Tuesday, 20 May 2014

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று சாதனை.

 

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று சாதனை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வடமாகாணத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று சாதனை.

வடமாகாண சபை தேர்லில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே 30 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் மக்களை குழப்பும் நோக்கத்துடன் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தும் மக்கள் தமது வாக்குரிமையை மேற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வடமாகாணத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

இதன்படி வடக்கில் 68 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில்36 ஆயிரத்து முன்னூற்று இருபத்து மூன்று வாக்குகளைப் பெற்று 3 ஆசங்களைக் கைப்பற்றியுள்ளது.

அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 ஆயிரத்து அறுநூற்று இருபது வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 31ஆயிரத்து 818 வாக்குகளைப் பெற்று 3 ஆசங்களைக் கைப்பற்றியது.

அதுபோல வவுனியாவில் 40ஆயிரத்து முன்னூற்று இருபத்து நான்கு வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இதுவரை கிடைத்தமுடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2 இலட்சத்து ஆறாயிரத்து இருநூற்று எண்பத்து இரண்டு வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இவற்றின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களையும் போனஸ் ஆசனங்கள் 2 ஐயும் பெற்று 30 ஆசனங்களை பெற்று வடமாகாணத்தின் ஆட்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 8 ஆசனத்தை வடமாகாணத்தில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment