Search This Blog

Tuesday, 20 May 2014

எமது இலங்கைப் பயணத்தின் அனுபவப் பதிவு – 1: ரி சோதிலிங்கம் & குமாரி

சென்ற யூலை/ ஓகஸ்ட் மாதங்களில் இலங்கையில் தங்கியிருந்த போது எங்களுக்கு  ஏற்பட்ட அனுபவங்களையும் எங்களுடன் பழகியவர்கள் எங்களுக்கு தெரிவித்த  கருத்துக்களையும் இங்கு பதிவு செய்துள்ளோம். இக்கருத்துக்களை மட்டும்  வைத்துக்கொண்டு அங்குள்ள முழுமையான சமூக – அரசியல் சூழலை புரிந்துகொள்ள முடியாது.  இன்னும் ஆழமாக அந்த சமூகத்துடன் இணைந்து அந்தக் கருத்துக்களின் பின்னணியையும்  அறிந்து கொள்வதன் ஊடாக மட்டுமே முழுமையான சமூக – அரசியல் சூழலை புரிந்துகொள்ள  முடியும் என நினைக்கிறோம். இருந்தாலும் எமது அனுபவப் பதிவு அங்குள்ள சமூக -அரசியல்
சூழலின் ஒரு பக்கத்தை தோற்றுவிக்கிறது.

14th September 2011

அறுபது வருடமாக இனக்குரோதத்தாலும் அரசியல்  வங்குரோத்தினாலும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகள்,  இராணுவத்தின் பொலிசாரின் சித்திரவதைகள் கொலைகள், பின்னர் காலத்துக்கு காலம்  ஆட்சிபீடம் ஏறுவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை இனக்கலவரங்களால் தமிழர்கள்  சுயநிர்ணய உரிமைகேட்டுப் போராடி, நாட்டில் இரு பெரும்பான்மை இனங்களிடையே ஏற்பட்ட
பிளவுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

உரிமைப்போரில் தம்மைத்தாமே வலிந்து கட்டி தம்மைத்தாமே தலைவர்களாக்கி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் அத்தனை ஆதரவுக்கூறுகளையும் அழித்து இலங்கையின்  சிங்கள பெரும்பான்மை இனத்தின் வரலாற்றுப் பகையை வளர்த்து தமிழர்களின் சுய மரியாதையை  இழக்க வைத்த புலிகள் இன்று இல்லை. இந்த இரு இனங்களும் ஓர் பரம்பரைக்கூறுகள்,  இவர்கள் ஜக்கிய இலங்கைக்குள் பொதுவான ஏற்பாட்டுடன் இணைந்து வாழலாம் என்று  எடுத்துக்கூறி அதற்கான பொது அரசியலமைப்பை உருவாக்கி இனங்கள் ஜக்கியமாக வாழ வழிகாட்ட  இலங்கைத்தீவில் மக்களுக்கு தலைவர்களும் இல்லை.

காலத்துக்குக் காலம் தமது சுயநலத் தேவைகளுக்காக மக்களை, இனங்களை மோதவைத்தும்  இனத்தீயை வளர்த்தும் தமிழரை பகடைக்காயாக பாவித்தும் தமது பாராளுமன்ற ஆசனங்களை  பெறுவதையே அரசியாலாக்கி ஆட்சிக்கு வரும் பாரம்பரிய மந்த யுக்தியுடனனேயே இன்றும்  இலங்கை தீவு உள்ளது. கடந்த 30 வருட போராட்டத்தின் அனுபவங்களை குப்பையில்  போட்டுவிட்டு மீண்டும் இனக் குரோதங்களினாலும் பகைமை உணர்வினாலும் இனங்களை பிரித்து  ஆளும் கயவர்களின் கைகளிலேயே மீண்டும் அழகிய இலங்கைத்தீவும் அதன் மக்களும் அகப்பட்டுள்ளனர்.

தமிழ் சிங்கள மொழி பேசும் மக்களிடையே இன உறவுகளை மேம்படுத்துவதில் இரு  தரப்பினருமே அக்கறையற்று கடந்த காலங்களைப்போல தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இனங்களை ஒன்றுபடுத்தி இனங்களின் உரிமைகளை பேணி அனைவருக்கும் பொதுவான இலங்கை நாட்டை உருவாக்க ஆழுமை மிக்க தலைவர்கள் இன்னமும் இலங்கையில் உருவாகவில்லை அல்லது அவர்கள் இனவாதிகளால் அடித்துத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த பாரிய இனவாதப்போரும் போரின் இறுதியில் மக்கள் எதிர்கொண்ட அவலமும் தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு எதிரான, சிங்கள அரசுக்கு எதிரான  ஆழ்மன வன்மஉணர்வுகளை உருவாக்கியுள்ளது. இதற்குத் தீனிபோடும் நடவடிக்கையாக இன்றும்  தென் இலங்கை இனவாதிகள் இராணுவ புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் வடபகுதி வந்து  தமது இனவாத நடத்தைகளை நேரடியாகவே செய்கின்றனர். வடபகுதி மக்களின் எந்தவித  அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தாது தாம் விரும்பியபடி எதையும் எங்கும்  செய்கிறார்கள்.

இவற்றிற்கு நல்ல உதாரணங்களாக இருப்பவைகள் புத்தர் சிலைகளும், புத்த கோவில்களின்  ஸ்தாபனங்களுமாகும். இவர்கள் நாடு என்பது வெறும் மண் என்றும், அந்த மண்ணில் தாம்  பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து புத்தர் சிலைகளை நிறுவியதும் தமது ஆட்சி அதிகாரம்  உருவாகிவிட்டதாகவே உருவகம் செய்கிறார்கள். இவற்றில் அவர்கள் மிகுந்த திருப்தியாக  உள்ளார்கள்.

ஒருசில மணிநேரங்கள் வாகனப்பிரயாணம் செய்தால் வரும் சிங்களப் பிரதேசங்களில் உள்ள  புத்தர் சிலைகளின் தலைகளில் உள்ள பறவைகளின் எச்சங்கள் புத்தருக்கு ஏற்படுத்தியுள்ள  அபகீர்த்தி, இந்த புத்தர் சிலைகளுக்குக் கிட்ட பௌத்த துறவிகளோ மனிதர்களோ வராமல்  போய் பல வருடங்கள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இன்று இலங்கையில்  புத்தரின் சிலைகளை வைத்தே புத்தரின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கு எதிராக  ஆட்சியாளர்கள், இராணுவத்தினர் ஆக்கிரமிப்புச் செய்வதை அவதானித்தோம்.

இன்று தமிழ்மக்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். இந்த மௌன யுத்தம் ஆளும்  வர்க்கக்துக்கு எதிராகவும் அவர்களின் அடாவடித்தனங்களுக்கு எதிராகவுமே உள்ளது.  இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளின் உச்ச நிலையிலிருந்து வட பகுதி மக்கள்  மீண்டுள்ள போதிலும் அன்றாட இராணுவ புலனாய்வுத் துறையினரின் அட்டகாசங்கள் மக்களின்  வாழ்வில் பயத்தை உருவாக்கியுள்ளதுடன் இடைஞ்சலும் தொல்லையும் தரும் நடவடிக்கைகளாகவே  உள்ளன. இன்று மக்கள் அரசுக்கு எதிராகவும் பேசமுடியாது புலிகளின் நடத்தைகள்  பற்றியும் பேச முடியாது. தப்பு தப்பாகவே எல்லாம் திரிக்கப்பட்டு அரச படைகளிடம்  சொல்லிக்கொடுத்து படைகளின் பொலீசாரின் காடைத்தனங்களுக்கு பலியாகிவிடக்கூடாது என்ற  திருகோணமலைப் பிரதேச மக்களின் அனுபவத்தை இன்று யாழ் வடபகுதி மக்கள்  அனுபவிக்கிறார்கள். இவர்கள் மௌனமாகவே போராடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து  கொண்டோம்.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது
கலியுகத்தில் கண்டிராத
அற்புதத்தில் அற்புதம்
புத்தர் இன்று வந்து எங்கள்
பொறுமை எல்லாம்  பார்ப்பரேல்
பொல்லெடுத்து உங்களை
பொடிப்பொடியாய் மாய்ப்பரே” என்ற  வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.

நாட்டில் அபிவிருத்தி என்றும் முன்னேற்றம் என்றும்  உதவிபுரியும் நாடுகளின் கடன் பணத்தில் ஆழும் கட்சி அரசியல் தலைவர்கள் சவாரி  செய்கிறார்கள். அதில் தெருக்கள் மட்டும் கடந்த இரண்டு வருடங்களாக போட்டுக்கொண்டே  இருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்களுக்கு தெருக்கள் மட்டும் போடுவார்களோ என்ற  கேள்வியும் போடப்படும் தெருக்களும் இன்னும் இரண்டு மழை காலத்துடன் சீரழிந்துவிடும் என்ற அபிப்பிராயமுமே பொதுவாக உள்ளது. மிகவும் மோசமான யுத்த நடவடிக்கைகளினால்  ஒதுங்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகள், மனிதாபிமான நலன்கள், அவர்களைச்  சென்றடைந்து அவர்கள் வாழ்வு மாற்றம் பெற்றுள்ளதாகவோ அல்லது வாழ்வு உயர்ச்சி  பெற்றுள்தாகவோ எமக்கு தெரியவில்லை.

தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கிச் செல்லும் வழியில்  வன்னி ஓமந்தையிலும் ஆனையிறவு தடைமுகாமிலும் தமிழர்கள் மீதான தொந்தரவுகளும்  ஆக்கினைகளும் ஆரம்பித்துவிடும். தமிழர்கள் தமிழ்ப் பகுதிகளுக்குப் போவதற்குத்தான்  இந்த ஆக்கினைகள். இவர்கள் தமிழர்கள் என்பதற்காக கொடுக்கப்படும் தொல்லைகள்.  இனவாதிகள் இனவாதங்களால் வாக்குப்பெற்று தமது சுகபோகங்களை அனுபவித்து சுவை கண்டு  கொண்டார்கள். அவர்களால் மக்களின் துன்பங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.  மீண்டும் பதவிக்கு வர என்ன வழிவகைகளை செய்ய வேண்டுமோ அவற்றையே செய்ய  துடிக்கின்றனர். ஆனையிறவு, ஓமந்தை சோதனைச் சாவடிகளும் அங்கே நடைபெறும் சோதனைகளும்  இராணுவத்தினராலும் பொலீசாரினாலும் தமிழர்கள் மீது நடாத்தப்படும் வரலாற்றுத்  துன்புறுத்தல்களுக்கான உதாரணமாகும். இஸ்ரவேல் பாலஸ்தீனத்தின் எல்லைகளில் நடைபெறும்  வரலாற்று சோதனை சாவடிகள் போன்று இன்று மீண்டும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்கள்  இங்கே ஆரம்பிக்கின்றன.

70களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆனையிறவு சோதனைச் சாவடியும்  90 களில் ஆரம்பிக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடியும் உடனடியாக நீக்கப்பட்டு வாழ்வில்  துன்பங்களை தொடராக அனுபவித்த மக்களை சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.  இங்கு அரச படைகளால் பொலீசாரினால் செய்யப்படும் ஒவ்வொரு சோதனையும் இலங்கை அரசு மீதான  அதிருப்தியையே தூண்டுவதாகவே உள்ளது.

ஓமந்தை சோதனை சாவடியில் தனியார் பஸ்களிலும் அரச சேவை பஸ்களிலும் பயணிக்கும்  இரு தரப்பினரும் தரை இறக்கப்பட்டு புலிகளினால் ஒருகாலத்தில் தமிழர்களுக்கு தொல்லைகள் கொடுக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று இலங்கை இராணுவமும் பொலீசாரும்
தனியார் சேவை பஸ்கள் அதிலும் பாரிய, இலங்கையில் பெயர்போன அரசியல்வாதிகளின் உடமைகளாக உள்ள தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தாமல் அதில் பயணம் செய்வோர் எந்தவித  துன்பங்களும் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் ஆனால் சிறிய வாகனங்கள்  தனியார் மினி பஸ்களிலும் பயணம் செய்வோரிடம் அடையாள அட்டைகளை கேட்டு விசாரித்தும்  பதிவுகளையும் மேற்கொள்கிறார்கள். இதைவிட சில தனியார் பஸ்களின் பெயர் அடையாளங்கள்  தெரிந்தவுடன் பாதை திறக்கப்பட்டு அவ்வாகனங்கள் எந்தவித தொந்தரவுகள் இல்லாமலும்  போய்விடுகின்றது, இச்செயல் இந்த சிங்கள தனியார் பஸ்கம்பனிகளுக்கு பயணிகள் முண்டி  அடித்துக்கொள்ள வைக்கிறது.

மேலும் இந்த சோதனை சாவடிகளில் சிங்கள தனியார் கம்பனிகளின் சொகுசு பஸ்களில்  பயணிப்போர் எவராயினும் இறக்கி சோதனை செய்யாமல் போக அனுமதிப்பதன் மூலம் இலங்கை  இராணுவமும் பொலிசாரும் யாருக்காக யாரை நோகடிக்கிறார்கள் என்பதை தெளிவாகவே புரிந்து  கொள்ளலாம்! இந்த ஓமந்தைச் சோதனையின் நோக்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக என்றால்  சிங்கள சொகுசு சேவைகளில் பயணிப்பவர்களால் பாதுகாப்புக்குக் குந்தகம் இல்லை  என்றாகியுள்ளதா?

இவற்றைவிட சிங்கள இராணுவ பொலிசாரின் நடத்தைகளும், கடந்த 60 வருடங்களாக தமிழ்  மக்களின் மீதான தொந்தரவுகளும் பயணிகளின் பொருட்களின் மீதான ஆசையும் பயணிகளை மேலும்  விரக்திகொள்ள வைக்கிறது. இது இன்றைய இலங்கை பொலீசாரின் பாரம்பரிய நடைமுறைகளில்  ஒன்றாகி இவைகளும் சாதாரண பொலீசாரின் நடவடிக்கைகளாகவே உருவாகி நடைமுறைப்  படுத்தப்பட்டும் வருகின்றது.

வடகிழக்கில் தொடங்கும் சோதனைச் சாவடிகளும் வகை தொகையின்றி  குவிக்கப்பட்டிருக்கும் படையினரும் நாடு இன்னமும் இரண்டாக பிளவுபட்ட நிலையிலேயே  உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

தென்பகுதிகளை கடந்தவுடன் வடபகுதி அல்லது கிழக்கு பகுதிகளில் பயணிக்கின்றோம்  என்பதை தெருக்களின் அவலமும், 100 மீற்றருக்கு ஒன்றென அமைக்கப்பட்ட இராணுவ காவல்  அரண்களும் அறிவுறுத்தும். அத்துடன் இந்த இராணுவ அடையாளங்கள் தமிழ் பிரதேசங்களின்  மீதான அடக்குமுறையின் சின்னமாக எங்கும் வியாபித்து நிற்கிறது.

கிளிநொச்சியில் இராணுவ நிலையங்களை அண்டிய பகுதிகளில் குறிப்பாக தமிழர்களை  கேவலப்படுத்த என்றே புலிகளினால் தகர்க்கப்பட்ட கிளிநொச்சி நீர்த்தாங்கி ஒரு  கண்காட்சிக் கூடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனையிறவில் தமது வெற்றிச்சின்னமாக ஒரு அடையாளத்தையும்  புலிகளினால் பாவிக்கப்பட்ட கவச வாகனத்தை காட்சிப்பொருளாகவும் முன்வைத்து இவை தமது  வெற்றிச்சின்னமாகவும், புலிகளை வெற்றி கொண்டவர்களாகவும் காட்டுவதன் மூலம்  தமிழர்களையும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் கேவலப்படுத்துகிறார்கள். போரில்  மரணித்த இலங்கை இராணுவத்தினர், பொலிசார்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டும், புலிகள்  மனிதர்கள் அல்ல என நிறுவும் இச்செயலை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி  இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வெற்றிச்சின்ன அடையாளங்களையோ  பொருட்காட்சியகங்களையோ தமிழர்கள் சென்று பார்வையிடுவதில்லை.

இதேபோன்று தமிழ் இனவாதத் தலைவர்களே இலங்கையில்  பிரிவினைவாதத்தைத் தூண்டினர், இவர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களே ஆயுதம்  தூக்கினர் என்ற கருத்து அன்றிலிருந்து இன்றுவரை அரசிடமும் அரச உயர்அதிகாரிகளிடமும்  உள்ளது. இவ்வாறான பரப்புரைகள் மூலம், மாறிமாறி ஆட்சிக்கு வருபவர்களால் தமிழ்மக்கள்  மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை மூடிமறைப்பதற்காக- இலங்கையில்  அரசும் இராணுவத்தினரும் தமிழ் மக்களுக்கு செய்த தவறுகளாலேயே போராட்டம் உருவானது  என்பதை மூடி மறைப்பதற்காக- ‘புலிகள் தான் எல்லாவற்றையும் தமிழரிற்கு எதிராக  செய்தனர், என்றும் தாமே தமிழ் மக்களுக்கு புலிகளிடமிருந்து விடிவுப் பாதையினைக்  காட்டினோம்- புலிகளே இலங்கையின் எதிரிகள்’ என்ற பாணியில் இலங்கை அரசும் இராணுவமும்  பொருட்காட்சியகங்களை நிறுவிக் காட்டுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது புலிகள் இல்லை அடுத்த பிரிவினைவாத சக்தி ரிஎன்ஏயினர் என்பதுபோல காட்டி  அவர்கள் மீது அரசு தனது அடாவடித்தனங்களை காட்டுகின்றது. ரிஎன்ஏயினரை தமிழர்களிடம்  இருந்து ஓரம்கட்டவே முயல்கின்றனர் அவர்களே தமிழர்களின் எதிரிகள் என சித்தரித்துக்  காட்டுவதன் மூலம் இலங்கை அரசும் இராணுவமும் தமது தவறுகளிலிலிருந்து தப்பிக்கப்  பார்ப்பதுடன் தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்க  முயற்சிக்கிறது.  மேற்குறிப்பிட்ட பொருட்காட்சியகங்களை சிங்கள மக்களே சென்று  பார்க்க ஊக்குவிப்புக்கள் செய்வதும் இதன் மூலம் தங்களை சிங்கள மக்களின்   பாதுகாவலர்களாக நிறுவுவதையும் அரசின் சுத்துமாத்து அரசியலையும் இராணுவம்  பொறுப்பேற்று நடாத்துகின்றது. இராணுவத்தின் ஊக்குவிப்பினால் சிங்கள மக்களும் தாம்  இலங்கையில் தமிழரை வென்றுவிட்டோம் தமிழரின் எழுச்சியை அடக்கிவிட்டோம் என்ற  மனப்பூரிப்பில் திகழ்வதையும் அந்த பிரதேசங்களிற்குப் பயணிப்பவர்களிடம்  அவதானிக்கலாம். சிங்கள மக்கள் இலங்கையின் வடக்கு பிரதேசத்திற்கு சுற்றுலா போய்வர பல  சிங்கள பிரதேசங்களின் கிராம சேவையாளர்களூடாக பண உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக வட  பகுதி மக்கள் பலர் கூறுகிறார்கள். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மனம்நொந்த மக்களை  இலங்கை இராணுவம் பொருட்காட்சியகத்தில் வைத்துள்ளதாகவே தமிழ் மக்கள்  பேசிக்கொள்கிறார்கள்.

வடபகுதி வாக்காளர்கள்:
ஈபிடிபியினரின் உதவியினால் வடபகுதி  மக்கள் பயனடைகிறார்கள். மக்கள் தமது உதவிகளை பெறும் விடயத்தில் மிகவும் அன்னியோன்யமாக நடந்து கொள்கின்றனர். ஈபிடிபி யினரினால் பல உதவிகள் பெற்று தமது  வாழ்வினை மேம்படுத்திக் கொண்டவர்கள், ஆசிரியராக, வங்கி ஊழியராக கடமையாற்றும் பலரும் அவர்கள் செய்யும் விடயங்களை, கிடைக்கப் பெறும் உதவிகளை வரவேற்றுப் பேசுகிறார்கள்.  ஆனால் தேர்தல் காலங்களில் ஈபிடீபிக்கு வாக்களிக்காது ரிஎன்ஏக்கு வாக்களிக்கிறார்கள்  அல்லது யாருக்குமே வாக்களிப்பதில்லை. காரணம் ஈபிடிபி, அரசுடன் இணைந்து தேர்தலில்  வெற்றிலைச் சின்னத்தில் நிற்பது வட பகுதியில் பெரும்பகுதி மக்களின் வரவேற்பைப்  பெறவில்லை. ஈபிடிபி தனித்து வீணைச் சின்னத்தில் தேர்தலுக்கு வருமானால் ஈபிடிபியின்  ஆதரவாளர்கள், உதவிகள் பெற்றவர்கள், மக்கள், ஈபிடிபியை ஆதரிப்பார்கள் என்றே  தெரிகிறது. காரணம் மக்கள் அரசின் இராணுவ நடவடிக்கைகளை கொலைகளை மறந்துவிடவில்லை.

ரிஎன்ஏ எமக்கு செய்த உதவி என்று சொல்ல எதுவுமில்லை, எத்தனை வருடமாக  தமிழரசுக்கட்சி, கூட்டணி என்று வோட்டுப்போட்டு என்னத்தைக் கண்டோம், வெற்றிலையில்  நிற்பதால் ஈபிடிபிக்குப் போட விருப்பமில்லை, ஆனபடியால் அடுத்த தெரிவான ரிஎன்ஏக்கு  போட்டேன் என்றவர்களும் ரிஎன்ஏக்கு போடலாம் என்று கருத்துச் சொன்னவர்களும்  அதிகம்.

ஈபிடிபியினரால் தமது வாக்காளருக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் தமது அரசுடன்  இணைந்து இயங்கும் அரசியலையும் இதன் அவசியத்தையும் சரியாக புரியவைக்க  முடியவில்லை.

காலம் காலமாக, 60 வருடங்களுக்கு மேலாக தமது உரிமையைப் பெற விரும்பிய மக்கள்  தொடர்ந்தும் அதனையே எதிர்பார்க்கிறார்கள். அதன்மூலம் மட்டுமே தமக்கு நிம்மதியான  வாழ்வு கிடைக்குமென நம்புகிறார்கள். அரசுக்கும் அதன் ஆதரவு அணிகளுக்கும் எதிராகவே  இருக்கிறார்கள், இந்த மன நிலையிலிருந்து மக்கள் மாற்றம் பெறவில்லை. சிலவேளை இந்த  ஆதரவினை அரசு பெற வேண்டுமானால் இனத்துவேச இனப்பிரிப்பு கொண்ட அரசியலை விடுத்தும்,  இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வினை முன்வைத்து வட- கிழக்குப் பகுதியில்  விதைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை பின்வாங்குதல் மூலமும் இலங்கையில் தமிழர்கள்  சிங்களவர்கள் அடிப்படையில் ஓர் இன மக்கள் பரம்பரையினர் என்ற கட்டை அவிழ்ப்பதன்  மூலம் இலங்கை மக்களின் ஜக்கியத்துக்கான புதிய அரசியலை ஆரம்பிப்பதன் மூலமும் பெறமுடியும். இவ்வளவு காலமும் இனவாத அடிப்படையில் மக்களை ஏமாற்றியவர்களால் இதை செய்ய முடியுமா?

கடந்த நீண்டகால யுத்தத்தின் பின்னர் தமிழர்களிடம் உள்ள பலம் பலவீனம் பற்றிய  விமர்சனங்களோ, சர்வதேசத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் போர் நிலைமைகளில் ஏற்படுத்திய  தாக்கம் பற்றியும் பெரும்பான்மை மக்கள் அக்கறையற்றவர்களாகவும் இதன் தாக்கத்தையும்  புரிந்து  கொள்ள முடியாதபடி இனவாத உணர்வு சிங்கள எதிர்ப்பு உணர்வு மேலோங்கியே உள்ளது.

ஈபிடிபியின் மத்தியில் கூட்டாட்சி என்பதன் அர்த்தத்தை மக்கள் புரிந்து  கொள்வதற்கு ஈபிடிபி மிகநீண்ட காலம் அரசியலில் நின்றுபிடிக்க வேண்டியிருக்கும்  அல்லது 13வது திருத்த சட்டமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை  அமுல்படுத்தும் வரையில் மத்தியில் கூட்டாட்சி என்ற கருத்தை மக்கள் தவறாகவே அரசுக்கு  வால்பிடிகள் என்ற பதத்திலேயே பார்ப்பார்கள். ஈபிடிபிக்கும் வீணைச் சின்னத்துக்கும் உள்ள அரசியல் பலம் மக்களிடம் உள்ளது. இதனடிப்படையில் தமிழ்பேசும் மக்களின் சுதந்திர  அரசியல் கட்சியாக ஈபிடிபி தனது புனர்நிர்மாணத்தை பாரிய உள்வாங்கல்கள் மூலம் செய்ய  வேண்டியுள்ளது. ஈபிடிபியின் ஆதரவாளர்களில் பலர் ஈபிடிபி தனது வீணை சின்னத்திலேயே  அரசியல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதிலும் அரசுடன் உள்ள உறவையும் தொடர்ந்து பேண  வேண்டும் என்பதிலும் அக்கறையாகவும் உள்ளனர்.

காரைநகரில் தெரிவான ஈபிடிபி தோழர் ரஜனியுடன் காரைநகரில் உள்ள பல  பெரும்பான்மையினர் ஜக்கிய உறவுடன் உள்ளனர். காரைநகரில் பெரும்பான்மை விருப்பு  வாக்குகளையும் பெற்றுள்ள ரஜனி என்பவர் யார்? எங்கே பிறந்தார்? என்பதைவிட ரஜனியின்  தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றவர்களுடன் பழகும் தன்மை மற்றவர்களுக்கு உதவும்  தன்மையில் மற்றவர்களின் பேச்சை கிரகிக்கும் நல்ல பண்பு கொண்டவர் என்ற நல்மதிப்பு  பலரிடம் உண்டு. இது சிலவேளை ஈபிடிபிக்கு அப்பால் தனிப்பட்ட தோழர் ரஜனியின் பண்புகள் மக்களிடம் நல்லுறவுகளை ஏற்படுத்தியிருக்குமோ என்று எமக்கு சந்தேகம் ஏற்பட்டபோதும்  அவற்றை காலம் எடுத்து அவதானிக்கும் அளவு காலம் இடம் தரவில்லை.

இந்த காலங்களில் தோழர் டக்ளஸ் அவர்கள் பிரசாரங்கள் மேற்கொண்ட இடங்களில்  வாழ்கின்ற பொது மக்களுடன் நான் நேரடியாக பேசும்போது அவர்களில் பலர் ஈபிடிபியின்  அரசியலில் அரசுடன் இணைந்த அரசியல் தவறு என்றே அழுத்திக் கூறுகின்றனர். ஆனால் எப்படி  அபிவிருத்தி செய்ய முடியும் என்று கேட்கும்போது அபிவிருத்தி எங்கே நடக்கிறது  1983க்கு முன்பிருந்த நிலையை மீண்டும் கொண்டு வருவதையே அபிவிருத்தி என்கிறார்கள்  என்றனர்.

யாழில் பல பொது அமைப்புக்கள் ஸ்தாபனங்கள் கல்லூரிகளில் உள்ள உயர் பதவி  வகிப்பவர்கள் ஈபிடிபி ஆதரவாளர்களாகவே உள்ளனர் என்றும் அல்லது ஈபிடிபி  ஆதவாளர்களுக்கே கொடுக்கப்படுகின்றது அல்லது அவர் அந்த பதவியில் தொடர்ந்து இருக்க  வேண்டுமானால் ஈபிடிபி ஆதரவாளராக மாற வேண்டும் என்ற எழுதாதவிதி உள்ளதாக  யாழ்ப்பாணத்தில் பலர் கருத்துத் தெரிவித்தார்கள்.

வடபகுதி மக்கள் மத்தியில் கடந்தகால இயக்கங்கள் அவர்களின் கடந்தகால செயற்பாடுகள்  பற்றி ஒரு அதிருப்தியான மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள், வடபகுதி மக்கள் ஈபிடிபியை  இன்னமும் இயக்கமாகவே பார்க்கும் நிலையுண்டு. ஈபிடிபியினரும் தோழர்களும் தம்மை  ஈபிடிபி என்ற இயக்கத்திலிருந்து வெளியேறி, ஈபிடிபி என்ற அரசியல் கட்சிக்குரிய  முழுமையான செயற்பாடுகளில் இறங்க வேண்டும். ஈபிடிபி தனது கட்சிக்குரிய  செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவதும் மக்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்து பணிகளில்  ஈடுபடுவதன் மூலம் மக்களின் பிரதிநிதிகள் என்ற மனப்பான்மையை வென்றெடுக்க முனைய  வேண்டும். அதற்கான பாதையை ஈபிடிபி உருவாக்கிக்கொள்ள வேண்டும். புலிகள் அழிந்து இரு  வருடங்களாகியும் ஈபிடியினர் இந்த மக்களை வெல்லும் தந்திரங்களில் பின்தங்கியே உள்ளனர். ஈபிடிபியினர் நீண்டகாலப்போக்கில் ரிஎன்ஏயை வெற்றிகொள்ள வேண்டும் என விரும்புகிறார்களே தவிர அதற்கான அரசியலையும், நடைமுறையையும் மக்கள்முன் வைக்கவில்லை.

**வடபகுதி தமிழர்கள் பலர் சமூகத்தில் இதர பிரிவினர் இளயை  தலைமுறையினர் எதிர்பார்க்கும் மாற்றங்களுக்கான திறவுகோல்கள் எது என்று  சிந்திப்பவர்களாக இல்லை. வடபகுதி மக்கள் பாரம்பரிய சிந்தனைகளிலிருந்து வெளியே  வரவில்லை. தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தின் அணுகு முறையிலும் பாரிய  மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கவில்லை.

இன்றைய உலகவியல் மாற்றங்களில் மனிதர்களின் மனமாற்றங்கள், ஏற்பட்டுள்ள புதிய  அணுகுமுறைகள், புதிய தொழில் நுட்பமாற்றங்களுக்கு ஏற்ப மனித நாகரீக மாற்றங்கள்  பற்றிய அறிவு என்பன பற்றாக் குறையாகவும் உள்ளது. இப்படியான மாற்றங்களை மேற்கு  ஜரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்பவர்கள்- தாம் வாழ்ந்த உலகவியல் மாற்றங்களை  உணர்ந்தவர்களால் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் சென்று வாழ்ந்து அந்த மக்களின்  வாழ்விலும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய பொறுப்பு உண்டு. இதில் முக்கியமாக  பாடசாலைகளில் பணிபுரிந்தவர்கள் மாணவர்களின் தொடர்புகள் கொண்டவர்கள், இளைஞர்களின்  அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர்கள் அனுபவம் கொண்டவர்களின் அனுபவங்கள் பகிரப்படல்  வேண்டும், இவற்றைவிட கணணி தொழில் நுட்பங்களின் பயன்பாடுகளை அனுபவவாயிலாக கொண்டவர்களின் அனுபவங்களை அந்த மக்களின் வாழ்விடங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

இன்றைய  ஜரோப்பிய சமுதாய உதாரணங்கள் அம்மக்களுக்கு தெரியப்படுத்தியும் உதவிகளாக கொடுக்கப்படுதலும் அவசியமாகின்றது.

*சாதிய அமைப்புக்கள்
இன்று வடபகுதி மக்களிடைளே உள்ள சாதிய  அமைப்புக்கள் பற்றிய அறிவிலும் விட்டுக்கொடுப்பிலும் பல நல்ல மாற்றங்கள் உள்ளதை  நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த பல நூற்றாண்டுகளாக இருந்த சாதிய அடிப்படையிலான  இறுக்கத்தில் ஒரு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதையும் இந்த தளர்ச்சிக்கு மேலும் தளர்வுகளை உருவாக்கும் பணிகளை செய்ய வேண்டிய தேவைகள் உடனடியாக எம்முன்னால் உள்ளது.

பேராட்டகாலங்களில் எதிர்கொண்ட இடப்பெயர்வுகளும் சுனாமியும் மாற்றங்களை  ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினார்கள்.  சாதிய பிரச்சினைகள் பற்றிய  அக்கறையில் பல முன்னாள் போராளிகளும் முற்போக்கு பற்றி பேசியோரும் கருத்துக்களை  முன்வைத்தோரும் மக்களுக்காக போராடுகிறோம் என்று தம்மை அர்ப்பணித்து இயங்கிய பலர்  இன்று சாதியம் பற்றிய அக்கறையின்மையாக இருப்பது பற்றி பல முன்னாள் போராளிகள்  மிகுந்த கவலையுடன் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்ற கருத்தை கொண்டுள்ளனர்.

முற்போக்குவாதம் பேசிய பலர் இன்று ஊர்களில் உள்ள கோயில்களை கட்டவும் அல்லது  சமூகத்தில் உள்ள பிற்போக்குதனங்களுக்கு தமது பணத்தை செலவு செய்வவதையும் குறைபட்டுக் கூறினர். இதேபோன்று வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களில் பலர் இன்றும்  வெறும் கடதாசி அரசியல் பேசுவதை விடுத்து மக்களின் தளத்தில் தொழில், உழைப்பு ரீதியாக  முன்னேற வாய்புக்களை உதவிகளை, விசேடமாக கூட்டுறவு முறையிலான திட்டங்களை செய்ய  வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழும்  முன்னாள் தோழர்கள் செய்யும் உதவிகளுக்கும், ஆதரவுக்கும் நன்றியுடையவர்களாகவும் உள்ளனர். அப்படிப்பட்ட சில முயற்சிகள் தமக்கு சர்வதேச கண்களை திறக்க உதவுகின்றன  என்றும் கருத்து தெரிவித்தனர். சர்வதேசம், புதிய விஞ்ஞான உலகம் பற்றிய மக்களின்  அறிவை திறப்பதே மாற்றத்திற்கான வழி என்ற கருத்தை பலர் கொண்டுள்ளனர்.

பொதுவாகவே வடபகுதி மக்கள் அரசு என்பதில் எமக்குள்ள  உரிமைகள் பற்றியும் அரசில் அங்கம் வகிக்கும் கட்சியினரின் நடத்தைகளையும் பற்றிய  பார்வையில் மிகவும் குழம்பிய நிலையிலேயே உள்ளனர்.

வடபகுதி மக்களின் மனதை வெல்லும் ஒரு படலமாக ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ச வடபகுதி  வருகைதந்தும் வன்னியில் பல மக்களை பஸ்சில் ஏற்றி போய் அவர்களில் பலருக்கு உணவுப்  பொருட்களை கொடுத்தும் இசைக்கச்சேரிகளை நடாத்தியும் தமக்கு வாக்களிப்பார்கள் என  எதிர்பார்த்திருந்தனர். சாதாரண வன்னி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் தம்மை தமது  விருப்பத்திற்கு இசைவின்றியே ஏற்றிச்சென்றதாகவும், தமக்கு வாக்களிக்கும் நோக்கில்  தரப்பட்டபோதே இவ் உணவுப்பொருட்கள் தரப்பட்டதிற்கான தர்மம் தொலைந்து விட்டது என்றும்  கூறினர். இந்த சம்பாசனைகளிடையே வந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இன்று
இலங்கை அரசுடன் இணைந்து இயங்குவதைவிட வேறு என்ன செய்ய முடியும் இதுதான் இன்றுள்ள யதார்த்தம் என்றார். எல்லோரும் தமக்கு பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு பல  கதைகளை கூறுகிறார்கள் நாங்கள் எங்கே எப்படியான சூழ்நிலைகளில் இருக்கிறோம் என்பதை  உணரத் தவறிவிடுகின்றனர் என்றார்.

நாம் வெளிநாட்டிலிருந்து வந்தோம் என்பதை அறிந்து கொண்ட அவர் ஓமந்தையில் நடைபெற்ற  பதிவுகள் பற்றி எம்முடன் பேசி தெரிந்து கொண்டபின்னர் இப்படியான நடைமுறைகளுக்கூடாகவே  நாம் கடந்து செல்ல வேண்டும் என்றும் ஒப்பீட்டளவில் பார்க்கையில் இது பெரிய  பிரச்சினைகள் அல்ல எல்லாவற்றையும் சமாளித்து போக வேண்டும் என்றார்.

வடபகுதி மக்கள் ஆயுதபாணிகளாக இருந்த இயக்கங்களுக்கும் அதன் வழிவந்தவர்களுக்கும்  எதிராகவே உள்ளனர். ஈபிஆர்எல்எப் ரெலோ புளொட் போன்றவர்கள் புலிகள்  முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற காலங்களில் இந்த அமைப்புக்களும் முடிவுற்றிருக்க  வேண்டும் என்ற கருத்து கொண்டுள்ளனர். ஈபிடிபியினரால் கிடைக்கும் உதவிகள், ஆதரவுகள்,  அரச தொடர்புகள் மூலம் கிடைக்கும் உதவிகள் கொடுப்பனவுகளுக்கு ஈபிடிபியினரின்  தொடர்புகள் தமக்கு தேவை என்ற கருத்தும் இதர ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட், போன்ற  அமைப்புகளால் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்ற கேள்வியும் இவர்களால் தாம் பல  துன்பங்களுக்கு உள்ளாகியிருந்ததையும் மக்கள் மறக்கவில்லை. ரிஎன்ஏயில் இன்று
அங்கத்துவம் பெறும் பலர் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்களில் பெரும்பான்மையானோர்  மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையவர்களாக இருப்பதனாலும் இவர்கள் சமூகத்தில்  செய்யும் உத்தியோகங்களினாலும் அவற்றினால் சமூகத்திற்கு கிடைக்கும் உதவிகளினாலும்  இவர்களை மக்கள் வேறு கோணத்திலும் பார்க்கிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராகவே  ரிஎன்ஏயின் நிலைப்பாடு இருப்பதாலும் ரிஎன்ஏக்கு வாக்களிப்பது சரி என்றும்  கருதுகின்றனர் அதேவேளை இப்படியான பேச்சுக்களின் இடையே யாழ்ப்பாணத்தில் மிகவும்  பிரபல்யமாக குறிப்பிடப்படும் திரு சரவணபவன் போன்றவர்கள் தமது சொந்த அபிவிருத்திகளை  செய்யவே தேசியம் பற்றியும் அரசுக்கு எதிராகவும் பேசுகிறார்கள் என்ற கருத்தையும்
இணைத்தே பேசுவார்கள்.

ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற அமைப்புக்கள் தமக்கு  ஒருவித பிரயோசமும் அற்றவை என்றும் இவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் வந்து அரச  எதிர்ப்பு கூட்டங்களை வைத்து தமக்கு வாக்கு கேட்பதையும் கடந்த காலங்களில் என்றுமே  தமிழ்மக்களுக்கு எந்தவித உதவிகளும் புரியாத அமைப்புக்கள், இன்றும் எமக்காக என்று  எம்மை ஏமாற்றி தமது சுயலாபங்களுக்காகவே இயங்குகிறார்கள் என்ற கருத்தும் மக்களிடம்  உண்டு. வெளிநாடுகளில் குடும்ப அங்கத்தவர்களை வைத்துக்கொண்டு நாட்டில்  பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை பட்டியலிடவும் அவர்கள்  தவறவில்லை. அத்துடன் பதவிக்காலம் முடிய அவர்கள் எல்லாம் தத்தம் குடும்பங்களுடன்  இணைந்து விடுவார்கள் என்றும் கூறினார்கள். மேலும் சிலர் இந்த அமைப்புக்களும்  புலிகளின் அழிவுடன் அழிந்திருக்க வேண்டும் அல்லது எல்லோரும் தமது குறுகிய  அமைப்புக்களை அழித்து ரிஎன்ஏ அல்லது தமிழரசுக்கட்சியின் கீழ் ஒற்றுமைப்பட்டிருக்க  வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். காரணம் நாம் பல கட்சிகள் அமைப்புகளை  வைத்துக்கொண்டு அமைப்புக்காக மக்கள் என்ற கோட்பாடுகளால் பலவீனப்பட்டுக்கொண்டு போகின்றோம் என்றும் மக்களுக்காக மக்கள் அமைப்பு ஒன்றே போதும் என்றும் கருத்துக்கள்  கூறினார்கள்.

இந்த அமைப்புக்கள் மக்களிடமிருந்து எதையும் படித்துக் கொள்ளவில்லை. இவர்களும்  தமக்கு கடந்தகாலங்களில் இராணுவம் போன்று பல துன்புறுத்தல்களை தந்தவர்கள் என்ற  மனத்தாங்குதல்களுடனேயே மக்கள் பேசுகிறார்கள். ஈபிஆர்எல்எப் என்றால் மண்டையன் குழு
என்பதும், இந்திய இராணுவகால நடவடிக்கைகள் பற்றியும், ரெலோ புளொட் என்றால் இந்திய
இராணுவகாலத்தில் வவுனியாவில் நடைபெற்ற சம்பவங்களையும் நினைவுபடுத்தியும்  கூறுவார்கள். புலிகள் தங்களின் காலத்தில் செய்தவை 50வீதம் சரி 50வீதம் பிழை என்றும்  இறுதியுத்த காலத்தில் 75வீதம் பிழைவிட்டவர்கள் என கூறியதுடன் அத்தவறுகளை மிகவும்  கோபமாக விமர்சித்தார்கள்.

வன்னியில் புலிகளின் காலத்தில் இரவுநேரங்களில் தாங்கள் தனியாக சைக்கிளில்  பயமில்லாமல் போகக் கூடியதாக இருந்ததென்றும் தற்போது அந்தநிலைமை இல்லை என்றும்  பெண்கள் கூறினார்கள்.

புளொட் ரெலோ போன்றவர்கள் வவுனியாவில் பல சிரமதான பணிகள் செய்ததாகக்  கூறுகிறார்களே எனக் கேட்டபோது, இவர்கள் சிரமதானப்பணிகள் செய்ய இயக்கம் – கட்சி  என்று பெரிய பெயர்கள் தேவையில்லையே விரும்பினால் எப்பவும் சிரமதானங்கள் எங்கும்  யாரும் செய்யலாம் தானே என்றனர்.

*ஒரு சிறு இராணுவமுகாம் என்பது ஒரு கோப்பிரலையும் அண்ணளவாக  பத்து இராணுவத்தினரையும் கொண்டதாகவே உள்ளது யாழ்ப்பாணத்து கிராமங்களில்  உள்ளுர்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள இராணுவத்தினர் சமையல் செய்ய  தேவையான விறகுகளை அயலிலே உள்ள மக்களால் கைவிடப்பட்டும் பாராமரிப்பு இல்லாத  காணிகளிலிருந்தும் பெறுகிறார்கள், இவ்வளவு காலமும் இந்த காணிகளில் உள்ள விளைவுகளை  பெற்றுக்கொண்ட ஊரவர்கள் இராணுவம்பற்றியும் இவர்களுக்கு எதிரான பேச்சுக்களில்  அக்கறையாகவும் இருப்பது வழமையானது.

உள்ளுரில் இராணுவத்தினர் தமது முகாம்களை அண்டிய பகுதிகளில் உள்ள நன்னீர்  கிணறுகளையும் சில பாதைகளையும் தமது தேவைக்கு மட்டுமென பாவிப்பதும் அவ்வூரவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. இவர்களால் தமிழ் பெண்களுக்கு எப்போதும் ஆபத்து  என்பதும் இராணுவத்தினர் குடியிருக்கும் தெருக்கள், ஒழுங்கைகள் அண்டிய பிரதேசங்களை  பாவிப்பதை தவிர்த்துக் கொள்வார்கள் அதிலும் இரவு வேளைகளில் முழுமையாக அனைவருமே தவிர்த்துக் கொள்வார்கள்.

இன்னும் மேலாக பல இடங்களில் இராணுவத்தினர் தமது கடைகளையும் சிற்றுண்டி  சாலைகளையும் அமைத்துள்ளனர். இலங்கை இராணுவத்தினர் நடாத்தும் கடைகளிலும் சிகை  அலங்கரிப்பு நிலையங்களிலும் சாதாரண கடைகளில் கொடுக்க வேண்டிய கட்டணத்தை விட  மிககுறைந்ததாகவே அறவிடுகிறார்கள். தமது வாடிக்கையாளர்களை இவ்வாறு இராணுவம்  கவர்வதன்மூலம் தாம் வருமானம் இல்லாது இருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார்கள்  அவ்விடங்களிலுள்ள கடைக்காரர்கள்.

வாடகைபணம் மின்சாரச் செலவில்லாது  கடைவைத்திருக்கும் இராணுவம் அறவிடும் விலையை தாம் அறவிடின் தமது கடையை மூடும்  நிலையே உருவாகும் என்றார்கள். இராணுவத்தினர் பொது மக்களுடன் தமது தொடர்புகளை மேம்படுத்தவும் பொது மக்களிடமிருந்து விடயங்களை அறிந்து கொள்ளவுமே இக்கடைகளைப்  பாவிக்கிறார்கள் என்று சிலர் விசனம் தெரிவித்தனர். வேறு சில இடங்களில்  இருதரப்பினரும் இணைந்து பாவிக்கும் கிணறுகள் பொது இடங்கள் கடைகள் போன்றவற்றினால்  மக்களுடன் இராணுவத்தினர் தொடர்புகளை உருவாக்குகிறார்கள் அல்லது  முயற்சிக்கிறார்கள்.

யாழ் பிரதானபாதைகளில் உள்ள இராணுவத்தினர்களால்  திறக்கப்பட்ட பல சிற்றுண்டி சாலைகள் உணவுச்சாலைகளில் தமிழர்கள் யாரும் சென்று  உணவருந்துவதை அவதானிக்க முடியவில்லை. இவர்களது இந்த கடைகள் பல காலங்கள் நீடித்து  இருக்கமாட்டாது. இன்று இவர்களின் வாடிக்கையாளராக இருக்கும் இராணுவத்தினரும் வடபகுதி  நோக்கிவரும் சிங்கள பயணிகள் அளவும் அதிககாலம் தொடர்ந்து இருக்க மாட்டாது என்றே  அறியக்கூடியதாக உள்ளது. இந்த உணவுச்சாலைகளில் பலவற்றிற்கு நடத்துனர்கள் வாடகையோ  இன்னும் சிலர் மின்சார கட்டணங்களோ செலுத்துபவர்களாக இல்லை ஆகவே இவர்கள் இன்றும் சில வருடங்களாவது தொடர்ந்து வியாபாரங்களில் இருப்பார்கள் எனவும் சிலர் கூறினார்கள்.

இன்னும் சிலர் எம்முடன் பேசும்போது இப்படியாக விதைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் பாரிய அச்சுறுத்தல்களை செய்யாத போதிலும் மக்களின் அன்றாட வாழ்வில் ஏதோ ஒருவிதத்தில்  இடையூறாகவே இருப்பதாகவே கருதுகிறார்கள். அதிலும் தமக்கு எதிராக என்ன  வேண்டுமானாலும், எந்நேரத்திலும் செய்யவே உள்ளார்கள் என்றும் இராணுவம் தமிழ் மக்களை பாதுகாக்க அல்ல என்ற நிலைப்பாட்டிலும், அரசு என்பதே தமிழரிற்கு எதிரானது என்ற  எண்ணப்பாடும் வடபகுதி மக்களிடம் நிறைந்தே உள்ளது.  இதற்கு உதாரணங்களாக ஜனாதிபதி ஒரு  பொதுக்கூட்டத்தில் பேசும் போது இலங்கை வரலாற்றில் தமிழர்களின் பங்கு அல்லது  தமிழர்களது உரிமைபற்றி எந்தவித பேச்சுக்களும் இல்லாமலே சிங்களவர்களின் நாடு என்ற
கருத்துப்படவே பேசினார் என்பதையும் ஜனாதிபதி எங்களுக்குரியவர் என்றால் இப்படியாகவா  பேசுவார் எம்மை புறக்கணித்து பொறுப்புணர்வு இல்லாமல் தானே பேசுகிறார்  என்றார்கள்.

நகர்ப்புறங்களிலும் பிரதான பாதையோரங்களிலும் உள்ள இராணுவ முகாம்களுக்கு  அண்மையில் உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த இராணுவத்தினருடன் எந்தவித  தொடர்புகளையும் ஏற்படுத்துவதில்லை மாறாக இராணுவத்தினரை பார்க்கும் ஒவ்வொருதடவையும்  இராணுவத்தினரையும் மகிந்த அரசசையும் திட்டியே கதைப்பார்கள். நகர்ப்புறங்களில்  இப்போது இளைஞர்கள் பலர் ஒன்று கூடி தெருக்களில் நின்று கதைப்பார்கள்  விளையாடுவார்கள் இவை இராணுவத்தினர் பொலீசாருக்கு ஒரு விருப்பமின்மையை  வெளிப்படுத்துவதாக சிலர் கூறினார்கள்.

தமிழர்கள் தமது பிரதேசத்தில் இராணுவ முகாம்கள் நிறைந்திருப்பதை கொஞ்சங் கூட  ஏற்றுக் கொண்டதில்லை இதன் காரணமாகவே இராணுவத்தினருடன் பேச முயற்சிப்பதில்லை.  ‘இவங்கள் ஏன் வீட்டிற்கு முன்னால் மூதேவி பிடிச்சமாதிரி நிக்கிறாங்கள்’ என்ற பேச்சு  மிக சர்வ சாதாரணமாக தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. சிங்களம் தெரிந்த தமிழர்கள் தேவை  வரும்போது கூட தமிழிலேயே பேசி அவர்களை திக்காடவைப்பதை அவதானிக்கலாம் இதை நான் எனது நேரடி அனுபவத்தில் கண்டு கொண்டேன்.

இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் படைகள் பரப்பி வைக்கப்பட்டுள்ளதையும் அரசு  தமிழர்மீது ஒரு அழுத்தத்தை என்றும் தொடர்ந்து பேணிக்கொள்ளவே விரும்புகிறது என்றும்  அரசு இனவாத அரசு என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்பதையும் இவர்கள்  யார் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் இதுவே நடக்கும் என்றும் எமக்கு நிரந்தரமான  அரசியல் மாற்றமே தேவை என்றும் கருத்து கொள்கின்றனர்.

எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்த இராணுவத்தினர் விலத்திக் கொள்ளப்பட  மாட்டார்கள் என்ற கருத்தும் எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்க்கு எதிராகவே  தமது நிலைப்பாடுகளை கொள்வார்கள் இதன் மூலம் மட்டுமே சிங்கள மக்களிடம் தமது  வாக்குகளை பெறமுடியும் என்ற கருத்து மக்களிடம் நிறையவே உண்டு. இது இன்று புலிகளின்  அழிவின்பின்னர் ஆட்சியிலிருக்கும் அரசோ ஜனாதிபதியோ தமிழ் மக்களின் மனதை வெல்லவில்லை  என்பதையும் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தி கொள்ளவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை நாடு இன்றும் இரண்டாகவே உள்ளது மக்களை ஜக்கியப்படுத்தும் மக்களுக்கு சேவை  செய்யும் நோக்குடன் மக்கள் தலைவர்கள் தலைமைத்துவத்தை பெறமுடியாத சூழ்நிலையே  இலங்கையில் உள்ளது. தமிழ்பேசும் மக்கள் இந்த நிலைமைகளுக்கு ஊடாக தமது அரசியல்  உரிமைப் போராட்டத்தை கொண்டுசெல்லும் வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டும்.

‘இன்று ரிஎன்ஏ அரசுக்கு எதிராக உள்ளது அதற்கு ஆதரவு அவ்வளவுதான் ஏதோ ரிஎன்ஏ தான்  எமது தலைவர்கள் என்றில்லை இவர்களில் பலர் தமது சொந்த நலன்களையே ரிஎன்ஏ என்ற  போர்வையில் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் அது எமக்கு நல்லாகவே தெரியும்’ என்றும்  ‘இவற்றிக்கும் ஒருநாள் காலம் வரும் அப்போது நாம் கேட்போம்’ என்றார்கள். ரிஎன்ஏக்கு  ஆதரவளிக்க விரும்பும் பலர் இன்னமும் வாக்களிக்க வேண்டும் என்ற அக்கறையில்லாமல்  இருப்பதையும் இங்கு குறிப்பிடுவது நன்று.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் எந்தவொரு பொதுக்கூட்டமும் இலங்கை அரசின் உளவாளிகள்  இராணுவ உளவாளிகளினால் அவதானிக்கப்படுவது வழமையான ஒரு நிகழ்வாக உள்ளது. இதுபற்றி  ஒவ்வொரு யாழ் வடபகுதி மக்களும் கோபம் கொண்டவர்களாக உள்ளார்கள். அதில் தமது  பேச்சுக்கள் கருத்துக்கள் கூட்டத்தை அவதானிக்க வரும் முஸ்லீம் உளவாளிகள் தவறாக  தமிழை விளங்கி அரசுக்கு வழங்குவதும் இதனால் இராணுவம் மக்களை தவறாக விளங்கிக்கொண்டு  மக்கள்மீது கஸ்டங்களை உருவாக்குகிறார்கள் என்ற அபிப்பிராயம் உண்டு. முஸ்லீம்  உளவாளிகளை யாழ்ப்பாணத்தில் மிகஇலகுவாக அடையாளம் கண்டு கொள்கிறார்கள், முஸ்லீம்  இராணுவ உளவுபடைகள் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்களை செய்வதை தமிழர்கள் நன்றாகவே  உணர்ந்து கொண்டுள்ளனர் “காலம் வரும்” என்றே அடிக்கடி யாழ் தமிழர்கள் சொல்லும் பழக்கத்தை கொண்டுள்ளனர் இது அவர்களின் கோபத்தின் வெளிப்பாடகவே நான் உணர்கிறேன்.

எந்தவொரு சிறிய வியாபாரிகளின் கூட்டங்களிலும் இந்த உளவாளிகள் வருவதும் இந்த  கூட்டங்களில் எழும் சர்ச்சைகள் பிரச்சினைகளை சந்தர்ப்பம் பார்த்து பாவிக்கிறார்கள்,  முஸ்லீம், சிங்கள வியாபாரிகள் இராணுவம் பொலீசாரின் உதவியுடன் தமிழர்கள்  ஏற்றுக்கொள்ளாத இடங்களிலும் தமிழர்களின் பாரம்பரிய வியாபார இடங்களிலும் தமது கடைகளை  வியாபாரங்களை ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற பல சங்கடங்கள் நல்லூரிலும் இதர யாழ்  நகரங்களிலும் உள்ளன. இதில் பலவற்றுக்கு வழக்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  நல்லூரில் வீதியில் கடைகள் வைத்துக்கொள்ள இடம் கொடுக்காத இடங்களில் சில முஸ்லீம்,  சிங்கள வியாபாரிகள் கடைகளை தற்காலிகமாக சில மணித்தியாலங்களுக்குள் ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர் நல்லூர் கோயில் நிர்வாகம் திருவிழாக் காலங்களில் அவர்களை  அப்புறப்படுத்த முயன்றபோது பொலீசார் இராணுவத்தினரை கொண்டுவந்து தமது வியாபார  இடங்களுக்கு உத்தரவாதம் கேட்கும் மூன்றாம்தர செயல்களை சிங்கள முஸ்லீம் வியாபாரிகள்  செய்து கொண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் அரையும் குறையுமாக பேசும்  இராணுவத்தினரும், உளவுப்படையினரும் ஓர் இருவராக பஸ்சிற்காக காத்திருக்கும்  பயணிகளிடம் தொந்தரவு செய்வதை என்னால் நேரடியாக அவதானிக்க முடிந்தது. முதலில்  அரைகுறை தமிழிலும் பின்னர் சிங்களத்திலுமாக பேசுவார்கள் திட்டுவார்கள். இவர்களில் சிலர் குடிபோதையில் தமக்கு தேவையான விளையாட்டுக்கு யாழ் பஸ்நிலையத்துக்கு வருவது  சர்வ சாதாரண நடவடிக்கை, இதையாரும் தட்டிக்கேட்க முடியாது. அத்துடன் இன்று யாழில்  யாரும் யாருடைய ஆபத்துக்கும் உதவுவதில்லை, அப்படி உதவுவதே ஆபத்து என்றும் பயணிகள்  கூறினார்கள்.  மக்களை தனித்தனியாக வைத்திருப்பதே இராணுவ உளவுபடையினரின் பணிஎன்று  தமக்கு தோன்றுவதாக என்னோடு பயணம் செய்த ஒரு பயணி என்னிடம் தனிப்பட கூறி  எல்லாவற்றிக்கும் காலம் வரும் என்றார். பஸ்களில் ஏறி சிங்களத்தில் அதட்டலாகக்  கதைப்பார்கள். பதில் வராவிட்டால் தமிழில் கேட்பார்கள். சிலர் இரண்டுக்குமே  பதிலளிக்காது கவனியாததுபோல் இருப்பார்கள். காரணம் அது சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு இராணுவ பொலிஸ் தொந்தரவாகும்.

