Search This Blog

Tuesday, 20 May 2014

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அமைச்சரவை தெரிவுகள் வரவேற்கப்படுகின்றன- த சோதிலிங்கம்.

 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அமைச்சரவை தெரிவுகள் வரவேற்கப்படுகின்றன- த சோதிலிங்கம்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் நடைபெறும் குத்து வெட்டுக்கள் என்ற நிலைமைளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் குறிப்பாக அமைச்சரவையில் தெரிவு செய்ப்பட்டவர்கள் சம்பந்தமான முடிவுகளில் தமிழரசுக்கட்சியினர் இதர அமைப்பினரை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு ஜனநாயகமற்றது என்ற வாதப்பிரதிவாதம் முன்னிற்கின்றபோதிலும் தமிழரசுவினால் தெரிவு செய்ப்பட்ட வர்கள் பற்றியும்... தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளினால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டடியல் தெரிவு செய்யப்படாமல் போனதும் பற்றியும் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் கோபத்தினை வெளிக்காட்டுவதை நிறுத்த வேண்டும் இது மேலும் வளருவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழரசுக்கட்சியினர் தமது விருப்ப்படி தெரிவு செய்யப்பட்டாலும் மக்களால் தெரிவு செய்டப்பட்ட உறுப்பினர்களில் சரியாக பதவிக்கு சரியானவர்களையே தெரிவு செய்ப்பட்டுள்ளனர் என்ற கருத்து மக்களிடம் பலமாக இருப்பதை உணர வேண்டும் தமிழரசுக்கட்சியின்ர் ஜனநாயக மரபினை பின்பற்றவில்லை என்ற வாத்ததை தமிழரசுக்கடசியினுள் செய்வது வரவேற்கதக்கது.

பொருத்தமானவர்கள் தராதரங்களில் சிறந்தவர்கள் என்பதில் தமிழரசுவின் தெரிவு சரியானதாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது. ஒட்டு மொத்த வாக்களிப்பில் தமிழரசு இதர தமிழ் கட்சிகளைவிட அதிக்ப்படியான வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றிருந்ததையும் பொதுவான இணைத்துப் பாரக்க வேண்டியுள்ளது.

இன்று தமிழ் மக்கள் யார் அமைச்சு பெற்றார்கள் என்பதைவிட அடுத்து தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதையே எதிர்பார்த்து இருக்கிறார்களே தவிர் அமைச்சு பதவிக்கான போட்டிகளின் கோபங்களை அல்ல என்பதை நினைவு படுத்த வேண்டியுள்ளது.

தமிழரசுவினால் மேற்கொள்ப்பட்ட ஜனநாயக மீறல்களை  முதலில் கூட்டமைப்புக்குள் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும் இது எதிரிகள் துரோகிகள் போன்று கருத்து வெளியிடுவதை தவிர்த்து மக்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே இங்குள்ள கேள்வி யாகும்.

தேசிய கூட்டமைப்புக்குள் சில கட்சிகளினாலும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்காளாலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுக்கக் கூடாது என்ற கருத்தை பலமாக முன்வைத்த போதிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் திரு சம்பந்தனும் அவற்றை மீறி செயற்ப்பட்டமையும் ஒரு ஜனநாயக சிக்கல்ளை உருவாக்கியுள்ளது என சிலர் கருத்து கொள்கிறார்கள்.

வடமாகாண சபை தொடர்ந்து இயங்குவதற்க்கும் அடுத்த கட்ட நகர்வுகள் என்ற இயக்கத்துக்கும் ஜனாதிபதியின் முன்னர் சத்தியப்பிரமாணம் செய்தது சரியானதே என்பது பலரின் அபிப்பிராயமாக இருக்கின்றது ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் இவற்றிக்கு எதிராக குரல் எழுப்பட்டதும் சரியானதே.

இன்றுள்ள இலங்கையின் அரசியல் நிலைமையில் ஓர்முடிவும் இறுக்கமான தெரிவும் என்பதை விட இரண்டுபட்ட தெரிவும் இரண்டு பட்டு இணைந்த இயக்கமும் தேவையாக இருக்கின்றதை தமிழ் மக்கள் கடந்த வடமாகாண சபைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு துலாம்பராமாக தெரிவித்துள்ளனர்.

அபிவிருத்தி மீள் கட்டுமாணத்திற்க்கு அரசையும் ஈபிடிபியையும் அரசியல் உரிமைப்போருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.

இன்று தமிழரசின் அமைச்சர்கள் தெரிவும் - ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ப்பட்டதையும் சரியான தெரிவாகவே பலராலும் பார்க்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment