Search This Blog

Saturday, 9 May 2020

கடிதம் 29 - லண்டனில் ரெலோவின் வன்முறைப் பேச்சுக்களின் பின்னணி என்ன?

கடிதம் 29 - லண்டனில் ரெலோவின் வன்முறைப் பேச்சுக்களின் பின்னணி என்ன?
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"

எழுச்சி, 08/02/2019, (கடிதம் 29, மாதம்02, கிழமை 02)

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

====================
லண்டன் ரெலோவின் வன்முறைப் பேச்சுக்களின் பின்னணி என்ன?
===================
தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களில் சிலர் வன்முறையான பேச்சுக்களை பேசியும் மிரட்டியும் எழுதி அவற்றின் பிரதிகள் இயக்கத்தின் கிளை உறுப்பினர்களால் பிரதிகள் வெளிப்படுத்தப்பட்டு பொலீசில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை ரெலோ கட்சி அறியும் என நம்புகிறேன்.
இது இலங்கையில் இயங்கும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஐரோப்பிய நாட்டு பிரசைகள் மீது செய்யும் அத்து மீறல்களாகும் இவை மீறிச் செல்லும்போது இவர்களில் சிலர் சட்டப்படி தண்டனை பெறும் நிலையும் உருவாகலாம்.
இதற்கான காரணங்களாக
1) தமது வாழ்வியல் தோல்விகள் முதாவதாகவும், புலம்பெயர்நாடுகளுக்கு வந்த போதிலும் தாம் வாழும் சூழ்நிலை மாறியுள்ளதை அறியாதவர்களாக வாழ்கின்றார்கள்.
2) உறுப்பினர்களில் சிலர் 50 வயதுகளை கடந்த போதும் வயதுக்கு ஏற்ற ஆழுமையை வளர்த்துக் கொள்ள தவறியும் உலகில் ஏற்ப்பட்ட மாற்றங்களை புரிய தவறியும் , அரசியல் இயக்கு முறையில் ஏற்ப்படும் விமர்சனங்கள் தர்க்கங்களையும் அதன் அவசியம் பற்றியும், அவை பற்றிய புரிதல் இன்றியும், அறிவை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கும் ஒரு மந்த நிலையில் தம்மை வைத்திருப்பதும் ஒரு காரணமாகும்.
இவர்களுடன் அரசியல் இயக்கம் பற்றிய விவாத தர்க்கங்களை செய்யும் போது இவர்கள் இத்த குணாம்சங்களை மிக எளிதாக பொது வெளியிலும் ரெலோ உள்ளக கருத்து பரிமாறலிலும் வெளிக் காட்டுகிறார்கள். இவை கட்சிக் கிளைக்கு வெளியே பரிகாசமாக பரிமாறப்படுகிறது.
இவை பற்றி ரெலோ உறுப்பினர்கள் பலர் என்னுடன் பேசியுள்ளார்கள்.
இந்த குணாம்சத்தில் மாற்றமடையாதது என்பது மட்டுமல்ல ரெலோ இயக்கத்தை ஒரு சிறிய சுற்று வட்டத்துக்குள்ளேயே வைத்திக்கவுமே செய்கின்றது.

ரெலோ தனது சுற்றை வியாபித்து வளர்த்துக் கொள்ளாததின் காரணம் இதுவே.

3) இவற்றை விட புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தாம் லண்டனில் வாழ்வதால் மட்டும் தாம் அறிவாளியாக ஏமாற்றும் பாணிஒன்று உள்ளது, இந்த நடத்தைகளை பல ஊர்ச்சங்கங்ஙளிலும், ரெலோவில் சிலரிலும் அவதானித்துள்ளேன், குறிப்பாக இந்த நடத்தையை ரெலோவின்
மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தமக்கு லண்டனிலிருந்து உபதேசிக்கப்படும் உபத்திரங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளீர்கள் இது உங்களுக்கு மட்டுமல்ல இதர ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரெலோ உறுப்பினர்களும் இந்த uk காய்ச்சலை பொறுக்க முடியாது உள்ளதை என்னுடன் பேசியுள்ளார்கள் இந்த விடயத்தில் ரெலோ uk கிளையின் பொறுப்பாளர் சாம் இதர கிளை உறுப்பினர்கள் மற்றும் நாட்டில் ரெலோ உறுப்பினர்களுடன் பேசும் தொனி பற்றி பேசியுள்ளீர்கள் அத்துடன் இவருக்கும் ரெலோ உறவு பற்றியும் பேசியுள்ளீர்கள்.
இவர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்க்கு பதிலாக மேலும் பிரச்சனைகளை தன்னை முன்னிலைப்படுத்தி அதை கையாள்பவர் என நீங்கள் என்னுடன் உரையாடியுள்ளீர்கள், இவர்களது பாணியில் தனது சுய நாடகத்துக்காக தோழர்களை துரோகிகள் ஆக்கி அமைப்பை வளர்சியை தடுப்பதை காண்கிறீர்கள்.
இவர் பற்றிய பல தோழர்களின் கருத்துக்களை நான் வைத்திருக்கிறேன்.
அது மட்டுமல்ல ரெலோ ஒன்றினால் மட்டும் தமிழர் அரசியலை தீர்கமுடியாது என்பதை உணராது இதர இயக்கங்கள் அமைப்புக்களுடன் தொடர்பாடல்களை வைத்திருப்பவர்களை அவர்களது உளவாளிகள் என்றும், தமது சுய நாடகங்களை விமர்சிப்பவர்களை அரசின் உளவாளிகள் என்றும் பட்டம் சூட்டியுள்ளனர், இந்த பட்டம் சூட்டலில் முதலில் சாள்சும் பின்னர் நிமோவையும் பின்னர் கீரனையும் பின்னர் கனடா செட்டியையும் நித்தியண்ணரையும் அண்மைக் காலங்களில் என்னையும் பட்டம் சூட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே நான் எனது சுயகெளரவத்தையும் மரியாதையையும் பாதுகாக்க இந்த காவாலித்தனங்களிலிருந்தும் இவர்களிடமிருந்தும் ஒதுங்கினேன்.
அமைப்பியல் பற்றிய தேடல் அற்றவர்கள், தோழர்களை, மக்களை இணைக்கத் தெரியாதவர்கள், பிரச்சனைகளை ஊதி தாம் தமது சுயிச்சைக்காக இயங்குபவர்கள், பொது என்பதன் தார்பகபரியம் புரியாதவர்கள்.
இந்த தவறுகளும் வரலாற்றில் பதியப்படல் வேண்டும்.
(இவை பற்றி எனது "ரெலோ லண்டன் "என்ற விபரமான கடிதம் பின்னர் வரும்)

இவற்றுக்கு மேலாக இதர ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்களில் சிலர் லண்டனில் வாழ்ந்தால் தான் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாகவும் ஆங்கிலத்தில் தமது பிள்ளைகள் படித்தால் மட்டுமே படிப்பாக இருக்குப் என்ற அறிவு முதிராதவர்களின் நினைப்பு அவர்களை நாம் வாழ்ந்த நாடுகளிலிருந்து லண்டனுக்கு கொண்டு வந்தது அதன் பின்னர் தமது லண்டன் காய்ச்சலை காட்டுவதற்க்கு லண்டன் கிளை அமைப்பை பயன் படுத்தி வீறாப்புக்களை எடுத்து விடுகிறார்கள்.
லண்டனில் ரெலோ கிளை உறுப்பினர்கள் புலம்பெயர் நாட்டிலேயே வாழப்போகிறவர்கள் இலங்கைக்கு வந்து வெய்யிலிலும், கிணற்றில் குளித்து வாழப்போகிறவர்கள் இல்லை ஆனால் தாமே மக்களுக்காக போராடுபவர்கள் போன்று, மக்களின் ஆணையை பெற்று இயக்கத்தை நடாத்துபவர்கள் போன்று ஒரு போலியாக, நாடகத்தை நடாத்துகிறார்கள், யாரும் இயக்கம் பற்றி பேசினால், எழுதினால் இவர்களுக்கு ஒரு பொய்யான கோபம் எடுப்பார்கள், அது சிலவேளை உங்ஙளுக்கு புரியாமல் இருக்கலாம், இதை இதர ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரெலோ தோழர்கள் பலர் கூறியுள்ளீர்கள்,இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் வந்ததவர்கள் ஆங்கிலத்தில் நடிக்கவே விரும்பி வந்த முட்டாள்கள் இவர்கள்.

இவற்றை விட இவர்களுக்கு சுதியேற்ற நீங்கள் இலங்கையிலிருந்து இவர்களுக்கு பொறுப்பாளர்கள் என போலிகளை அள்ளி வீச அவர்களும் போலியாகவே மக்களுக்கு ஏதும் செய்யாமல் உங்களுக்காக நடிக்கிறார்கள்.
இவர்களது முகநூலில் இவர்களது கருத்துக்களை பார்த்தால் இவர்களது மண்டையை புரிந்து கொள்ளலாம்.

இது கடந்த கால வரலாற்றில் இயக்கத்தின் area பொறுப்பாளர்களின் சேட்டைகளுக்கு ஒப்பானது, களவு தீர்க போனவர்கள்,கள்ள சாராயம் பிடிக்க போனவர்களின் சேட்டைகளுக்கு ஒப்பானதே எனக் கூறி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களின் நலனை முன்நிறுத்தி பங்காற்றுமாறு கேட்டு புலம்பெயர் ரெலோ இல. தமிழ் மக்களுக்கான செயற்திட்டங்களில் பங்களிக்கும் ஆலோசனைகளை வழங்குங்கள் எனவும் கேட்டு தமிழீழ விடுதலை இயக்கம் பற்றிய எனது அனுபவ இக்கடிதத்தை முடித்துக் கொள்கின்றேன்.

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
08/02/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

No comments:

Post a Comment