Search This Blog

Saturday, 7 June 2014

இயக்கவரலாறுகளின் சில துளிகள்

இயக்கவரலாறுகளின் சில துளிகள்

ஒவ்வொரு இயக்கத்தினது தன்மைகளும் ஒவ்வொன்றாக உமது சமுதாயத்தில் பதியப்பட்டுவிட்டது ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை இயக்கங்களின் வரலாறுகளும் எமது சமுதாயத்தினதே அவற்றை அப்படியே உள்ளதை உள்வாறே பதியப்படல் வேண்டும்.

புலிகளும் புளொட்டில் பல சந்தரப்பங்களிலும் தமது இயக்கங்களை விமர்சித்தவர்களை கொலை செய்திருக்கிறார்கள் என்பதும் கவனத்துக்குரியது இவைகளும் இயக்கங்களை ஒவ்வோர் தன்மையுள்ளவர்களாக சமூதாயத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
 இவற்றைவிட புலிகள் இதர இயக்கங்கள் பற்றிய தவறான பல கட்டுகதைகளையும் அந்தந்த இயக்கங்களின் பெயரில் பல தவறான நடவடிக்கைகளையும்  திட்டமிட்டு செய்துள்ளனர்.

உண்மையை உள்ளபடியே வரலாற்றில் எழுதிட வேண்டும்.
புலிகள் - இதர இயக்கங்களை அழித்தவரலாறு கொண்டவர்கள் ஆனால் இறுதிக்காலத்தில் தம்மை தாமே அந்த போரட்டத்திற்க்கு ள் ஆகுதியாக்கியவர்கள் என்ற வரலாற்றை பதிந்துள்ளனர். தமிழர் போராட்டத்திற்க்கு தம்மை நீண்ட காலமாக அர்ப்பணித்தவர்கள்.அரசுக்கு எதிரான பலமான படையணிகளை தயாரித்து போர்புரிந்த வரலாறுகளை கொண்டவர்கள்.


ரெலோ
புலிகளால் அழிக்கப்பட்டவர்கள் என்றும்  தமக்குள்ளோ மோதி புலிகளுக்கு தம்மை அழிக்க சந்தர்ப்பத்தை கொடுத்தவர்கள் தம்து இயக்கத்தினுள்ளே தாஸ் கொலையும் யாழ் மருத்துவ மனை கொலைகளும் தமது தலைமை சிறீசபாவையும்யையும் புலிகளின் கொலை வெறித்தனமாக தெருத்தெருவாக கொலை செய்து எரிக்கப்பட்டவர்கள் என்ற வரலாற்றையும் கொண்டவர்கள் தவறான வரலாற்றுக்களையும் கொண்டுள்னர்.


ஈபிஆர்எல்எப்
புலிகளால் அழிக்ப்பட்டவர்கள் என்பதும் புலிகளினால் நல்லூர் படுகொலைகளும் சென்னையில் நாபா உட்பட பல தோழர்களின் புலிகளினால் அழிவுகளையும் வரலாறாக கொண்டுன்னர்.

ஈரோஸ்
புலிகிளால் தாம் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தம்மை புலிகளுடன் இணைத்து நின்று பொராடிய வரலாறும் ஈழம் என்ற போராட்ட கருத்தின் அடிப்டையை வரைந்தவர்கள் என்ற வரலாற்றையும் கொண்டுள்ளனர்.

புளொட்
 பாரிய படையணிகளை தயாரிப்பில் ஈடுபட்ட போதிலும்  இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய எதிர்hப்பினை வெளிப்படையாக முன்வைத்தும் உள்முரண்பாடுகளால் பல பெருந்தொகையான தமது தோழர்களை தாமே அழித்து தம்மை தமது இயக்கத்தின் சக்தியை அநியாயமாக உள்முரண்பாடுகளால் இழந்து அழிந்தவர்கள் என்ற வரலாற்றையும் இவர்களது உள் முரண்பாடுகள் இன்று வரையில் எமது சமூகம் வரலாறு காணாத முரண்பாடாக வளர்ந்து நிற்கின்ற வரலாற்றை கொண்டவர்கள்.

ஈபிடிபி
புலிகளின் பல பெருந்தொகையான தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்தும் தேவைப்படும்போது புலிகளுக்கு எதிரான பல போர்களில் அரசுடன் நின்றும் தம்மை புலிகளிடமிருந்து பாதுகாத்துக்கொண்ட வரலாறு கொண்டுள்ளது. புலிகள் அரச படைகளை அரச தலைவர்களை குறிவைத்து செய்த தற்கொலைத் தாக்குதல்களை விட தலைவர் டக்களஸ் தேவானந்தாவை கொலை செய்த எத்தனிப்புக்கள் அதிகமாக இருந்துள்ளதும் அதிலிருந்தும் தம்மை பாது காத்துக்கொண்ட வராலறு கொண்டவர்கள்.

ஈஎன்டிஎல்எப்
இந்திய இராணுவத்டதின் காலத்தில் இந்திய அரசுடன் மிக நெருக்கமாக இணைந்து இயங்கிய வரலாற்றினையும் கொண்டவர்கள்.

இவர்களுக்கு பின்னால்  என்எல்எப்டி,  ரெலா,  ரெலி , போன்ற அமைப்புக்கள் புலிகளினால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட வரலாற்றினை கொண்டவர்கள்

மேலும் பல இயக்கங்கள் கிட்டத்தட்ட 35 இயக்கங்கள் உருவாக்கப்பட்டு சில உருவாகி பின்னர் மறைந்து போயின இவற்றில் சிலி இதர பெரிய இயக்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டு கொள்ப்பட்டன.சில் தாமாகவே செயலிழந்து இல்லாமல் போயின்.

புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்களில் ரெலோ தன்னை மீள நாட்டில் பாரிய புலிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஊடாக 14 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல மாநகர சபை உறுப்பினர்களையும் . மாகாண சபை உறுப்பினர்களையும் பல பெருந்தொகையான முன்னாள் இயக்க உறுப்பினர்களை மீளவும் ஒருங்கிணைத்து பலமான இயக்கமாக மீண்டும் வளர்ந்து கொண்டுள்ளது இவற்றிக்கு பின்னால் புளொட் ஈபிஆர்எல்எப் அமைப்புக்களும் தம்மை மீளவும் நாட்டில் நிறுவியுள்ளன.


இந்த அமைப்புக்கள் முரண்பாடுகளுடன்  தம்மை தமிழரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒன்றுபட்டு இயங்குகின்றன.

No comments:

Post a Comment