Search This Blog

Saturday, 22 December 2018

கடிதம் 08, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

TELO LETTER 8
எழுச்சி, 05/12/2018,
(கடிதம் 08, மாதம்12, கிழமை 02)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
================
ரெலோ தலைமையிலிருந்து செல்வம் வெளியேற வேண்டிய நேரம் இது,
================
தலைவர் சிறீசபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்ட செய்தி கேட்ட அடுத்த கணம் ரெலோ சென்னை அலுவலகத்தில் சிறீசபாவின் படம் இறக்கப்பட்டு செல்வம் தனது படத்து போட்ட நேரம் முதல் செல்வம் தலைவரானார்.
செல்வம் குறிப்பிட்டகாலம் ரெலோவிலிருந்து விலகியிருந்த பின்னர் மீண்டும் கொண்டு வந்து தலைவராக இருத்திய பின்னர் செல்வம் மற்றும் சிலரும் ரெலோவை ஒரு உழைக்கும் கம்பனியாகவே இயக்கினார்கள்.
இந்த கம்பனியின் வெளிப்பாட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெலோவின் மத்தியகுழு வவுனியாவில் கூடியபோது அங்கு நடைபெற்ற சம்பவங்களே விளக்கியது.
பொதுக் குழு கூடிய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் கருத்து பகிர்வுகளை ஒலிவடிவில் கேட்ட போது இந்த இயக்கதிற்க்காகவா எமது வாழ்நாளை வீணாக்கினோம் என்று வெட்கப்பட வேண்டியிருந்தது.
இந்த இயக்கத்துக்கா எமது இளமைக்காலத்தை வீணாக்கினோம், இந்த இயக்கத்துக்கா நாம் சிறையில் இருந்து எமது உடலையும் வாழ்வையும் வீணாக்கினோம் என்ற எண்ணப்பாடே எழுந்தது.
தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களை மறந்து சுயநலவாதிகளின் கைகளில் பந்தாடப்படுவதை கடந்த சில வருடங்களில் ரெலோவினுள் நடைபெற்ற சம்பவங்கள் மேலும் காட்டி நின்றது.
1069 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் கடந்த 50 வருடங்களாக எதையும் படிக்க வில்லை ஒரு மக்களுக்கான அமைப்பாக இன்னும் இயங்க தெரியாது இருப்பதையிட்டு வெட்கப்பட வேண்டியிருந்தது.
50 வருடங்களா கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் என்ன அரசியரல் படித்துள்ளார்கள்???
இந்த வெட்கம் இலங்கையியிலிருந்து புலம் பெயர் நாடுகள்வரையில் உறுப்பினர்களின் சுய நல குணாம்சத்தில் கெத்துக்காக கட்சி என்ற பெயரில் இயங்குவதையிட்டு வெட்கப்பட வேண்டியிருந்தது.
கடந்த 50 வருடங்களாக இயங்கும் அமைப்பு தமிழ் மக்களுக்காக செய்த ஒரு உருப்படியான பணியை எடுத்து கூற முடியுமா?
ஆனால் தமிழ் மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்ட பல சந்தர்ப்பங்களை எடுத்து வைக்க முடியும் உட்படு கொலைகளிலிருந்து தமிழர் ஜக்கியத்துக்காக கூட்டமைப்ப பதிவு செய்ய ரெலோ ஒத்துழைக்காது போனதும் எந்த பேரினவாதிகளால் தமிழ் மக்கள் உரிமை இழந்தார்களோ அந்த பேரினவாதிகளுடன் எந்த உடன்பாடு ஏட்டப்படாமலே அந்த பேரினவாத அரசாங்கத்தில் அங்கம் பெற்றதும்.
அங்கம் பெற்றாலும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் பெறாமல் கடம்சியில் ஒரு சிலர் தமது சுய நலத்துக்காக மட்டும் அரச உதவிகளைப் பெற்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது வரையில் ரெலோவின் இயக்கத்தினுள்என்ன நடக்கின்றது???
இவைகள் வெட்கத்துக்குரியவிடயம் இல்லையா???
இவைகள் தமிழீழவிடுதலை இயக்கம் என்ற பெயருக்கு வெட்கமாக இல்லையா???
ரெலோவில் ஒரு உறுப்பினர் இது பற்றி கருத்து பரிமாற்றம செய்ய தயாரா? தமிழ் மக்களுக்கு உங்களின் நோக்கம் அரசியலை எடுத்துரைக்க முடியுமா?
தமிழீழவிடுதலை இயக்கம் ஒரு கட்சியா அல்லது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கதிலிருந்து உருவான கட்சியா? இந்த கட்சிக்கு என ஒரு கொள்கை ஒரு திடமான தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றேடுக்கும் நோக்கம் உண்டா?
அரசியல் கட்சி என்றால் இதை விவவாதிப்பீர்கள்? உள்ளக மாற்றங்களை ஏற்ப்படுத்தி விசேடமாக தவறான தலைமையயை மாற்றி புதிய தலைமையில் அரசியல் கட்சிக்குரிய பண்புகளை எதிர்பாரக்கின்றோம்.
செல்வம் தலைமைக்குரிய அத்தனை தகமைகளையும் கடந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இழந்துள்ளார்.
தனது தலைமைத்துவ ஆழுமையை நிருபிக்க தவறியுள்ளார்.
பல தவறான, பொய்யான கருத்துக்களை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.
உறுப்பினர்கள் மத்தியில் கருத்துரைகளின் போது உறுப்பினர்கள் தவறான தலைமை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொது முடிவுகளை மீறியுள்ளார், கட்சிக்கு உடன்படாத விடயங்களில் கூட்டமைப்புடன், அரசுடன், சிங்கள பேரினவாதிகளுடன் இணைந்து விடுதலை இயக்கத்துக்கு அவமானத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.
ரெலோ ஒரு சிலரின் சொத்து அல்ல என்பதை கூட்டத்தில் உறுப்பினர்கள் நேரடியாக எடுத்து கூறியுள்ளனர்.
இவைகள் விடுதலை இயக்கம் என்ற தமிழுக்கு இழுக்கு.
கடந்த காலங்களில் தலைவர் கட்சியின் யாப்பை மீறியுள்ளாரா ??? அல்லது யாப்பு சரியாக எழுதப்படவில்லையா??? அல்லது யாப்பின் படி கட்சியில் தவறாக இயங்குபவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுப்பதில்லையா???
கட்சிக்கு ஒழுங்காற்று நடவடிக்கை என்பது தெளிவாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்தக்கிழமை நடைபெற்ற ரெலோவின் பொதுக் குழு கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
அல்லது கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் செல்வம் மட்டும் தான் ரெலோ இயக்கத்தின் தலைவர் என செல்வத்துக்கு உறுதி எழுதி கொடுத்தாயிற்றா?
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
சோதிலிங்கம்.
05/12/2018.


தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment