Search This Blog

Tuesday, 12 February 2019

கடிதம் 30 - ஆலால சுந்தரம், தர்மலிங்கம் இரு தலைவர்களினது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

கடிதம் 30 - தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் ஆலால சுந்தரம், தர்மலிங்கம் ஆகிய இருவர்களையும் கொலை செய்தது தமிழீழ விடுதலை இயக்கம்(telo), அவற்றிக்காக நான் பொது மன்னிப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியிடமும் அவர்களின் உறவினர்கள் மற்றும் தர்மலிங்கமக குடும்பத்தினரிடம், திரு சித்தார்த்தன் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 12/02/2019, (கடிதம் 29, மாதம்02, கிழமை 03)

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

====================

ஆலால சுந்தரம், தர்மலிங்கம் இரு தலைவர்களினது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.
===================

தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மதிப்பிற்குரிய தலைவர் தர்மலிங்கம் குடும்பத்தினரிடம் குறிப்பாக திரு சித்தார்த்தன் அவர்களிடம் இக்கொலைக்குப் பொறுப்பாக இருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மன்னிப்பு கோருகின்றேன்.
அக்காலத்தில் நேரடியாக இயக்க நடவடிக்கைகளில் தொடர்பில்லாது சிறையிலிருந்த போதிலும் நான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இருந்தேன்.
அன்று அந்த தலைவர்களின் எந்த அரசியலை ரெலோ எதிர்த்து கொலை செய்ததோ இன்று அதே அரசியலை செய்யும் ரெலோ அக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்காமல் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம் என்பது நம்பமுடியாதது மட்டுமல்ல அரசியல் அநாகரீகமும் கூட.
கொலைக்கான காரணங்களில் இயக்கங்கள் மக்கள் நலனிலிருந்தும், மக்களின் நிலைமைகளிலிருந்தும் தமது இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை மறந்து, புறசக்திகளின் நடவடிக்கைகளுக்கு மட்டும் ஈடுகொடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே இக்கொலைகள் நடந்தேறியிருந்தன என்று நான் அறிந்துள்ளேன்.
இதுபோன்ற கொலைகள் யாவும் எமது போராட்டத்தில் போராட்டத்தை கொலைக் களமாகவும், போராட்டத்தை சுத்த இராணுவ நடத்தையாகவும், போராட்டத்தை இன்னோர் சக்தியின் குறிப்பாக இந்தியாவின் துணையுடன் மட்டும் நடத்திடலாம் என்ற தவறான போராட்ட அணுகுமுறையின் விளைவுகளேயாகும்.
இப்படியான அறம் மறந்த எமது போராட்டத்தின் விளைவுகளையே நாம் இன்று அறுவடை செய்திருக்கின்றோம்.
தமிழர்களின் மதிப்பிற்குரிய தலைவர்களில் முக்கியமானவர்களில் திரு தர்மலிங்கம் ஒருவர் மட்டுமல்லாது தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு புதிய போக்கினை கொடுத்தவர்.
இவர்போன்ற தலைவர்களை பயங்கரவாதிகளாக தமிழீழ விடுதலை இயக்கம் இவர்களது உயிரை காவு கொண்டமைக்கு மன்னிப்பு கோருகின்றேன்.
திரு தர்மலிங்கம், திரு ஆலாலசுந்தரம் போன்ற தலைவர்களின் கொலைக்குப் பொறுப்பாக இருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மன்னிப்பு கோருகின்றேன்.
தமிழீழ விடுதலை இயக்கம் அரசியல் கட்சியாக இயங்க ஆரம்பித்த பின்பும் அரசியல் நாகரீகத்தை அங்கீகரிக்காது,ரெலோவினால் போராட்ட காலங்களில் நடைபெற்ற தவறுகளுக்கு மன்னிப்பு கோர தவறியும் இயக்கத்தில் இணைந்து இயங்கிய என் போன்ற தோழர்களின் மக்கள் அரசியல் இயங்கு பண்புகளுக்கு எதிராகவுமே எண்ணக் கருவைக் கொண்டிருக்கும் கேவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரசியல் கட்சிக்குரிய பொது பண்புகளை மதியாத நடத்தைகள் காரணமாகவும் அக்காலங்களில் இயக்கத்தில் இயங்கிய நாம் இந்த பொது மன்னிப்பு கோரலை முன்வைத்து நிற்கிறோம்.
நாம் மனித நேய பண்புகளுடன் மக்களையும் தோழமை அமைப்புக்களையும் ஆராதிக்கின்றோம்.
அன்று நடைபெற்ற தவறுகளுக்கும், இன்று உதாசீனம் செய்யப்படும் பண்புகளுக்கும் மக்களே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.
நாம் மக்கள் அரசியல் இயங்குபவர்களை நோக்கிய விமர்சன கலாச்சாரத்தை ஊக்குவிப்பு மட்டுமே இந்த மன்னிப்பு கோருவதன் மூலம் செய்ய முடியுயம்.
(இது ஏற்கனவே என்னால் sri saba foundation அமைப்பு மூலம் எழுதப்பட்ட கோரலை திருத்தி எழுதி வெளியிடுகிறேன். த சோதிலிங்கம்.
Sri Saba foundation, 2st, spt.2002)
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
08/02/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(இலங்கை, UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

No comments:

Post a Comment