Sunday, 6 January 2019

கடிதம் 16, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 07/01/2019, (கடிதம் 16, மாதம்01, கிழமை 02)
--------------------------------------------
திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ),(பிரதி அமைச்சர்)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை பாராளுமன்றம்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.
ரெலோவின் அரசியல் ஆழுமை என்ன?
----------------------------------------------------
இன்று உங்களால் வழிநடத்தப்படும் ரெலோ மக்களின் கட்சி மக்களால் உருவாக்கப்பட்டது கட்சி பற்றிய முழு விமர்சனங்கள், கேள்விகள், கண்டனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை, ஐனநாயக மரபை இலங்கையில் ரெலோ அங்கீகரிக்கும் என்றே நம்புகிறேன்.
அதே போன்று புலம்பெயர் தேசங்களில் இயங்கும் ரெலோ அமைப்புக்குரிய சுயநிர்ணய உரிமைகளையும் அங்கீகரிக்கும் எனவும் நம்புகிறேன்.
ஆனால் இன்னும் புலம்பெயர் தேசங்களில் ரெலோ உறுப்பினர்கள் இன்னும் அரசியல் கட்சிக்குரிய இலட்சணங்கள் என்ன என்று புரியாமல், அரசியலுக்கும் இராணு நடவடிக்கைக்கும் வேறுபாடு புரியாத பலர் கருத்துக்களை முகம் கொடுக்கிறேன், நான் அவர்களை குறை சொல்லவில்லை காரணம் ரெலோ ஒரு eprlf or eros போன்ற இயக்க அமைப்பு அரசியல் தெளிவுடன் போராட இறங்கிய அமைப்பு அல்ல, அது இன்றுவரையில் தனது அரசியல் என்ன? அரசியல் ஆழுமை என்ன எந்த மக்களின் பிரதிநிதிகள் போன்றவற்றில் தெளிவற்று தமிழரசுக் கட்சியை பார்த்து பிரதி செய்யும் அமைப்பாகவே காண்கிறேன்.
அதன் சரியான வெளிப்பாட்டை ஐேர்மனில் நடைபெற்ற ரெலோ ஒன்று கூடலில் அவதானித்தேன். “ரெலோவும் அரசியலும். ஜேர்மன் மாநாடு நல்ல உதாரணம்”
நான் மட்டுமல்ல ரெலோவை சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்திய"எண்ணம்" ஆசிரியர் மகாதேவா இக் கூட்டத்திறிக்கு வந்திருந்தார் அவர் வரும்போது ரெலோ தான் ஆதரித்த கட்சி ஒரு மாநாட்டடை ஒரு கூட்டத்ததை ஜேர்மனியில் நடத்துகின்றது அக்கூட்டம் பற்றி மிகவும் அக்கறையுடனேயேவருகை தந்திருந்தார் அவர் கூட்டத்தில் வினோகாரலிங்கம் பேச ஆரம்பித்த முதல் இரண்டு நிமிடங்களில் கூட்டத்தை விட்டு வெளியேறியிருந்தததை நீங்கள் அவதானித்திருக்கலாம். இது ஏன் இதன் அர்த்தம் என்ன?
இது மட்டு மல்ல கடந்த காலங்களில் ரெலோவுக்கு பக்கம்மாக செயல்ப்பட்டவர்களை நீங்கள் கைவிட்டு விட்டு விடுதலை இயக்கம் என்ற பெயர் பலகைகளை இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் போடுவது ஏன்? அதற்குரிய ஆழுமைகள் என்ன? அல்லது ஆழுமை அற்ற வெறும் பனர் செயலா? இவற்றிக்கான பலவீனம் என்ன என்பதை சிந்தித்திர்களா?
(இக் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு தந்தமைக்கு தாங்கள் விசனப்பட்டதாக ரெலோ யுகே தமது வைபர் குறுப்பில் செய்தி பரிமாறினர்)
இன்றும் ரெலோ உறுப்பினர்களின் மக்கள் முன்னால் பேசும் பேச்சுக்களின் வார்த்தைகள்,வசனங்களில் சுயநலம் ஒன்றையே அவதானிக்கிறேன்.
இவை 1969 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பின் ஆழுமையல்ல என்பது தெளிவானது. ரெலோ தோழர்களின் அரசியல் ஆழுமைகளை, சிரமதான பண்புகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதன் மூலமே உறுப்பினர்கள் மக்களின் இதர கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கும் பண்புகளை வளர்ப்பார்கள் எனவும் நம்புகிறேன். அது மட்டுமல்ல ரெலோ மத்திய கமிட்டி, பொதுச்சபை லண்டன் உறுப்பினர்கள் இன்று வரையிலும் எந்த அரசியல் கூட்டங்களிலோ அரசியல் பேசும் இடங்களிலோ கலந்து கொாள்வதில்லை, அரசியல் கருத்துக்களை படிப்பதில்லை விவாதிப்பதில்லை ஆனால் ரெலோ என்று ஒரு கருத்தை விமர்சித்தவுடன் அது தமது இயக்கத்துக்கு எதிரான கருத்து என அரசியல் கருத்து சுதந்திரம் பின்புலம் புரியாது அறியமுயற்சிக்காது ஒரு வன்முறை மீது காதல் கொண்ட வன்முறையாளர்களாக ( மொக்கன்களாக) தம்மை வெளிப்படுத்தவர். இது விடுதலைப் போராட்ட இயக்கம் என்ற பெயருக்கு அவமானமாகும்.
அரசியல் கட்சிக்கும் போராட்வாதிகளுக்கும் ஒரு மக்களுக்கான பொது அமைப்பு எப்படி இயங்க வேண்டும் என்பதற்க்கு JVP யே நல் உதாரணமாகும்.
தமிழ் மக்களுக்கான ரெலோவின் ஆழுமை என்ன ? ரெலோ தமிழ் மக்களின் எந்த விடயங்களில் ஆழுமை வைத்திருக்கின்றது, ரெலோ போராடத் போகிறதே தவிர அரசியல் செய்யப்போவதில்லை என ரெலோஉறுப்பினர்கள் பயிற்ச்சி முகாம்களில், சென்னையில் சின்மையாநகர் வீீடுகளில் பல தடவைகள் பேசியதும், திட்டியதும் ஞாபகத்துக்கு வருகின்றது.நாம் ரெலோ இராணுவம் போராட இந்த பிரச்சாரப் பிரிவு வந்து அரசியல் செய்யவா என்று இராணு பிரிவுகளால் எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு ரெலோ வில் பதில் இருந்திருக்கவில்லை, ரெலோ அரசியல் என்பது இன்று தமிழரசை கொப்பியடித்து ஒரு சிலரின் வாழ்க்கையை ஓட்டுவதேயாகவே அமைந்திருக்கின்றது. இதை மறுப்பின் தமிழ் மக்களின் எந்த விடயங்களில் ரெலோவுக்கான சிறப்பான ஆழுமை உள்ளது என்பதை வெளிப்படுத்துங்கள்.
மக்களுக்கான அரசியல் பாதை என்ன? அதை வெல்லுவதற்கான வழிவகைகள் என்ன? மக்களின் வாழ்வியல் அபிவிருத்திக்கான நடைமுறைகள் என்ன? இந்த விடயத்திலும் தமிழரசை விட இதர கட்சிகளின் நடத்தைகளை பிரதி பண்ணலாம்
அல்லது
கூட்டு சேரலாம்
அல்லது
உங்களது திட்டங்களை இவர்களுடன் இணைத்து இயங்கலாம்,
இனிமேல் தமிழர் தரப்பில் தனி ஒரு கட்சி தனித்துபெரும்பான்மை க்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை ஆகவே கூட்டு முன்னணிக்கு உடன்பாடுகள் ஏற்ப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்த ப்பட்ட கூட்டு இயக்கமே தேவையானது, இதற்கான முன்னணி நடவடிக்கைகளை எடுங்கள் , ரெலோவில் ஒரு பிரிவினரை ஒழுங்கு படுத்துங்கள், இதை நீங்கள் உணர்வது அவசியம்,அல்லது இதை உணர்ந்து ஒரு போனசு சீட்டுக்காக காத்திருப்பது மக்களுக்கான அரசியல் அல்ல சுயநல அரசியலே ?
முற்போக்கு சக்தீகளை இணைப்பது ? மக்களுக்கு முன்மாதிரியான சமூகசேவைகள் மன்றம் எனபல ரெலோ ஆரம்ப காலங்களில் 1984 களில் நாட்டில் பேசப்பட்டதே அவற்றிக்கு என்னாயிற்று. கிளைகளின் செயற்பாடுகள் என்ன? தலைமைத்துவம் இல்லாத ரெலோ  தலைமைக்கும் தவைருக்கும் வித்தியாசம் புரியாத அரசில் கருத்தாளர்கள். புலிகளின் பின்னர் ரெலோ என்ன செய்தது? ஏன் செய்யவில்லை? இவற்றிக்கான காரணங்களை மக்களுக்கு சொல்லுங்கள் ரெலோவின் அரசிலின் காத்திரம். புலம் பெயர் நாடுகளில் இயங்கு முறை என்ன? (இது பற்றியவிரிவானகடிதம் பின்னர் எழுதுகின்றேன்)
நாம் என்னவோ எமக்கு ரெலோவில் அரசியல் வரலாறு என்று ஒன்றுள்ளது அதை எழுதியே தீருவோம், அணுத்த சந்ததி அறியட்டும்.

அடுத்த சந்ததி அறியட்டும் > ஜேர்மன் கூட்டத்தில் ரெலேராவில் இயங்கியவர்களுக்கு ரெலோவில் பங்கு உள்ளது என்பதை வெளிப்படையாக உண்மையை தலைவராக தாங்கள் கருத்து வெளியிட்டது மிகவும் வரவேற்கின்றேன். நான்அக்ககூட்டத்தில் தங்களால் அந்த கருத்தை எற்ப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் கலந்து கொண்டதில் மிகுந்த திருப்தி இருந்தது அது இன்று என்னை ரெலோ பற்றிய முழுமையான விமர்சனத்தை எழுத ஆயுதமாக்கியுள்ளேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
07/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

TSOTHILINGAM.BLOG

No comments:

Post a Comment