Search This Blog

Saturday, 19 January 2019

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 21/01/2019, (கடிதம் 21, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
====================
நமக்காக நாம்
===================
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மக்களுக்காக இயங்கும் தோழர்களில் யார் என்ற தேடலில் சுவிசில் சேகர் தலைமையில் இயங்கும் நமக்காக நாம் என்ற அமைப்பை இங்கு குறிப்பிட்டு குறிப்பிட்டு இக் கடிதத்ததை எழுதலாம் என்நினைக்கின்றேன்.
தலைவர் சிறீசபாரத்தினத்தை முன்னிறுத்தாத தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் மக்கள் ஒரு போராடட இயக்கமாக பார்க்கமாட்டார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் பல ரெலோவின் கிளைகள் - பிரித்தானியா> சுவிஸ் பிரான்ஸ்> கனடா ஜேர்மன் ஆகியநாடுகளில் ரெலோ இயங்கின்றது என்பதை ஊடகங்களிலும் ரெலோவின் வைபர் குறூப்புக்களிலும் உல்லாச கதையளப்பில் பார்க்கின்றேன்.
ஒவ் நாடுகளிலும் அநேகமாக இரு அல்லது அதற்க்கும் மேற்ப்பட்ட பிரிவுகள் இயங்குகின்றன அவர்களுக்கிடையே சர்சரவுகளும் குழப்பங்களும் ஒருவரை யொருவர் கேலி பண்ணுவதும் குறைகூறுவதுமாக இவர்களது கதையளப்பு இருக்கின்றது இந்த கதையளப்பை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக காண்கின்றபோதிலும் இவர்களில் தமிழீழ விடுதலை இயக்கமாக இயங்கியவர்கள் ஒரு சிலரே ஏனையோருக்கு இயக்கம் அரசியல் மக்களுக்கான தொடர்புகளில் உள்ள குழப்பம் அறிவின்மை இவர்களை மிகவும் முரண்பட்டவர்களாக வைத்திருக்கின்றது, அல்லது பொருட்படுத்தாத இயக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒருசிலராவது மிகவும் தெளிவு கொண்டோராக இருப்பதும் உண்மையே> மேலும் சிலர் தமது அன்றயபுழுகு மூட்டைக்காகவே கூட்டங்கள் ஒன்று கூடல்களுக்கு வருகின்றார்கள் என அந்த கூட்டங்களில் இருக்கும் உறுப்பினர்களில் சிலரது கருத்தாகவும் இருக்கின்றது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் சுவிஸ்சில் இயங்கும் நமக்காக நாம் அமைப்பு இலங்கையில் பலவேறு உதவிகளை மக்களுக்கு நேரடியாக செய்து கொண்டிருக்கின்றது.
அது மட்டுமல்ல நமக்காக நாம் அமைப்பு முன்னாள் ரெலோவினர் மட்டுமல்ல இதர இயக்கங்களில் இருந்தவர்களையும் இணைத்து இலங்கையில் ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்ட ரெலோ தோழர்களின் பிள்ளைகள் என பல்வேறு வகையினரையும் இணைத்து இயங்குகின்றது.
இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் நமக்காக நாம் போராட்டத்தில் தொலைத்த சிறீசபாராத்தினத்தின் அடையாளத்தை தொடர்ந்து இலங்கையில் நிலை நிறுத்தும் அமைப்பாக இயங்குகின்றது, பலவேறு கிராமங்களில் சிறீசபாவை எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக நமக்காக நாம் அமைப்பினரது நடவடிக்கைகளை ரெலோ சர்வதேசம் அமைப்பு எனும் சமூக வலையில் வெளியிட்டிருந்தது,
அவர்களது ஒவ்வொரு மக்கள் தொடர்பிலும் தலைவர் சிறீசபாரத்தினம் அடையளத்துடன் தமது சேவைகளை செய்து வருக்கின்றார்கள் இந்த அமைப்புடன் கடந்த காலங்களில் புலிகளினால் கொல்லப்பட்ட தலைவர் சிறீசபாரத்தினம் ஒரு வரலாற்று தவறு என உணர்ந்த அல்லது நாம் தமிழர்கள் எம்மிடையே மோதி அழிந்து கொண்டோமே என உணர்ந்த இருதரப்பினரும் இணைந்து இந்த இயக்கத்தை நடாத்துவது நல்ல முன் உதாரணமாகும்.
அது போன்ற பல்வேறு தரப்பினரை இணைத்து அரசியலிலும் மக்கள் உதவித் திட்டங்களிலும் இயங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் ஆனால் இலங்கையில் ரெலோ அல்லது இதர நாடுகளில் ரெலோ இது போன்ற முயற்ச்சிகளை முன்னெடுக் தெரியாது இருக்கின்றார்கள்.
புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் வெறுமனே ரி-வடை கூட்டங்களை நடாத்தி விட்டு காலத்ததை வெற்றாக ஓட்டுகிறார்கள். புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் ரெலோ இயங்கு முறையும் விசேடமாக லண்டன் ரெலோ இயங்கு முறையும் இவர்களது மனநோய்கள் பற்றியும்.தனித் தனி கடிதமாக வெளிவரும்.
ரெலோ சுவிஸ் கிளை அமைப்பின் நமக்காக நாம் அமைப்பினர் க டந்த காலங்களிலும் இனிவரும் காலங்களிலும் திட்டமிடப்பட்டுள்ள உதவி வழங்கல்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு சாவகச்சேரி .கல்லூரிகள் மன்னார் யாழ்ப்பாணம் பூநகரி கொக்குத் தொடுவாய் என பல இடங்களில் முன்னாள் ரெலோ போரிகளுடன் இணைந்து நிற்கின்றார்கள்.
இது போன்ற மக்களுக்குஉதவி செய்யும் அமைப்புக்களை இதர புலம்பெயர் நாட்டு கிளைகளும் செய்ய இயங்க முன்வர ரெலோவின் தலைமை ஆழுமையை செலுத்த வேண்டும்.
-------------------------------------
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment