Search This Blog

Saturday, 22 December 2018

கடிதம் 9, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு ஆயிரம் கடிதங்கள்.

எழுச்சி, 10/12/2018,
(கடிதம் 9, மாதம்12, கிழமை 03)
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
------------------------
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கம்
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமா?
கடந்த சில வருடங்களாக வெளிவரும் சமூகவலைத் தள்ஙக்ளில் வெளிவரும் செய்திகளிலும் ரெலோ மத்தியகமிட்டி உறுப்பினர்களின் கருத்துக்கள் பேச்சுக்களிலும் அவர்களால் எமக்கு அனுப்பப்படும் செய்திகளும் ரெலோ பற்றியபல திடுக்கிடும் செய்திகளை தாங்கி வருகின்றதே இவற்றில் பாலில் தெதடர்பான பல செய்திகளையும் பாரக்கின்றோம்.
இந்த செய்திகளில் பல கருத்துக்களை சம்பவங்களை திட்டவட்டமாக தெரிவிக்கின்றன. இவற்றிக்கு மேலாக தமிழீழ விடுதலை இயக்கம் தமிழர்களின் போராட்டத்தை சிங்கள் மேலாதிக்க சக்திகளுக்கு அடைவு வைத்துள்ளது என்ற கருத்ததை நாம் வெளிப்படையாக ரெலோ மத்தியகுழு மீது முன்வைக்கின்றோம்.
ரெலோ தலைவர் செல்வவம் அரசாங்க அமைச்சர்களிடமிருந்து சனமானமாக பல பெருந்தொகைப்பணங்கள் சொத்துக்ள் பெறுவதாக தொடர்ந்து சமூகவலைத்தளங்களிலும் சிங்கள பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சொத்துக்கள் ரெலோ கட்சி எப்படி பொறுப்பு ஏற்றது என்பது பெரும் விசமனத்துக்குரியது ஒரு போராடிய இயக்கம் இப்படியான செயல்கள் மூலம் தமிழ் இனத்தை கையேறு நிலைக்கு இட்டு செல்லலாமா? போராட்ட இயக்கத்துக்குரிய செயலா?
இது மட்டு மல்ல அரசாங்கத்தின் யுஎன்பியின் திட்டத்துக்கு அமையவே பாராளுமன்ற பிரதி பதவியை ரெலோவின் மத்திய குழு முடிவைப் பெறாமல் செல்வம் பெற்றிருந்தார் என்றும் அரசாங்க தரப்பினரக ஏளனமாக கருத்து தெரிவித்திருந்தார்கள்
பல கோடிகளை தாம் ரெலோவுக்கு லங்சமாக வழங்கியதாகவும் ரெலோ இனிமேல் யுஎன்பியின் அரசியலுக்கு எதிராக போக முடியாது என்றும் கருத்துக்களை சிங்கள் பத்திரிகைகளில் காணக் கூடியதாக இருந்ததே இந்த செயல்கள் ரெலோ தனது அமைப்புக்காக அர்ப்பணித்த தோழர்களின் குடும்பங்களை மறந்து அரசாங்கத்துடன் இப்படியான கள்ள கூட்டு நடவடிக்கைக்களை என்ன மனதுடன் செய்கிறீர்கள் என்று கேட்கின்றோம் அல்லது இந்த தவறுகளை வாராந்த அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்துங்கள்.
ரெலோ மீசோராமினுடைய தாயார் வறுமையில் வாழ்ந்து மடிந்ததையும், ரெலோ சங்கர்லால் அவர்களுடைய தகப்னார் இன்றும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றார் என்பதையும் நினைவு படுத்தி.....
சிலவேளை நீங்கள் இக்கடிதங்களை வழமை போல் புறக்கணித்துச் சென்று விட்டாலும் உங்களை நம்பி தம்உயிரை அர்ப்பணித்த தோழர்களை நினைத்து நாம் தொடர்ந்து அவர்கள் நினைவு விட்டகலாது தொடர்ந்து அரசியல் பற்றி அவர்கள் பற்று கொண்ட இயக்கம் பற்றி பேசிக் கொண்டிருப்போம் என தெரிவித்துக் கொள்கின்றோம்
எழுதுவோம் வரலாறு ஒன்று படைக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
உங்களுக்கு மனம், மனச்சாட்சி என்று இருந்தால் போராட்டத்தின் காரணமாக உயிர் அர்ப்பணித்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்கள் குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் உதவி செய்யாது விட்டாலும் மரியாதையாவது செய்யுங்கள்.
இறந்த தோழர்களின் மரியாதைக்குரிய விடயமாக ரெலோ என்ன நினைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது .....???
அரசுடன் கூட்டு சேர்ந்த காலங்களில் ரெலோ கட்சியின் உறுப்பினர்கள் சொத்துக்கள் லஞ்சமாக பணமாக பெற்றுள்ளார்கள் அவற்றின் விபரத்ததை உறுப்பினர்கள் உழைப்பால் பெற்ற சொத்து வேறாகவும் பிழையான வழியில் தேடிய சொத்துக்கள் வேறாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் வெளியிடுமா? அல்லது முக்கிய ஊறுப்பினர்களின் சொத்து விபரங்களை வெளியிட கோருமா?
இங்கே இயக்கம் என்பதற்க்கும் இயக்க உறுப்பினர்கள் என்பதற்குமான வேறுபாட்டை உணர்ந்து
விடுதலை இயக்கம் என்ற பெயருக்கு களங்கம் ஏற்ப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
மத்திய கமிட்டி என்பது அந்த பொறுப்புக்குரிய மக்கள் சேவையினை செய்யுமா? அதை செய்யதிராணி இருக்கின்றதா? இயக்கம் மக்களுக்காகவா? தனிமனிதர்கள் பணம் திரட்டவா?
குறிப்பு:
புலிகளால் கொல்ப்பட்ட எமது ரெலோ தோழர்களுக்காக நாம் எழுதியபோது எமது எழுத்துக்கள்எல்லாம் ரெலோ தோழரின் எழுத்துக்கள் என்று வரவேற்ற ரெலோ தோழர்கள் இன்று ரெலோவை கேள்வி கேட்பதை எதிர்பார்க்கவில்லை என்பது நீங்கள் வெளிப்படுத்தும் அரசியல் விவேகங்களை, சமூகவலைத்தளங்களின் செய்திப் பரிமாற்றங்களை பார்க்கும் போது புரிகின்றது.
போராட்டம் இயக்கத்துக்கு அல்ல தமிழ் மக்களுக்கு என்பதை மீளநினைவு படுத்திக் கொள்கின்றோம்.
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
சோதிலிங்கம்.
10/12/2018.
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும்:
தமிழீழ விடுதலை இயக்கம்- uk
தமிழீழ விடுதலை இயக்கம்- Canada
தமிழீழ விடுதலை இயக்கம்- Swiss
தமிழீழ விடுதலை இயக்கம்- France


தொடர்புகளுக்கு
uktelo@gmail.com, telolondon@gmail.com

No comments:

Post a Comment