Search This Blog

Tuesday, 15 January 2019

கடிதம் 18, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 18, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 16/01/2019, (கடிதம் 18, மாதம்01, கிழமை 03)

திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ),(பிரதி அமைச்சர்)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை பாராளுமன்றம்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.

தங்களால் அண்மையில் ஏற்ப்படுத்தப்பட்ட மாற்றம்-திருத்தத்தை சர்வதேச குழுவை கலைத்தமையை வரவேற்கிறேன்.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ என்ற பெயரில் மக்களையோ உதவிகளுக்கான தேடல்களையோ செய்யாது ஒரு ரீ வடை குறுப்புக்களாக மேலும் ஒரு காவாலிகளின் நடத்தைகளாக இயங்கிக் கொண்டிருந்தவர்களை அவர்களது புத்திசுவாதீனமான நிலைக்கு இறக்கி விட்டு, அவர்களை மக்களுக்காக சிந்தி அல்லது ஒதுங்கி நில் நிலைமைகளை உருவாக்கி ரெலோ கட்சி தன்னை சீரமைத்துக் கொண்டுள்ளும் முயற்சியாகவே நான் கருதுகிறேன்.
கடந்த காலங்களில் இவர்களின் நடத்தைகள் பற்றி விசேடமாக uk யில் நடத்தைகள் பற்றி ஆயிரத்தில் ஒரு கடிதமாக, எனது அனுபவமாக நிச்சயம் வெளிவரும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்களை புலிகளுக்கு பின்னர் இலங்கை தமிழ் மக்களுக்கான இயங்கும் வல்லமை கொண்ட அமைப்பினூடாக கட்டமைப்பை உருவாக்க தவறி விட்டீர்கள், இதை இனிமேல் உருவாக்குவது என்றால் நிறைய பிராயச்சித்தங்களை செய்ய வேண்டியிருக்கும், நிறையவே பதவி
நிலைகளிலுருந்து சாதாரண மக்கள் நிலைக்கு இறங்காது எந்த கட்சிகள் இயக்கங்களாலும் செய்ய முடியாது.
கட்சி மக்கள் அமைப்புக்களாக மாற வேண்டியிருக்கும்.
1980களில் ஒரு இயக்க உறுப்பினரை உள்வாங்கும் போது அவரை எத்தனை முறை சந்தித்து பேசினோம், எத்தனை தடவைகள் போராட்டம் பற்றி பேசியிருந்தோம், என்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியிருந்தோம் இது போன்றதொரு பயிற்சியை மேலும் ஒருமுறை இலங்கையில் தமிழ் மக்களின் ஐனநாயக மேம்பாட்டிக்காக செய்யவேண்டும், அதே போன்று புலம்பெயர் தேசத்திலும் தமிழ் மக்களை அவர்கள் வீட்டில், கோயில்களில், பொது இடங்களில் சந்தித்து பேசி மக்களுக்காக அணிதிரட்ட வேண்டியுள்ளது.
இது மக்களுக்காக இயங்க விரும்பும் இயக்க உறுப்பினர்களின் கடமையாகவும் இருக்கும் இதனூடாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு உதவிபுரியும் அமைப்பாக, உப அமைப்பாக இயங்க வேண்டும், இதுவே ஒரே வழியும் ஆகும்.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ உறுப்பினர்களின் நடவடிக்கைகள் என்ன? ரெலோ அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதாயின் அவர்களின் கடமைகள் என்ன? பொறுப்புக்கள் என்ன? இலங்கை தமிழ் மக்களை நோக்கிய அவர்களது செயற்பாடுகள் என்ன?, கடந்த காலங்களில் இவர்கள் என்ன பொறுப்பு மிக்க கடமைகளில் ஈடுபட்டார்களோ அதன் பிறகு ரெலோவின் விசேட புலம்பெயர் உறுப்புரிமைகள் வழங்கப் படலாமே தவிர இலங்கையில் இலங்கை சட்டப்படி இயங்கும் கட்சியின் உறுப்பினர்க்கு ஐரோப்பிய நாட்டு பிரசைகளுக்கு கொடுப்பதன் மூலம் வேறு சிக்கல்களையே தோற்றுவிக்கும், இது புலம்பெயர் நாட்டு நீதிமன்றுக்கு ரெலோ பதில் வேண்டிய நிலைகளை தோற்றுவிக்கலாம் என்பதை மனதில் கொள்க !!!
புலம் பெயர் ரெலோக்களில் பலர் பொறுப்புணர்வற்ற செயல்கள், பேச்சுக்களிலேயே காலத்தை கடத்தி இன்று ரெலோ இலங்கையில் எடுத்த முடிவினால் தங்களின் காவாலித்தனங்கள் அடக்கப்பட்டதை உணர்கின்றார்கள், இது பொறுப்பு வாய்ந்த telo ambassador களை உருவாக்கும் என நான் நம்புகிறேன் அது மட்டுமல்ல ரெலோவின் தலைமைத்துவத்தையும் உயர்த்தும் எனவும் நம்புகிறேன்.
அதேவேளை எனது எழுத்துக்கள் பற்றி கேள்விகள் எழுப்பியவர்களுக்கு எனது பதிலையும் விரைவில் பதிவு செய்வேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
16/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment