Search This Blog

Saturday, 22 December 2018

கடிதம்06, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

எழுச்சி, 26/11/2018
(கடிதம்06, மாதம்11, கிழமை 04)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
அண்மையில் ரெலோவின் முதல் களப்பலியான தோழர் நிக்களசுவின் நினைவுதினம் கடந்து போனது நாம் அறிந்ததே , அந்த தோழர்களில் அர்ப்பணிப்பில் நிற்க்கும் ரெலோ இயக்கம் அந்த தோழன் பற்றிய அக்கறையாக வெளிப்படுத்தியது என்ன?
தோழர் நிக்களசுவுடன் நினைவுகளுடன் வாழும் பல தோழர்களின் கேள்வியாகவும் இருப்பது இவன் போன்ற தோழர்களின் அர்ப்பணிப்பு இன்று ரெலோவில் நான்கு பேர்கள் தமது சுய இலாபத்துக்காகவும் ,இலாபம் ஈட்டும் கம்பனியாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தை மாற்றியதே இன்று ரெலோ என இயங்குபவர்களின் செயலாக இருப்பதையே காண்கின்றோம்.
இவன் போன்ற தோழர்களின் அர்ப்பணிப்புக்கு விடுதலை இயக்கமாகிய ரெலோவின் பதில் தான் என்ன?
இவன் போன்ற தோழர்களுக்கு ரெலோ வழங்கும் மதிப்பு என்ன?
இவன் போன்ற தோழர்கள் விரும்பிய அரசியலுக்கு ஊட்டிய உரம் என்ன?
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் அரசியல் என்ன?
இருக்கின்றதா?
"தமிழீழ விடுதலை இயக்கம்" விடுதலை இயக்கத்துக்குரிய பண்புகளை இழந்து உலக விடுதலை இயக்கங்களுக்கு அவமரியாதை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
சோதிலிங்கம்.
26/11/2018.


தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.co
m

No comments:

Post a Comment