Search This Blog

Tuesday, 20 May 2014

வடக்கு தேர்தலில் அரசை எதிர்த்து தமிழ் மக்களின் வெற்றி அவசியம்.-த சோதிலிங்கம்

 

வடக்கு தேர்தலில் அரசை எதிர்த்து தமிழ் மக்களின் வெற்றி அவசியம்.-த சோதிலிங்கம்

1.இலங்கையின் கடந்தகால நீண்ட வரலாறுகள் இனங்களுக்கிடையிலான இனவாத முறுகல்கில் ஆரம்பித்து தமிழ் இனத்தை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்த வரலாறேயாகும். இந்த இனப்படுகொவை வரலாறு தமிழ் மக்களையும் மீறி; சிங்கள் மக்களின் மீதான படுகொலையிலும் வந்து நிற்கின்றது.

2.வரலாற்றில் இலங்கையில் வெற்றி என்பது எப்போதும் சிங்கள் மக்கள் தமிழ் மக்கள் மீதான வெற்றியாகவே சித்தரிக்கப்பட்டு தமது பாராளுமள்ற அரசியலை சிங்கள் இனவாத கட்சிகள் குறிப்பாக சுதந்திரக்கட்சியும் யுஎன்பியும் நடாத்திவந்துள்ளது இதன் அடிப்படையிலேயே இலங்கையின் அரசியல் வாரலற்றையும் பதிவு செய்துள்ளது.

3.இலங்கை மக்களின் அடிப்டைத்தேவைகள் மக்களின் வாழ்வியல் அபிவிருத்தி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுன் இலங்கையின் அரசியல் இணைக்கப்டுவதற்க்கு பதிலாக தமிழ் மக்களை படுகொலை செய்வதில் இணைக்கப்பட்டிருந்துள்ளது.

4.வெள்ளை முள்ளிவாய்க்காலில் தமிழினப்படுகொலைக்கு பின்பு சிங்கள்- (முஸ்லீம்களின் ஒருபகுதியினரும் இணைந்து) நடாத்திய வெற்றிக் கொண்டாட்டங்கள் இலங்கை அரசின் சுதந்திரக்கட்சியின் தமிழ் மக்கள் மீதான இனவாத நடவடிக்கையே யாகும்.

5.இன்றும் இதன் அடிப்படையிலேயே இலங்கையிள் வடக்கில் தமிழ் தேசிய முன்னணி வெற்றிவாகை சூடக் கூடாது என்பதில் அரசும் அரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியும் விருப்பம் கொண்டு செயற்ப்படுகின்றது.

6.இவற்றிக்கு பதிலாக தமிழ் மக்களும் அரசுக்கும் அரசஆதரவினருக்கும் எதிராக தமிழ் தேசிய முன்னணியை வடமாகாண தேர்தலில் வெற்றி கொள்ள வைக்க வேண்டும் இதன் மூலமே இலங்கை அரசு கொண்டாடிய தமிழ் இனப்படுகொலை வெற்றியை சமம் செய்ய முடியும். இதன்பின்னர் வடக்குமாகாண சபை இனவாதங்களுக்க முன்னுரிமை கொடுக்காதா அரசியல் வரைவு ஒன்றை இலங்கையில் முன்வைக்க வேண்டும் இதை தமிழ் தேசிய முன்னணியும் முன்னாள் நீதியரசர் திரு விக்கினேஸ்வரனும் பொறுப்புடன் செய்ய வேண்டும் .

7.இலங்கையில் வடக்கு மாகாண தமிழ் மக்களின் வெற்றி இனிமேல் இலங்கையில் இனவாத அரசுகள் இனவாத்தினால் எதையும் சாதிக்முடியாது என்ன என்ற நிலைமையை தொற்றுவிக்கும். வுடக்கு தேர்தலின் வெற்றியின் பின்னர் இலங்கையில்

8.தமிழ் தேசிய முன்ணியினரின் வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள் கழிவு எண்ணை ஊற்றுதல் போன்ற நடவஎக்கைகளுக்கு பின்னால் இலங்கை அரசின் உளவுத்துறையினரின் கைகள் நிறையவே இருக்கின்றன. இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியின் வேட்பாளர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் துப்பாக்கியால் மிரட்டல்கள் செய்வது எந்த அளவு இலங்கையில் ஜனநாயக மீறல்கள் நடைபெறுகின்றன எஎன்பதற்க்கு சிறந்த உதாரணமாகும்.

9.இவற்கை இலங்கை அரசு ஆதரிப்பதும் இலங்கை அரசு இலங்கையில் இரு மொழி பேசும் மக்களும் இணைந்து வாழும் சூழ்நிலையை உருவாக்க விரும்பவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. மேலும இலங்கை இதர பிரதேசங்களில் இராணவு நிலைகளுடன் ஒப்பிடு:ம்பெூது வடக்கு மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக இராணுவ பிரசன்னத்தை வைத்திருப்பதும் இலங்கையின் வடக்கில் எப்போமதஅ ;ஒரு பதட்ட நிலையை வைத்திருக்கும் நோக்கும் அரசின் மனதில் உள்தையும் உண்மையில் இலங்கை அரசு அமைதியாக வடக்கு மக்களை இருக்கவிடக் கூடாது என்பதில்மு ;உள்ள அக்கறையேயாகும்.

10.ஆனையிறவு தடைமுகாமும் சோதனைச் சாவடியும் தமிழ் மக்களிள் இலங்கை வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறையின் முக்கிய புள்ளியாகும்; யுத்தம்முடிவடைந்து பல ஆண்டுகளின் பின்னரும் இந்த ஆனயைிறவு சோதனைச் சாவடி எதற்காக என்பதை ஆராய்ந்தால் வடக்கு மாகாண மக்களளை தனது அடக்குமறைக்குள் வைத்திருக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலை விட வேறு என்னவாக இருக்கும்.

11.இந்த முகாம்கள் சோதனை சாவடிகள் ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணயைாளர் திருமதி நவநீதம்பிள்ளையின் வருகையின் போது நீக்கப்பட்டு பின்னர் ஆணயைாளர் இலங்கைகையை விட்டு வெளியேறியதும் மீள ஆரம்பி;க்கப்ட்டதும் இலங்கை அரசு வடக்கு தமிழ் மக்களி மீதான அடக்குமுறையின் வெளிப்படையான வெளிப்பாடேயாகும்.

12.வன்னியில் ஈபிடிபிக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை தமது வெற்றிலை வாக்குசீட்டினால் தமதாக்கிகொள்ளலாம் என்ற அரசின் பகற்கனவுக்காக ஓமந்தையில் சோதனைச்சாவடியை தற்காலிகமாக நீக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த சோதனை சாவடி தேர் முடிந்ததும் மீண்டும் கொண்டுவரப்படும் என்பது வன்னி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

13.யுத்த்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுதல் மீள குடியமரத்துதல் காணிப்பங்கீடுகள் விடயங்களில் வன்னயில் ஈபிடிபியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த செயற்பபாடுகளில் தோழர் அசோக்கின் (சொந்த பெயர்) முன்னனெடுகப்புக்கள் அளப்பரியத இந்த சேவையினை இலங்கையின் சமூகவியலாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள தவறிவிடுகின்றனர்.

14.குறிப்பாக மலையகத்தலிருந்து இலங்கை அரசினால் விரட்டி அடிக்கப்பட்டு வடக்கில் குடியேறிய மக்களுக்கான காணிப்பங்கீடு மிகவும் முக்கியமானதாகும். வடக்கு தமிழ்மக்களை நம்பியே இந்த மலையக மக்ள அன்று ஓடிவந்திருந்தனர் இவர்களை யுத்த்திற்க்கு முன்பு புளொட்டின் முன்னெடுப்பினால் காந்தீயத்தின் அரவணைப்பும் யுத்தத்தின் பின்னர் ஈபிபடிபியின் காணிப்பங்கீடும் ஆதரவும் வடக்கு தமிழ் மக்களின் ஆதரவுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதை மறுத்திட முடியாது.

15.அரசிடம் அங்கம் வகித்த ஈபிடிபி தனது அரசின் உறவினை சரியாக வன்னி மக்களின் தேவைகளை பூத்திசெய்ய பாவித்துக் கொண்டதை மக்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்.

16.அன்று புளொட்டினால் திட்டமிடப்பட்ட காந்தீயம் பொன்ற அமைப்புகளில் ஒன்றையேனும் யுத்தத்திற்க்கு பின்னர் தமிழ் தேசிய மன்னணியினராலலும் அதில் அங்கம் வகிக்கும் கட்சியினராலும் ஏற்ப்படுத்த முடியாமல் போனது பாரிய தவறாகும். எல்லாவற்றிக்கும் அரசைகுற்றம் சாட்டுவதிலும் அதிகார்ங்கள் இல்லை என்பதையும் மட்டும் காரணங்கள் காட்டி மக்களின் அத்தியாவசிய தேவைகளுககான உதவிசெய்யும் அமைப்புகளை உருவாக்காமல் போனது தமிழ் மக்களின்; சேவைகளை எங்கிருந்து தொடங்குவது என்பதை தமிழ் தேசிய முன்னணி புரியாமல் இருந்துள்ளார்கள் என்றே உணரப்படுகின்றது.

No comments:

Post a Comment