இராணுவத்தினர் சம்பந்தமான நடத்தைகளுக்கு தமிழர்கள் பொலீசாரிடம் போக முடியாத நிலை  உள்ளது ஆகவே இராணுவத்தினர் தமக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொள்ளக்கூடியதான ஒரு  நிலையுண்டு. இது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர், இராணுவ  உளவுப்படையினர் தமிழ் மக்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்க, செய்ய  அரசின் உயர்மட்டம் அனுமதி கொடுத்திருக்கிறது என்ற எண்ணத்தை எனக்கு தந்தது.

குடிபோதையில் வரும் இராணுவத்தினரும் உளவுப்படையினரும் கொடுக்கும் அடிகளை பொதுவாக  தமிழர்கள் எந்தவித சலனமுமற்று பேசாமல் வாங்கிக்கொண்டு மீண்டும் பேசாமலே இருக்கும்  சகிப்புத் தன்மையை தமது இயலாமையால் கற்றுக்கொண்டனர். இப்படியான நடவடிக்கைகளின்  பின்னர் அரசோ இராணுவத்தினரோ பொலீசாரோ தமிழ் மக்களிடமிருந்து மதிப்பையோ வாக்குகளையோ  எப்படி எதிர்பார்க்க முடியும்?

அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் ஏற்படும் சம்பவங்கள் காரணமாக மக்கள் பொலீசாரை  அழைக்கும்படி பலமான செய்திகள் வெளிவருகின்றது இது சிலவேளை நகரப்பகுதியில் பொலீசார்  வருவார்கள் எனலாம் ஆனால் கிராமப்புற மக்கள் பொலீசாரை அழைப்பதில்லை. அப்படி பொலீசார்  வெளியே போவதை பார்த்தால் அவர்கள் தங்களை பாதுகாக்கும் படியான ஒரு விடயமாகத்தான்  வெளியே போகிறார்களே தவிர மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் பொலீசார் போவதில்லை  இது நாடுபூரா உள்ள ஒரு நிலைமை என்றும் கூறலாம். அரசு தான் சரியான ஒன்றை செய்து  விட்டதாக கூறிக்கொண்ட போதிலும் மக்கள் பொலீசாரை நம்புவதில்லை. ஒரு சம்பவம் நடந்த  இடத்திற்குப் பொலிசாரை அழைக்க வேண்டுமென்றால் அதை விரிவுபடுத்தி பல பொய்கள்  சொன்னால் அல்லது காசு கொடுத்தால்தான் அங்கு வருவார்கள் என அரச முக்கிய சேவைகளில்  உள்ள ஒருவர் என்னிடம் பேசும்போது கூறினார்.

சாதாரணமாக வீதிகளில் பொலீசாரினால் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்  நிறுத்தப்பட்டால் அதைபார்த்து இலங்கையின் சாதாரண பிரஜை ஒருவர் கொள்ளும் கருத்து  ‘காசுவாங்கவே இப்படி வாகனங்களை நிறுத்துகிறார்கள்’ என்பதாகும். இப்படியாக பலர்  நிறுத்தப்பட்டு ஏதோ குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களை சிறிது நேரம் தடைப்படுத்தினால்  அவர் உடனடியாக ஒரு 500 ரூபா நோட்டை வைத்து தனது வாகனம் பற்றிய பத்திரங்களுடன்  கொடுத்தால் அவர் உடனடியாக போக அனுமதிக்கப்படுவார. வாகன சாரதிகளின் அன்றாட
நிகழ்வாகவே இது உள்ளது. தமிழ் பிரதேசங்களில் மட்டுமல்ல சிங்கள பிரதேசங்களிலும் இதே  நடவடிக்கைகளிலேதான் பொலீசார் இருப்பதாக, பொதுவாக எல்லோரும் நம்புகையில் இலங்கையில்
எப்படி பொலிசார் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்க முடியும்? மக்கள் எப்படி  பொலீசாருடன் இணைந்து செயற்படுவார்கள்?

பொலிசாரின் இந்த நடவடிக்கைகள் சோதனை தரிப்பிடங்களில் இல்லை என கூறலாம் காரணம்  அங்கே பலதரப்பட்ட பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் இருப்பதால் இது  சாத்தியமற்றதாகும் ஆனால் இவ்விடங்களில் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களில்  ஆசைப்பட்டு அதற்காக ஏதாவது ஒரு புரளியை கிளப்பும் பொலீசார் இன்றும் உள்ளனர்.  இவர்கள் தமிழர்களை எப்படியும் எதை சொல்லியும் இம்சைப்படுத்தலாம் என்ற நினைப்பில்  அல்லது மேலிடத்தில் இதற்காக இவர்களுக்கு எந்த தண்டனைகளும் கிடைக்காது என்ற நம்பிக்கையிலேயே செய்கின்றனர்.

நாம் கொண்டு சென்ற பிரயாணப்பைகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உங்கள் பொதிகளில் குண்டு உள்ளதா என திரும்பத் திரும்ப கேட்டார்கள். அதேவேளை பெண்பொலிசார் மனைவியிடம் கையில் அணிந்திருக்கும் மாலைகளை கழட்டி தமக்கு தரும்படி கேட்டார்கள். இப்படியாக  ஓமந்தையில் பிரயாணம் செய்பவர்களிடம் இராணுவமும் பொலீசாரும் பொருட்களை கேட்பது பகிடி  போல நடைபெற்று இவை சில சந்தர்ப்பங்களில் தர்க்கங்களாகவும் மாறிவிடுகின்றது என அங்கே  காத்துக்கொண்டிருந்த பயணிகள் கூறினார்கள்.

வெளிநாடுகளில் இருந்து வடபகுதி வருபவர்களின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டது ஆனால் அது ஓமந்தைக்கு இடமாற்றம் பெற்றுள்ளது. அங்கே அரை மணிநேரம் காத்திருந்து பதிவு மேற்கொள்ளப்படல் வேண்டும். பாஸ்போட் பிரதிகள் கைவசம்  இல்லாதவர்கள் பிரதிகள் எடுப்பதற்கு மீண்டும் வவனியா பயணிக்க வேண்டும். இப்படி  பதிவுகள் ஒவ்வொரு முறை ஓமந்தையை கடக்கும் போதும் மேற்கொள்ளப்படல் வேண்டும் ஏற்கனவே  பதிவுகள் செய்யப்பட்டுள்ளதை பற்றி கூறினாலும் அந்த பதிவுகளை எம்மால் இப்போ தேட  முடியாது என்றே பதில் வந்தது. (இதைவிட முதலில் இருந்த பாஸ் நடைமுறை நல்லது என்பதே  எனது கருத்து.) இப்படி பதிவுகள் செய்வது உங்களுக்கு பாதுகாப்பு தரவே என்று கதைகள்  வேறு. ஏற்கனவே பதியப்பட்ட பதிவினை தேட முடியாத இராணுவத்தினர் எப்படி பாதுகாப்பை  உறுதிப்படுத்துவார்கள் என்பது பகிடியாகும். இவையாவும் தமிழர்கள் என்பதால்
நடை முறைப்படுத்தப்படும் துன்புறுத்தல்களேயாகும். இவையாவற்றையும் செய்துவிட்டு
இராணுவத்தில் இருந்து இறந்தவர்களுக்காக நிதிசேகரிப்பு நிகழ்வொன்றிற்கான ரிக்கட்  புத்தகத்தையும் நீட்டினார்கள்.

நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வரும்  சிங்கள மக்கள் கூட்டமாக உள்ள இடங்களில் மிகவும் திடகாத்திரமாக தமிழர்கள் தமிழில்  பேசுவதை சகித்துக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். இப்படியான வேளைகளில் அயலில் உள்ள  இராணுவத்தினர் அல்லது பொலிசாரை அழைத்து ஏதோ சொல்லி அவர்களை எமக்கு அருகே  அனுப்பிவைப்பதை, எம்மை அவதானிப்பதை நாம் எமது அனுபவத்தில் கண்டோம் இந்த அனுபவம்  எமக்கு சிகிரியாவில் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சிகிரியா குன்றுப்  பகுதியில் நடைபெற்றது. இதே அனுபவத்தை நாம் கன்னியா வென்னீர் ஊற்றில் நின்றபோதும்  எதிர்கொண்டோம். இவைகள் சிங்கள மக்கள் மத்தியில் ‘அரசும் இராணுவத்தினரும் பொலீசாரும்  அரசியல் கட்சிகளும் தாம் தமிழரை வென்றுள்ளோம்’ ‘தமிழரை கீழ்படுத்தியுள்ளோம்’  ‘தமிழரின் பிரதேசங்களுக்கு போய்பாருங்கள் நாம் எமது சிங்கள இராணுவம் எப்படி தமிழரை  வைத்திருக்கிறது’ போன்ற இனவாத கருத்துக்களை இனவாதிகள் தென் இலங்கை மக்கள்,  கிராப்புற மக்கள் மத்தியில் தமது வாக்குகளுக்காக விதைக்கப்பட்டுள்ள விசங்களாகும்.  அத்துடன் அவர்கள் வட பகுதி சென்று தாம் சொன்னவற்றை பார்வையிட பண உதவியும் செய்யப்படுகிறார்கள், தென்பகுதி கிராம சேவகர்களினூடாக நிதி ஒதுக்கி கிராப்புற  மக்களுக்கு கொடுத்துள்ளனர் என்று வடபகுதியில் கருத்துள்ளது. இந்த அப்பாவி  கிராமப்புற மக்கள் ஏற்கனவே புலிகள் பற்றிய அச்சத்தில் தமது வாழ்வை கழித்தவர்கள்  தமிழில் உரத்து உறுதியாக பேசும் போதெல்லாம் பயப்பிடுகிறார்களோ அல்லது தமிழர்களை  சகித்துக்கொள்ள முடியாதவர்களாக உள்ளார்களோ? இந்த நடைமுறையை நானும் குமாரியும்  என்னுடன் பயணம் செய்தவர்களுமாக அநுராதபுரம் கபறனை சந்தியில் உள்ள கடைகளில்,  கண்டியில் உள்ள கடைகளில் மாவனெல்லை போன்ற பிரதேசங்களில் பரீட்சித்துப்
பார்த்தோம்.

பின்னவல என்ற இடத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் நாம் எதிர்கொண்ட  இன்னொரு சம்பவத்தையும் இவ்விடத்தில் கூறலாமென நினைக்கின்றோம். இவ்விடத்தை நாம்  பார்க்கப் போகையில் நாம் அழையாமலே எம்மை ஒரு அடையாள அட்டையற்ற முஸ்லிம் அன்பர்  வழிகாட்டுகிறேன் என்று விடாக்கண்டனாகத் தொடர்ந்தார். யானைகளை கூட்டமாக  ஆற்றுப்படுக்கைக்கு கொண்டுபோய் குளிப்பாட்டுவார்கள். அதில் கீழ்ப்பாதத்தினை  கணுக்காலுடன் இழந்து மூன்று கால்களுடன் சிரமப்பட்டு நடக்கும் யானையைக் காட்டி
எமக்கு தாழ்ந்த குரலில் கூறினார் அது கண்ணிவெடியில் தனது காலை இழந்துவிட்டதென்று.
சில நிமிடத்தின் பின் ‘அங்கே போகும் கறுப்பு யானையைப் பாருங்கள், அது பிரபாகரன்  வைத்திருந்த யானை’ என்று கிசுகிசுத்தார். இது இவர்களின் தமிழர் மீதான வெள்ளையடி  நடவடிக்கை. வடபகுதியில் இதையொத்த செயல்கள் அணுகுமுறைகள் மூலமும் அரசின் உளவாளிகளை  நாம் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.

வடபகுதியில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக செயற்படும் பலரில் மிகமுக்கியமானவர்கள்
முஸ்லீம்கள் என்றும் முஸ்லீம்கள் எமது போராட்ட ஆரம்பகாலங்களிலிருந்தே தமிழர்மீதான  இலங்கை அரசின் அடாவடித்தனங்களுக்கு துணை போகிறார்கள் என்ற கருத்து  ஆணித்தரமாகவுள்ளது. முஸ்லீம்கள்தான் யாழில், கொழும்பில் இலங்கை அரசும் இராணுவமும்  தமிழர்க்கு எதிராக செய்யப்பட்ட கலவரங்களின் போது தமிழர்களின் சொத்துக்களை  சூறையாடியவர்கள் என்பதை முஸ்லிம்கள் பற்றிய கதை தொடங்கும்போதே சொல்லத்  தொடங்கிவிடுவார்கள். முஸ்லீம்களை யாழைவிட்டு புலிகள் விரட்டியவிதம் தவறானது என்றும்  ஆனால் அச்செயலில் நியாயம் இருக்கிறது என்பதும் பல தமிழர்களின் அபிப்பிராயமாக இன்றும் இருக்கிறது.

முஸ்லீம்கள் யார்பக்கம் என்றாலும் சார்ந்துகொண்டு தமது அலுவல்களை  பார்த்துக்கொண்டு போய்விடுபவர்கள் என்ற கருத்தும் உள்ளது முஸ்லீம்கள் தமது அரசியல்  உரிமைக்காக அரசுடன் பேசுகிறார்களே என்றபோது முஸ்லீம்கள் எங்கே போராடுகிறார்கள்?  முஸ்லீம்கள் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கவே அரசுக்கு உதவி செய்தனர் என்றும்  தமிழர்கள் போராட பார்த்துக்கொண்டிருந்து விட்டு தமிழர்கள் என்ன பெறப்போகிறார்கள்  அதையும் தட்டிப்பறிக்கவே முஸ்லீம்கள் உள்ளனர் என்ற கருத்து வடபகுதி மக்களிடம்  கொழும்பில் உள்ள பல தமிழர்களிடம் பரவலாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் உள்ள லிங்கம் கூல்பாரில் சந்தித்த  ஒருவரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த போது இது முஸ்லீம்களின் டபுள் கேம் என்றே வட  பகுதி தமிழர்கள் கருதுகிறார்கள். இன்றும் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர்  கடைகள் தமிழர் வீடுகளுக்கு தீவைப்புக்கள் நடைபெறுவதாகவும் இப்படியான சம்பவங்கள்  பொதுஊடகங்களில் வெளிவருவதில்லை என்றும் கூறினார்கள் இதன் போது 1983களில்  முஸ்லீம்களால் நடைபெற்ற பல சம்பவங்களையும் உதாரணமாக கூறினார்.

தான் முஸ்லீம் மக்களுடன் வாழ்ந்த அவர்களைப் பற்றிய அனுபவம் கொண்டவர் எனவும்  அவர்களில் காத்தான்குடி முஸ்லீம்கள் தம்மை தனியான பிரிவாகவும் இதர முஸ்லீம்களுடன்  இணைப்பதில்லை என்றும் தாம் ஈரானியர்கள் என்று கிழக்குமாகாணசபை முக்கிய உறுப்பினர்  இன்றும் பேசுவதையும் மற்றைய முஸ்லீம்களை காக்கா என்று தரம் குறைத்து கூறுவதையும்  எடுத்துக்கூறினர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல முஸ்லீம்களும் தமிழர்களும் தமது காணிகள் வீடுகள் கடைகள்  என பல தமது சொத்துக்களை விற்று விட்டு கொழும்பில் குடியேறிவிட்டனர் பலர்  வெளிநாடுகளுக்கும் போய்விட்டனர் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட  முஸ்லீம்களும் பின்னர் காலங்களில் யாழ் தொடர்பு கொண்ட தமது சொத்துக்கள் பலவற்றை  விற்றுச்சென்றனர் ஆனால் இப்படியாக சொத்துக்கள் இல்லாமலும் சுயமாக காணிகள் இல்லாமல்  அரச காணிகளில் குடியேறியிருந்த முஸ்லீம்களும் வன்னியிலிருந்து திரும்பிய  தமிழர்களும் மலைய மக்களும் இன்று யாழ்திரும்பிவந்து தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கு
மிகுந்த கஸ்டப்பட்ட சூழ்நிலைகளில் இருக்கிறார்கள்.

தமது சொத்துக்களை விற்று சென்றவர்களில் புத்தளம் சென்ற தமிழர்களுக்கும்  முஸ்லீம்களுக்கும் புத்தளத்தில் அரச காணிகள் உதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் அங்கேயே  நிரந்தரமாக குடியேறிவிட்டனர் இன்று அவர்களில் சிலரும் மீள வந்து தாம் குடியிருந்த  நிலங்கள் தமக்கு மீளதரப்படல் வேண்டும் என்ற வாதங்களை செய்து கொண்டிருப்பதையும்  இதனால் ஏற்ப்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளையும் யாழ் மத்திய பகுதியில் காணக்கூடியதாக  இருக்கிறது. இவற்றைப்பற்றிய தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள சில சிற்றுண்டி  உணவகங்களில் உணவருந்தும்போது ‘அந்த இடங்களை சுற்றியிருந்த முஸ்லீம்கள்’ என ஆரம்பித்தால் பல கதைகள் வெளிவருகின்றன.

புத்தளத்தில் இருந்து தமக்கான அரச உதவிகள் காணிகளை பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும்  யாழ் வந்து தமக்கு உதவிகள் வேண்டும் என வாதிடுபவர்களை அவர்களின் அயலவர்களே  காட்டிக்கொடுத்து வெளிப்படுத்தும் சம்பவங்கள் பல யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.  இப்படியானவர்களுக்கு உதவிகள் தரப்படமாட்டாது என யாழ் அரச அதிபர் பத்திரிகைகளுக்கு  வெளியிட்ட செய்தியிலும் தெரியப் படுத்தியிருந்தார்.

sothi@btinternet.com

No comments:

Post a Comment