Search This Blog

Saturday, 22 December 2018

கடிதம்05, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

எழுச்சி, 19/11/2018
(கடிதம்05, மாதம்11, கிழமை 03)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம், இலங்கை.
போராடிய இனத்தின் பிரதிநிதிகளாக உங்கள் அரசியல் மக்களுக்கான தலைமையாக இல்லை என்பதையிட்டு மனவருத்தமாக உள்ளது.
அண்மைக்காலமாக ரெலோவினால் இயக்கப்படும் அரசியல் என்பது ஒரு சிலர் தமது சுய நலங்களை திருப்திப்படுத்துவதாகவும் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனத்தையோ , ஆழுமையேயோ தரவில்லை என்பது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் அரசியல் உரி
மைக்கான குரலாகவும் இருக்கவில்லை என்பது வேதனையானது, இக்கருத்தில் மாற்றுக்கருத்து இருக்காது என்பது வெளிப்படையானது (நாம் ஆய்வுக்கு தயார்).
அண்மைக் காலங்களில் இலங்கையில் ஏற்ப்படும் அரசியல் சிக்கலாக எழுந்திருக்கும் நிலைமைகளை தமிழர்களின் அரசியல் உரிமைகளின் அங்கீகாரத் தவறுகளையும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல்களாக வெளிவந்த இனக் கலவரங்களை செய்ய முடியாது போய் பாராளுமன்ற உறுப்பினர்களின் சண்டையாக மாறியுள்ளதை தெளிவுபடுத்தும் அரசியல் ஆழுமையை ரெலோ தவறியுள்ளது.
தமிழர்கள் மீது இனவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்ட கட்சிகள் இன்று தம்மிடையே மோதுவதின் உள்ளார்த்தத்தை புரிய "விடுதலை இயக்கம்" எப்படி தவறுவது இயக்கத்தின் அரசியல் புரிதல் இன்மையையே வெளிப்படுத்துகின்றது.
ரெலோ தவறியது மட்டுமல்லாது மக்களை மறந்து பிற்போக்கு நிலைகளுக்கு ஆதரவாகவும், கடந்த கால இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சண்டைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்த "தமிழீழ விடுதலை இயக்கம் " தவறி விடுதலை இயக்கத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்ப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி இயக்கத்தில் ஒரு சில தனிப்பட்டவர்களினால் மக்களுக்கான இயக்க இயங்கு முறை தவற விடப்படுகிறதை தெரிவிக்க விரும்புகிறோம்.
மக்களின் பக்கத்திலிருந்து சிந்திக்கும் அரசியலை முயற்சிக்க வேண்டிய அவசியம் எம் முன்னால் உள்ளது.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

சோதிலிங்கம்.
19/11/2018.
தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com



No comments:

Post a Comment