Search This Blog

Saturday, 22 December 2018

கடிதம்04 - தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

எழுச்சி, 12/11/2018
(
கடிதம்04, மாதம்11, கிழமை 02)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம், இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கம் தனது1984 ம் ஆண்டுகளின் கைக்கூலி, கைநாட்டு அரசியலிலிருந்து வெளியே வர வேண்டும்.
--------------------
தமிழீழ விடுதலை இயக்கம் இயக்கத்தின் இன்றய அரசியல் இயக்கம் என்ன என்ற வெளிப்படையான தகவலற்றும் , தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்காமலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு பின்னால் வால்பிடிக்கும் அரசியலையே ரெலோவின் அரசியல் என்ற பொது மக்கள் அபிப்பிராயம் வளர்க்கப்பட்டு விட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் என்ற பொதுக் கோட்பாட்டுக்கு இதர அரசியல் கட்சிகள், அரசியலில் இயங்கும் தோழர்களும் கருத்து கொண்டுள்ளதை காண்கிறோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் 1983 க்கு பின்னர் இந்திய உதவியுடன் குறிப்பாக இந்திய இராணுவ தலையீட்டின் மூலம் இந்திய மக்களின் நலனுக்கு உட்டபட்ட தமிழர் அரசியல் அரிமைகளுக்காக இந்தியாவுடன் இணைந்து கிளர்ச்சி இயக்கமாக இயங்கி தமிழர்களின் அபிலாசைகளை பெறுதல் என்பதே நோக்கமாக செயல்பட்டு வந்திருந்தது.
அது பின்னர் புலிகளினால் உடைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர். ரெலோ மக்களுக்கான தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதையோ, மக்களுக்காக எப்படி இயங்குவது என்பது பற்றியோ எங்கும் எந்த கருத்தையும் முப்பது வருடங்களாக முன்வைக்க வில்லை.
அண்மைக்கால இலங்கை அரசின் குழப்பங்களின் போதும் ரெலோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது கூட்டமைப்பின் பின்னால் நின்றது அடுத்த நாள் மக்கள் ஆணை தந்தால் மகிந்தாவை ஆதரிப்போம் என்ற கூற்று ரெலோவின் அரசியல் திராணியற்ற பண்பையே வெளிப்படுத்தியுள்ளது.
ரெலோ தனது 1983 கைக்கூலி,கைநாட்டு அரசியலிலிருந்து வெளியேறி விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பண்புகளுடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றெடுக்கும் அரசியலை வெளிப்படுத்தி இயங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

சோதிலிங்கம்.
12/11/2018.
தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com


No comments:

Post a Comment