Search This Blog

Wednesday, 26 December 2018

கடிதம் 13 , தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

கடிதம் 13 , தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

எழுச்சி, 25/12/2018,(x mas)
(கடிதம் 13, மாதம்12, கிழமை 05)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
இன்று தமிழர்களின் பாரம்பரியத்துடன் பிணைந்து விட்ட x mas பெருநாள் மிக உற்சாகமாக உலகெங்கும் கொண்டாடப்படும் இந்நாளில் ரெலோவின் தலைமைத்துவப் பொறுப்பை மீள வலியுறுத்துகின்றோம்(இங்கே தலைவரையோ தலைமையை குறிப்பிடவில்லை).
கடந்த போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த மூன்று கிருத்துவ தோழர்களை நினைவு கூர்வது நல்ல நிறைவை தரும் என்றே கருதுகிறேன்.
இந்த தோழர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகிய தோழமையையும் நினைவு கூர்வது நல்ல மன நிறைவாக இருக்கும் என நம்புகிறேன்.
முதலாவது
ரெலோவின் சாகவச்சேரி பொலீசு நிலைய தாக்குதலின் போது களப்பலிப் போராளி
"யாழ் பாசையூரை சேர்ந்த நிக்களஸ்"
எங்களின் முதன்மைப் போராளியானவனை இன்று நத்தார் பெருநாளில் அவனது அர்ப்பணிப்பை நினைவு கொள்வோம்.
இரண்டாவதாக
ரெலோவினுள் நஞ்சூட்டப்பட்டு கொலை சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட "மட்டக்களப்பை சேர்ந்த கிருஸ்டி" இன்று வரையில் இந்த தோழனின் கொலை பற்றி அவனுடன் கூட இருந்த இதர ரெலோ தோழர்கள் கூட நியாயம் கேட்டிராத பரிதாபத்துக்குரியவன் இன்றும் இவனது சகோதரிகள் தமது கிருத்துவ திருநாளில் தமது சகோதரனை நினைத்து அழுகின்றார்கள்.
மூன்றாவது
வெலிக்கடை சிறையிலிருந்து இலங்கை அரசு விடுதலை செய்ய கொழும்பிலிருந்து புலிகள் கடத்திச் சென்று வன்னியில் கொலை செய்த "மன்னாரை சேர்ந்த ரெஐினோல்ட் சுசீந்திரன் (ஈசன்)"
இந்த தோழர்கள் தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்து இயக்கத்தில் இயங்கிய கிருத்துவர்கள், இவர்கள் இன்று தமது குடும்ப உறவினர்களுடன் தமது கிருத்துவ பெருநாளை கொண்டாடி இன்புற்றிருக்க வேண்டியவர்கள் இவர்கள் போன்றோரது போராட்ட பங்களிப்பை தமிழீழ விடுதலை இயக்கம் மறைத்து விடாது அவர்களது உயிர்ப்பலியை இறைவனின் பாராத விந்தங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும், அவர்களையும் இன் நன்நாளில் இணைத்துக் கொள்ளும் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.
ரெலோவில் ஒரு சிலருக்கா பதவிக்காக இயக்கத்தை பாவித்துக் கொண்டுருப்திலிருந்து தலைமைகள் விடுவிக்கப்படல் வேண்டும்.
தமது இன்னுயிரை அர்ப்பணித் தோழர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
25/12/2018.
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment