Search This Blog

Saturday, 22 December 2018

கடிதம் 07, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

எழுச்சி, 03/12/2018
(கடிதம் 07, மாதம்12, கிழமை 01)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
தமிழ் சிங்கள மக்களின் ஜக்கியத்தை இலங்கை பேரினவாதிகளினால் சீர்குலைகப்பட்டும் தமது சுயகுடும்ப நலங்களுக்காக அரசியலையும் பாராளுமன்றத்தயைமும் பாவித்து
பாராளுமன்ற கதிரைகளுக்காக அரசியல் செய்தவர்களை அகற்றி விடுதலைப் போராட்டத்தை நாடத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மீட்பதே என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்ப கரத்தாவான தங்கத்துரை பிரகடனம் செய்தார்.
இனங்களிடையே தமிழ்ர்களிடையே உள்ள வேற்றுமைகள் முரண்பாடுகளை அகறறி தமிழ் மக்கள் என்ற புரித இன அடையாளங்களுடன் தமிழ் சமூகத்ததை வழிநடத்ததவே எமது இயக்கம் இயங்கு உள்ளது என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தி கொள்கைப் பிரகடனமாக பேச்சள விலாவது இருந்தது.
மேற்கூறிய விடயங்களுடன் தமிழீழ விடுதலை இயக்கம் இன்று எந்த அளவில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது அல்லத அதற்காக இயங்கியுள்ளது என்பது சந்தேகத்துக்குரியதே?
மேற்கூறியபேச்சளவிலான கொள்கைக்கு என்றே தாம் உயிரை அர்ப்பணித்து மரணித்த தோரழர்களும் அநியாயமாக்கப்பட்டு மீண்டும் தமிழீழ விடுதலை இயக்கம் ஒருசிலரின் தனிப்பட்ட சுயநலங்களுக்காகவும் தமிழ் மக்களின் நலன்களை மறந்த மிதவாத கட்சிகளின்இயங்குமுறையையில் இயங்குவது மிகவும் கேவலமானது என்பதை அறியத்தருகின்றோம்.
எந்த பாதகமான அரசியலை எதிரத்து ஆரம்பித்த ரெலோ இயக்கம் இன்று அதே பதாதக அரசியலை செய்வது தம்மை அர்ப்பணித்த தவலவர்கள் துங்கத்துரை மற்றும் தோழர்களுக்கு செய்யும் துரோகமாகவே இருக்கின்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக குறைந்த பட்சம் இயங்க முயற்சிக்க வேண்டும் அல்லது அந்த பாதையில் தம்மை ஈடுபட விரும் தோழர்களை புரிந்து அவர்களிடம் இயக்கத்தை நடாத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் மக்களுக்கும் மக்டகளுக்காக அரசியலுக்கும் இடையிலான பாலமாக இயங்க வேண்டு மே தவிர மக்களின் அதிகாரங்களளை பாவித்து பதவிகளைப் பெற்று ஒரு சில இயக்க உறுப்பினர்களின் சுயநலங்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் இயங்குவது இயக்கத்துக்ககாக தம்மைஅர்ப்பணித்தவர்கள்இயக்கத்துக்காக தம் உணிரை துற்ந்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும் என்பதை வெளிப்படுத்த விரும்புகின்றோம்.
எம்மால் குறிப்பிடப்படும் இந்த கருத்துக்கள் உங்களை கோபம் ஊட்டுவதாக அல்லது ஆத்திரத்தை ஏற்ப்படுத்துவதாக இருந்தால் நீங்கள்உண்மையில் மக்களுக்காக இயங்கவில்லை என்பதே யாகும். இக்கடித கருத்துக்களை புரிந்து கொண்டால் தமிழீழ விடுதலை இயகத்ததை மக்களுக்காக இயக்கமாக புனரமைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்காக எமது இளமைக்காலத்தையும் எமது உயிரையும் கொலைக் களத்தில் வைத்திருந்தமையும் எமது இளமைக்காலத்தை சிறைகளிலும் துன்பப்பட்டதையும் எமது சுகங்கள் உறவுகள் நண்பர்களளை பலி கொடுத்ததையும் பிரயோசனமாக தமிழீழ விடுதலைப்போராட்ட இயக்கத்துக்கு அர்ப்பணித்தவர்கள் என்ற பெருமை கொள்இயக்கமாக புனரமைக்க தங்கள் சிந்தனைகளை இயங்கு முறைகளை திருப்பும் படியும் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
சோதிலிங்கம்.
03/12/2018.


தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.co
m

No comments:

Post a Comment