை இணைத்து பேசுவதால் சில இஸ்லாமியர்கள் மாற்று சமயத்தவர்களை இஸ்லாமியர்களாக்கிவிடலாம் என்ற கனவுடனேயே பேசுகிறார்கள் என்பதை நாம் திட்டவட்டமான பல உதாரணங்களடன் கண்டுள்ளோம்.

இஸ்லாமிய தரப்பும் தமிழ்தரப்பும் இணைந்த பொது அரசியலை எப்படி உருவாக்குவது ஒன்றில் சமய தலைமைகள் இணைந்து இயங்க வேண்டும் அல்லது மொழி அடிப்டைபயில் இணைந்து பேச வேண்டும்.

இந்துக்கள்& கிறீஸ்தவர்கள் கத்தோலிக்கர்கள் தமது சமயம் கடந்து தமிழர்கள் என்று இணையும் போது எப்படி

…………

கூட்டிணைவு என்பத எப்படி உருவாக முடியும் என்பது அடிப்படையானது மனோ கணேசன் அவர்கள் அரசின் கெடுபிடிகளை பற்றியும் தமிழ் மக்களின் துயரங்கள் பற்றியும் கேட்கும் போது பேசாமல் இருப்பவர்களுடன் எப்படி மனோ கணேசன் இணைய முடியும் ஆனால் ஊரிமைப்பிரச்சினை தீர்வு என்றவுடன் எமது பங்கு எங்கே கேள்வி எழுப்புவது தவறு

மனோ கணேசன் அரசுக்கு எதிராக பேசும் போது ஒருபிரிவினர் அரசுடன் இணைந்து அல்லது அரசுடன் பேசித்தான் தீர்க்க வேண்டும் அப்படிதான் பிரச்சினைகளை நாம் தீர்ப்போம் என்று கூறி அரசுடன் கூடி மனோ கணேசனையும் திட்டிவிட்டு எப்படி மனோவுடன் இணைய முடியும்.

இஸ்லாமியர்களின் உரிமைப்பிரச்சனைபற்றி எங்கே? எப்படி? குரல் எழுப்புகிறார்கள் என்றால் பதில் இல்லை ஆனால் எதை எடுத்தாலும் தமிழர்களின் மீதமான திட்டல்களையும் மேலும் ஒருபடி மேலே போய் (இன்று இல்லாத) புலிகளின் பிரச்சினைகளையும் புலிகளையும் திட்டுவதன் மூலம் ஏதோ சாதிக்கலாம் என்று இஸலாமிய தரப்பு நினைக்கிறது இதற்க்க உதாரணம் மன்னார் பிரச்சினைக்கு ஊர்வலத்தில் புலிகளுக்கு எதிரான சுலோகங்கள் ஏன்?

மன்னார் பிரச்சினையில் தீர்வுக்கு தடையாக இருக்கும் அரசு பற்றியோ அரசின் நடத்தைகளுக்கு எதிராகவோ எந்த கோசத்தையும் இஸ்லாமியர்கள் முன்வைக்க வில்லையே?

இது அரசியல் இல்லை இதற்க்கு பெயர் வேறு !!!1

/இஸ்லாமியர்களை எமது மண்ணில் இருந்து கலைப்பது தான்///தர்மன் நாயக்கர் இங்கே தான் இப்படியான கருத்துக்கள் தவறு காரணம் இஸ்லாமியர்கள் அடிப்படையில் தமிழர்கள் அவர்களின் நிறமூரத்தம் தமிழர்களின் நிறமூரத்தம் சிங்கள்வர்களின் நிறமூரத்தம் வேறு வேறானவைகள் அல்ல ஒரே இன அடையளத்தவர்கள் அதிலும் இலங்கையில் உள்ள அத்தனை பெரும் தென் இந்தியாவின் மக்களின் மிகமிக நெருங்கிய நிறமூரத்தங்களையும் கொண்டவர்கள் ஆனால் சில அரேபிய கலப்புக்கள் உள்ள (ஆரதாரம் புத்தகம்: இலங்கையில் மனிதக் குடியமைவு -சுப்பிரமணியம் விசாகன் ISBN 1 85201 022 3)

ஆதிக்கம்பெறும் கருத்துக்களும் அதனால் அடிமைப்படுத்தப்படும் சமூகமுமே பிரச்சினழயானது என்ன கருத்துக்கள் எதன் அடிப்படையில் அவை சமூகத்தை அடிமைப்படுத்துகிகன்றது என்பதே முக்கியமானது.

இஸ்லாம் மார்கம் என்கிறார்கள் ஆகவே அதை அப்படியே பின்பற்ற வேண்டும் அதனால்தான் அவன் இஸ்லாமியன் ஆகிறான் .

இப்படி இஸ்லாமியர்கள் ஆனவர்கள் உலகில் பல கோடி பேர்கள் ஆனால் இவர்கள் யாவருக்கும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு ஏற்ப்படும் அத்தனை பிரச்சினைகளும் வருகிறதே அவர்களும் அடிப்டைவாழ்வாதரப்பிரச்சினைகளுக்கு மகம் கொடுக்க வேண்டியள்ளது அதில் அவர்கள் தோல்வி காண்கிறார்கள் அவர்களும் தமது நாடுகளில் அரசியலில் தீர்வு காண முடியாமையால் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள் அங்கே இஸ்லாம் தீர்வினை கொண்டுவரவில்லை என்பதேயாகும்.

இவற்றைகூறும் போது கூறுபவரை இஸ்லாமிய எதிரியாகமட்டும் பார்ப்பார்களே அன்றி அதன் உள்ளடக்கத்தை பார்பதில்லை இப்படியான கட்டை இஸ்லாம் போட்டு வைத்திருக்கிறது இந்த கட்டு மிகவம் மெதுவாகவே உடைகின்றது இது நீண்ட காலம் எடுக்கும் விடயம்.

ஒருகாலத்தில் கிறீஸ்தவர்களும் சமயத்தை எதிர்ப்பவர்களை உடனே கொலை செய்தார்கள் ஆனால் இன்று அந்த நிலை இல்லை

இந்தியாவில் அந்த நிலைமைகளில் இஸ்லாமியர்கபள் தம்மை மொழி அடிப்படையிலேயே தம்மை இனமாக அடையாளம் காண்கிறார்கள்

இது அரேபியாவில் உள்ள பல இனத்தவர்களும் தம்மை பொதுவான இஸ்லாமியர்களாக அடையாளம் காணுவதில்லை த்மமை மொழிவாரியாகவே இனமாக அடையாளம் காண்கிறார்கள்.

இலங்கையில் மட்டும் அப்படி இல்லை நிலைமைகள் மாறும் மட்டும் தனி இனமாக அறிவியல் மாற்நறங்கள் ஏற்ப்படும்வரையில் இன உடைவு தவிர்க முடியாத ஒன்று அல்லது பாடங்களை கற்றுக்கொள்ளும் வரையில் இன உடைவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.(தம்புள்ளை பாடம் ஒன்றாக இருக்கலாம்)

நண்பர்களே இலங்கையில் இஸ்லாமியர்கள் தமிழர்கள் அடிப்படையில் இனக் கூறுகளை கொண்டவர்கள் அவர்களின் மதம், மார்கம் இந்த நிலைமைகளை இலகுவாக்க முடியாது இடையே நிற்கிறது.

எமது கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல அறிவியல் வட்டத்தில் உரையாலுக்கு இங்கு முன்வைக்கப்படுகின்றது.
இதைவிட இஸ்லாமியர்களில் பல பெருந்தொகையானோர் மாற்று சமயத்தவர்களில் உள்ள பல மாக்சீயக்கட்சிகளின் தொண்டர்கள் என்பதையும் குறைத்து விடுவதாக அர்த்தப்பட்டுவிடக் கூடாது.

கூட்டிணைவு என்பது எமக்கு எதிராக உள்ள பிரச்சினைகள் என்ன? தீர்வுகள் எட்ட முடியபதபடி உள்ள நிலைமைகள் என்ன? யார் இவற்றிக்கு எந்த வகைகளில் தடைகள் போடுகிறார்கள் ? என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றிக்கு எதிராக போராடுவது!

இந்த போராட்டத்தில் இணைவதன் மூலமே நாம் எம்மை எமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த முடியும் அங்கிருந்து கூட்டிணைவு ஆரம்பமாகும் இது உலக பொது விதி !!!!!

ஒரு நண்பரினால் ஆதி பிராகாஸ் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட செய்திக்கு பதில்

கூட்டிணைவுக்கான விதி 01 மனோ கணேசன் அவர்கள் கொழும்பிலிருந்து யாழ்போய் அந்த மக்களின், கிளிநொச்சி போய் அந்த மக்களின் பிரச்சிகைளில் குரல்கொடுக்கிறார்.

கலாநிதி விக்கிரமபாகு சிங்கள் இனத்தலிருந்து யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு, திகோணமலை போய் அந்த மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுகிகறார்கள் பொதுவான நிலைப்பாட்டில் இணைந்து இயங்குகிறார்கள் .

இப்படியாக இஸ்லாமிய தரப்பினரும் இணையமாட்டார்களா என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

மனோவும், கலாநிதி விக்கிரமபாகும் கூட்டிணைவுகான முன்உதாரணங்கள் (ஒரு நண்பரினால் ஆதி பிராகாஸ் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட செய்திக்கு பதில்)

கஜேந்திரன் உட்பட அத்தனை தமிழ் அமைப்புக்களம் ஒன்றிணைய வேண்டும் என்பதில் சந்தேகமற்ற கருத்து இது பற்றி எமது கருத்துக்களை பதிவுகள் மேற்கொள்கின்றோம்.

இதன் பின்னர் லண்டனில் தமிழ் தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது அதில் ஈபிடிபி யும் இணைந்தே இருக்கிறது இந்த அமைப்பின் செயற்ப்பாடுகள் குதிரை வேகத்தில் செல்ல முடியாது காரணம் தமிழர் தரப்பு என்னும் போத ஒரு பொது வான அடையாளத்தடன் தமிழரின் பொதுவான உரிமைப்போராட்டத்திற்க்குள் உட்பட்டே அனைத்து கட்சிகளும் இயங்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கும்.

மனோ கணேசனை ஏன் தனியாக பார்க்கிறீர்கள் என்ற கருத்துக்கு பதில்!

நான் இங்கு பதில் எழுதும்போது ஒரு கட்சி அமைப்பு சார்பாக எனது அரசியல் கருத்துக்களை முன்வைக்கவில்லை நான் எந்த அமைப்பிலும் அங்கம் வகிக்கவில்லை சுதந்திரமாகவே எழுதுகிறேன். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் என்பதில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மட்டுமே தீர்வு என்பது எனது நிலைப்பாடு.

போராட்ட ஆரம்பகாலங்களில் தமிழ்பேசும் மக்கள் என்றும் சிங்கள் மொழி பேசும் மக்கள் என்ற இரு நிலையையே இலங்கையில் இருப்பதாகவே கருதி செயற்ப்பட்டொம் அன்று மலையக தமிழ் பேசும் மக்கள் இஸலாமிய தமிழ் பேசும் மக்கள் என்ற பிரிவு பற்றி யாரும் பேசியதில்லை ஆனால் பின்னர் காலகட்டங்களில் இனங்கள் இனவிடுதலை என்று பேஆரமட்பித்தவுடன் இன அடையாளங்கள் என்பது என்ன? இனத்துக்குரிய வரையறை என்ன? என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தபின்ன்ர மலையக தமிழ்பேசும் மக்கள் தனி இனமான அடையாளம் கொண்டவர்கள் அதிலும் அவர்கள் தாம் வடகிழக்கு மக்களை விட தனித்தவர்கள் என்று கருதுபவர்கள் என்றும் அவர்கள் தனியான இன அதடையாளம் கொண்டவர்கள் என்றும் கருதப்பட்டு இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் உண்டு என்று கருதப்பட்டது இவைகள் யாவும் இயக்கங்களின் அரசியல் பிரிவுகள் இயக்கங்களின் அரசியலாகவும் இருந்தது .

மலையக மக்கள் தாம் யார் என்பதை அவர்களே தீர் மானிக்க வேண்டும் என்ற கருத்து முஸ்லீம்கள் தாம் யார் என்ற அடையாளத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று எழுந்த போது மலைகமக்களுக்கும் அந்த உரிமையுண்டு என்று கருத ஆரம்பித்தார்கள் இங்கு இஸ்லாமியர்களை ஒரு தனியான இனமாக பிரத்து எடுத்துப்போய் அரசியல் செய்யும் சுய நலக்கும்பல்களே இதைஆரம்பித்தனர் என்றும் கூறியவர்கள் உண்டு.

ஆனால் இஸ்லாமியர்கள் தமக்கென தனியான கலாச்சார பண்புகளை கொண்டிருப்பதால் தனி இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அத இப்போ நடைமுறையில் இருக்கின்றது. மலையக மக்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இதுவரையில் தீர்மானகரமாக குரல் எழுப்ப்பபடவில்லை.

இவைகளுடன் இலங்கையில் பெரும்பான்மைஇனத்தவர்களின் அரசியல்வாதிகள் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை நசுக்குகிறார்கள் என்றே பேச ஆரம்பித்தோம்.

இன்றும் திட்டவட்டமான ஒரு கருத்தை தமிழர்கள் என்றோ தமிழ்பேசும் மக்கள் என்றோ இல்லாமலே பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் புலிகளின் அழிவின்னபின்னர் மட்டும் மலையக மக்கள் என்ற பிரிவினர் என்று ஒன்றில்லை இலங்கையில் தமிழர்கள் என்ற கருத்து உயர்கின்றது ஆனாலும் அந்த கருத்துக்களுக்கு உரமூட்டும் படியாக தமிழ்-மலையக தமிழ் மக்கள் சார்பில் எமது தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் தலைமைத்துவத்தை கொடுக்கவில்லை அவை பற்றி பேசுவதும் இல்லை

மனோ கணேசன் மட்டும் இந்த தமிழ்மக்கள் ஒரு இனம் என்ற கருத்துப்பட பட தடவைகள் பேசியுள்ளார் இதர வடகிழக்கு தலைமைகள் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதே எனது அவதானம் ஆனால் மனோ கணேசனின் வடக்கும் கிழக்கும் மலையகப் பிரதேச இணைவுக்கான எல்லைகள் அற்ற கருத்துக்கள் இலங்கையில் தமிழ்மக்கள் என்ற ஒற்றை பரிணாமத்தை ஆரம்பித்துள்ளது இவற்றிக்காக நாம் எமது தலைமைகள் பலமாக இயங்க கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே தான் நானும் மனோ தமிழர்களின் தலைவர்களில் மனோ ஒருவர் தான் இந்த இன இணைவுகள் பற்றிய கருத்துக்கு உரமூட்டும் படியாக இயங்குகின்றார் என்றே கருத்து எழுதினேன்.

நாம் பல தூரம் இயங்க வேண்டியுள்ளது என்பதை மறந்து விடிந்தால் ஏதொ நடக்கும் என்ற மனத்தடன் நான் கருத்து எழுதவில்லை!

1981ல் மலையகத்தலிருந்து வடக்கு கிழக்கில் குடியேறிய மக்களின் இணைவில் கூட இன்று வரையில் எமது தலைமைகள் அமைப்புக்கள் சரியாக செயற்ப்படவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்
இணைவுக்காக இயங்கிய அமைப்புக்கள் ஆயுதம் தாங்கிய பின்னர் இதன் தாற்பரியத்தினை கைவிட்டுவிடடார்கள்.(வரலாற்று தவறு)

பின்னர் புலிகள் ஏனைய அமைப்புக்களை அழித்தபின்னர் இதற்காக இருந்த எச்ச சொச்சங்களும் அழிந்து போயின பின்னர் போர் பாரிய பின்னடைவுகளை ஏற்ப்படுத்தியது யாவரும் தெரிந்ததே)

யுத்தகாலங்களில் கைவிடப்பட்ட இந்த மக்களின் உரிமைகள் நில உரிமைப்பத்திரங்கள் அண்மையில் வன்னியில் சில மாதங்களுக்கு முன்பாகவே கையளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மனோ கணேசனள் அவர்கள் இன்று இலங்கையில் பல்வேறு பட்ட இனங்களின் பிரதிநிதியாக செயற்ப்படுகின்றார் இலங்கையர்கள் என்ற அடையாளத்துக்குள் தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் விடயத்தில் அக்கறையுடன் இயங்குகிறார்என்பது எமக்கு சரியாக தெரிந்து கொண்டே எழுதியிருந்தேன்.

என்னை எனது கருத்தை விமர்சித்திருந்தமைக்கு நன்றி மேலும் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

No comments:

Post a Comment