Search This Blog

Saturday, 22 December 2018

தங்கத்துரை நீதிமன்ன உரைகள் மீள திருத்தி எழுதப்பட வேண்டும்

தங்கத்துரை நீதிமன்ன உரைகள் மீள திருத்தி எழுதப்பட வேண்டும்
------------------------------------------------------------------------------------
பல்லாயிரம் குட்டிமணிகளாக நிற்க்கும் ரெலோ வியாபாரிகளாகி விட்டனர்.
உங்கள் அர்ப்பணிப்புக்கள் லஞ்சத்துக்கு மாறி விற்க்கப்படுகின்றன.
================
தனது மக்களுக்காக போராடிய குட்டிமணிக்கு 13.08.1982 அன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அவர் கூறிய இறுதி வார்த்தைகள்:
“எமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து சிறீலங்கா இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையேல் தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் அவர்களை பலாத்காரமாக வெளியேற்றுவோம்”
//பகல் கனவானது 4லீற்றர் வைக்காக விட்டு கொடுத்தனர்//
நான் மட்டுமல்ல என்னைப் போன்ற பல தமிழ் இளைஞர்கள் இந்த நீதிமன்றங்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட இருக்கிறார்கள்.
//சிறையிலிருந்து மீண்டவர்களை ரெலோவுக்கு பார்க்க தெரியவில்லை காரணம் யாரை கொள்ளையடிக்கலாம், யாரிடம் கப்பம் வாங்கலாம் என திரிந்தனர், கையில் இருக்கும் ஆயுதத்துக்கு மட்டுமே பலம் இருக்கு அரசியல் புரியாமல் நம்பினார்கள்//
அந்த அப்பாவி தமிழ் இளைஞர்களுக்கும் பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டப்பட்டு இந்த அரசின் நீதி மன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்படும். நீதிபதி எனக்கு அளித்த தீர்ப்பின் மூலம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
என்னை தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டிமணிகள் உருவாகுவார்கள். அவர்கள் தமிழ் ஈழத்தின் இறைமையை மீட்டு எடுக்கப்படக்கூடிய தீரம் மிக்க வீரர்களாக இருப்பார்கள்.என் தமிழ் மண்ணில் தமிழீழத்தில் என்னை தூக்கிலிடுங்கள் என்கண்களை பார்வையற்ற ஒரு தமிழ் மகன் ஒருவருக்கு வழங்குங்கள் அதன் மூலம் மிகவிரைவில் மலரப்போகும் தமிழீழத்தை கண்டுகளிப்பேன். எனது உடலின் ஏனைய பயன்படக்கூடிய உறுப்புக்களை அவை தேவைப்படுவோர்க்கு வழங்குங்கள். என் உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு வழங்குங்கள்.
இப்போது எனக்குள்ள கவலை எல்லாம் ஒன்றே ஒன்று தான் எனது மக்களுக்காக எனது இனத்திற்காக அளிப்பதற்க்கு என்னிடம் ஒரே ஒரு உயிர் மட்டுமே உண்டு.
//இன்றும் அரசியல் உணர்சியற்று இனத்துக்காக லஞ்சம்-வைனுக்காக பாராளுமன்றத்தில் காத்திருக்கும் தோழர்கள்//
இனவாதம் பேசி தமிழர்கள் மீது வன்முறை செய்தவர்கள் தம்மிடையே மோதுகிறார்கள் எம்மவர்கள் அடுத்த கிளாசு வைன் கேட்கிறார்கள்.
ரனில் மேலும் 5லீற்றர் வைன் ஓடர் பண்ணியுள்ளார்.
மேம்படட்டும் ரெலோ அரசியல் அறிவு!!!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழீழம்!!!!
நீங்கள் மேலும் கூறியிருந்தீர்கள்
ஒழியட்டும் பசியும் பிணியும்
//மக்களும் போராளிகளும் ஒருவேளை சாப்பாடு இன்றி இருக்க தமக்கும் தமது குடும்பங்களுக்கும் வாகனம் சொத்து சுகம் தேடும் ரெலோ//
மன்னிக்க வேண்டும் தங்கத்துரை நீங்கள் பாவம் அதிகமாக நீதிமன்றில் வாசித்து விட்டீர்கள்.

இருமொழிபேசும் ஒரு இனம் மட்டுமே இலங்கையில்.

இருமொழிபேசும் ஒரு இனம் மட்டுமே இலங்கையில்.
------------------------------------------------------
இருமொழிபேசும் ஒரு இனம் மட்டுமே இலங்கையில் இருப்பது உண்மை ஆனால் மக்களை வசியப்படுத்தி வைத்திருப்பது மதமே.
இசுலாமிய இனம் இலங்கையில் உள்ளதா என்ற கேள்வியையும் இணைத்து எழுப்ப முடியும்.

இதே போன்று வெள்ளாளர் சாதியும் பல்வேறு சாதியினரை, பலமுள்ளவர்களை, பணம் படைத்தவர்களை இணைத்து தயாரிக்கப்பட்ட சாதியே, அதை இன்றும் enrich பண்ணுவதில் இதர சாதியினருக்கு பங்கும் விருப்பமும் உண்டு.

1)வெள்ளாளராக்கப்பட்டது
2)சிங்கள இனம் வளர்த்து எடுக்கப்பட்டது
3)இசுலாமிய இனம் என கூறுவது.

தலைவர் சிறீசபாரத்தினம்.

தலைவர் சிறீசபாரத்தினம்.
--------------------------------------
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு தலைவர் ஒரே ஒருவர் மட்டுமே அது சிறீசபாரத்தினம் மட்டுமே, குட்டிமணி, தங்கத்துரைகள் ஆரம்ப கர்த்தாக்கள் ஆனால் அவர்களால் தலைமைத்துவம் கொடுக்கப்படவில்லை.
ரெலோவின் உச்சம் சிறீசபா !!!
அதேபோல சிறீசபாவின் பின்னர் ரெலோ கொள்ளை, வாகனம் கடத்தல், கொள்ளை, கப்பம் என்பதையே போராட்ட நடவடிக்கை என சித்தரிக்கின்றனர், இங்கே புலிகளை எதிர்த்து நாட்டில் இறங்கியது (*), அதன் பின்னர் ரெலோவை செல்வம் சகாக்கள் தமது சுய தேவைக்கு பணம் தேடும் கம்பனியாக்கி இன்று கட்சியின் நலனும் சுயநலமேயன்றி மக்கள் நலன் அல்ல !!!
"ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்களில் வருகின்றது"
சிறீசபாவை அழித்தது.
1. சிறீசபா பிரபாகரனையும் இணைத்து இயக்க தலைவர்களுடன் நல்லுறவை மேற் கொண்ட பண்பு.
2. ரெலோவினுள் இருந்த பிரதேச வெறி வடமராட்சி யாழ்ப்பாணம் என்ற வேறுபாடு.
3. ரெலோ உள்ளே இருந்த சாதிவெறி உயரசாதியினர் (சிறீசபா முதலியார் சமூகம் /வெள்ளாளர் அல்ல) தலைமை தாங்குவதா?
4. சிறீசபா இயக்கத்திற்மூத்த உறுப்பினர்கள் என நம்பியவர்களுக்கு அரசியல் தெளிவற்ற மண்டை வறண்ட கூட்டம்
(ஆனந்த விகடன் வாசிக்கிற கூட்டம்)
(இவர்களையே TELO org ல் மூத்த உறுப்பினர்கள் என குறிப்பிடப்படுவது.)(24 பேர்கள்)
இந்த 24 பேர்களில் சிலர் செல்வம் சுதன் உட்பட பிரபாகரனிடம் போய் துப்பாக்கி வாங்கி வந்து சிறீசபாவை கடத்த முற்ப்பட்டு தோல்வி கண்டு இயக்கத்தை விட்டு விலகி புலிகளிகளை எதிர்பதாக கூறி புலிகளுடன் உறவு வைத்து புலிகளை பாவித்து சிறீசபாவை கொன்றனர்.
இன்று ரெலோவில் மத்திய கமிட்டி உறுப்பினர் ஆகினர்.
"ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்களில் விபரம் வரும்"
சிறீசபாவுக்காக .....

குட்டிமணி, தங்கதுரை, ஆகியோரைக் காட்டிக்கொடுத்தது பிரபாகரன்.

குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரைக் காட்டிக்கொடுத்தது பிரபாகரன் தான் என்பதை அம்பலப்படுத்தும் அவர்களுக்காக ஆஜராகிய சட்டத்தரணியின் வாக்குமூலம் -------------------------------------------
1981ம் ஆண்டு நான் கொழும்பில் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து உடுப்பிட்டி எம். பி. , எம். சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜுனியராக வேலை செய்து கொண்டிருந்த காலமது. பயங்கரவாத தடைச்சட்டம் அறிமுகமாகி அச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடங்கிய காலம். 1982 ஆரம்பத்தில்தான் (அல்லது 1981 கடைசி) குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மற்றும் சிலர் மணற்காட்டில் 1981ம் ஆண்டு இராணுவத்தால் கைதானார்கள். அந்நாட்களில் இந்த கைது தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியலை வெகுவாக பாதித்தது. கூட்டணி எம்.பி க்கள் கதிகலங்கினர்.

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை கைதானவுடன் உடனடியாக பனாகொடை இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டனர். அந்த முகாம் பலத்த பாதுகாப்புடைய முகாம். பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதானவர்களை யாரும் பார்க்கமுடியாது. எனவே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு (Habeas corpus) தொடங்கப்பட்டு, அந்நாளில் மிகச்சிறந்த வழக்கறிஞரான கொல்வின் ஆர் டி சில்வா, ராணி வழக்குரைஞர், Q.C., அவர்களை நியமித்து வழக்காடி கைதானவர்களை பார்க்க அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி சட்டத்தரணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதன்போது உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் பின்னால் இருந்து இயங்கினாரே தவிர தன்னை பெரிதாக இவ்வழக்கில் அடையாளம் காட்டவில்லை.

(விடயத்திற்கு வருவதற்காக பல சில்லறை-சுவையான விடயங்களை இங்கே தவிர்க்கிறேன். தேவையானால் பின்னர் தரப்படும்).

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குழுவினரை சந்திக்க இருந்த சட்டத்தரணி பட்டியலில் முதலிடம் வகித்தவர் சட்டத்தரணி கரிகாலன் நவரத்தினம். அந்நாளில் எனது சட்ட குரு என்று கூட சொல்லலாம். அவருடன் நான், காலம் சென்ற ஜி குமாரலிங்கம், தற்காலம் கொழும்பில் கொடிகட்டிப்பறக்கும் கே.வி. தவராஜா, அன்மையில் காலஞ்சென்ற வட்டுக்கோட்டை பாக்கியநாதன் மேலும் இன்னும் சிலர். எங்களுடன் வருவதாக இருந்த SJVயின் மகன் சந்திரகாசன் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.

நாங்கள் 1982ம் ஆண்டு (மாதம், திகதி ஞாபகம் இல்லை) ஒரு நாள் சனிக்கிழமை மாலை 3 மணிபோல வான் ஒன்றில் பனாகொடை இராணுவ முகாமை சென்றடைந்தோம். பலத்த சோதனையின் பின் தடுப்பு காவலில் இருந்த ஒவ்வொருவரையும் இரு சட்டத்தரணிகள் பார்ககலாம் என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் குட்டிமணியை கரிகாலன் நவரத்தினம் சந்திப்பதாக முடிவாயிற்று. உடனே அவர் என்னை தன்னுடன் சேர்ததுக்கொண்டார்.

ஒரு சிறிய அறையில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு காத்திருக்கையில் குட்டிமணி அழைத்து வரப்பட்டார். மற்ற அறைகளில் மற்றவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இது அவர்கள் கைதாகி ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்திருக்கலாம் என நினைக்கிறேன். 

எங்களை கண்டவுடன் குட்டிமணி கண்கலங்கினார். எங்கள் இருவரையும் குட்டிமணிக்கு முன்பின் தெரியாது. இருப்பினும் சாவு நிச்சயம் என்று தெரிந்த பின்னர் ஒரு தமிழரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற மனநிலையில் இருந்தவருக்கு எங்களை கண்டவுடன் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.
எங்கள் அறிமுகத்தின் பின்னர் குட்டிமணி முதலில் இவ்வாறு கூறினார்:

“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”.
மட்டக்களப்பை சேர்ந்த எனக்கு அந்நாட்களில் இயக்கங்களின் அரிச்சுவடே தெரியாது. ஆகவே நான் கரிகாலன் நவரத்தினம் அவர்களை உடனே கேட்டேன், அண்ணா, யார் அந்த தம்பி?
உனக்கு தெரிய தேவையில்லை, பேசாமல் இரு, என்றார். நானும் அடங்கி விட்டேன்.
அன்றைய சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. அரசியலை விட குடும்ப விடயம், வீட்டிற்கு என்ன சொல்வது போன்ற விடயங்களும் பேசினோம். ஒவ்வொரு கிழமையும் சந்திப்பதாக கூறி வெளியே வந்தோம். வந்தவுடன் கரிகாலன் நவரத்தினம் அவர்களிடம் நான் மீண்டும், "அண்ணா, யார் அந்த தம்பி" என்று கேட்டேன்.

சிறிது சினத்துடன் எனக்கு விளக்கினார். 'தம்பியின் பெயர் பிரபாகரன். அவன்தான் இனி இயக்கத்தை தொடர்ந்து நடாத்துவான். ஆனால், நீ இதை யாரிடமும் உளறி விடாதே. உளறினால் உன்னையும் போட்டு தள்ளிவிடுவார்கள். உன்னை இங்கு கூட்டி வந்தது, என் தப்பு' என்று கூறிமுடித்தார்.

நானும் பயத்தில் அதை பெரிதாக யாரிடமும் பகிரங்கமாக சொல்லவில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தேன். இந்த சந்திப்பை தொடர்ந்து பல தடவைகள் பனாகொடை முகாமுக்கு சென்று வந்தேன். குறிப்பாக சீனியர் சிவசிதம்பரம் அவர்களுடன்.

1983 கலவரத்தின்பின் கூட்டனியினர் இந்தியா தமிழ் நாட்டில் குடியேறினர். 1984 -85 கால கட்டத்தில் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் சென்னையில் இருந்து ஜூனியர் விகடன் பத்திரிகையில் “குட்டிமணி ஜெகன் தங்கதுரை” என்ற பெயரில் ஒரு தொடர் சரித்திரம் எழுதினார். சென்னையில் அவரை நான் சந்தித்த பொழுதெல்லாம் குட்டிமணி சொன்ன அந்த ‘தம்பி’ விடயத்ததையும் வெளிப்படுத்தும்படி வேண்டினேன். 
எது சரி, எது பிழை என்பதை தவிர்த்து உண்மையான சரித்திரம் என்னவென்பதை மக்கள் அறியவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் உண்மையை எடுத்துச்சொல்ல மறுத்துவிட்டார். ஒவ்வொரு தடவையும் தனது உயிருக்கு ஆபத்து என்றே சொல்லிக் கொண்டிருந்தார். 2009ம் ஆண்டிற்குப் பிறகு, இனி அது தேவையில்லாத விடயம் என்று சொல்லி சப்ஜெக்கடையே மூடிவிட்டார்.

