101. T Sothilingam
நன்றி அழகி
விடுதலைப்புலிகள்
போராட்டத்தை தமது புலம் பெயர்நாடுகளில் வியாபாரம் செய்யும் விடயமாக்கி விட்டிருந்தனளர்
என்பதே மிகவும் முக்கியம். இதன் அடிப்படையிலேயே தான் இந்த நீங்கள் அத்தனை விடயங்களும்
நடைபெற்றது உதாரணமாக ரேடியோ இவர்களில் பலரின் இரண்டாவது உழைப்பாகவே இருந்தது.
அடீப்படையில்
போராட்டம் ஒரு இராணுவ வெற்றியாகவே பார்க்கப்பட்டது நல்ல உதாரணம் புலிகளின் ஆதவாளர்
ஒருவர் ரதன் ரகு இதனை ஒப்புக்கொண்டு பல பின்னூட்டங்கள் தேசம் நெற்றில் விட்டிருந்தனர்.
போராட்டம்
என்பது என்று தோற்கடிக்க முடியாதது என்பது பலருக்கு இன்று வரையில் தெரியாது.
போராட்டமானது
வாழ்விற்கானது. அது மற்றவர்களை அழிப்பதற்காக அல்ல என்பதையும் தோழர் துரை பின்னூட்டத்தில்
எழுதியது போல மிருகங்களைக் கூட பழக்கி மனிதன் சாதாரண வாழ்க்கைக்கு உதவி பெற கற்றுக்கொண்ட
மனிதன், எப்படி அந்த மிருகத்துக்கு மதிப்பளித்து வாழ்கிறான் என்பதை நாளாந்த வாழ்விலிருந்து
கற்றுக் கொள்ளவில்லை. இப்படி இருக்க மற்று மொரு மொழி பேசும் சிங்கள மக்களுக்கு எமது
உரிமையின் அவசியத்தை உணர்த்த முடியாது போயினர் அலலது மற்றவர் இவற்றை செய்யவும் விடாது
போயினர். இது இன்று வரை போராடிய இனத்துக்கு விளங்கவில்லை.
இன்று வரையில்
அரசின் உதவியிலேயே எமது தமிழர்கள் வன்னியிலும் வாழ்ந்து வந்தனர். ஏன் இந்த நிலை தொடர்ந்தும்
இருந்தது. புலிகள் சொன்னது போல் முழுதாக நாட்டை பிரிப்பது என்றால் சொந்த அபிவிருத்தி-
இலங்கை அரசிடம் கை ஏந்தாத பொருளாதாரத்தை -கட்டியெழுப்பியிருக்க வேண்டும். வெளிநாடுகளில்
சேர்க்கப்பட்ட பணங்கள் எப்படி செலவு செய்ப்பட்டது என்பதை புலிகளின் கடைசிக்காலத்தில்
நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது.
எமது போராட்டத்தின்
முக்கிய அம்சம் தொடர்ந்து ஆட்சிக்குவருபவர்கள் எமக்குரிய உரிமைகளை அல்லது அதிகாரத்தை
பகிரவில்லை என்பதிற்கு பதிலாக சிங்கள மக்களை எமது எதிரியாக்கியது புலிகளே!
எமது போராட்டத்திற்கு
முக்கியமாக ஆதரவளித்து எமது அதிகாரப் பரவாலாக்கத்தை வெற்றி பெற சிங்கள மக்களே உதவியிருக்க
முடியும். அதற்கான பல சந்தர்ப்பங்களை சிங்கள புத்திஜீவிகள் பல தடவைகள் தெரியப்படுத்தி
இருந்தனர். அந்த நேரங்களில் எல்லாம் புலிகள் தற்கொலைக் குண்டுகளையே அனுப்பியிருந்தனர்.
எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும்.
ஏன் மிகசுருக்கமாக
சொன்னால் எத்தனை ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் கோட்டை விட்டது புலிகள் தமிழர்களை கோட்டை
விடப்பண்ணியது புலிகள்.
முன்னாள்
ஜளாதிபதி சந்திரிகா காலத்தில் தெரிவிக்கப்பட்ட உடன்படிக்கை (நீலன் திருச்செல்வத்தினால்
தயாரிக்கப்பட்டது) அந்த ஒப்பந்தத்தை ஏன் புலிகள் அரசுடன் பேசிப் பார்த்தால் என கருத்து
தெரிவித்த மட்டக்களப்பு பேராசிரியர் இழுத்து செல்ப்பட்டு அடித்து முறிக்கப்பட்டார்
(தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளார்).
புலிகள்,
புலிகள் அமைப்பு, புலிகள் ஆதவாளர்கள், புலிகள் ஏஜென்டுக்கள், புலிகளின் ஆதரவு ஊடகங்கள்
என்பன இதர தமிழ் அமைப்புக்களை அழித்தனர்- புலி தளபதிகள் இதர தமிழ் போராளிகளை ரயர்போட்டு
கொழுத்தி தமிழ்மக்களை கொலைப்பயமுறுத்தலில் போராட்டத்தை நடாத்தி அழித்தனர். இதுவே
தமிழ் ஒற்றுமை சீர்குலைப்பின் உச்சக்கட்டம் (சுந்தரத்தில் ஆரம்பித்து) எத்தனையோ அரசியல்
சந்தர்ப்பங்களை தமது சுகபோகங்களுக்காக பேச்சுக்களை குழப்பினர்.
புலிகள்
தமிழ் போராட்டத்தை தமிழர்களுக்காக, மக்களுக்காக நடாத்தவில்லை. தமது சுகபோகங்களுக்காகவே
நடாத்தினர். இன்று புலிகளின் அழிவிலும் வெளிநாட்டு புலிகளின் அமைப்பினர் என்ன செய்கிறார்கள்.
தமது கடந்தகாலம் சம்பந்தமாக, தவறுகள் சம்பந்தமாக என்ன வெளியிட்டனர். இன்று இவர்களது
பிரச்சினைகள் எல்லாம் சேர்க்கப்பட்ட சொத்துக்களே மக்களின் உரிமைப் போரட்டமல்ல.
புலிகள்
போராட்டத்தை அதன் அர்த்தம் புரியாமலே மக்களின் நலனிலிருந்து சிந்திக்காமலே புலிகள்
போராட்டத்தை காட்டிக் கொடுத்து விட்னர்.
புலிக்கொடி
புலிச்சினனம் புலிகள் அமைப்பு உள்ளவரை இத்தனை தவறுகள் துரோகங்களுக்குமான பொறுப்பிலிருந்து
தப்பிவிட முடியாது.
இவ்வளவுக்கு
ஒற்றுமையை குலைத்த புலிகளின் போராட்டத்தினுள்ளும் கடந்த 30 வருட தமிழர் போராட்டத்தில்
புலிப்போராளிகளின் அர்ப்பணிப்பு தமிழர் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் வரலாற்றையும்
எழுதியுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment