Friday, 28 December 2018

கடிதம் 14 - தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

கடிதம் 14 - "த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 28/12/2018,
(கடிதம் 14, மாதம்12, கிழமை 05)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
ரெலோ அரசியலில் பூச்சியம் என்பதற்கான ஒப்பீடுகளை இங்கே வெளிப்படுத்த முன்வருகிறேன். (இவை பற்றி மேலும் பதிவுகள் எழுத உள்ளேன்)
அண்மைக்காலமாக eprlf தோழர்கள் தமது தோழர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி பல்வேறு தரப்பினரின் உதவியுடன் அரசியல் சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக கொண்டிருக்கின்றார்கள் அந்த திட்டத்துக்காக பல தோழர்களும் பல்வேறு சம்பந்தப்பட்டவர்களும் தமது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுமாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அண்மையில் ரெலோ லண்டன் கிளையின் பொறுப்பாளர் அது தொடர்பாக வெளிவந்த செய்தியை தமது உள்ளக-வெளி பரப்புரைகளுக்குள் அந்த செய்தியை வலிந்து எடுத்து வந்து இட்டு பின்னர் அவ் இயங்கு சக்திகளை கேவலப்படுத்தியதை கண்டபோது ரெலோவுக்கு "தமிழ் மக்களிடையே ஐனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் நல்ல முயற்சிகளை வரவேற்க தெரியவில்லை என்பதன் வெளிப்பாடே இது" எனெத்ணத் தோன்றியது.
இத்துடன் eprlf சுரேசு பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு தமிழரசுடன் போராடியபோது ரெலோவும் தலைவர் செல்வமும் ஆதரவு கொடுத்து தமிழர்க்கான பொது முன்னணியை கட்ட தவறி, செல்வம் தனது பிரதி அமைச்சர் பதவிக்கா தமிழரசுடன் நின்று தமிழ் மக்களின் ஒன்றுபட்ட தலைமையை உருவாக்குவதில் துரோகம் இழைத்தமையை நினைவு கூரப்பட்டது.
தமிழ் மக்களின் பலவீனமான அரசியல் சூழ்நிலையில் கட்சிகள் இயக்கங்கள் தமது சுய நலங்களை மறந்து பொது முன்னணி உருவாக்கி மக்களின் வாழ்வை மேம்படுத்தும் அரசியல் உரிமைக்காக குரல் கொடுப்பதில் மக்களுக்கு இயக்கம் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றது.
கட்சிகள் இயக்கங்களோ ரெலோவோ தனித்து பெரும்பான்மையை பெறப்போவதில்லை என்பதை உணர்ந்த மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டியது ஐக்கிய முனணியே !!!
ஏற்கனவே கூட்டமைப்பு தமக்கு அரசு துரோகம் இழைத்து விட்டது எனக் கூறும் போது இனிமேலும் அரசுடன் நிற்பது என்பது சுயநலங்களுக்காகவே அன்றி மக்களுக்காக அல்ல !!!
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
28/12/2018.
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment