September 08, 2012
குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம்: த சோதிலிங்கம்
யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது 200மில்லியன்கள், பில்லியன்கள் செலவு செய்தாயிற்று. கிராமங்கள் தோறும் மின்சாரம், தண்ணீர் வழங்கியாயிற்று, வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியாயிற்று இன்னும் என்னென்ன வெல்லாம் செய்தாயிற்று என்று ஜனாதிபதி தொடக்கம் ஈபிடிபி வடக்கிலும், கிழக்கில் பிள்ளையானும், கருணா கொழும்பிலும் முழங்கியாயிற்று. இவர்களின் முழக்கம் ஒரு பாடசாலையின்- கிளிநொச்சி பிரமானந்தா பாடசாலையின் நிலைமையிலிருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
பாலர் பாடசாலை கனிஸ்ட பிரிவு பாடசாலையில் குழந்தைகளின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இந்த பாடசாலையின் படங்கள் கூறும் கதைதான் என்ன? நீங்கள் என்னதான் செய்தாலும் என்னதான் கடந்த 3 வருடங்களாக செய்திருந்தாலும் இனிமேல் என்னதான் செய்வோம் என்று கூறியிருந்தாலும் இந்த பாடசாலையும் இங்கு கல்வி கற்கும் வன்னி பிள்ளைகளின் மனநிலைமை ஒன்று போதும் வன்னியில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதற்கான ஒரு அத்தாட்சியாக உள்ளது.
நாட்டில் சுதந்திரம் அபிவிருத்தி என்றெல்லாம் கதைகள் விடப்பட்டும், இனிமேல் ஜக்கியப்பட்டு வாழ வேண்டியதொன்று மட்டுமே உள்ளது என்று இலங்கையிருந்து புலம்பெயர் நாடுகள் வரைக்கும் கதைகள் அளந்து முடிந்துவிட்டது. ஆனால் நேற்று கிடைக்கப்பெற்ற கிளிநொச்சி பிரமானந்தா பாடசாலையின் படங்கள்- எமது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை ஒன்றின் நிலையினை பார்க்கும் போது எமது குழந்தைகள் மேல் நேற்றும் கொத்து குண்டு போட்டு குழந்தைகளை அழித்துள்ளனர் என்றே உணரப்படுகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலைக்கும் அதன் குழந்தைகளுக்கும் இன்னமும் நிவாரணம் கிடைக்கவில்லை. இன்னமும் பாடசாலை ஒரு மரியாதைக்குரிய பாடசாலையாக்கப்படவில்லை, குழந்தைகள் சென்று கல்வி கற்கும் பாதுகாப்பான பாடசாலையாக இல்லை, பாடசாலைக்கான அடிப்படை வசதிகள் எதுவுமில்லை, இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
கிளிநொச்சி பிரமானந்தா பாடசாலையில் குழந்தைகள் பாடம் கற்க முடியமா? மழைவந்தால் ஒதுங்க இடம் இருக்கின்றதா? வெய்யில் என்றால் நிழல் கிடைக்குமா? எதிர்வரும் மழைகாலங்களில் இந்த பிள்ளைகளின் நிலைமை என்னவாக இருக்கும். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாக பாடசாலை பிள்ளைகளின் கூரையை கூட சரியாக வேய்ந்து கொடுக்கமுடியாத ஒரு அரசு, ஒரு மாகாணம், ஒரு மாவட்டம், ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மாவட்ட அதிகாரிகள் என்று உத்தியோகங்களின் பட்டியல் நீட்சிக்குக் குறைவில்லை. ஆனால் இத்தனை பதவிகளுக்கும் பதவியில் உள்ளவர்களும் வெட்கித்தலைகுனியும் கடமைகளையே கடந்த 3 வருடங்களாக வன்னியில் செய்துள்ளனர் என்பதற்கு கிளிநொச்சி பிரமந்தனாறு குழந்தைகளின் மகா வித்தியாலயம் சாட்சியாக உள்ளது.
சர்வதேசங்களும், மானிட சட்டதிட்டங்களும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் நலனிலும் குழற்தைகளின் உரிமைகளிலும் அக்கறை காட்டுகின்றது என்பது எவ்வளவு பொய் என்பதற்க்கு இந்த கிளிநொச்சி பிரமானந்தா பாடசாலை ஒரு சரியான உதாரணம்.
இலங்கையில் ஒரு அரசும், அதன் அதிகாரிகளும் அரசின் காவலர்களும் இருக்கிறார்கள் இவர்கள் குழந்தைகளின் நலனில் காட்டும் அக்கறை என்ன என்பதற்கு இந்த நலனிலும் குழந்தைகளுக்கு இந்த கிளிநொச்சி பிரமானந்தா பாடசாலை ஒரு சரியான உதாரணம்.
பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கிறார்கள், இதுவெல்லாம் பின்னர். இதன் பின்னணிக்கும் பிரச்சினைகளும் பினனர் வருவோம். முதலில் இந்த கிளிநொச்சி பிரமானந்தா பாடசாலை குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் இல்லையே, இது ஏன் இவ்வளவு காலமும் சீரமைக்கப்படாமல் உள்ளது என்பதே பெற்றோரின் கேள்வியாக உள்ளது. குழந்தைகள் நலனில் அக்கறையில்லாத அரசும் அரச நிர்வாகமும் குழந்தைகள் நலனில் அக்கறையற்ற தலைவர்களும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதேயாகும்.
கிளிநொச்சியில் நடைபெற்ற எந்த அபிவிருத்தி வேலைகளுக்கும் முன்பு இந்த பாடசாலை திருத்தம் செய்யப்படாமல் மே 2009 இல் கொத்துக்குண்டுகள் போட்ட பாடசாலையாகவே இன்றும் காட்சி தருவது கண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஈபிடிபிக்கும் இலங்கை அரசும் வெட்கப்பட வேண்டியவர்களேயாகும்.
யுத்த தளபாடங்களுக்கு பணத்தை அள்ளி இறைத்த புலம்பெயர்மக்கள், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க வீடுவீடாக தட்டியும் பேசியும் பணம் சேகரித்தவர்கள் இன்று கிளிநொச்சி பிரமானந்தா பாடசாலைகள் போன்று பல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகயை மீள அமைக்க இயங்கமால் இருப்பதும் யுத்தக் குற்றமேயாகும்.

No comments:
Post a Comment