Search This Blog

Saturday, 19 January 2019

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 18/01/2019, (கடிதம் 19, மாதம் 01, கிழமை 03)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.
===============

நான் இந்த தலைப்பை இடுவதற்கான காரணம் இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி வளர்த்த தோழர்களின் கருத்துக்களிலிருந்தும், அவர்களின் இன்றய வறுமை நிலைமைகளிலிருந்துமேயாகும்.
எந்தவித உதவிகளும் இன்றி கடின உழைப்பிலும் போதாமையுடன் வாழ்வு வாழ்கின்றார்கள், தாம் இந்த கடின வாழ்வை புலிகளின் கொலைகளைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பதாயும், தமது சுய முயற்சியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை கெளரவத்துடன் கூறுகிறார்கள்.
"நாம் மிகவும் அதிகமாக இயக்கம் பற்றி சிந்தனையுடன் வாழ்ந்து விட்டோம் ", போராட்டம் தோற்றது ஒருபக்கம் மக்களின் இழப்புக்கு பின்னரும் ரெலோ தமது மக்கள் பற்றிய சிந்தனையற்றே இருக்கின்றது என்பதே அவர்களது கருத்தாகும், இயக்கம் என்பது, அரசியல் கட்சி என்பது இதுவா சீ , சீ ஒரு விடுதலைப் போராட்டவாதிகள் என்பதற்க்கு அவமானம்.
முன்னாள் போராளிகளில் பலர் இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றார்கள், பலரை ரெலோ முன்னணி உறுப்பினர்கள் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
இவர்களை நம்பி இவர்களுடன் இயக்கத்தில் இருந்தோம் எம்மை இழந்தோம், என முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
இது ஏன் ?
இந்த முன்னாள் ரெலோ உறுப்பினர்களுடன் அமைதியாக, ஆறுதலாக பேச முடியாது என்றால் நீங்கள் எப்படி அப்பாவிகள், ஏதிலிகளாக உள்ளவர்கள், நலிந்த பொது மக்களுடன் பேசுவீர்கள்.
நீங்கள் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம், கட்சி நடத்துகின்றோம் என்று கூறுவதை நம்பமுடியுமா?
முகநுாலிலும் , தனிப்படவும் பல தோழர்கள் ரெலோ பற்றிய வெறுப்புடன் கொதிப்புடன் இருக்கிறார்கள், இவர்கள் யாபேரும் உங்களுக்கு பக்கத்திலேயே உங்கள் இலங்கை பிரசைகளாகவே, உங்களுக்கு வாக்களிப் பவர்களாகவே வாழ்கின்றார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் கடந்த காலத்தில் ரெலோவில் இயங்கியவர்களின் பெயர் விபரம் இன்னும் தயாரிக்க வில்லை என்றால் எப்படி மக்களுக்காக இயங்குகின்றீர்கள் என நம்புவது ?
கடந்த பல பல வருடங்களில் உங்களால் செய்யப்பட்ட மக்களுக்கான தினக் குறிப்புக்களை வெளிப்படுது வீர்களா ?
கட்சி, இயக்கம் மக்களினது மக்களுக்கு உங்கள் கடமைகளை வெளிப்படையாக முன்வைப்பீர்களா ?
இயக்கம், கட்சி என்பது தொழில் அல்ல மக்களை ஒருங்கிணைத்து மக்களுடன் இணைந்து மக்களுக்காக இயங்குவதே ஆனால் இன்று ரெலோ ஒரு அரசியல் சந்தர்ப்பவாதிகளாக தேர்தலுக்காக மட்டும் சென்று வாக்கு கேட்டு விட்டு மக்களை மறக்கும் மிதவாதிகளாகவே இயங்குகின்றீர்கள்.
இச் செயலுக்காக இயக்கம் கட்டப்படவில்லையே! , இச்செயலுக்காக இயக்கத்துக்கு உறுப்பினர்கள் தம் உயிரை அர்ப்பணிக்க வில்லையே !
தமிழீழ விடுதலை இயக்கத்தை புலிகளிடமிருந்து பாதுகாத்த பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், இயக்கத்துக்காக எமக்கு உதவிசெய்த பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு இவர்களது மரணத்துக்கு முன்பாவது ரெலோ தனது நன்றியை தெரிவிக்குமா ???
உதாரணத்துக்கு புலிகளால் வட்டுக்கோட்டையில் கொல்லப்பட்ட பல தோழர்களில் ஒருவர் சங்கர்லால் அவரது கொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பம் 1986 லிருந்து இன்றும் கடின வாழ்வில் இருக்கிறார்கள் சங்கர்லால் பெயரால் தம் கெளரவத்துக்கு இழுக்கு வராமலும் வாழ்கிறார்கள்,
இது அவர்களது நிலைப்பாடு நீங்கள் ரெலோ மக்களுக்காக இயங்குகிறோம் என்பவர்கள் இந்த தோழர்களின் குடும்பத்தை ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா ? சங்ஙர்லால் போன்ற போன்ற பல தோழர்கள் பயிற்சி முகாம்களில் "நாம் போராட்டத்தில் இறந்தால் எமது இயக்கம் எமது குடும்பத்தை பாதுகாக்கும் என்று கூறியது உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா ???
இவன் போன்ற தோழர்களின் குடும்பங்களை, முன்னாள் போராளிகளை நீங்களாக போய் ஏன் பறையக் கூடாது? அவர்களது நலம் விசாரிக்க கூடாது? தேவைகளுக்கு உதவக் கூடாது?
தோழர் சங்கர்லால் இறுதியாக சந்தித்த போது தனக்கு மிகவும் பிடித்தமான சேட்டை எனக்கு தந்து வெளியிடங்களுக்கு போக அனுப்பிய ஞாபகத்தையும் இணைத்து பதிவிட விரும்புகிறேன்.
இயக்கத்தில், பயிற்சி முகாம்களில் இந்தியாவில் , சென்னையில், சேலத்தில், காஞ்சிபுரத்தில் ஒன்றாக வாழ்ந்த தோழர்களை இப்படி கைவிடலாமா???
திட்டமிடலில், வாழ்விலும், வெற்றியிலும், போராட்ட துன்பத்தில் பங்கு கொண்ட தோழர்களை மறப்பது மனிதாபமா???
மக்களுக்காக இயங்கும் நீங்கள் உங்களுடன் இணைந்திருந்தவர்களை கைவிட்டு, குடும்பங்களை ஏதிலியாக்கி விட்டு இன்று அரசியல் கட்சி என்றும் புதிய உறுப்பினர்கள் என்றும் இருப்பதற்க்கு அத்திவாரமிட்ட தோழர்களை தவிக்க விடலாமா ??
அவர்களுக்கு துரோகம் பண்ணலாமா?
அவர்கள் ஏன் தமது உயிரை அர்ப்பணித்தனர்?
முன்னாள் தோழர்கள் எனப்படுவோரை நீங்கள் என்ன பாவித்து விட்டு எறிவதா தோழமை என்பது, தோழர்கள் என்பது, இவர்களுடன் போய் அமைதியாக பேசமுடியாத நீங்கள் விடுதலை இயக்கமா?
நிச்சயமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட சுயலாபங்களுக்கே இயங்குகின்றீர்கள் இதை மறுதலிப்பதாயின் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தே அவர்களும் வாழ்கின்றார்கள்.
"சிந்தியுங்கள்"
இவ் விடயங்களை உள்ளடக்கிய ரெலோவாக ரெலோ அமைப்பியலை, இயங்கியலை திருத்தியமைத்து இயங்க முடியாதா ? என்ன?
புதிய உறுப்பினர்கள் உங்களை நம்ப வேண்டுமா?
மக்களுக்காகன இயக்கமா?
மக்களுக்காகன அரசியலா?
எப்படி என்று முன்னாள் போராளிகளுக்கு உங்களை புரியவையுங்கள்.
இந்த தோழர்களுடன் பழகி வாழ்த தோழர்களில் பலர் தாம் இயக்கம், கட்சி எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் இந்த தோழர்களை சிந்திக்க வேண்டும் அந்த தோழர்களுக்கு உதவவும் இயங்க வேண்டும்.
===================
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
18/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment