எழுச்சி,
05/11/2018
(கடிதம்03, மாதம்11, கிழமை01)
(கடிதம்03, மாதம்11, கிழமை01)
தமிழீழ விடுதலை இயக்கம்
இலங்கை.
இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தகவல் தொகுப்பு செய்ய வேண்டியது
அவசியம்.
============
தமிழீழ விடுதலை இயக்கம் இயக்கங்களில் முதன்மையானது என்றும் முதல் இயக்கம் என்றும் பல இடங்களில் ரெலோவை அடையாளப்படுத்திய கருத்துக்களை அவனிக்க முடியும்.
============
தமிழீழ விடுதலை இயக்கம் இயக்கங்களில் முதன்மையானது என்றும் முதல் இயக்கம் என்றும் பல இடங்களில் ரெலோவை அடையாளப்படுத்திய கருத்துக்களை அவனிக்க முடியும்.
இக்கருத்துக்கு ஒப்ப தமிழீழ விடுதலை இயக்கம்
தனது இயக்க உறுப்பினர்கள் ஆதரவாளர்கள்,
அர்ப்பணித்தோர், போர் காலங்களில் உயிர் நீத்த பொது மக்கள் போன்றவர்களின் விபரங்களில்
அக்கறையற்றும், இனம் பற்றிய தகவல்கள் இல்லாமலும்
இருப்பது வெளிப்படையானது.
மேற்குறிப்பிட்ட கட்சி தோழர்களின் விபரங்கள்
அவர்களது குடும் பின்னணி குறிப்பாக அர்ப்பணித்தோரை ஆவணப்படுத்தி உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும்
என்பதை எடுத்துக்
கூறி, கட்சிக்கா
இயங்கிய தோழர்களின்
விபரங்களை ஒன்றிணைத்தல்
இவற்றிக்கு மேலாக போர் காரணமாக கொல்லப்பட்ட
மக்கள் விபரங்களை
தொகுத்தல் இனத்துக்கு
செய்யும் முக்கிய
பணியாகும்.
நீண்ட வரலாற்றைக்
கொண்ட கட்சி இந்த கடமைகளிலிருந்து தவறியும்
தாய் இயக்கம்
என்ற பெயரை குழப்பத்தில் வைத்திருக்கின்றது.
2009ஆண்டுக்கு பின் இந்த தகவல்கள் திரட்டும் பணியினை
திட்டமிட்டு செய்ய தவறியுள்ளீர்கள், இதற்கான
நேரம் இன்னமும்
தவறிப் போகவில்லை
இந்த தொகுப்பை
தமிழீழ விடுதலை
இயக்கம் உடனடியாக
ஆரம்பிக்க வேண்டும்.
ரெலோ அரசின் அமைச்சு பதவி வரை பதவிகளை பெற்று இயங்கிய
போதும் மக்களுக்காக
தமது இயங்கு முறை என்ன? என்பதையோ?
அல்லது என்ன செய்தோம் என்பதையோ? அல்லது என்ன செய்கின்றோம் என்பதையோ
நாம் அவதானிக்கமுடிய வில்லை.
இதற்க்கான நிகழ்சி
நிரலை வெளிப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறோம்.
ரெலோ கட்சி வடக்கிலிருந்து அம்பாறை
வரை உயிர்ப்புடன்
இருப்பதை கூறிக் கொண்ட போதும் கட்சி உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், முன்னணியாளர்களிடம் விசேட பணியாக மேற் கூறப்பட்ட
தகவல் சேகரிப்புக்களை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை கேட்டு, இந்த தகவல் சேகரிப்பு செய்வதற்க்கு பணமோ, நேரமோ, தொழில் நுட்பமோ
ஒரு பொருட்டல்ல,
ரெலோவின் மக்கள் மீதான பொறுப்பு ஒன்றை ஏற்று இயங்கும் செயற்திட்டத்தை இயக்குவது என்ற உறுதி ஒன்றே பொருட்டாகும்.
சில வருடங்களின்
பின்னர் இந்த கோரிக்கையின் விளைவுகள்
பற்றி விமர்சனத்துக்கு உட்படுத்த உள்ளோம்
என்பதை கூறிக் கொள்கின்றோம்.
தாய் இயக்கம் என்ற வரலாற்றினை
புரிந்து தமிழ் மக்களிடையே தாய் இயக்கத்துக்குரிய
நடைமுறைகளை வெளிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
நடைமுறைகளை வெளிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
5/11/2018.
5/11/2018.
தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com
uktelo@gmail.com
telolondon@gmail.com
No comments:
Post a Comment