Search This Blog

Sunday, 1 June 2014

இந்தியப்படையினர் மீது ரெலோவே முதல் முதலில் ராக்கெட் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர் புலிகள் அல்ல !!

இந்தியப்படையினரின் மீது ரெக்கட் தாக்குதல்கள் நடாத்தினர் இது வே முதல் முதலில் இந்தியப்படையினர் ஈழத்தில் எதிர்கொண்ட தாக்கதலாகும்.


புலிகளின் அரசியல் அறியாமையும் அரசியரல பூகோள அரசியலைவ புரிந்து கொள்ளாமையும் எதையும் கொலையாலும் மிரைட்டலாலும் சாதித்துவிடலாம் என்ற 30 வருட முரட்டு போர் பல பலவீனங்களுக்கு காரணமாதகியிருக்கின்றது என்பதை இன்று வரையிலும் புலிகள் புரிந்து கொண்டதாக இல்லை இன்றும் புலிகளின் எச்ச சொச்சங்கள் கருத்தில் கொள்ளும் போராட்டம் என்பது பழிவாங்குதல் மீண்டும் ஒரு புலி
 இராணுவத்தை கட்டுதல் போன்றவைகளேயாகும்.

தம்மால் உருவாக்கப்பட்டு எழுதப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாயந்து ஒப்பநதத்தை கூட இவர்களால் இன்னமும் புரிந்து கொள்ள முடியாதவர்களபக இருக்கிறார்கள்.

சரி புலிகள் அழிந்த பின்னர் இவர்களால் ஒரு அரசியல் கட்சியாக தம்மை மாற்றிக்கொள் முடியவில்லை இவர்களின் அரசியல் வறுமை பாரிய நடைமுறை தவறுகளையும் உள்ளடக்கியே வளர்ந்து வந்து அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பபை உருவாக்கிக்கொடுத்துள்ளது.

இன்றும் இந்த கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து என்று நினைப்பதில்லை இதைக்கூட எதிரியின் கருத்து எதிரியின் கூட்டாளிகள் என்றே அர்த்தப்படுத்தி பதில் கூறுவார்கள்.

இந்தியாவிடம் பயிற்ச்சிக்கு போகும் போது இந்தியா எல்லா இயக்கங்களுக்கும் திட்டவட்டமாக தனது எதிர்பார்ப்பு என்ன என்ன விளைவுகளை உருவாக்க வேண்டும் என்பதில் திரும்ப திரும்ப சொல்லியும் அதை நோக்கி நகரவுமே வைத்தது அதழில் தடம் புரண்டவர்களை  அழித்தும் உள்ளது.

தம்மால் வழங்கப்படாத ஆயுதங்கள் பற்றி இந்தியா கேள்விகளுடன் இருந்தது.
தமக்கு தெரியாத இந்தி நக்ஸ்சல்பாரிகளின் தொடர்பில் கோபமாக இருந்தது.
தமக்கு தெரியாமல் வேறு நாடுமுகளின் உறவுகளில் கேள்வியுடன் இருந்தது.
தன்னால் தெரிவு செய்யப்படும் இலக்குகளின் மீதான தாக்குதல்களை வற்புறுத்தியும் இருந்துள்ளது.

இலங்கையில் வடகிழக்கு இணைந்த 13+ என்ற கருத்தில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்தியா உறுதியாக இருக்கின்றது.

இந்திய இராணுவம் வந்தபோதும் பலாலி இராணுவ முகாமை விட்டு முதல் முதலில் வெளியேறிய போது புலிக்கெடியுடனேயே வந்தது உள்ளே சில புலிகளும் இருந்தனர் .இன்று வரையில் பல புலிகளுக்கு இது தெரியாது.

மன்னாரில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் உதவியுடன் சில மாதங்களுக்க முன் மன்னாரில் வந்நிதறங்கிய ரெலோவினரை தேடி இந்திய அமைதிப்படையும் புலிகளும் வந்திருந்ததும் இதன்போது ரெலோ ரொக்கட் அடித்ததும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்தநாள் கிட்டு ரெலோ பயங்கரவாதிகள் அமைதிப்படையின் மீது தாக்குதல் செய்து அமைதிப்படையினர் பலத்த காயத்துக்குள்ளாகினர் என்ற ஈழநாடு பத்திரிகை செய்தி இவைகள் யாவும் பல புலிகளுக்கும் இன்றய புலம்பெயர் புலிகளுக்கும் தெரியாதும்.

இவற்றின்பின்னால் உள்ள அரசியல் என்ன என்ற அக்கறையற்றே இன்றும் இவர்கள் புலிகளை மீள தயார்ப்படுத்தலாம் என்ற கனவுடன் வாழ்கிறார்கள் .அதையே அரசியல் என்றும் கருதுகிறார்கள்.
- த சோதிலிங்கம்.

அண்மையில் ஒரு புலி இருக்கிறார் பத்திரிகையாளருக்கு இதை எடுத்துக்காட்டி கருத்து எழுத அவர் உங்கள் இந்திய அடிமைப்புத்தி என்று நான் எழுதுதியதை வாசித்து புரியாமலே கருத்து எழுதினார்.

No comments:

Post a Comment