Search This Blog

Tuesday, 12 February 2019

கடிதம் 30 - ஆலால சுந்தரம், தர்மலிங்கம் இரு தலைவர்களினது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

கடிதம் 30 - தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் ஆலால சுந்தரம், தர்மலிங்கம் ஆகிய இருவர்களையும் கொலை செய்தது தமிழீழ விடுதலை இயக்கம்(telo), அவற்றிக்காக நான் பொது மன்னிப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியிடமும் அவர்களின் உறவினர்கள் மற்றும் தர்மலிங்கமக குடும்பத்தினரிடம், திரு சித்தார்த்தன் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 12/02/2019, (கடிதம் 29, மாதம்02, கிழமை 03)

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

====================

ஆலால சுந்தரம், தர்மலிங்கம் இரு தலைவர்களினது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.
===================

தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மதிப்பிற்குரிய தலைவர் தர்மலிங்கம் குடும்பத்தினரிடம் குறிப்பாக திரு சித்தார்த்தன் அவர்களிடம் இக்கொலைக்குப் பொறுப்பாக இருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மன்னிப்பு கோருகின்றேன்.
அக்காலத்தில் நேரடியாக இயக்க நடவடிக்கைகளில் தொடர்பில்லாது சிறையிலிருந்த போதிலும் நான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இருந்தேன்.
அன்று அந்த தலைவர்களின் எந்த அரசியலை ரெலோ எதிர்த்து கொலை செய்ததோ இன்று அதே அரசியலை செய்யும் ரெலோ அக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்காமல் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம் என்பது நம்பமுடியாதது மட்டுமல்ல அரசியல் அநாகரீகமும் கூட.
கொலைக்கான காரணங்களில் இயக்கங்கள் மக்கள் நலனிலிருந்தும், மக்களின் நிலைமைகளிலிருந்தும் தமது இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை மறந்து, புறசக்திகளின் நடவடிக்கைகளுக்கு மட்டும் ஈடுகொடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே இக்கொலைகள் நடந்தேறியிருந்தன என்று நான் அறிந்துள்ளேன்.
இதுபோன்ற கொலைகள் யாவும் எமது போராட்டத்தில் போராட்டத்தை கொலைக் களமாகவும், போராட்டத்தை சுத்த இராணுவ நடத்தையாகவும், போராட்டத்தை இன்னோர் சக்தியின் குறிப்பாக இந்தியாவின் துணையுடன் மட்டும் நடத்திடலாம் என்ற தவறான போராட்ட அணுகுமுறையின் விளைவுகளேயாகும்.
இப்படியான அறம் மறந்த எமது போராட்டத்தின் விளைவுகளையே நாம் இன்று அறுவடை செய்திருக்கின்றோம்.
தமிழர்களின் மதிப்பிற்குரிய தலைவர்களில் முக்கியமானவர்களில் திரு தர்மலிங்கம் ஒருவர் மட்டுமல்லாது தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு புதிய போக்கினை கொடுத்தவர்.
இவர்போன்ற தலைவர்களை பயங்கரவாதிகளாக தமிழீழ விடுதலை இயக்கம் இவர்களது உயிரை காவு கொண்டமைக்கு மன்னிப்பு கோருகின்றேன்.
திரு தர்மலிங்கம், திரு ஆலாலசுந்தரம் போன்ற தலைவர்களின் கொலைக்குப் பொறுப்பாக இருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மன்னிப்பு கோருகின்றேன்.
தமிழீழ விடுதலை இயக்கம் அரசியல் கட்சியாக இயங்க ஆரம்பித்த பின்பும் அரசியல் நாகரீகத்தை அங்கீகரிக்காது,ரெலோவினால் போராட்ட காலங்களில் நடைபெற்ற தவறுகளுக்கு மன்னிப்பு கோர தவறியும் இயக்கத்தில் இணைந்து இயங்கிய என் போன்ற தோழர்களின் மக்கள் அரசியல் இயங்கு பண்புகளுக்கு எதிராகவுமே எண்ணக் கருவைக் கொண்டிருக்கும் கேவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரசியல் கட்சிக்குரிய பொது பண்புகளை மதியாத நடத்தைகள் காரணமாகவும் அக்காலங்களில் இயக்கத்தில் இயங்கிய நாம் இந்த பொது மன்னிப்பு கோரலை முன்வைத்து நிற்கிறோம்.
நாம் மனித நேய பண்புகளுடன் மக்களையும் தோழமை அமைப்புக்களையும் ஆராதிக்கின்றோம்.
அன்று நடைபெற்ற தவறுகளுக்கும், இன்று உதாசீனம் செய்யப்படும் பண்புகளுக்கும் மக்களே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.
நாம் மக்கள் அரசியல் இயங்குபவர்களை நோக்கிய விமர்சன கலாச்சாரத்தை ஊக்குவிப்பு மட்டுமே இந்த மன்னிப்பு கோருவதன் மூலம் செய்ய முடியுயம்.
(இது ஏற்கனவே என்னால் sri saba foundation அமைப்பு மூலம் எழுதப்பட்ட கோரலை திருத்தி எழுதி வெளியிடுகிறேன். த சோதிலிங்கம்.
Sri Saba foundation, 2st, spt.2002)
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
08/02/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(இலங்கை, UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Saturday, 9 February 2019

கடிதம் 28 - ரெலோவினால் கொல்லப்பட்ட கிழக்கு மாகாணதமிழ் இளைஞர்கள்.

கடிதம் 28 - ரெலோவினால் கொல்லப்பட்ட கிழக்கு மாகாணதமிழ் இளைஞர்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்திற்க்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 05/02/2019, (கடிதம் 28, மாதம்02, கிழமை 01)

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

======================

ரெலோவினால் கொல்லப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள்
===================

கடந்த பலகாலங்களாக புலிகளின் கொலைகள் பற்றி அதிக கவனம் எடுத்து விமர்சனங்களை ரெலோ லண்டன் முன்வைத்திருந்தது, அது மட்டுமல்ல ரெலோ லண்டன் இதர தமிழ் போராட்ட அமைப்புக்கள் , அரசியல் இயக்கங்களுடன் இணைந்தும் புலிகளின் மற்றும் இயக்கங்களின் மனித உரிமை மீறல்களை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டும், பொது வெளியில் பொது பேச்சுக்களையும் செய்திரு்தோம்.
அது மட்டுமல்ல புலிகளினால் கொல்லப்பட்ட ரெலோ தோழர்களை நினைவு கூர்வதிலும் ரெலோ லண்டன் மிகவும் ஆழமாக கருத்துக்களை பகிர்ந்திருந்தது, எனினும் தமிழீழ விடுதலை இயக்கம் சுயமாக தனது தவறுகளை, பிழைகளை வெளிப்படையாக மக்களுக்கு முன்வைக்க தவறியுள்ளதை எடுத்துரைத்து மிகவும் பிரமல்யமாக மக்களால் நினைவு கூரப்படும் , அதிகமாக கருத்து பகிரப்பட்ட மற்றும் ஐநா வுக்கு தமிழ் மக்களால் எடுத்துச் செல்லப்பட்ட ரெலோவினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை இக்கடிதம் நினைவு படுத்த விரும்புகின்றது.
ரெலோ பற்றிய கொலைகள் என்று வரும் போது இக் கொலைகளுடன் பல முன்னாள் உறுப்பினர்களையும் இணைத்தே பேசப்படுகின்றது, தமிழீழ விடுதலை இயக்கம் தனது பொறுப்பு கூறலை தனது மனித உரிமை தாற்பரியத்துடன் தமிழ் அரசியல் கட்சி செய்ய வேண்டும் எனகேட்டுக் கொள்கின்றது.
கீழே தரப்பட்ட கொல்லப்பட்ட கிழக்கு மாகாண தமிழர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ் மக்களால் ஐநாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியல் என்பதை நினைவில் கொள்ளவும்.
புலிகளின் மனித உரிமைகளை கேட்பது போன்று ரெலோவின் மனித உரிமை மீறல்களுக்கும் ரெலோ பொறுப்புள்ள மக்களின் பிரதிநிதியாக பதில் சொல்ல வேண்டும்.

 TELO வினால் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 

பெயர் விபரம்.

1. லிங்கன் நல்லதம்பி :கறுவாக்கேனி.வாழைச்சேனை 1988.4.2
2. கலா பொன்னம்பலம் சதானந்தரத்தினம். ஆரையம்பதி.1988.4.19
3. குருசாமி.கா.இரத்தினசிங்கம். களுதாவளை. 1988.8.14
4. வினோபா> கா.ஜெகதீஸ்வரன்.களுவாஞ்சிகுடி. 1988.8.14
5. அருணா>தியாகராசா சதீஸ்வரன்.ஆரயம்பதி>1988.9.13
6. சின்னத்தம்பி.சதாசிவம் சகாராச .தாழங்குடா.1988.10.22
7. தாயாளன்.கணபதிப்பிள்ளை கோபாலரெத்தினம்> துறைநீலாவணை.1989.7.16
8. சீராகரன் நீலாவணை 1989.7.16
9. முகிலன்.இராசமாணிக்கம் ஜீவராசா. கோட்டைகல்லாறு>1989.11.5
10. அரசன்>தங்கராசா கிருஸ்ணபிள்ளை>கரைதீவு>1988.4.19
11. ஜெயம்.கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். வீரமுனை.1989.8.30
12. குரூஸ்.நல்லதம்பி பாக்கியராசா>காரைதீவு.>19891.9
13. றமணன்>கணபதிப்பிள்ளை இலட்சுமணன்.பொத்துவில்.1988.3.17
14. நிதி>செல்வநாயகம் கருணாநிதி.தம்பிலுவில்லு>1988.3.19
15. அரசன்>தங்கராசா கிருஸ்ணபிள்ளை>காரைதீவு>1988.4.19
16. இராசாத்>காரைதீவு.1988.5.17
17. றொசான்உலகசேகரன் பத்மநாதன்.சல்லித்தீவு.1988.5.27
18. நேசன்.காரைதீவு.1988.5.27
19. தீபன்.சிக்கநாதன் சின்னவத்தை.1988.6.1
20. சுந்தர்>சின்னத்தம்பி சிவானந்தசிங்கம்>காரைதீவு.1988.6.19
21. தாடி>பொன்னபம்பலம் நாதன்.காரைதீவு>1988.10.27
22. குமார்.முருகேசு உதயகுமார்>அக்கரைபற்று>1988.10.27
23. சுதா>கனசூரியர் திருச்செல்வம்.கல்முனை.1988.10.27
24. அகஸ்ரின்>சம்சுதீன் அபுல்கசன்.அக்கரைப்பற்று>198810.27
25. சத்தீயன் >ஞானமுத்து சிவானந்தராசா>திருக்கோவில்.1989.3.22
26. நளின்.பிரதாப்குமார் அஜித்குமார்.பொத்துவில்.1989.8.21
27. அலன்.சின்னத்தம்பி செல்லத்துரை.நற்பட்டிமுனை.1989.8.21
28. ஜெயம் கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். சம்மாந்துரை.1969.8.30
29.குரூஸ் நல்லதம்பி பாக்கியராசா காரைதீவு 1989.9.11
30. தேவா சாமித்தம்பி கிருஷ்ணமூர்த்தி.>பாண்டிருப்பு.1989.9.19
31. யோகன்.வடிவேல் வேல்ராஜன்.திருக்கோவில்.1989.11.5
32. க.பாபு அக்கரைபற்று. 1989.11.12.
33. குமாராசாமி கிருபாகரன்.செட்டிபாளையம்.
34. கந்தையா வாலு. செட்டிபாளையம்.1990
35. குமாரசுவாமி கோபாலப்பிள்ளை. செட்டிபாளையம்.1990.9.15
36. தருமலிங்க.மாங்காடு 1989
37. அமிர்தலிங்கம் 1989
38. பெரியப்பா. செட்டிபாளையம்.1990.9.15
39. க.மனோகரன்.செட்டிபாளையம்.1989

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(இலங்கை.,UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com