Search This Blog

Tuesday, 20 May 2014

தொடரும் வடபுல கடல்வளக் கொள்ளை வடபுல மீன் பிடித்தொழிலை அழித்துவிடும்! – வடபுல மீனவர்கள் (ஒளிப்பதிவு) : ரி சோதிலிங்கம்

 

தொடரும் வடபுல கடல்வளக் கொள்ளை வடபுல மீன் பிடித்தொழிலை அழித்துவிடும்! – வடபுல மீனவர்கள் (ஒளிப்பதிவு) : ரி சோதிலிங்கம்


இலங்கையின் வடக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள
வடபுலக் கடல் இந்திய குறிப்பாக தமிழக கடற்தொழில் முதலாளிகளால் மிக மோசமான முறையில் சூறையாடப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் அடுத்த பத்து வருடங்களில் வடபுல மீன்பிடித் தொழில் என்பது இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அப்பகுதி மீனவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியற் தீர்வுக்கு இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதால் இந்த மீன்பிடித்தல் விவகாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் இறுக்கமாகக் கதைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது. இதே போன்று இந்தியாவால் சம்பூர் அனல் ன்நிலையத்துக்காக இடம்பெயர வைக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பிலும் இந்தியாவுடன் இறுக்கமுடன் பேச தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தயங்குகின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை இந்தியாவுக்கு எதிரான வடபுலத் தமிழ் மக்களின் குரலாக்குவதில் இலங்கை அரசு மிக லாவகமாகக் கையாள்கிறது. வடபுல மீனவர்கள் இந்திய மீனவர்களை வடபுலக் கடல் எல்லையில் கைது செய்ததும் இந்திய
மீனவர்களுக்கு எதிராக வடபுல மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் குறிப்பிடத்தக்கது.

இந்த அரசியல் சதுரங்கத்துக்கு அப்பால் வடபுல மீனவர்கள் வாழ்வு நாளாந்தம்
பாதிக்கப்படுகின்றது. மேலும் அவர்கள் ஒரு இருண்ட எதிர்காலத்தையே எதிர்நோக்கி உள்ளனர்.

இது விடயம் சம்பந்தமாக அண்மையில் இலங்கை சென்றிருந்த போது மீனவ நண்பர்களுடன் உரையாடிய ஒளிப்பதிவை இங்கு பதிவிடுகிறேன். யாழ் காரைநகரில் வாழும் நேசராசா நதிசீலன் இரவி ஆகிய இம்மூவரும் வடபுலக் கடலையே தம் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள்.

இவர்கள் வடபுலத்தில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்களின் உள்ளக் குமுறல்களை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

[youtube=http://www.youtube.com/watch?v=FuPIvw5JXXg&w=500&h=306]

No comments:

Post a Comment