May 13
மக்களுக்காக
நாம் மீண்டும் இணைவோம், முரண்பாடுகளை விட உடன்பாடுகளை சிங்கள மக்களுடனும், இந்தியாவுடனும்,
இந்திய பிராந்திய மக்களுடனும் எட்ட முயல்வோம், இந்திய பிராந்திய உணர்வை பலப்படுத்துவோம்.
– சோதிலிங்கம் ரி
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப்
புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் சோதிலிங்கம்
ஆற்றிய உரை.
அமரர் சிறீசபா, ரெலோவின் கிழக்கு மாகாணத்தோழர்கள் மற்றும்
புலிகளால் கொல்லப்பட்ட பல முன்னாள் போராளிகளுக்கும் எனது அஞ்சலிகளை தெரிவித்துக்
கொள்கிறேன். ஈழப்போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அளித்த அனைத்து அமைப்பு போராளிகள்
பொது மக்கள் அனைவருக்கும் எனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அமரர் சிறீசபா ஜேர்மன் “எண்ணம்” பத்திரிகைக்கு அளித்த
பேட்டியில் தமிழ் தேசிய விடுதலை என்பது இந்திய பாதுகாப்புடனும் இந்திய நலத்துடனும்
பின்னிப்பிணைந்துள்ளது என்ற கருத்தை முன்வைத்திருந்தார். அத்துடன் இந்திய நலன் என்ற
பதத்தை தவறாக நாம் விளங்கிக் கொள்வோமானால் அல்லது இது இந்தியாவிற்கு பின்னால் நிற்பதாக
தவறாக விளங்கிக் கொள்வோமானால் நாம் எமது போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்கு போராட
வேண்டியிருக்கும் அல்லது போராட்டத்தை பாழடிக்க வேண்டியிருக்கும் என்ற கருத்துப்பட
கூறியிருந்தார். இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது அவரிடமிருந்து கிடைத்த பதில் – இந்தியா
தனது பாதுகாப்புக்கு பல கோடி ரூபாய்களை செலவிடுகிறது எமது தமிழர்கள் இலங்கை இந்திய
ஆதரவாக இந்தியாவிற்கு ஆபத்தில்லாத நாடாக இருக்கும் என்ற உத்தரவாதம் இந்தியாவுக்கு இருக்குமாயின்
இந்தியா அந்தப்பணத்தை இலங்கையின் அபிவிருத்திக்கு உதவமுடியும். இந்த கருத்தை சிலவேளை
சிறீசபா இந்திய அரசின் உறுப்பினர்களிடமிருந்து விளங்கிக் கொண்டிருக்கலாம், அதுவே ஒரு
யதார்தமாக இன்று எம்முன்னால் நிற்கிறது!
இந்த யதார்த்தத்தை அன்று சிறீசபா புரிந்து கொண்டும் மிக
குறுகிய காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு வழிவகைகளை காணும் வழியாக முன்வைத்திருந்தார்
ஆனால் புலிகள் இதை மிகவும் தவறாக புரிந்து கொள்ளவில்லை. இது தான் நடக்கும் என்பதை
அன்றே புரிந்து கொண்டும் தமது கைகளில் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் மக்களின் கைகளில்
அல்ல என்பதையே அக்கறையாக கொண்டு செயற்பட்டவாகள் என்பதை அவாகளின் பிற்கால செயற்பாடுகள்
நிரூபித்தது. மாநில ஆட்சியில் தாம் மட்டுமே ஆளவேண்டும் எனக் கேட்டது இதற்கொரு நல்ல
உதாரணமாகும்.
“இந்திய உளவாளி சிறிசபாவையும் இந்திய கூலிப்படை ரெலோவையும்” அடைக்கலம் கொடுத்து
வைத்திருப்பவர்களுக்கும் மரணதண்டனை என்ற யாழ் வீதியெங்கும் ஒலிபெருக்கியில் அறிவித்தது
புலிகளின் அரசியல் வறுமை மட்டுமல்ல, புலிகளின் இந்திய பிராந்திய எதிர்ப்பு கோசம் மட்டுமல்ல,
இந்திய எதிர் கோசம் மட்டுமல்ல, பாசிசத்தின் நடவடிக்கையும் புலிகளின் தலைவரின் பதவி
வெறியுமாகும்.
இந்திய உளவாளி சிறிசபாவையும் இந்திய கூலிப்படை ரெலோவையும்
அடைக்கலம் கொடுத்து வைத்திருப்பவர்களுக்கும் மரணதண்டனை என்ற யாழ் வீதியெங்கும் ஒலிபெருக்கியில்
அறிவித்திருந்தது போராட்டத்தை தவறான பாதைக்கு இட்டு போவதற்கும், தமிழர்களுக்கு ஒன்றுமே
கிடைக்காது செய்வோம் என்பதன் அறைகூவலாகவே இன்று உண்மையை வெளிப்படுத்துகின்றது. தமிழர்க்கு
தமழிழம் மட்டுமல்ல எந்த உரிமையும் கிடையாது என்று அறைந்து கூறிய நாள் இது!
போராட்ட ஆரம்பகாலங்களில் புலிகளின் நடவடிக்கைகளால் ஏற்படவிருக்கும்
தவறுகள் பற்றி முன்னாள் புலி உறுப்பினர் பின்னர் ரெலோவின் அரசியல் ஆலோசகர் மனோ மாஸ்டர்
இதை திட்டவட்டமாக கூறியிருந்தார் இந்த கூற்றுக்காகவே மானோ மாஸ்டரும் புலிகளால் கொல்லப்பட்டிருந்தார்.
இந்திய ஆதரவுத்தளத்திலிருந்தே போராட்ட நடவடிக்கைகளை நகர்த்த
வேண்டும் என்பதில் இருந்த அக்கறையே ரெலோவின் ஆரம்ப கர்த்தாவான தங்கத்துரை ஆரம்பகாலங்களில்
கூறிய மக்களுக்காக நாம் இணைவோம் என்ற கருத்துடனும், மனோ மாஸ்டரின் முன்னெடுப்பில்
இன்று இந்த சபையில் இருக்கும் சுதனின் திடமான செயற்பாட்டுடனும், ஈழதேசிய முன்னணியை
கட்டியெழுப்ப முதன் முதலாக ஈபிஆர்எல்எப் டன் ரெலோ பேச்சசுக்களை ஆரம்பித்திருந்தது.
இதன்பின்னர் ஈபிஆர்எல்எப் ரெலோ உறவுகளிலிருந்து ஈஎன்எல்எப் உருவாகியிருந்தது. இந்த
கூட்டு முன்னணியை கூட அழித்தவர்கள் புலிகள். புலிகள் தமிழ் மக்களின் நலன்களைவிட வேறு
ஏதோ விடயத்தில் அக்கறையுடன் இருந்தவர்கள் என்றே புலப்படுகின்றது இதற்கு நல்ல உதாரணங்களாக
புலிகளால் தூக்கியெறியப்பட்ட நீலன் -கேதீஸ் போன்றவர்களின் முன்னெடுப்பால் உருவான உடன்படிக்கையை
கூறலாம், புலிகளால்அவர்கள் மீது நடாத்தப்பட்ட கொலைகளைக் கூறலாம்
புலிகள் ரெலோவின் அழிப்பிலிருந்து இன்று வரையிலான நடவடிக்கைகளை
பார்ப்போமானால் புலிகள் மக்கள் விரோதியாகவே செயற்பட்டிருக்கிறார்கள் எம்மால் மறுக்க
முடியாது 30 வருடங்களில் புலிகளால் நடாத்தப்பட்ட பல நடவடிக்கைகளை இதற்கு நல்ல சான்றுகளாக
உள்ளன. இதில் மாற்று இயக்க அழிப்பை தனது புலிகள் இயக்கத்தின் கொள்கையாக கொண்டிருந்தவர்
அமரர் பிரபாகரனாகும். இதை இன்று புலிகளின் அன்றைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களில்
எழுத்துக்களில் வெளிப்படுத்துகிறார்கள், இதில் மிகவும் முக்கியமானதாக இன்றும் கிழக்கு
மாகாணத்தவர்களால் குறிப்பிடப்படுவது கிழக்கு போராளிகளை குறிவைத்து கொலை செய்யப்பட்டது
என்பதாகும். இது ரெலோவின் தாக்குதலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத் தெருக்களில்
பலவிடங்களில் உயிருடன் கழுத்தில் டயர் போட்டு எரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர்
கிழக்கு மாகாணத்தவர்களாகும்.
இதில் வெட்கத்துக்குரிய விடயம் ரெலோவினர்- 25 வருடமாக
தமது அரசியல் நடவடிக்கைகளில் இருக்கும் ரெலோவினர்- இன்று வரையில் புலிகளால் கொல்லப்பட்ட
தமது ரெலோ போராளிகளின் பெயர் விபரப் பட்டியலை வெளிப்படுத்தவில்லை என்பதாகும். இங்கே
யாருக்கு, யாருடைய நலனுக்கு அரசியல் செய்கிறார்கள் என்ற கேள்ளி எழுகின்றது. ..25 வருடமாக
!!
புலிகளின் ரெலோவின் அழிப்பானது புலிகளின் அழிவுக்கு வித்திட்டது
மட்டுமல்லாமல், இதர இயகத்தவர்களையும் இயங்கும் வல்லமையை, தமிழர் போராட்டத்தில் தமிழர்க்கு
இருந்திருந்த நம்பிக்கையை, சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் எமது போராட்டம் மீதிருந்த
அக்கறையை இல்லாமல் செய்து, போராட்டத்தை சுக்கு நூறாக்கியிருந்தது, இதைவிட தொடர்ந்து
தமிழர்க்கிடையே நடைபெற்ற தமிழர்களை அழிக்க பாவிக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தமிழர்களின்
போராட்டம் யாருக்கு என்றாகியிருந்தது
இதில் தோழர் டக்ளஸ் என்ற அடுத்த தமிழன் மீதான தற்கொலைத்
தாக்குதல்கள் மட்டும் 7 தடவைகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை இத்துடன் நின்றுவிடாமல்
இதர இனங்கள் மீதான தாக்குதல்கள், இந்திய தலைவர் மீதான தாக்குதல்கள் எனத் தொடர்ந்த
கொலைகள், இலங்கை அரசுக்கு இவர்களை கையாள இலகுவான வழிவகைகளை இவர்களே ஏற்படுத்தி கொடுத்தது.
இது ஈற்றில் ஈழப்போராட்டம் என்பது பயங்கரவாதப் போராட்டம் என்ற பெயரைப் பெற்று இறுதியில்
உதவி கேட்ட போதும் கிடைக்காமல் தமிழர்களின் உரிமை போராட்ட மைக்கல் ஒன்று தகர்ந்து
போனது.
ஆனால் இந்த தவறுகளிலிருந்து நாம் பெற்ற பாடங்கள் என்ன?
இன்று வரையில் எமது போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி மீளாய்வு இல்லாமல் புலிகளின்
பாணியிலான அதே போராட்டத்தை அவர்களின் பெயர்களை மீளவும் சொல்லி புலம்பெயர்நாட்டில்
ஒரு வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இரத்தம் தோய்ந்த பாதைதவறிய இனக்குரோதம்
கொலைகளின் நாயகமாய் திகழும் புலிக்கொடியை முன்வைத்து மீண்டும் ஒரு தவறான பாதையை தெரிவு
செய்கிறார்கள். இதில் முக்கியமானவர்கள் பிரிஎப், ஜிரிஎப், மற்றும் நாடுகடந்த தமிழீழத்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புலிக்கொடி உள்ளவரை இந்த இயக்க மோதல்கள் கொலைகள்
மீளவும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும். இவை திரும்ப திரும்ப தமிழர்களின் ஜக்கியத்தை
குலைத்துக் கொண்டே இருக்கும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத கருத்து. கடந்த கால
தமது தவறுகளுக்கு விமர்சனங்கள் இல்லாது பழையதை மறப்போம், புதிதாய் தொடங்குவோம்,விர்சனங்கள்
தேவையில்லை என்று கொலையாளியே மீளவும் வருவது மிகவும் நகைப்புக்குரியதாகும். புலிகளால்
கொல்லப்பட்ட போராளிகளையும் புலிகளின் போராளிகளையும் இணைத்து பொது நினைவு தினம்
என்ற நகைப்புக்குரிய நடவடிக்கைகளை தற்போது சிலர் லண்டனில் உருவாக்க முனைகிறார்கள்.
இங்கும் இவர்கள் மீண்டும் கொலையாளிகளை முதன்மைப்படுத்தியும் கொலை செய்ப்பட்டவர்களை
துரோகிகளாக்கியுமே ஆரம்பிக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் பங்கு கொண்ட
அத்தனைபேரும் சமமாக கருதப்பட வேண்டும். இவர்களை அழித்த தாமே போட்டத்தின் குத்தகைக்கார்கள்
என்று ஆரம்பித்து தமிழ்மக்களின் 30 வருட வரலாற்று வாழ்வை சீரழித்தவர்களை- தமிழ் மக்களின்
அரசியலில் ஒரு துளி கூட அசைக்காது போனவர்களை விமர்சிக்காமல்- தவறுகளை ஏற்றுக் கொள்ளாமல்
-அவர்களையும் அவர்களால் கொல்லப்பட்டவர்களையும் எப்படி இணைத்து நினைவுதினம் செய்யமுடியும்?.
இதைவிட புலிகள், புலிகளுக்கு என ஒருநாளை நினைவு தினமாக வைத்திருக்க மற்றவர்களையும்
இணைத்து ஒரு பொதுவான தினம் என்ற வார்த்தையில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என
பலர் சந்தேகிக்கின்றனர். இது மீண்டும் பாசிசத்தை புரிந்தவர்கள் சரியானவர்கள் என்றும்
பாசிசத்தால் கொல்லப்பட்டவர்கள் துரோகிகள் என்று வரலாற்றில் எழுதிடவே இந்த முயற்சி
என்று சந்தேகப்படுகிறார்கள்
நண்பர்களே! தோழர்களே!
கடந்த காலங்களில் புலிகளால் கொல்லப்பட்ட ஒவ்வொரு இயக்க போராளியும் ரெலி ஜெகன் தொடக்கம் ரெலா ஒபரேய் தேவன் வரைக்கும் அவர்களது உணர்வு பூர்வமான பங்களிப்புக்களை மிகத்தெளிவாக குறிப்பிட்டும், தோழர் கேதீஸ்வரன் றொபேட் சுபத்திரன் போன்ற மனித மாண்புமிகு சேவையாளர்களின் பங்களிப்புக்களை தெளிவாக குறிப்பிட்டும் மக்களை நேசித்த தோழர் உமா மகேஸ்வரன் சந்ததியார் போன்றோரின் மிகச்சரியான குறிப்புடனும் ஒரு பொதுவான தினம் அனுஸ்டிக்க தயார்படுத்தப்படல் வேண்டும் என்பதை இதை இந்த தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த காலங்களில் புலிகளால் கொல்லப்பட்ட ஒவ்வொரு இயக்க போராளியும் ரெலி ஜெகன் தொடக்கம் ரெலா ஒபரேய் தேவன் வரைக்கும் அவர்களது உணர்வு பூர்வமான பங்களிப்புக்களை மிகத்தெளிவாக குறிப்பிட்டும், தோழர் கேதீஸ்வரன் றொபேட் சுபத்திரன் போன்ற மனித மாண்புமிகு சேவையாளர்களின் பங்களிப்புக்களை தெளிவாக குறிப்பிட்டும் மக்களை நேசித்த தோழர் உமா மகேஸ்வரன் சந்ததியார் போன்றோரின் மிகச்சரியான குறிப்புடனும் ஒரு பொதுவான தினம் அனுஸ்டிக்க தயார்படுத்தப்படல் வேண்டும் என்பதை இதை இந்த தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அன்று ரெலோ அழிப்பில், ஈபிஆர்எல்எப் அழிப்பில், ரெலா
அழிப்பில், வெருகலில் மக்கள் புலிகளின் அழிப்பில், மாத்தையா படைப்பிரிவின் அழிப்பில்,
நேரடியாக ஈடுபட்ட பலர் இன்றுள்ள் பிரிஎப், ஜிரிஎப், நாடுகடந்த அரசு போன்ற பல அமைப்புக்களிலும்
அங்கம் வகிப்பதுடன் இன்றும் மேற்குறிப்பிட்ட கொலைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்
இவர்கள் மீண்டும் ஒரு பாசிச அமைப்பையே உருவாக்கி இருக்கிறார்கள். அன்று இருந்த அமைப்புக்களின்
அதே பிரதியையே உருவாக்கி இன்றும் அதே மனப்பான்மையடன் இயங்குகிறார்கள் என்பது நாம் ஒவ்வொருவரும்
கவனிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
மேற்குறிப்பிட்ட கொலைகளும் அரசியல் வறுமையும் மனித நேயமற்ற
போராட்டமும் மக்களின் எந்த தீர்வையும் தராத தீர்வுக்கான எந்த ஒரு அடிப்படையும் உருவாக்காது
வெறுமனே போராட்டம் நடாத்தினோம் என்ற வெறுமையுடன் மக்களில் பலரை பலிவாங்கி போராட்ட
குணாம்சத்தை துவம்சம் செய்து சென்றுவிட்டது. சர்வதேச நிலைமைகள் என்ன பிராந்திய நிலைமைகள்
என்ன இலங்கையில் சிங்கள மக்களின் அபிவிருத்தி மாற்றங்கள் என்ன என்பதையோ எமது மக்களின்
உள் அக நிலைமைகள் என்ன என்றோ சிந்திக்காத ஒரு நாடகத்தை நடாத்திவிட்டு போயுள்ளது.
அதைவிட தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கான அடுத்த
நகர்விற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்துவிட்டும் போயுள்ளது.
நண்பர்களே! தோழர்களே!
புலிகள் தவிர்ந்த நாம் இன்று எமது போராட்டத்தின் வரலாற்றுக் காலத்தை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம், எமது வரலாற்று பாதையில் நாம் முரண்பாடுகளையே உருவாக்கியும் முரண்பாடுகள் ஒன்றையே முன்வைத்து அதற்கான பரிகாரங்கள் என்று இயங்கியுள்ளோம்.
புலிகள் தவிர்ந்த நாம் இன்று எமது போராட்டத்தின் வரலாற்றுக் காலத்தை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம், எமது வரலாற்று பாதையில் நாம் முரண்பாடுகளையே உருவாக்கியும் முரண்பாடுகள் ஒன்றையே முன்வைத்து அதற்கான பரிகாரங்கள் என்று இயங்கியுள்ளோம்.
இப்படியான முரண்பாட்டை
முன்வைத்து இலங்கை அரசுடன் மட்டும் எமது போராட்டங்களை செய்திருந்தால் அது பரவாயில்லை,
ஆனால் முரண்பாடுகளை எமது சகோதரங்கள் சகோதர அமைப்புக்கள் எமது போராட்ட ஆதரவு சக்திகள்
சகோதர இஸ்லாமிய மக்கள் இரத்தத்தால் கலாச்சாரத்தால் ஒன்றான சிங்கள மக்களிடம் சிங்கள
அப்பாவி மக்களிடம் இப்படி எல்லா இடங்களிலும் முரண்பாடுகளையே முன்வைத்தும் அதையே போராட்டம்
என்று தமிழ் மக்களுக்கு கற்பித்தும் போராட்டம் நடைபெற்றுள்ளது, முரண்பாடுகளே எமது
போராட்டத்தை வழிநடாத்திச் சென்றுள்ளது. முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளையும் புரிந்து
கொள்வதில் புலிகள் தவறுகளை செய்துள்ளனர்.எமது போராட்டம் முரண்பாடுகளை மட்டும் முன்வைத்து
தவறாக செயல்பட்டு அதுவே எம்மை முள்ளிவாய்க்காலில் வீழ்த்தியுள்ளது.
நண்பர்களே! தோழர்களே!
சிங்கள மக்களிடம் முரண்பாடு தமிழர்களிடையே முரண்பாடு முஸ்லிம் மக்களிடம் முரண்பாடு இந்தியாவிடம் முரண்பாடு தலைவர் அமிர்தலிங்கத்துடன் முரண்பாடு என்று எமது கடந்த வரலாற்றினை மிகவும் சரியாக ஆராய வேண்டியுள்ளது. புலிகளின் அமைப்பிலிருந்து உதித்த பிரிஎப், ஜிரிஎப், நாடுகடந்த அரசு போன்றவர்களும் முரண்பாடுகளையே இன்றும் வளர்க்கிறார்கள் முரண்பாடுகளையே முதன்மைப் படுத்துகிறார்கள், முரண்பாடுகளையே போதிக்கிறார்கள், முரண்பாடுகளையே இலங்கைக்குள் ஏற்றுமதி செய்ய முன்னிக்கிறார்கள் என்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இப்படியான முரண்பாடுகளையே முன்வைத்து காலம் கடத்திய காலத்தில் எமது போராட்டத்திற்கான ஆதரவு ஓரளவேனும் இருந்துள்ளது ஆனால் இன்றுள்ள எமது போராட்ட ஆதரவு எமது உள் நிலைமைகளில் மிகவும் மோசமாகவே உள்ளது. அதைவிட சர்வதே இந்திய பிராந்திய நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் உருவாகியுள்ளது.
சிங்கள மக்களிடம் முரண்பாடு தமிழர்களிடையே முரண்பாடு முஸ்லிம் மக்களிடம் முரண்பாடு இந்தியாவிடம் முரண்பாடு தலைவர் அமிர்தலிங்கத்துடன் முரண்பாடு என்று எமது கடந்த வரலாற்றினை மிகவும் சரியாக ஆராய வேண்டியுள்ளது. புலிகளின் அமைப்பிலிருந்து உதித்த பிரிஎப், ஜிரிஎப், நாடுகடந்த அரசு போன்றவர்களும் முரண்பாடுகளையே இன்றும் வளர்க்கிறார்கள் முரண்பாடுகளையே முதன்மைப் படுத்துகிறார்கள், முரண்பாடுகளையே போதிக்கிறார்கள், முரண்பாடுகளையே இலங்கைக்குள் ஏற்றுமதி செய்ய முன்னிக்கிறார்கள் என்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இப்படியான முரண்பாடுகளையே முன்வைத்து காலம் கடத்திய காலத்தில் எமது போராட்டத்திற்கான ஆதரவு ஓரளவேனும் இருந்துள்ளது ஆனால் இன்றுள்ள எமது போராட்ட ஆதரவு எமது உள் நிலைமைகளில் மிகவும் மோசமாகவே உள்ளது. அதைவிட சர்வதே இந்திய பிராந்திய நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் உருவாகியுள்ளது.
நண்பர்களே! தோழர்களே!
இனிமேலும் நாம் முரண்பாடுகளை பற்றி மிகவும் சரியான புரிதல் சரியாக மக்களுக்கு புரியும்படி
முன்வைத்தல் முரண்பாடுகளை விட உடன்பாடுகளை ஏற்படுத்தல் போன்றவற்றிலேயே அக்கறைகாட்ட
வேண்டும். இதில் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் இஸ்லாமிய மக்களுடன் உள்ள தொடர்புகள்
பற்றி வெளிப்படையாக ஆராயப்படல் வேண்டும். சகோதர சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும்
உள்ள கலாச்சார உறவுகள் பற்றி வெளிப்படையாக உடன்படல் வேண்டும்
எவ்வாறு பெரும்பான்மை சிங்கள மக்கள் எமது இந்திய தமிழ்
கலாச்சார பண்புகளை உள்வாங்கிக்கொண்டு வாழ்கிறார்களோ அதே போன்று நாமும் இலங்கையில்
அவர்களது பெளத்த கலாச்சார பண்புகளை உள்வாங்கி வாழப் பழகிடல் வேண்டும் எமது பிராந்தியத்தின்
எமது இரத்த உறவுகளால், எமது தமிழர்களால், எழுதப்பட்ட பெளத்த தத்துவம், பெளத்த இலக்கியங்கள்,
பெளத்த கோட்பாடுகளை நாமே பார்த்து வெறுக்கும்படியாக யார் எம்முன்னால் எமக்கு தெரியாத
வடிவில் நின்று எம்மை முரண்பட வைக்கிறார்கள் என்பதை ஜயம் திரிபுற விளங்கிக்கொள்ள வேண்டும்
பெளத்த கலாச்சாரம் தமிழுக்கு புதியதல்ல பெளத்தத்திற்கு
நாம், தமிழ் மக்களே காப்பியங்களை வழங்கியுள்ளோம், பெளத்த கலாச்சாரங்கள் பெளத்த தத்துவங்களின்
பண்புகளை இன்று உலகம் ஏற்றுக்கொண்டது போன்று நாம் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். நான்
இங்கு பெளத்த மதத்தையோ அல்லது அதன் பெயரால் நடைபெறும் திட்டமிட்ட இனவாத நடவடிக்கைகளை
குறிப்பிடவில்லை அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவுமில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த இலங்கை வரலாற்றில் தமிழர்கள் தமது பிராந்தியத்துக்கு
சம்பந்தமில்லாத வேற்று கலாச்சாரங்களுடன் இணைவது பற்றி கொஞ்சம் கூட பேசாமல் இருந்து
கொண்டு ஒரே கலாச்சார பின்னணி கொண்ட சிங்கள மக்களுடன் இணைவு பற்றி பேசும் போது மட்டும்
இப்படியான கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்களை போராட்ட ஆரம்ப காலங்களில் குறியிட்டது
போன்று அரசின் ஆள், துரோகி என்று கூறிவிடுகின்றனர். எமது சிற்றறிவு முன்னால் உள்ள
உடனடிப் பிரச்சினையை மட்டுமே அத்துடன் நாம் மட்டுமே பிரச்சினைகளின் அடிப்படை என்றே
உணர்கிறது. இது தவறு எமது எதிர்காலப் பிரச்சினை என்ன, என்று சரியாக ஆராய மறுக்கிறது
அல்லது ஆராய எமது போராட்ட வரலாறு எமக்கு பயிற்சி அளிக்கவில்லை எனலாமா?
எமது மக்கள் புலம்பெயர்ந்து ஆங்கிலேய பிரஞ்சு ஜேர்மனிய
இப்படி பல்கலாச்சார பண்புகளை உள்வாங்கி தமது சிறப்பான வாழ்வுக்கான அடித்தளமாக்கும்
இவர்கள் இலங்கையில் சிலவேளை இவர்கள் இனிமேல் தாம் வாழப்போகாத இலங்கையில் தமிழ் சிங்கள
மக்களின் இந்து பெளத்த ஒன்றிணைந்த கலாச்சாரத்தின் ஜக்கியத்தை ஆவேசமாக எதிர்க்கிறார்கள்,
இலங்கையில், இந்திய பிராந்திய திராவிடர்களே தமிழர்களே சிங்கள மொழிக்கும் பெளத்தத்திற்கும்
வளர் நிலங்களாக இருந்த வரலாற்றை புரிந்து கொண்டு முரண் நிலைகளை தவிர்த்து வாழ, புதிய
பாணியிலான வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும்.
இவற்றுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவுவதன் மூலம் இலங்கையில்
தமிழர்கள் தமிழர்களாக மீண்டும் செழித்து வாழ்வார்கள் வரலாறு படைப்பார்கள் புலம்பெயர்
தமிழர்கள் உறுதுணையுடன் அவர்கள் மீண்டும் இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் படைப்பார்கள்.
இதைவிடுத்து இப்படியான புதிய பாணியிலான கருத்துக்களை அதன் ஆரம்பத்திலேயே கிள்ளிவிட
புலிகளின் ஆரம்பகால மாற்றுக்கருத்து சூழலை அழிக்கும்பாணியில் இவர்கள் இலங்கை அரசின்
உளவாளிகள் இலங்கை அரசுக்கே வேலை செய்கிறார்கள் என்று பட்டம் சூட்டும் நிலைமைகளை மீள
தமிழர்களின் வாழ்வை தவறான பாதையிலேயே இட்டுச் செல்லும்.
அன்று சிறீசபாவை இந்திய உளவாளி என்று கூறிய புலிகளின்
முன்னணி உறுப்பினர்கள் இன்றைய பிரிஎப், ஜிரிஎப், நாடுகடந்த தமிழீழத்தவர்கள் இன்று இந்திய
உதவி தேவை என்கிறார்கள். இந்திய உதவியின்றி இலங்கையில் தமிழர்கள் உரிமைப்பிரச்சினையில்
முன்னேற முடியாது என்கிறார்கள் ஆனால் இன்றுவரையில் சிறீசபாவை கொன்றது வரலாற்று தவறு
என்பதை உணர்கிறார்கள் இல்லை மாறாக இன்று நியாயப்படுத்துகிறார்கள், இந்தியாவுடன் ரெலோ
இணைந்து செயற்பட இருந்ததை துரோகம் என்றே கருதுகிறார்கள். இப்படியான கருத்து கொண்ட
அத்தனை அமைப்பினரும் இந்தியாவிடம் உதவிகள் பெற்றே இருந்தனர் என்பது முக்கியமானது. ஒருபக்கமாக
மட்டும் சிந்திக்கும் முறையை மாற்றி மறுபக்கமுள்ள நிலைமைகளையும் புரிந்து கொண்டு உள்நிலைமைகளையும்
இந்தியாவின், இலங்கையில் சிங்கள பெரும்பான்மை மக்களின், இந்திய பிராந்திய சர்வதேச பொருளாதார
நிலைமைகளுக்கு ஏற்ப சிந்தித்து செயற்படல் வேண்டும்.
இலங்கையில் சிங்கள மக்களும் எமது மக்கள், சிங்கள் மொழி
எமது மொழி, எமது வரலாற்றில் எமது மதமாக இருந்த பெளத்தம், எமது பிராந்தியத்தில் உருவான
எங்கள் மதம் என்ற யதார்த்தங்களை அங்கீகரிக்க வேண்டும்.
எமது போராட்ட வரலாற்றில் மரணித்த சிறீசபா மற்றும் முன்னாள்
ரெலோ போராளிகள் இதர போராளிகள் பொது மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அஞ்சலிகளை
செலுத்தி விடைபெற முன்..
மக்களுக்காக நாம் மீண்டும் இணைவோம். முரண்பாடுகளை விட
உடன்பாடுகளை சிங்கள மக்களுடனும் இந்தியாவுடனும் இந்திய பிராந்திய மக்களுடனும் எட்ட
முயல்வோம். இந்திய பிராந்திய உணர்வை பலப்படுத்துவோம்.
நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல!!
www.thesamnet.co.uk
No comments:
Post a Comment