Search This Blog

Sunday, 30 December 2018

கடிதம் 15, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 15, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
கடிதம் 15, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு கடிதம்.
த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்
எழுச்சி, 31/12/2018, (கடிதம் 15, மாதம்12, கிழமை 06)
திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ)
(பிரதி அமைச்சர்)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்
இலங்கை பாராளுமன்றம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
இலங்கை.

தமிழீழ விடுதலை இயக்கம் பிரித்தானிய பிரஜைக்கு கொலை மிரட்டல் செய்துள்ளது.

தங்கள் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை இயக்கம் அதன் பிரித்தானிய கிளையையும் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் இணைத்து இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையானது.
ஆனால் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு பிரித்தானியாவில் இயங்கும் கிளை அமைப்பின் இரு உறுப்பினர்களை தனது மத்தியகுழுவில் அங்கத்துவம் வழங்கியும் அதன் மேலும் 10 உறுப்பினர்களை பொதுக்குழு உறுப்பினர்களாகவும் இணைத்து இயங்குகின்றது.
இரு மத்தியகுழு உறுப்பினர்களாக ரெலோ யுகே கிளையின் பொறுப்பபாளரையும் கிளையின் செயலாளரையும் இணைத்துள்ளது.
( இந்த உறுப்பினர்களது பெயர் விலாசம் கைத் தொலைபேசி இலக்கங்களும் தங்களுக்கு தெரிந்ததே)
கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக நான் தமிழீழவிடுதலை இயக்கத்தில் எனது அனுபவஙகள் இன்று தங்கள் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மீதான விமர்சனங்களுடன் எனது அனுபவங்களை தொகுத்துக் கொண்டும் அவற்றினை பொத வெளியில் " தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்" என்ற பெயரில் வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றேன்.
இவை எனது கடந்த கால இளமைக் காலத்தை அவமாக செலவழித்தும் இளமைக்காலத்தை இனம் என்ற போர்வையில் தங்கள் இயக்கம் சுய நலங்களுக்காக மட்டும் இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதன் விமர்சனமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
திரு செல்வம் அவர்களே உங்களுக்கு நன்றாக தெரியும் நானும் என்னுடன் தோழர்களும் எழுச்சி பத்திரகைக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருந்த பொதும் நீங்களும் விச்சு காந்தி போன்றோர்கள் தியோட்டருக்கு ஓடிக்கொண்டு திரிந்தீர்கள்- இதை நீங்கள் மறுக்க முடியாது இவை பற்றி வேறுஓர் கடிதத்தில் எழுதுகிறேன், இயக்கத்தில் பல தோழர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி தம் உயிரையும் துறந்துள்ளார்கள்அவர்களத அர்ப்பணிப்பு மக்களுக்கே அன்றி ஒரு சிலரின் சுயலாபங்களுக்காக அல்ல.
எழுத்து எழுத்து சுதந்திரம் பேச்சு பேச்சு சுதந்திரம் தனிமனித சுதந்திரம் என்பன மனிதர்களின் சுயநிர்ணய உரிமையாகும். இவை ஜநா மனித உரிமைகள் சாசனத்தால் உருமையளிக்கப்ப்டட ஒன்றாகும். மேலும் சொன்னால் இந்த உரிமையை உறுதி செய்யவே நாம் போராட ஆரம்பித்தோம் இந்த உரிமைகளை மறுத்த போதே நாம் ஆயதம் ஏந்திய போராட்டத்தையும் செய்தோம்.
ஆனால் இன்று வரையில் ரெலோவின் போராளிகள் எனப்படுவோர் இந்த கருத்து சுதந்திரம் பற்றி கொஞசம் கூட அக்கறையற்று தமிழீழ விடுதலை இயக்கத்தில் மத்தியகுழு உறுப்பினராக இருந்து கொண்டு எனது சுநத்திர எழுத்தின்மீது வன்மம் காட்டி கொலைப் பயமுறுத்தல் செய்துள்ளனர். , இவற்றிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் இவைகள் வரலாற்றில் பதியப்படல் வேண்டும் எதிர்கால சந்ததி தமிழீ விடுதலை இயக்கம் என்றால் சோசலிச சமத்துவத்துக்காக போராடிய இயக்கம் என தப்பான எண்ணத்தில் திளைக்க கூடாது. (வரலாற்று தவறு)
மேலும் இவர்களால் இன்றும் ஜனநாயகம் பற்றி இலங்கையின் இறைமை பற்றி இரண்டு நிமிடங்கள் பேச முடியதாதவர்களாகவும் தமிழ் ஒரு பந்தி எழுத முடியாதவர்களாகவுமே வாழ்கின்றார்கள் இவர்களில் பலருக்கு இயக்கம் இன்று வரையில் ஒரு கெத்துக்காகவே என்பதை நீங்கள் அறியவில்லைப் போலும்,
இந்த கொலைப் பயமுறுத்தல்களுக்கு தமிழீழ விடுதலை இயக்கமே பொறுப்பாகும்.
காரணம் இவர்கள் தமிழீழ விடுதலை இயக்க சந்திப்புக்கள், தொலைபேசி அழைப்புக்கள் வாட்ஸ்அப் வைபர் குறூப் பேச்சுக்களில் என்னை கொலை செய்ய வேண்டும் என்ற வாரத்தைப் பிரயோகங்களையும் மிக மோசமான வாரத்தைப் பிரயோகங்களையும் செய்துள்ளனர் இவற்றை கடந்த சில தினங்களாக அவர்களுககே புரியும்படி பொதுதளத்தில் முன்வைத்துள்ளேன். அவை தமிழீழ விடுதலை இயக்கம் என்ற அமைப்பிற்கான சந்திப்புக்களே, இந்த வாரத்தைப் பிரயோகங்களை செய்தவர்கள் ரெலோவின் மத்திய கமிட்டடியில் இந்த வருடம் இணைக்கப்பட்டவர்களேயாகும். இவற்றிக்கான பொறுப்பை தமிழீழ விடுதலை இயக்கமும் அதன் தலைவராக நீங்களும் பொறுப்பு ஏற்க்க வேண்டும்.
புலிகளின் இறுதிக்காலத்தின் பின்னர் புலம் பெயர்நாடுகளில் இயகம் ஒன்றினால் முதன்முதலில் மேற்கொள்ப்படும் பயங்கரவாத நடவடிக்கை இதுவாகும். மிலேச்'சத்தனமான நடவடிக்கை இதுவாகும் இது பற்றி இலங்கை புலனாய்வுத்துறையினர்க்கு அறியத் தருவதும் அவசியமானதாகும். இது தமிழீழ விடுதலை இயக்கம் இன்னும் பயங்கரவாத நடவடிக்கை களிலிருந்து வெளிவரவில்லை என்பதேயாகும் அல்லது அறிவற்ற சமூகப்பொறுப்பற்வர்களால் இயக்கப்படும் அமைப்பாகும்.
அடுத்து இது ஏன் நடைபெறுகின்றது
இப்படியான திமிர் கதைகளுக்கான காரணம் புலம்பெயர்நாடுகளில் உள்ள நபர்களுக்கு ரெலோ பொதுக் குழு அங்கத்தவர்கள் மத்திய குழு அங்கத்தவர்கள் என அவர்களைுக்கு சுய புழுகு பெருமை பேசும் பிரதிநிதித்துவம் என கொடுப்பதும் அதற்காக அவர்கள் தம்மை ஒரு 1980 களில் ரெலோ புலிகளில் இருந்த சண்டியர் புழுகு இயக்க கதைகள் போன்ற நிலைக்கு இவர்கள் தம்மை தாமே இட்டுச் சென்றுள்ளனர்.
நீங்களும் அவர்களின் ஒத்தூதுலையே புலம் பெயர் நாட்டில் இயக்க நடவடிக்கைகள் என புரிந்துள்ளீர்கள் போலும்.
சமூகத்தில் மக்கள் அமைப்பு ஒன்றிக்கான பொதுக் கடமைகள் என்ன அவற்றில் என் நடவடிக்கைகளை இவர்களால் மேற்கொள்ப்பட்டுள்ளது என்ற கேள்விகள் உண்டா?
இலங்கையில் மக்களுக்காக உழைத்த எத்தனையோ ரெலோ உறுப்பினர்கள் அமைதியாக தாம் உண்டு தமது தொழில் உண்டு எனவாழ்கின்றார்கள் அவர்களை அழைத்து அவர்களது வாழ்வு பற்றி அக்கறைப்பட ரெலோ சிந்திக்கவில்லை ஏன்? ஏன் புலம் பெயர் நாட்டவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றார்கள் அவர்களால் மக்கள் பெற்ற நன்மைகள் என்ன என்ற பட்டியல் உள்தா வெளியிட முடியுமா?
மக்களுக்காக ஒன்றுமே செய்தாவர்களை சுயஇன்ப அங்கத்துவங்களை வழங்குவதால் ஏற்ப்படும் பிரச்சைனகள். இது அவர்களுக்கு கையில் துவக்கு இருக்கின்றது எதையும் செய்வொம் என் போக்கேயாகும். இவர்கள் போன்டறேரது நடவடிக்கைகளை பற்றி பிறிதோர் கடிதத்தில் எழுதுவேன்.
அடுத்து ஜரோப்பிய நாட்டு பிரஜை ஒருவருக்கு எப்படி கட்சிஉறுப்பினர்கள் மிரட்டல்களை செய்ய முடியும்.
கொலைப் பயமுறுத்தல் . மற்றும் இனவாதம் நிறவாதம் எனபன எ;நதகாரணங்களுக்காக எந்த இடத்தில் யார் யார் என்னநிலைமைகளில் எந்த காலங்களில் எது தொடர்பாக என்ன சொல்லாடல்கள் என்பனவுத் இவற்கிக்hக வரலாற்று தொடர்புகளுடனும் இணைந்தே கொழைலப்பயமுறுத்தல் என்பது என்னால் உணரப்படுவதே யாகும்.( இது பிரித்தானிய நீதி மன்னறத்துக்கு இதை என்னால் எடுத்துரைக்கமுடியும். இதைவிட கடந்த போராட்டம் என்றபயங்கரவாதிகளால் எப்படி யார் மீது என்ன எந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொலைகள் செய்ப்பட்டன போன்ற விபரங்களையும் இணைத்தே பாரக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள.
உங்களின் ரெலோ லண்டனகிளைஉறுப்பினர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமது அமைப்ஐப சரியாகவும் சட்ட பூர்வமாகவும் அமைக்கவும் இல்லை குறைந்த பட்சம் தமிழ் மக்களக்கு ஊர்சங்கங்கள் உதவிகள் செய்த அவளில் ஒரு சிறு பகுதிகூட செய்யாதவர்களால் தாம் வாழும் நாடுகளில் வாழும் வாழும் இதர தமிழர்களுக்கு மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் விடுதலைப் போராட்ட அமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இழுக்காககும். இதைவிட யுகே ரெலோவின்சந்திப்பு என்பது தேனீர் வடை சந்திப்பாபகவே இருக்கின்றது இது பற்றி இவர்கள் தமது படங்களை தாமே தமது இணையத்தளத்தில் இட்டிருந்தனர்
அது மட்டுமல்ல இரண்டு கிழமைகளில் இந்த பிரித்தானிய பிரஜை மீதான கொலை மிரட்டல் செய்த தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது இதன் போது அந்த அமைப்பின் பொது அமைப்பாளர் செய்லாளர் ரெலோ மத்திய கமிட்டடி உறுப்பினர் இருவரும் மற்றும் 10 பொதுச் சபை உறுப்பினர்கள் பெயர்களும்இ விலாசம் தொலைபேசி இலக்கங்கள் தொழில் போன்ற விபரங்கள் இணைக்கப்பட்டே பொலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
மேலும் இவர்களால் இந்த மிரட்டல்களுக்கு இலங்கையில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இன்றய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் குறிப்பிட்டே பேசியுள்ளதால் இந்த முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களும் இணைக்கபப்டடே இந்த பொலீஸ் பதிவு மேற்கொள்ப்படும்.
தமிழீழ விடுதலை இயக்க தலைவர் என்ற முறையில் செல்வம் அடைக்கலநாதன் பெயரும் இணைக்கப்பட்டே பொலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
இவற்றைவிட இந்த கடிதத்தின் ஆங்கில மொழியாக்கம் பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும், இலங்கையில் குற்றவியல் பொலிஸ் பிரிவினர்க்கும் , தமிழ் சழமூகத்தில் பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் அனுப்ப்படுகின்றது.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.

30/12/2018.
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment