Search This Blog

Tuesday, 20 May 2014

வட மாகாணசபை இயங்குதலே முக்கியத்துவமான விடயமாகும்.- த சோதிலிங்கம்

 

Thambiah Pillai Sothilingam

வட மாகாணசபை இயங்குதலே முக்கியத்துவமான விடயமாகும்.- த சோதிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்புள் எடுக்கப்பட்ட முடிவுகள் ஜனநாயகமற்றது என்ற கருத்தை முன்வைத்து  தமிழ் தேசியகூட்டமைபின் பதவி ஏற்றல் வைபவத்தில் கலந்து கொள்ளாமலும் அரையும் குறையுமாக அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டும் தமிழ் மக்களிடையே மிகவும் பிரதானமான அரசியல் கொள்கைப்பிரச்சினைகள் இருப்பது போன்றதொரு பூடகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தமிழ் மக்களின் வேண்டுகோள்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=amAvH9keEKE

தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் பல பாரிய தவறுகள் பிழைகள் நடந்தேறியிருந்துள்ளது இந்த தவறுகளுக்கு இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆயுத இயக்கங்கள் மிகவும் முக்கியமானவைகளாகும், அவற்றில் பங்கெடுத்த பலர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்பாகவும் , முக்கியத்துவமான உறுப்பினர்களாகவும் இயங்குகின்றீர்கள் தமிழ்பேசும் மக்களிடமிருந்து பல திசைகளில் கடந்த கால அரசியல் தவறுகள் பற்றிய நியாயம் கோரும் கோரிக்கைகள் எழுந்திருந்த போதிலும் தங்களின் கட்சிகளின் காத்திரமான விமர்சனங்களோ, பதிலோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டுகின்றனர்.

இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் ஏதேச்சையான முடிவுகளில் சில அன்றய ஆயத போராட்ட அமைப்பின் தவறுகளுடன் ஒப்பிட்டு பேசக் கூடியவைகள் அல்ல என்பது மட்டுமல்ல தமிழரசுக்கட்சி வன்முறையற்ற தேசிய போராட்டதிற்கான தலைமைத்துவத்தின் பொறுப்பை மக்களின் ஆணையை தமிழரசுக் கட்சியும் பெற்றுள்ளது என்தையும் கவனிக்க வேண்டும்.

பதவியேற்ப்பு வைபவத்திற்க்கு கலந்து கொள்ளாமைக்கான காரணங்களில் ஈபிஆர்எல்எப் அமைப்பின் சார்பில் ஈபிஆர்எல்எப்ன் தெரிவினால் தெரிவு செய்யப்பட்ட ஜங்கரநேசனின் அமைச்சு பதவி வழங்கல் விவகாரம் மிகவும் காசாரமாக பேசப்படுவது இங்கு முக்கியமானதொன்றும், இதற்காக ஈபிஆர்எல்பினால் வெளியிடப்படும் நாளாந்த அறிக்கைள் ஒட்டுமொத்த வடமாகாண சபையின் பதவியேற்ப்பு வைபவத்தையும் மாகாணசபையின் இயக்கத்தையும் ஸ்தம்பிதம் அடையும் கருத்துக்களாக வெளிவருவதை பலரும் வெறுப்புடன் கவனிக்கிறார்கள்.

இதன் பின்னணியை பதவிப் போட்டிக்கான பொறாமையாகவும் தனித்துவமான சுய அரசியல் கௌரவங்களுக்கான போட்டியாகவுமே தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் மிகப்பெருந்தொகையானோர் தமது உயிர் அர்ப்பணிப்புக்களுடன் முடிவுக்கு வந்த போராட்டத்தின் முடிவில் தமிழ் மக்கள் அரசுக்கு திட்டவட்டமான ஒரு முடிவினை தெரிவித்திருக்கிறார்கள் அது “தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டம் அதன் அரசியல் தீர்வுக்காக எதிர்பாரப்புமாகும்” அதற்காகவே தமிழ் மக்களின விருப்புக்கு அமைய இந்த வட மாகாண சபை உருவாக்கப்படுகின்றது என்பதை சில அரசியல் கட்சிகள் புரிந்கொள்ள தவறிவிடுகின்றன, அதுமட்டுமல்ல இந்த கிடைக்கும் சந்தரப்பங்களை பயன்படுத்தி சுயலாபங்களை தேடிக்கொள் முனைகின்றன என்பதே தமிழ் மக்களின் இன்றய பரிந்து கொள்ளலாகும்.

இதற்க்கு முன்பு நடைபெற்ற தேரத்லில் தமிழ் மக்கள் ஈபிடிபியை தெரிவு செய்திருந்ததும் அவர்கள் மூலமாக தமது இடைக்கால தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட வடபகுதி மக்கள் இன்று அதன் அடுத்த கட்டமாக தமிழ்தேசிய முன்னணியை தெரிவு செய்தமை பற்றி தமிழ் அரசியல் கட்சிகள் சரியான புரிதலுடன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று ஏற்ப்பட்டுள் மாகாணசபையை மிகவும் சிறந்த முறையில் இயங்க வைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பாரப்பாகும் இங்கு எந்த கட்சியினர் என்ற அடிப்படையில் சிந்திக்காது தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்கள் எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கிறார்கள் .

இங்கே மிகவும் முக்கியம் வாய்ந்த விடயம் வட மாகாண சபை இயங்குதலேயாகும்.

பதவியேற்ப்பு வைபவத்தித்தில் கலந்து கொள்ளாதவர்களை தமிழ் மக்கள் அரசியல் புரியாத முட்டாள்கள் என்றும் தமது சுய லாபங்களுக்காக இயங்குபவர்கள் என்றும் கருத ஆரம்பித்து விட்டனர் காரணம் இங்கு கட்சிகளைவிட வடமாகாணசபை என்பதே மிகவும் முக்கியமாகதாகும். மாகாண சபையின் இயக்தின் ஆரம்பத்திலேயே தங்கள் குழப்பங்களை முன்வைப்பதில் முன்னணி நிற்கும் கட்சிகளைப் பற்றி தமிழ் மக்கள் என்ன என்று கணிப்பிடுவார்கள் என்பது இங்கே முக்கியத்துவமானது.

கடந்த 30 வருட போராட்ட சீரழிவுகளை சந்தித்தும் இன்றும் அந்த சீரழிவு மனவேதனையிலிருந்து விடுபடாத மக்களின் மன உணர்வை கட்சிகள் நினைத்துப்hர்க்க வேண்டும்.

இன்றய இலங்கை அரசின் பண்புகளை மதிப்பீடு செய்து கொண்டு, இலங்கை அரசிடமிருந்து அதிகாரங்களை பெற்றெடுக்கும் போராட்டத்திற்க்கும் இன்றய இலங்கை அரசின் அதிபரின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுப்பது என்பதிலும் உள்ள செய்ய வேண்டிய, தவிர்க்க முடியாத நடவடிக்கைகள் பற்றி கட்சிகள் புரிந்து கொள்ள தவறிவிட்டுள்ளனர். இலங்கையில் மாகாண சபையின் தடங்கல்கள் அற்ற இயங்குதலுக்கும், இனிமேல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான, மக்களின் வாழ்வியல் அபிவிருத்திக்காகவும் இயங்க வேண்டியுள்ளதை மறந்துவிட கூடாது.

நிலைமைகள் பற்றிய புரிதல் இல்லாமல் எடுத்ததிற்க்கு எல்லாம் அது, இது என்று பேசிக்கொண்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை தமிழரசின் மீது தவறு என்று விமர்சிப்பவர்கள் இதர அரசியல் கட்சிகளை அழைத்து ஒரு உரையாடல்களை மேற்கொண்டிருக்கலாம் அதன் பின்னராவது அறிக்கைகளை விட்டிருக்கலாம்.

ரெலோ செல்வம் மற்றும் ரெலோ உறுப்பினர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்ப்பு வைபவத்தில் கலந்து கொண்டமை ஒரு சரியான முன்உதாரணமாக இருக்கின்றது எவ்வளவு தான் பிரச்சனைகள் முரண்பாடுகள் இருக்கின்ற போதிலும் கட்சிகள் ஜக்கியத்துக்கான எந்த சந்தரப்பங்களையும் தவறவிட்டுவிடக் கூடாது ஜக்கியத்துக்கான முயற்ச்சிகளையும் செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். ரெலோ ஜக்கியத்துக்hன வரலாற்று கடமைகளிலிருந்து தவறிவிடக் கூடாது.

கட்சிகளினால் வழங்கப்பட்ட பட்டியலிலிருந்து தெரிவு செய்ப்பட்ட அமைச்சர்கள் நான்கு பெரும் அப்பதவிகளுக்கு உகந்தவர்களாகவும் சரியான பிரதேச பங்கீடாக இருப்பதாகவுமே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது வடமாகாண சபைக்கு தெரிவு செயப்பட்ட அமைச்சர்கள் மக்களுக்கு சேவையாற்ற தமது வாழ்வை அர்ப்பணித்தவர்களாகவும் அதற்காக துணிந்தவர்களாகவுமே பலரும் கருதுகின்றனர்.

அதற்கான கல்வி தராதரம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

அமைச்சர்கள் அமைச்சு
1. கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் நிதி, திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, வீதி அபிவிருத்தி, மின்சக்தி, வீடமைப்பு, நிர்மாணம், கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வளித்தல், தொழில்துறை, தொழில்,  முனைவோர் மேம்பாடு, சுற்றுலா,உள்ளுராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், உணவு வழங்கலும் விநியோகமும் அமைச்சு

2. பொன்னுத்துரை ஐங்கரநேசன் விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சு

3. தம்பிராசா குருகுலராஜா கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைச்சு

4. பத்மநாதன் சத்தியலிங்கம் சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சு

5. பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தக வாணிப முயற்சி, கிராம அபிவிருத்தி அமைச்சு

கட்சிகள் அற்று, இயக்கங்கள் அற்று மக்களுக்காக சேவையாற்ற அர்ப்பணிப்புடன் சேவையாற்றமுன்வந்து கட்சிகளின் உதவியுடன் தேரத்லில் மக்களின் ஆதரவினைப் பெற்றவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றம், பதவி நீக்கம் என்ற பாரிய புரிட்சிகர அமைப்புகளுக்கு துரோகம் செய்hதவர்கள் போன்று அறிக்கைகள் வெளியிடுவது சரியல்ல தவறுகள், பிழைகள், தெரிவுகளுடன் இணைந்ததே அரசியலாகும் எல்ல பண்புகளுடனும் இணைந்தே அரசியல் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட்டு தம்மை புரட்சிகர அமைப்பினராக நினைப்பது தவறாகும்.

தம்மால் எடுக்கப்படும் முடிவுகள் ஒரு புரட்சிகர் அமைப்பின் முடிவாகவும் புரட்சிகர அமைப்பின் ஒழுங்காற்று நடவடிக்கைளாகவும் செயற்ப்படுவதில் தவறுகள் பல உள்ளதை எடுத்தியம்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளை யாரும் புரட்சிகர அமைப்பாக ஏற்றுக்கொள்ள வில்லை இவைகள் சாதாரண மிதவாத அரசியல் கட்சிகளாகவே புரிந்து கொள்கின்றார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றனர்.

தெரிவு செய்ப்பட்ட அமைச்சர் ஒருவரை தமது கட்சியிலிருந்து நீக்குவது என்று ஈபிஆர்எல்எப் ன் முடிவு தவறானதாகும். இவற்றிக்காக ஈபிஆர்எல்எப் கவலைப்படும் நேரம் வரலாம்.

சேவையாளர்களில் பலர் தம்மை அடையாளப்படுத்தும் ஒரு தங்கும் இடமாகவே கட்சிகளுடன் இணைகின்றார்கள் இப்படியானவர்கள் பலர் பதவிகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் மக்களுக்கான தமது சேவையினை தருகிறார்கள் என்பதை பலர் புரிய தவறிவிடுகின்றனர்.
மாகாண சபைத்தேரத்லுக்காக தமது வேட்பாளர்களை தேடும் படலத்தில் கட்சிகள் எவ்வாறு செயற்ப்பட்டிருந்தன என்பது தமிழ் மக்களுக்கு தெரியாத ஒன்று என கட்சிகள் நினைத்துவிடக் கூடாது அவை புரட்சிகர அமைப்பின் கட்டமைப்புகளாக இருந்திருக்கவில்லை என்பதற்க்கு இது ஒரு நல்ல உதாரணமாகும்.

சாதாரண சமூக அமைப்புகளின் சாதாரண மிதவாத கட்சிகளின் பண்புகளுடன் அமைப்புக்கள் கூட்டமைப்புக்களிடையே ஏற்ப்படும் சரிகள், பிழைகள், தவறுகளை புரிந்து விமர்சித்து விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்காக இயங்கும் மக்கள் அமைப்புக்களாக இயங்குவதே தமிழ் மக்களின் எதிர்பாரப்பாகும்.

பொது சேவை என்று வரும்போது கோபப்படாமல், ஆத்திரப்படாமல் மக்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு சாதாரணமாவர்களாக சாதாராணமான கருத்துக்கள் செயற்ப்பாடுகளுடன் இயங்க பழகுங்கள்.

த சோதிலிங்கம்.


ஈபிஆர்எல்எப் பதவியேற்ப்பு வைபவத்தை பகிஸ்கரித்தும் எதிராக அறிக்கைகள் வெளியிட்டிருந்தது போன்றே புளொட்டும் தாம் பதவியேற்ப்பு வைபவத்தை பகிஸ்கரித்தாகவும் ஆனால் தொடர்ந்து மாகாண சபைக்கு தமது அதரவு வழங்குவதாகவும் பின்னர் அறிவித்திருக்கின்றது.

புளொட்டின் இந்த அறிக்ககை தமக்கு வாக்கு அளித்த மக்களை புறக்கணித்த செயலாகவே பார்க்கப்படும்.

No comments:

Post a Comment