[இத்தகவலை Shanmunganathan Jeasingam என்பவரது முகநூல் பக்கத்தில் Kumar Sriskandakumar (Former Crown Counsel at Attorney General of Belize, Central America; Former State Counsel at Attorney General of Sri Lanka; Studied Federalism at York University; Studied Masters in Criminology at University of South Carolina; Studied LL.B. at Univerisity of New Brunswick Law School; Studied ATTORNEY-AT-LAW LICENSE at Colombo Law College; Currently lives in Toronto) என்பவர் பகிர்ந்துள்ளார்]

இது பாலசூரியர் மூகநுலிலிருந்து பெறப்பட்டது

Thambiah Pillai Sothilingam இந்த கருத்துக்காக நாம் இன்றும் ஆதாரமாக இருக்கிறோம், இக்கருத்தைபல இடங்களில் புலிகள் இருந்த போதே கூறியிருக்கிறேன், எழுதியுள்ளேன். வீடியோக்கள் பதிவு செய்துள்ளேன்.
இவற்றை மறந்து சிறியண்ணர் புலிகளுடனும் ஐக்கியம் பேண போனதன் விளைவை சந்தித்தார், நாபாவும்.

இங்கே இருக்கிற நஞ்சு கருத்து இனி பிரபாகரன் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்ற வல்வெட்டி, வடமராட்சி பிரதேச வெறி இணைந்து கொண்டது

குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரைக் காட்டிக்கொடுத்தது பிரபாகரன் தான் என்பதை அம்பலப்படுத்தும் அவர்களுக்காக ஆஜராகிய சட்டத்தரணியின் வாக்குமூலம் !

குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரைக் காட்டிக்கொடுத்தது பிரபாகரன் தான் என்பதை அம்பலப்படுத்தும் அவர்களுக்காக ஆஜராகிய சட்டத்தரணியின் வாக்குமூலம் !

1981ம் ஆண்டு நான் கொழும்பில் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து உடுப்பிட்டி எம். பி. , எம். சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜுனியராக வேலை செய்து கொண்டிருந்த காலமது. பயங்கரவாத தடைச்சட்டம் அறிமுகமாகி அச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடங்கிய காலம். 1982 ஆரம்பத்தில்தான் (அல்லது 1981 கடைசி) குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மற்றும் சிலர் மணற்காட்டில் 1981ம் ஆண்டு இராணுவத்தால் கைதானார்கள். அந்நாட்களில் இந்த கைது தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியலை வெகுவாக பாதித்தது. கூட்டணி எம்.பி க்கள் கதிகலங்கினர்.
குட்டிமணி, ஜெகன், தங்கதுரை கைதானவுடன் உடனடியாக பனாகொடை இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டனர். அந்த முகாம் பலத்த பாதுகாப்புடைய முகாம். பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதானவர்களை யாரும் பார்க்கமுடியாது. எனவே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு (Habeas corpus) தொடங்கப்பட்டு, அந்நாளில் மிகச்சிறந்த வழக்கறிஞரான கொல்வின் ஆர் டி சில்வா, ராணி வழக்குரைஞர், Q.C., அவர்களை நியமித்து வழக்காடி கைதானவர்களை பார்க்க அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி சட்டத்தரணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதன்போது உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் பின்னால் இருந்து இயங்கினாரே தவிர தன்னை பெரிதாக இவ்வழக்கில் அடையாளம் காட்டவில்லை.
(விடயத்திற்கு வருவதற்காக பல சில்லறை-சுவையான விடயங்களை இங்கே தவிர்க்கிறேன். தேவையானால் பின்னர் தரப்படும்).
குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குழுவினரை சந்திக்க இருந்த சட்டத்தரணி பட்டியலில் முதலிடம் வகித்தவர் சட்டத்தரணி கரிகாலன் நவரத்தினம். அந்நாளில் எனது சட்ட குரு என்று கூட சொல்லலாம். அவருடன் நான், காலம் சென்ற ஜி குமாரலிங்கம், தற்காலம் கொழும்பில் கொடிகட்டிப்பறக்கும் கே.வி. தவராஜா, அன்மையில் காலஞ்சென்ற வட்டுக்கோட்டை பாக்கியநாதன் மேலும் இன்னும் சிலர். எங்களுடன் வருவதாக இருந்த SJVயின் மகன் சந்திரகாசன் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.
நாங்கள் 1982ம் ஆண்டு (மாதம், திகதி ஞாபகம் இல்லை) ஒரு நாள் சனிக்கிழமை மாலை 3 மணிபோல வான் ஒன்றில் பனாகொடை இராணுவ முகாமை சென்றடைந்தோம். பலத்த சோதனையின் பின் தடுப்பு காவலில் இருந்த ஒவ்வொருவரையும் இரு சட்டத்தரணிகள் பார்ககலாம் என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் குட்டிமணியை கரிகாலன் நவரத்தினம் சந்திப்பதாக முடிவாயிற்று. உடனே அவர் என்னை தன்னுடன் சேர்ததுக்கொண்டார்.
ஒரு சிறிய அறையில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு காத்திருக்கையில் குட்டிமணி அழைத்து வரப்பட்டார். மற்ற அறைகளில் மற்றவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இது அவர்கள் கைதாகி ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்திருக்கலாம் என நினைக்கிறேன். எங்களை கண்டவுடன் குட்டிமணி கண்கலங்கினார். எங்கள் இருவரையும் குட்டிமணிக்கு முன்பின் தெரியாது. இருப்பினும் சாவு நிச்சயம் என்று தெரிந்த பின்னர் ஒரு தமிழரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற மனநிலையில் இருந்தவருக்கு எங்களை கண்டவுடன் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.

எங்கள் அறிமுகத்தின் பின்னர் குட்டிமணி முதலில் இவ்வாறு கூறினார்:
அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்
”.

ரெலோ ரனிலுக்கு ஆதரவு எப்படி?

ரெலோ ரனிலுக்கு ஆதரவு எப்படி?
ரெலோ உள்ளே நடைபெறும் வாதங்கள் முற்போக்கு அமைப்பு உள்ளே ஏற்ப்பட்ட முரண்பாடுகள் அல்ல என்பது குறிப்பு.
-------------------
ரனிலுக்கு ஆதரவாக யாரைக் கேட்டு செல்வம் கையொப்பம் இட்டாய் ?? கட்சிக்கு ஒரு கமிட்டி இருப்பது தெரியாதா ?
--------------------
ரெலோ தமிழ் மக்களுக்கான அரசியலை செய்யத்தவறி ஒரு சிலரது சுய லாபங்களுக்கான கம்பனியாக இயங்குவதை ரெலோவின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்ட நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.
ரனிலுக்கு ஆதரவு தர தமிழர் தரப்பின் ஐனநாயக உடன்பாடு என்பது அமெரிக்கா தனது கூலிப்படைகளை சர்வதேச தனத்தில் நடாத்தியது போன்றே நடைபெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்குள் ரெலோவின் குழு வவுனியாவில் கூடிய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களின் கருத்துக்களை ரெலோவின் மத்திய குழு உறுப்பினர் கூறியபோது புரிய ஆரம்பித்தது.
தமிழீழ விடுதலை இயக்கம் தனது கட்சிக்குள் குறைந்த பட்ச ஐனநாயகத்தை பேண தவறிவிட்டது.
அந்த கூட்டத்தில் எழுந்த முரண்பாடுகள் கட்சி, ஒரு விடுதலைப்போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்த அமைப்பின் குணாதிசயங்களை தொலைத்து தம்மை ஒரு அமெரிக்க கைக் கூலி அமைப்பின் குணாதிசயங்களை வெளிப்படுத்தியிருந்தது,வரலாற்றில் ஒரு கைக்கூலி அமைப்பின் நடவடிக்கைகளை ஒத்த சம்பவம் ரெலேிவின் உயர் மட்ட சந்திப்பு என கூறிய கூட்டத்தில் நடைபெற்றதாகவே மத்திய குழு உறுப்பினரின் கருத்துக்கள் இருந்தது,
ரெலோ தலைவர் செல்வம் இது போன்று பாராளுமன்ற பிரதி கழு தலைவராக கட்சியின் கமிட்டியின் அங்கீகாரமின்றி செயல்பட்டிருந்தார் என்பதையும் கூட்டமைப்பை பதிவு செய்ய சுமந்திரன் விருப்புபடி தடைசெய்திருந்தார் எனவும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினர் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

தமிழ் கருத்துக்களம்.
03/12/201
8