Apr 14,
2011
“தமிழ் அரசியல் மற்றும் தலைவர்கள் தமிழ் சிங்கள புதுவருட
தினச் செய்தியில் இலங்கையில் தமிழ் சிங்கள் மக்களின் இன உறவுகளின் அவசியத்துக்கும்
அதன் வரலாற்று உண்மைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”
பொதுவாக தலைவர்கள் எனப்படுவோர் வரலாறு என்பதை மிக குறுகிய
கால நேரத்தில் தமது குறுகிய நோக்கிற்கு அறிந்தவற்றையே பேசி தமது வாழ்வை தமது குறுகிய
அரசியலில் முடித்துக் கொள்கின்றார்கள். இவைகள் தமிழ் சிங்கள மக்களிற்கு இடையேயான தேசியவாத
இனவாதமாக உருவெடுத்து மக்களை இம்சைப்படுத்துகின்றது. எமது இந்திய பிராந்தியத்தின் இந்திய
கலாச்சார வரலாறு என்பது பாரிய நீண்ட வரலாறு கொண்டது. ஆனால் தமிழ் தலைவர்களில் பலர்
கடந்தகாலங்களில் ஜரோப்பியர் வருகை காலங்களின் போது ஜரோப்பிய வியாபார அரசியல்வாதிகளால்
ஊட்டப்பட்ட அரசியலை மையப்படுத்தி எமது இந்திய இலங்கை பிரதேச இந்திய கலாச்சாரத்தின்
பாரம்பரியத்தை மறந்து தமது தலைமைத்துவத்தை தமிழ் சிங்கள மக்களுக்கு வளங்கியுள்ளனர்.
எமது இலங்கை தமிழ் சிங்கள மக்களின் வரலாறு 2000 வருடங்கள்
பின்னோக்கி பார்த்து எமது மக்களின் அடிப்படைகளில் உள்ள ஒற்றுமைகளை முன்கொண்டு வர
வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளதும் எமது இலங்கை மக்களுக்கான ஒன்றிணைந்த தமிழ் சிங்கள
மக்களுக்கான பொதுவான இலங்கையர் என்ற அடையாளத்தையும் அதனுள்ளே தமிழர்கள் என்ற அடையாளத்தையும்
உருவாக்க வேண்டும்.
வரலாற்றில் எவ்வளவு உண்மைகள் இருந்த போதிலும் இன்றுள்ள
நிலைமைகளில் உள்ள உண்மையின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் யதார்த்த பூர்வமான
மாற்றங்களையும் இணைத்து செயற்படுவது முக்கியமானது. இவை இரு மொழிகள் பேசும் ஒரே இன
இலங்கை மக்கள் என்ற அடையாளத்தை தோற்றுவிக்க மூலகாரணமாகவும் இருக்கக்கூடும் என பலர்
நம்ப ஆரம்பித்துள்ளனர்.
எதிர்காலத்தில் எத்தனை மாற்றங்களை இயற்கையும் மனித வாழ்வுசூழலும்
ஏற்படுத்தப் போகின்றனவோ என்ற கற்பனையில் மிதப்பதைவிட இன்றே இலங்கையில் உள்ள மக்களிடையேயான
இன உறவுகளை பேணும் பணிகள் மிகவும் முக்கியமாகின்றது. இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலங்களிலிருந்து
மிக நீண்டகாலமாக இலங்கைத்தீவில் ஒரே இனமக்களே வாழ்ந்து வந்துள்ளதும் இவர்களின் வாழ்க்கையும்
தென் இந்திய பிராந்திய தொடர்புகளும் இலங்கையில் காலத்துக்குக்காலம் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது.
இந்த மாற்றங்கள் சில சந்தர்ப்பங்களில் முரண்பாடுகளையும் சில சந்தர்ப்பங்களில் உடன்பாடுகளையும்
ஏற்படுத்தியிருக்கும். இப்படியான முரண்பாடுகளும் உடன்பாடுகளும் இலங்கைத்தீவில் இன்றுள்ள
சமூகத்தில் அடிப்டையிலும் சிலமாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது என்பது உண்மையாகும்.
அண்மைக்கால மரபணுச் சோதனைகளும், வரலாற்று ஆவணங்களின்
நிரூபணச் சான்றுகளும் இலங்கையில் வாழும் இரு மொழிபேசும் குடும்பத்தினரும் ஒரே இனத்து
இரத்த உறவினர் என்பதையும் நிரூபித்து அதிலும் இலங்கையில் உள்ள எல்லா மக்களும் தென்
இந்திய மக்களின் மிக நெருங்கிய உறவினர்கள் என்றும் இவர்கள் மிக நெருக்கமான திராவிட
இனத்தவர்கள் என்றும் மரபணுக்கள் உண்மையை எடுத்தியம்பியுள்ளது. இவை தமிழ் சிங்கள மக்களிடையேயான
வரலாற்று தொடர்புகளின் நெருக்கத்தை நினைவூட்டி இலங்கையில் உள்ள இனங்கள் தம்மை ஒரு
இனமாக ஒரு புதிய இலங்கைக்குள் இலங்கையர் என்ற இனமாக மிளிர முடியும் என்பதை பறை சாற்றுகின்றது.
இந்த வரலாற்று உண்மையும் எமது வாழ்வின் புதுவருட தினக் கொண்டாட்டமும் இன்று வெளித்தெரியும்
இனங்களுக்கிடையிலான இடைவெளிகள் மிகக்குறுகியவைகளே என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
ஒவ்வொருவருடம் தென்இந்திய, திராவிட, தமிழ், சிங்கள மக்களும் ஒரே காரணங்களுக்காக புதுவருட
தினத்தை கொண்டாடுகின்றனர்.
இந்துக்களின் காலங்களின் பின்னர் இந்தியாவிலிருந்த மூடநம்பிக்கைகளை
களைந்து மாற்றங்களை இந்திய தத்துவங்களுக்கு கொண்டுவந்து புத்துயிர் கொடுத்தவர் புத்தர்.
இதனால் இந்திய தத்துவம் உலக தரத்திற்கு புத்தரும் உலகின் முதல் தத்துவஞானியாகவும் போற்றப்பட்டார்.
வட இந்திய பிரதேசங்களுக்கு அப்பால் புத்தரின் போதனைகளால் தென் இந்தியாவும், தென் இந்தியாவிலிருந்து
இலங்கையும் மக்கள் கிறிஸ்துவுக்கு முன் 700 வருடங்களிலிருந்து 7ம் நூற்றாண்டுகள் வரையில்
பெளத்தத்தை தழுவியிருந்ததிற்கான வரலாற்றுச் சான்றுகள் தாராளமாக உள்ளன. கிட்டத்தட்ட
1500 வருடங்கள் இலங்கையில் தமிழர்கள் பெளத்தமதத்தையே தழுவியிருந்துள்ளனர்.
இலங்கையில் தொன்மையான காலம் தொட்டு வாழ்ந்தவர்கள் இந்துக்கள்
சைவர்களாகவும் இவர்கள் பின்னர் பெளத்தர்களாகவும் மீண்டும் சைவர்களாகவும் மாறிமாறி மதம்மாற்றம்
நடைபெற்று வந்துள்ளதும் இப்படியாக மாறி மாறி மதமாற்றங்கள் ஏற்ப்பட்டுக் கொண்டிருந்த
காலங்களில் தமிழர்களால் பெளத்த சமயத்திற்கு பாரிய பங்களிப்புக்கள் செய்ப்பட்டிருந்துள்ளது
என்பது வரலாற்று உண்மையாகும். இப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலத்திலிலேயே
சிங்கள மொழியின் வருகையும் ஏற்பட்டு சிங்கள மொழி பேசும் மக்கள் என்ற இனம் செழுமைபெற்று
வளர்ந்து கொண்டது.
இந்தக்காலத்திலேயே தமிழ் பெளத்தர்களால் பெளத்தம் உன்னத
நிலையில் இருந்தது. இக்காலத்திலேயே பெளத்தம் தனது வரலாற்றில் மிக உயர்ந்த மிக உன்னத
மகாகாவியமான மணிமேகலையை தமிழ்மொழி பெளத்தத்திற்கு வழங்கியிருந்தது. இன்று சிங்கள மொழிபெயர்ப்பில்
சிங்கள பெளத்த மக்களின் காவியமாக பேணப்படுபவையாகும்.
இதேகாலத்தில் தமிழர்களால் தமிழ்
பெளத்தர்களால் படைக்கப்பட்ட பெளத்த காவியங்களான உதயணன் கதை குண்டலகேசி நீலகேசி வீர
சோழியம் ஆகிய காப்பியங்கள் தமிழர் நாகரீகங்களின் உச்ச நிலையையும் தமிழர்களின் பெளத்த
ஈடுபாட்டிற்கும் இன்னுமொரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இவற்றிக்கும்மேலாக தமிழ் பெளத்த ஞானிகளான புத்த கோசர்
- விசுத்திமார்கம் என்ற நூலை பாளி மொழியில் இயற்றினார். இவற்றைவிட புத்த தத்தர், மதுரத்த
விலாசினி, வினய வினிச்சயம், உத்தர வினிச்சயம், ரூபாரூப விபாகம் ஆகிய பெளத்த நூல்களையும்
இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் ஜினாலங்காரம், தந்ததாது, போதிவம்சம், ஆகிய நூல்களையும்
பின்னர் அபிதம்மாவதாரம் என்ற இன்று பெளத்தர்களால் பொக்கிசங்களாக பாதுகாக்கப்படும்
காவியத்தையும் படைத்துள்ளார்.
ஆரிய தருமபாலர் - கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின்
பெளத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்து பெளத்தப் பள்ளிகள் வைத்திருந்த பழைய தமிழ்
உரைகளையும் இலங்கையிலிருந்த பாளி உரை நூல்களையும் ஆராய்ந்து திரிபிடகத்திற்கு பதினான்கு
உரைகளை எழுதி வழங்கியவர். அநிருத்த தேரர் - பாண்டிய நாட்டில் மதுரையிலிருந்த சோம விகாரையின்
தலைவராக இருந்தவர் அநிருத்த தேரர் இலங்கைப் பெளத்த சங்கத்தினராலும், பர்மா பெளத்த சங்கத்தினராலும்
படித்துப் பேணப்பட்ட பிரபல பெளத்த காவியம். பரமத்த வினிச்சயம், காமபரிச்சேதம் போன்ற
பல நூல்களை எழுதியவர்களாகும்.
காசியப்ப தேரர் போன்ற தமிழ் தேரர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும்
பல பெளத்த காவியங்களையும் நூல்களையம் பெளத்த வழிகாட்டிகளையம் தமிழிலும் பாளியை படித்து
பாளியிலும் சிங்கள மக்களுக்கு தந்திருந்தனர் காஸ்யப தேரர் என்ற தமிழ பெளத்த தேரரால்
எழுதப்பட்ட விமதிவிச்சேதனி, விமதிவிநோதின், மோகவிச்சேதனி, அநாகத வம்சம் ஆகிய பெளத்த
தர்ம உரை நூல்கள் இலங்கையின் பெளத்த சங்கத்தினரால் பேணப்படும் இலக்கியங்களாகும்.
பெளத்தம் தழைத்தோங்கிய காலத்தின் இறுதியில் பெளத்தத்ததுக்கும்
சமணர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாதத்தினால் சைவர்கள் மீண்டும் தளைத்து சைவத்தை தென்
இந்தியாவிலும் இலங்கையின் வட கிழக்கிலும் இதர இலங்கையின் பிரதேசங்களிலும் பரப்பினர்.
இக்காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட குழப்பங்களும் இதன் பின்னர் அரச பரம்பரையிரால் ஏற்பட்ட
மாற்றங்களும் இரு பிரிவினராக ஒருபுறம் சைவர்கள் என்றும் மறுபுறும் பெளத்தர்கள் என்றும்
வளர்ச்சிகள் ஆரம்பித்து இன்றுள்ள சமுதாயமாக உருவெடுத்தது. இக்காலத்தின் பின்னரும் இலங்கையில்
ஆட்சியமைத்த இந்து அரசர்களாலும் பெளத்த அரசர்களாலும் இரு தரப்பு சமயத்தவர்களுடனும்
உறவுகளும் ஒத்தாசைகளும் இருந்துள்ளன. இவற்றிற்கான சான்றுகளாக இன்றும் இலங்கையின் பல
இந்துக்கோவில்கள் அதன் பூஜை முறைகளும் உள்ளன. இதைவிட இன்றும் பெளத்த மதகுருமார்களும்
பெளத்தமக்களும் இந்து தெய்வக் கோட்பாடுகளை மதவழிபாடுகளை அனுசரிப்பது சாதாரண விடயமாக
உள்ளது.
இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் மக்களின் மதரீதியான இணக்கப்பாடுகளும்
மொழிரீதியான இணக்கப்பாடுகளையும் கொண்டவர்கள் கண்டியின் கடைசி மன்னான கண்ணுச்சாமி
என்ற இயற் பெயர் கொண்ட சிறிவிக்கிரமராஜசிங்கன் என்ற தமிழனை கொண்ட சிங்கள மக்களின்
ஒரே அடிப்படையிலிருந்து உருவானவர்களே என்பதை புரிந்து கொள்ள தவறவிடக்கூடாது.
இந்த உண்மையின் அடித்தளமாக இருப்பதில் தமிழ் சிங்கள புதுவருட
தினக்கொண்டாமும் ஒன்றாகும். புதுவருட தினக் கொண்டாட்டம் தென் இந்திய மக்களுடனும்
தொடர்புடையது என்பதும் இலங்கையில் உள்ள பல பெளத்த விகாரைகளுடனும் இந்து கோவில்களின்
தொடர்புடன் உள்ளதும் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. புதுவருட தினம் தமிழர்
சிங்கள மக்களுக்காக பொதுவான தினமாகவும் இந்த பொது தினம் இந்த இரு இனத்தின் பொது
பொதுவான இனத்தில் இருந்து உருவானவர்கள் என்பதின் அடையாளமாக இன்று வரையில் உள்ளதும்
இந்த புதுவருட தினத்தையும் எமது இந்து பெளத்த (தமிழ்-சிங்கள) மக்களின் பொது விசேட
தினமான பெளர்ணமி தினத்தையும் ஒவ்வொரு மாதமும் இன இணக்க இரு இனத்தின் பொது அடையாளமான
இலங்கை மக்கள் (சிறீலங்கா) மக்களின் பொதுவான அடையாளதினமாகவும் கட்டியெழுப்ப இருதரப்பினரும்
இணைந்து செயற்படல் வேண்டும்.
இந்த செய்திகள் நாம் தமிழர்கள் இலங்கையில் பெளத்த தத்துவத்தின்
பின்னணியில் இருந்துள்ளதையும் பெளத்தத்திற்காக தமிழ் மொழியின் பங்களிப்புக்கள் பற்றி
தமிழ் மக்களுக்கும் புரியவைக்க வேண்டும். இதன் மூலம் தமிழர்கள் பெளத்தத்தின் மீதுள்ள
கருத்தில் மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும். இதே போன்று சிங்கள மக்களுக்கும் தெரிவிப்பதன்
மூலம் தமிழர் மீதுள்ள உறவையும் பற்றுதலையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
இதற்கு நல்ல உதாரணமாக உள்ளவற்றில் மிகவும் முக்கியமானது
தமிழ் மதுரை கூலவாணியின் சாத்தனார் எழுதிய மணிமேகலைக்கு நிகரான இன்னொரு தமிழ் பெளத்த
காவியம் உலகின் வேறெந்த மொழியிலும் இன்றுவரை உருவாக்கப்படவில்லை. இந்த மணிமேகலை இன்று
சிங்களமொழியில் மொழி பெயர்ப்பு செய்து மிகமுக்கிய சிங்கள பெளத்த காவியமாக சிங்கள
மக்களால் போற்றப் படுபவையாகும் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டும் தமிழர் நாகரீகத்தின்
உச்சநிலையை இந்த உலகத்திற்க்கு எடுத்து இயம்பும் காவியங்கள் என்பதை எமது தலைவர்கள்
தமது புதுவருட தினங்களில் தமிழ் சிங்கள மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
இதன் மூலமே இலங்கையில் உள்ள மக்கள் தமக்கிடையிலான இன உறவுகள்
மிகவும் பழமை வாய்ந்தவைகள் என்பதையும் எம்மிடையே உள்ள இன முரண்பாடுகள் அர்த்தமற்றவைகள
என்று புரிய ஆரம்பிப்பார்கள் இதன்மூலமே மக்களின் சுய அறிவையும் அதற்கான தேடலையும் அவர்களில்
இளம் பருவத்தினர் வயது வரும் காலத்திலாவது புரிய ஆரம்பிப்பார்கள் என பலரும் நம்புகிறார்கள்.
இவை ஒரு சிறிய முயற்சிகள் என கருதலாம் ஆனால் தமிழ் சிங்கள மக்கள் தத்தமது இன உணர்வுகள்
உந்தப்பட்டே இயங்குகிறார்கள் அவர்களது இன உணர்வுக்குள் உட்கிடப்பாக உள்ள இந்த வரலாற்று
ஆதாரங்களை புரிய வைத்து இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் ஒரே இன ஒரே குல அடிப்படையை
புரிய வைக்க முடியும் என பலரும் நம்புகின்றனர்.
பெளத்த கோவில்களிலும் காளியும் நவக்கிரக, கணேச பூசையும்
நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ள போதும் இலங்கை பெளத்தர்கள் இந்துக் கடவுள்களை மதிப்பளித்து
வருவதும் எமது இனங்களிடையேயான அடிப்படையில் உள்ள உறவினையே எடுத்துக் காட்டுகிறது.
சூடாமணி விகாரம் போன்று இந்து பெளத்த தமிழ் சிங்கள இன
உறவுகளின் ஆதாரம் வான் உயர்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டு இலங்கையர் இனத்தை உருவாக்க பாடுபடல்
அவசியமாகின்றது என்பது புலம்பெயர் நாட்டிலுள்ள பல முற்போக்கு சக்திகளின் விருப்பமாகவும்
தற்போதுள்ளது.
இலங்கை தமிழர்களின் 1958 அனுபவம், 1983 அனுபவம், இந்திய
இராணுவ அனுபவம், முள்ளிவாய்க்கால் அனுபவம் போன்றவைகள் இன்று மக்களை புதிதாய் சிந்திக்க
வைக்கும் இக்காலங்களில் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பின் உள்ளார்த்தம் எமக்கு முன்னால்
வந்து நிற்கிறது இது எம்மை மீண்டும் 2000 வருடங்களுக்கு முன் நாம் யார் என்ற அடிப்படைக்
கேள்வியை ஆராய கட்டாயப்படுத்துகிறது. இனவெறிகளை தூண்டி நாட்டை பிளவுபடுத்தி யாராலும்
எதையும் வெல்லமுடியாது என்ற உண்மையை இன்று இந்த புதுவருடப்பிறப்பு உணர்த்தி நிற்கிறது.
இனங்களின் ஒற்றுமைக்கான அடிப்படைக் காரணிகளை கண்டறிந்து வரலாற்றில் முன்நோக்கிய பாதையினை
வகுக்கும்படி மீண்டும் வரலாறு எமக்கு புதிய பாடத்தினை புகுத்தியுள்ளது.
புதுவருட பிறப்பு தினக் கொண்டாட்டமானது இலங்கையின் வடக்கு,
கிழக்கு, மத்தி, தெற்கு, ஊவா, என்ற பேத வேறுபாடின்றி ஒரு பொது இனத்தின் அடையாளமாக
இனம்காட்டி நிற்கிறது. சித்திரா வருடம், வைகாசி விசாகம், நவராத்திரி எனவும் சமயங்களின்
பொதுவான அடையாளங்களையம் இணைந்து இனங்களின் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி, தலைவர்களும்
முற்போக்குவாதிகளும் மக்களை இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் நாம் தமிழர்கள்
என்ற பொதுவான சிந்தனைப்போக்கை வளர்க்க வேண்டும். இதுவே இலங்கைக்கான நிரந்தர சமாதான
வரைவாகும்.
தமிழ் சிங்கள தலைவர்கள் யார் எந்தப்பக்கம் என்ற வேறுபாடற்ற
பொது இலங்கைக்கான சிந்தனைப்போக்கை வளர்க்க முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment